என் மலர்
சினிமா செய்திகள்
ரேணிகுண்டா, மீகாமன், அசுரவதம் படங்களில் நடித்த சஞ்சனா சிங், அடுத்ததாக கவர்ச்சியான வேடத்தில் நடிக்க இருக்கிறார். #SanjanaSingh
ரேணிகுண்டா, மீகாமன், அசுரவதம் படங்களில் நடித்தவர் சஞ்சனா சிங். இவர் அடுத்து நடிக்கும் படம் உடுக்கை. தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் ஏற்படும் ஆபத்துகளை விளக்கும் கிரைம் திரில்லராக இந்த படம் உருவாகிறது. படம் பற்றி இயக்குனர் எம்.ஆர்.பாலமித்ரன் கூறும்போது, ‘தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி பல நன்மைகளை கொடுத்தாலும் சில ஆபத்துகளும் நமக்கு ஏற்பட்டுள்ளன. இதை புதுமையான அன்பு, அதிர்ச்சி, அதிரடி, திகில் கலந்த கதையாக உருவாக்கி இருக்கிறோம்.

ஆர்.சரவணன், எஸ்.விபின், என்பிஎம்.உமர், சோழாஸ் சிவா இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். விபின், உமர், சஞ்சனா சிங், அங்கிதா, லட்சுமி, வலினா, மொட்ட ராஜேந்திரன், மயில்சாமி நடிக்க, சொற்கோ பாடல்களை எழுதி இசை அமைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
இப்படத்தில் சஞ்சனா சிங் மிகவும் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர இருக்கிறார்.
நடிகையர் திலகம், சர்கார் படத்திற்குப் பிறகு புதிய படத்தில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், படப்பிடிப்புக்காக ஐரோப்பா செல்ல இருக்கிறார். #KeerthySuresh
சர்கார் படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வேறு எந்த படமும் தமிழில் வெளியாகவில்லை. தெலுங்கில் பெரும் கவனம் பெற்றுத்தந்த நடிகையர் திலகம் படத்திற்குப் பின் அடுத்த படம் என்ன என்று தெலுங்கு ரசிகர்களும் காத்திருக்க, அவர் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
தெலுங்கில் நாகேஷ் குக்கனூர் இயக்கும் புதிய படத்தில் நாயகியாக சமீபத்தில் ஒப்பந்தமான கீர்த்தி அறிமுக இயக்குனர் நரேந்திரநாத் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் பரபரப்பாக பங்கேற்று வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இந்த படத்துக்காக ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் பிரம்மாண்ட அரங்கு அமைத்து இதன் படப்பிடிப்பு கடந்த இரு மாதங்களாக நடைபெற்று வந்தது. விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐரோப்பாவில் 45 நாட்கள் நடைபெற இருப்பதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார். படக்குழு தற்போது இதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் அமித் ஷர்மா இயக்கும் புதிய படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அஜய் தேவ்கன் கதாநாயகனாக நடிக்கும் அந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்க உள்ளது.
அறுவை சிகிச்சைக்குப் பின் நலமாக இருக்கிறேன் என்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பாடகி எஸ்.ஜானகி கூறியிருக்கிறார். #SJanaki
தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்பட தென்னிந்திய திரைப்படங்களில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளவர், பின்னணி பாடகி எஸ்.ஜானகி. இவர் கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றார்.
அப்போது குளியல் அறையில் வழுக்கி விழுந்துவிட்டார். அவரை மைசூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது வழுக்கி விழுந்ததில் எஸ்.ஜானகிக்கு இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

அப்போது பேசிய ஜானகி,
கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிந்துவிட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் நலமாக இருக்கிறேன். வாக்கிங் ஸ்டிக் வைத்துக்கொண்டு நடக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் நலம் பெறுவேன். நான் நலம்பெற பிரார்த்தனையில் ஈடுபட்ட ரசிகர்களுக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜெய், கேத்தரின் தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி நடிப்பில் உருவாகி இருக்கும் நீயா 2-வில் கருநாகம் தேர்ந்தெடுத்தது குறித்து இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார். #Neeya2
ஜெய், கேத்தரின் தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் ரொமான்டிக் த்ரில்லர் படம் 'நீயா2'. இவர்களைத் தவிர இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக இருப்பது கருநாகம். பாம்பை மையமாக வைத்து இயக்கியிருக்கும் இப்படத்தில் பாம்பின் கிராபிக்ஸ் காட்சிகள் சுமார் 40 நிமிடங்கள் வைத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து இயக்குனர் எல்.சுரேஷ் கூறும்போது, ‘பாம்பிற்காக நாங்கள் பல இடங்களில் தேடி அலைந்து இறுதியாக பாங்காக்கில் உள்ள கோப்ரா வில்லேஜ் என்ற இடத்தில் உள்ள பாம்பைத்தான் தேர்வு செய்தோம். இது எங்களுக்கு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது.
முதலில் நிஜ பாம்பை வைத்து எடுக்கத்தான் முடிவு செய்தோம். ஆனால், அங்குள்ள பாம்பிற்கு ஒரு வார காலம் தான் நிஜ உருவம் இருக்கும். அதற்கு மேல் தோல் உரிவதும் வளர்வதுமாக இருப்பதால் படப்பிடிப்பிற்கு உகந்ததாக இருக்காது என்று கிராபிக்ஸ் செய்ய முடிவெடுத்தோம்.

இப்படத்தின் மிகப்பெரிய பலம் திரைக்கதை தான். அதுமட்டுமில்லாமல், பாம்பின் சாகச காட்சிகளும் இருக்கும். மேலும், 'நீயா' படத்தில் நல்ல பாம்பு இடம் பெற்றிருக்கும். அதைவிட அதிகமாக பயம் ஏற்பட வேண்டும் என்பதற்காக இப்படத்தில் கருநாகத்தைத் தேர்ந்தெடுத்தோம்.
அதேபோல், 'நீயா' படத்திற்கும் இந்த படத்திற்கும், மூன்று சம்பந்தம் உள்ளது. 'பெயர்', 'பாம்பு' மற்றும் 'ஒரே ஜீவன்' பாடல் இவை மூன்று தவிர அந்த கதைக்கும், இந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நீயா படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமாக உருவம் மாறி பழி வாங்கும். ஆனால், இந்த படத்தில் அப்படி இருக்காது. இப்படத்தில் பாம்புக்கென்று பெயர் கிடையாது.
இவ்வாறு இயக்குனர் எல்.சுரேஷ் கூறினார்.
அறிமுக இயக்குனர் செல்வக்கண்ணன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த ‘நெடுநல்வாடை’ படத்திற்கு முதல் விருது கிடைத்துள்ளது. #NedunalVaadai
பூராமு, இளங்கோ, அஞ்சலி நாயர் ஆகியோரது நடிப்பில், அறிமுக இயக்குனர் செல்வக்கண்ணன் இயக்கத்தில் கடந்த மார்ச் 15ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதோடு அனைவராலும் பாராட்டப்பட்ட படம் ‘நெடுநல்வாடை’.
பெங்களூரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் 26 நாடுகளிலிருந்து 106 திரைப்படங்கள் கலந்துகொண்ட (Innovatie Film Acadamy (IFA) ‘நெடுநல்வாடை’ படம் அனைவரது பாராட்டையும், விருதையும் பெற்றுள்ளது.
விருது கிடைத்த மகிழ்ச்சியில் இயக்குனர் செல்வக்கண்ணன் விழாவில் பேசியதாவது,

ரொம்ப பெருமையா இருக்கு இவ்வளவு பெரிய, பல நாடுகளில் இருந்து, பல மொழிகளில் இருந்து வந்திருக்கும் முக்கியமான இயக்குனர்கள், சினிமாத்துறையில் இருந்து வந்திருப்போர்கள் முன்னாடி எங்கள மாதிரி புதியவர்கள் நிக்கிறோம்கிறது எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு. எங்களை அங்கீகரித்த குழுவினருக்கு ரொம்ப நன்றி. எங்கள் படத்தை பரிந்துரைத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் நன்றி.
தமிழ் சினிமா துறையில் உருவான முதல் கிரொட் பண்டிங் (CROWD FUNDING ) திரைப்படம் நெடுநல்வாடை. இந்த நேரத்தில் என்னுடைய தொழில்நுட்ப கலைஞர்கள், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், படத்தை தயாரித்த என் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று பேசினார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆசையிருப்பதாக மிஸ் சூப்பர் குளோப் இந்தியா 2019 அழகிப் போட்டியில் வென்ற அக்சரா ரெட்டி பேட்டியளித்துள்ளார். #AksharaReddy
கேரளாவில் கடந்த வாரம் ‘மிஸ் சூப்பர் குளோப் இந்தியா-2019’ பட்டத்துக்கான அழகிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 22 மாநிலங்களை சேர்ந்த 240 பேர் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் தமிழகம் சார்பில் சென்னையை சேர்ந்த அக்சரா ரெட்டி (வயது 24) ‘மிஸ் சூப்பர் குளோப் இந்தியா-2019’ பட்டத்தை வென்றார்.
இதன் மூலம் வரும் அக்டோபர் மாதம் துபாயில் நடைபெறும் ‘மிஸ் சூப்பர் குளோப் வேர்ல்டு-2019’ பட்டத்துக்கான போட்டியில் அக்சரா ரெட்டி இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளார். இந்த நிலையில் நேற்று சென்னையில் அக்சரா ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் சார்பில் ‘மிஸ் சூப்பர் குளோப் இந்தியா-2019’ போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக பெண் அரசியல் தலைவர்களில் ஜெயலலிதாவை எனக்கு பிடிக்கும். அவரைப்போல் சக்திவாய்ந்த அரசியல் தலைவியை நான் பார்த்ததே இல்லை.

தமிழ் படங்களில் நடிக்க நான் தயாராக உள்ளேன். ரஜினிகாந்த், அஜித்குமார், விஜய், சூர்யா போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடிக்க ஆசை உள்ளது. பெண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள். ஆனால் அவர்களில் யார் மிகவும் அழகானவர்கள் என தேர்ந்தெடுக்க அழகிப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். ஆண்களுக்கான அழகு போட்டிகளும் நடைபெற்று வருகிறது. ஆனால் அது பெரிய அளவில் பிரபலமாகவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தின் டிரைலர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. #MrLocal #MrLocalTrailer
எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மிஸ்டர்.லோக்கல்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் டிரைலர் இன்று வெளியானது. ஆக்ஷன், காமெடி கலந்த இந்த டிரைலர் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ஒரு சிங்கிள் பாடலை இன்று மாலை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே,இ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இசையமைக்கிறார். #MrLocal #Sivakarthikeyan #Nayanthara
ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. #MrLocal #Sivakarthikeyan
எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மிஸ்டர்.லோக்கல்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் டிரைலர் மற்றும் ஒரு சிங்கிள் நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
Dear @Siva_Kartikeyan fans!😎
— Studio Green (@StudioGreen2) May 4, 2019
Its time to crash YouTube servers!!😄
Record Breaker on its way!! 💥
💯% Summer Family Entertainer!!#Nayanthara@rajeshmdirector@actorsathish@iYogiBabu@realradikaa@hiphoptamizha@SF2_official@thinkmusicindia@DoneChannel1pic.twitter.com/FbgkuNCvHV
ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே,இ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இசையமைக்கிறார். #MrLocal #Sivakarthikeyan #Nayanthara
புஷ்கர் காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அறிமுகமாகும் நிலையில், இவர்களிடம் பணிபுரிந்த ஹலிதா ஷமீம் இயக்கும் 'ஏலே' என்ற படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க சமுத்திரக்கனி ஒப்பந்தமாகி இருக்கிறார். #Aelay
ஒய் நாட் ஸ்டுடியோஸ் & ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்க, வால்வாட்சர்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் படம் 'ஏலே'.
சமுத்திரகனி, மணிகண்டன் மற்றும் பலர் நடிக்க, ஹலிதா ஷமீம் எழுதி இயக்கும் இந்த படம் நியோ ரியலிஸ்டிக் காமெடி படமாக உருவாகிறது. எஸ்.சசிகாந்த் தயாரிக்கும் இந்த படத்தின் மூலம் இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக பணிபுரிகிறார்கள்.
இதுகுறித்து புஷ்கர் & காயத்ரி கூறும்போது, "பெரிய திரையில் நாம் விரும்பும் கதைகளை கொண்டு வரும் கனவு எங்களுக்குள் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அந்த வகையில் எங்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தபோது ஹலிதா ஷமீம் சொன்ன கதை எங்களுக்கு மிகவும் பிடித்தது. எனவே, எஸ்.சசிகாந்த் இந்த மாதிரியான ஒரு யோசனையை கொண்டு வந்தபோது, நாங்கள் அதில் ஒரு பகுதியாக இருக்க உடனே ஒப்புக் கொண்டோம்" என்றனர்.

இயக்குனர் ஹலிதா ஷமீம் கூறும்போது, "பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய, இப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும் "ஏலே" படத்தை நான் இயக்குவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
பழனியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், தொடர்ந்து இரண்டு மாதங்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.
#Aelay. The first project of the @StudiosYNot & @wallwatcherfilm collaboration. Directed by Halitha Shameem @halithashameem. Starring Samuthrakani @thondankani and Manikandan. This script made us laugh & brought a lump to our throat! Shoot starts today! @sash041075@RelianceEntpic.twitter.com/BcriKVryT3
— Pushkar&Gayatri (@PushkarGayatri) May 3, 2019
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு கேபர் வாசுகி இசையமைக்க, வினோத் ராஜ்குமார் கலை பணிகளையும், ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். #Aelay #Samuthirakani #PushkarGayatri
முத்துக்குமரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `தர்மபிரபு' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய யோகி பாபு, எமதர்மனாக நடிக்கும் போது திமிர் இருந்தது என்றார். #Dharmaprabhu
முத்துகுமரன் இயக்கத்தில் யோகி பாபு, ரமேஷ் திலக், ராதாரவி, `வத்திக்குச்சி' திலீபன், ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு நடித்துள்ள படம் `தர்மபிரபு' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இதில் நடிகர் யோகி பாபு பேசியதாவது,
இந்த படத்தில் இரண்டு கதாநாயகர்கள். எமலோகத்தில் நான், பூலோகத்தில் சாம். நானும், முத்துக்குமரனும் 15 வருட நண்பர்கள். அவர் கூறியது உண்மைதான். நான் ‘லொள்ளு சபா’வில் இருந்து கொண்டு வரும் வருமானத்தில் தான் சாப்பிட்டோம். சில நாட்கள் சாப்பிடாமல் கூட மொட்டை மாடியில் படுத்து உறங்கியிருக்கிறோம். அப்போது பேசிய கதை இப்போது படமாக வந்திருக்கிறது.
இப்படத்தைப் பற்றி கூறி, இப்படத்தில் நடிப்பீர்களா? தேதி கிடைக்குமா? என்று முத்துக்குமார் கேட்டதும் ஒப்புக் கொண்டேன். அதே சமயத்தில் ‘குர்கா’ படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டேன். இரு இயக்குநர்களும் நண்பர்கள் என்பதால் 45 நாட்கள் தூங்காமல் இரவு பகலாக நடித்துக் கொடுத்தேன். யாரும் இல்லாத இடத்திற்கு நான் வந்திருக்கிறேன் என்று கூறினார்கள். யாரும் இல்லாத இடத்தில் விளையாட முடியாது. எல்லோரும் இருக்கிறார்கள். அதில் அவரவர் பணியைச் சிறப்பாக செய்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.

முதலில் மேக்அப் போட்டதும் யாருக்கும் திருப்தி ஏற்படவில்லை. ரேகா தான் கூறினார், இந்த கெட்அப் போட்டாலே திமிர் தானாக வந்துவிடும். அதேபோல் தான் நானும் உணர்ந்தேன். சில இடங்களில் நான் பேசும் வசனங்களைப் பார்த்து படப்பிடிப்பு தளத்தில் பயந்திருக்கிறார்கள். என் வாழ்க்கையில் காலம் கடந்து இப்படம் இருக்கும். ‘ஆண்டவன் கட்டளை‘, ‘பரியேறும் பெருமாள்’ வரிசையில் இப்படமும் பேசப்படும்.
நான் அதிகமாக சம்பளம் வாங்கும் ஆள் இல்லை. தயாரிப்பாளர்களின் கஷ்டம் எனக்கு தெரியும். வெளியில் சொல்வதை நம்பாதீர்கள் என்றார். #DharmaPrabhu #DharmaPrabhuAudioLaunch #YogiBabu
யோகி பாபு பேசிய வீடியோ:
யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் தர்மபிரபு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் டி.சிவா, தலைமை சரியாக இல்லாதது தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் என்றார். #Dharmaprabhu
முத்துகுமரன் இயக்கத்தில் யோகி பாபு, ரமேஷ் திலக், ராதாரவி, `வத்திக்குச்சி' திலீபன், ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு நடித்துள்ள படம் `தர்மபிரபு' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இதில் பிரபல தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசியதாவது,
அரசுக்கும் டிக்கெட் புக்கிங்கிற்கும் சம்பந்தமில்லை, அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் பொறுப்பற்று நடப்பதால் தான் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது. பிறவியில் இந்த நிலைமைகள் மாறும். அரசாங்கத்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. கோரிக்கை விடுத்தாலே போதும். அப்படி கேட்கக்கூடிய தலைமை நம்மிடம் இல்லை.

யாரை அழைத்துக் கொண்டு பேசுவது என்று தெரியாமல் தயாரிப்பாளர்கள் அனாதையாக நிற்கிறோம். கேட்பதற்கு ஆள் இல்லை. இந்த நிலைமை இன்னும் மூன்று, நான்கு மாதங்களில் மாறும், எதையும் முயற்சி செய்யாத அமைப்பு, எதைப்பற்றியும் கவலைப்படாத ஒரு தலைவர். என் குழந்தைகளுக்கு என்ன பிரச்சனை என்பது எனக்கு தான் தெரியும். தயாரிப்பையே தொழிலாக கொண்டுள்ள ஒருவர் தான் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தலைவராக இருக்க வேண்டும். படம் தயாரிக்கும் அனைவரும் தயாரிப்பாளர் இல்லை. தன்னை நடிக்க வைத்து தானே தயாரிப்பவர்கள், தயாரிப்பாளர்கள் என்று முழுமையாக சொல்லிக் கொள்ள கூடாது. அப்படி ஒருவர் இருப்பது தான் இங்குள்ள பிரச்சனைக்கு எல்லாம் காரணம். தமிழ் ராக்கர்ஸை 6 மாதங்களில் ஒழிப்பேன் என்று சொன்னவர்களை எல்லாம் காணோம்.
இந்த நிலைமைக்கு முறையான முயற்சி செய்யாமல் இருப்பதுதான் காரணம். தமிழ் ராக்கர்ஸ், டிக்கெட் விலை ஏற்றம் போன்ற பல பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றார். #DharmaPrabhu #DharmaPrabhuAudioLaunch #YogiBabu #TSiva
டி.சிவா பேசிய வீடியோ பார்க்க:
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், பிரித்விராஜ், விவேக் ஓபராய், டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகி இருக்கும் லூசிபர் படத்தின் விமர்சனம். #Lucifer #MohanLal
முழுக்க முழுக்க அரசியல் படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. இதில் தமிழக முதல்வராக இருக்கும் சச்சின் கெடேகரின் திடீர் மறைவால், முதல்வர் பதவிக்கான போட்டியில் 5 பேர் இணைகின்றனர்.
சச்சின் கெடேகரின் மகன் டோவினோ தாமஸ், மகள் மஞ்சு வாரியர், அவரது கணவர் விவேக் ஓபராய் மற்றும் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சாய் குமார் மற்றும் கட்சியில் சத்தமில்லாமல் பலம் வாய்ந்தவராக இருக்கும் மோகன் லால் உள்ளிட்டோரிடையே போட்டி நிலவுகிறது.

இதில் டோவினோ தாமஸ் பெயரை முதல்வர் பதவிக்காக பரிந்துரைக்க, அதில் சூழ்ச்சி வரும் சூழ்ச்சிகளை மோகன் லால் தடுத்து நல்ல தலைமையை கொண்டுவர முயற்சிக்கிறார். மோகன் லாலின் வலது கையாக அவர் சொல்வதை செய்து வருகிறார் பிரித்விராஜ்.
கடைசியில், முதல்வர் பதவியில் உட்கார்ந்தது யார்? சூழ்ச்சிகளை மோகன் லால் எப்படி எதிர்கொண்டார்? என்பதே லூசிபர் படத்தின் மீதிப்பாதி.

படம் முழுக்க பெரும்பாலும் வெள்ளை வேஸ்டி, சட்டையுடனேயே வலம் வருகிறார் மோகன் லால். பதுங்கியிருப்பதும், பிரச்சனை வரும் போது பாய்வதும் என மாஸ் காட்டிச் சென்றிருக்கிறார். மோகன் லால் சொல்வதை செய்யும் விசுவாசியாக பிருத்விராஜ் ஆக்ஷன் அவதாரம் எடுத்து கலக்கியிருக்கிறார். டோவினோ தாமஸ் அமைதியான வில்லனாகவும், விவேக் ஓபராய் மாஸான வில்லனாகவும் வந்து கவர்கின்றனர். மஞ்சு வாரியர் வில்லத்தனம் கலந்த அரசியல்வாதியாக சிறப்பாக நடித்திருக்கிறார்.
மற்றபடி, பத்திரிகையாளராக இந்திரஜித் சுகுமாரனும், சாய்குமார், நந்து, சுரேஷ் மேனன் உள்ளிட்டோர் அரசியல்வாதியாகவும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

முரளி கோபி எழுதிய கதையை மாஸாக இயக்கியிருக்கிறார் பிரித்விராஜ். மோகன் லாலை ரசித்து ரசித்து மாஸாக காட்டியிருப்பது போன்று தோன்றுகிறது. மாஸ் காட்சிகளை தேவையில்லாமல் மிகைப்படுத்தாமல், தேவையான இடங்களில் மட்டும் காட்டியிருப்பது சிறப்பு. வழக்கமான ஒரு பழிவாங்கல் கதை தான் என்றாலும் அதை வித்தியாசமாக காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு.
தீபக் தேவின் இசையும், சுஜித் வாசுதேவின் ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு பலம் கூட்டியிருக்கின்றன.
மொத்தத்தில் `லூசிபர்' மாஸ். #Lucifer #MohanLal #PrithvirajSukumaran #VivekOberoi #ManjuWarrier #TovinoThomas






