என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரான சித்தார்த், பிரதமர் மோடியையும், அக்‌ஷய் குமாரையும் கிண்டல் செய்யும்படியாக ட்விட் ஒன்றை பதிவு செய்துள்ளார். #Siddharth
    தென்னிந்திய சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக இருக்கும் நடிகர் சித்தார்த் சமூக வலைதளங்களில் எப்போதும் துடிப்புடன் இருப்பவர். அவ்வப்போது தனது கருத்துக்களை பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்.

    இந்த நிலையில், நடிகர் சித்தார்த், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,



    விரைவில் மீண்டும் பொறுப்பேற்க இருக்கும் டொனால்ட் டிரம்ப், தேர்தல் சமயத்தில் என்னுடன் நேர்க்காணலுக்கு நான் உங்கள் பரிந்துரைக்கவா? நீங்கள் எப்படி பழம் உண்பீர்கள், உறக்கம், உங்களது அலுவல் மற்றும் உங்களது அழகிய குணம் பற்றி என்னிடம் நிறைய சுவாரஸ்யமான கேள்விகள் இருக்கின்றன. என்னிடம் இந்திய பாஸ்போர்ட் இருக்கிறது. தயவுகூர்ந்து குறுந்தகவல் அனுப்பவும்.

    இவ்வாறு கூறியிருக்கிறார்.


    சில நாட்களுக்கு முன்பாக நடிகர் அக்‌ஷய் குமார் பிரதமர் மோடியை நேர்க்காணல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் அக்‌ஷய் குமார் ஓட்டு போடாதது சர்ச்சையை கிளப்பிய நிலையில், அவர் கனடா பாஸ்போர்ட் வைத்திருப்பது குறித்தும் சர்ச்சை கிளம்பியது. இதனை குறிப்பிடும்படியாக சித்தார்த்தின் ட்விட் அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். #Siddharth #PMModi #AkshayKumar 

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிலையில், சரித்திர படமொன்றில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Dhanush
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ். தொடக்க காலத்தில் இருந்து தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். நடிப்பு மட்டுமின்றி, தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட இவர் நடிப்பில் அடுத்ததாக எனை நோக்கி பாயும் தோட்டா படம் ரிலீசாக இருக்கிறது.

    தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்திலும், துரை செந்தில்குமார் இயக்கத்திலும் நடித்து வருகிறார். ராம்குமார், கார்த்திக் சுப்புராஜ் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.



    சரித்திர படமொன்றையும் இயக்கி நடித்து வருகிறார். இந்த நிலையில், பிரபல நாளிதழ் ஒன்றில் தொடராக வந்த வேள்பாரி கதையில் நடிக்க ஆர்வம் காட்டியுள்ளார்.

    சு.வெங்கடேசன் எழுத்தில் வேள்பாரியின் வாழ்க்கையை மையப்படுத்தி வந்த இந்த நாவலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இயற்கைக்கும், மனித பேராசைகளுக்கும் இடையே நடக்கும் போராட்டம் பற்றிய கதை, ‘வேள்பாரி’ என்பது குறிப்பிடத்தக்கது. #Dhanush #VelPaari

    இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அக்‌ஷய் குமார், வாக்களிக்காதது குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். #AkshayKumar
    மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த திங்கள் அன்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவில் இந்தி நடிகர், நடிகைகள் வாக்களித்தனர். அப்போது நடிகர் அக்‌‌ஷய் குமாரின் மனைவி வாக்களிக்க வந்தார். ஆனால் அக்‌‌ஷய் குமார் வரவில்லை. இது சர்ச்சை ஆனது.

    பிளாங் திரைப்பட திரையிடல் மும்பையில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அப்போது அக்‌‌ஷய் குமாரிடம் பத்திரிகையாளர் ஒருவர் இது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் பதில் அளிக்காமல் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து சென்றார். கடந்த சில ஆண்டுகளாகவே அக்‌‌ஷய் குமார், ‘டாய்லெட்’, ‘எக் ப்ரேம் கதா’, ‘பேட் மேன்’ உள்ளிட்ட சமூக கருத்துகளை தாங்கிய படங்களில் நடித்து வருகிறார். வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.



    எனவே ‘வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு விளம்பரங்களில் நடித்த அக்‌‌ஷய் இவ்வாறு செய்வதா?’ என்று கேள்விகள் எழுந்தன. மேலும் அக்‌‌ஷய் குமாரிடமும் கனடா நாட்டு குடியுரிமை இருப்பதை இந்த சம்பவத்தோடு முடிச்சு போட்டு செய்திகள் பரவின.

    இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் ’என் குடியுரிமை குறித்து தேவையில்லாத ஆர்வமும், எதிர்கருத்துகளும் ஏன் பரப்பப்படுகின்றன என்று எனக்கு புரியவில்லை. நான் கனடா குடியுரிமை வைத்திருப்பது குறித்து ஒருபோதும் மறைத்ததில்லை. யாரிடமும் மறுத்ததும் இல்லை. இது எந்த அளவுக்கு உண்மையோ, நான் கடந்த 7 ஆண்டுகளாக கனடாவுக்குச் செல்லவில்லை என்பதும் அதே அளவுக்கு உண்மைதான். நான் இந்தியாவில் வேலை செய்கிறேன். அனைத்து வரிகளையும் இந்தியாவிலேயே செலுத்துகிறேன்.


    இத்தனை ஆண்டுகளில் நான் தேசத்தின் மீதான காதலை யாரிடமும் நிரூபிக்கவேண்டிய தேவை இருந்ததில்லை. என் குடியுரிமை குறித்து தொடர்ந்து தேவையில்லாத சர்ச்சைகளை நான் விரும்பவில்லை. தனிப்பட்ட, சட்டபூர்வமான, அரசியலற்ற என் குடியுரிமை யாருக்கும் எந்த விளைவையும் ஏற்படுத்தப் போவதில்லை.

    கடைசியாக, இந்தியாவை வலிமையாக்க சிறிய அளவிலான எனது பங்களிப்பைத் தொடர்ந்து செலுத்துவேன்’ இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். #AkshayKumar

    பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி - காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோமாளி’ படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளை படக்குழு வெளியிட்டு வருகிறது. #Comali #JayamRavi
    அடங்கமறு படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ‘கோமாளி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நேற்று முன்தினம் வெளியான நிலையில், படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளை படக்குழு வெளியிட்டு வருகிறது.

    இந்த படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக்கும், தொலைக்காட்சி உரிமையை ஸ்டார் விஜய்யும் கைப்பற்றியிருக்கின்றன. முன்னதாக ஜெயம் ரவியின் அடங்கமறு படத்தையும் ஸ்டார் விஜய் கைப்பற்றியிருந்தது. இதன்மூலம் ஜெயம் ரவியின் அடுத்தடுத்த 2 படங்களை ஸ்டார் விஜய் கைப்பற்றியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


    மேலும் டிஜிட்டல் உரிமையை ஹாட்ஸ்டாரும், வெளிநாட்டு திரையரங்கு உரிமையை ஏ&பி குரூப்பும் கைப்பற்றியிருக்கிறது.


    இந்த படத்தில் ஜெயம் ரவி, ராஜா, ஆதிவாசி, பிரிட்டீஷ் காலத்து அடிமை, 1990-களில் வாழ்ந்த இளைஞர் உள்பட 9 வேடங்களில் நடித்திருக்கிறார். இதில், ஜெயம் ரவியுடன் முதல் முறையாக காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்திருக்கிறார்.

    படத்தின் இன்னொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்திருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பிஜிலி ரமேஷ், பொன்னம்பலம் காமெடி வேடங்களில் வர, ஆர்.ஜே ஆனந்தி இந்த படத்தில் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரிக்கிறார்.

    தொழில்நுட்ப துறையில் வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய உலகையும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் சித்தரிக்கும் படமாக, நகைச்சுவை கலந்து  சொல்லப்பட்டிருக்கிறது. #JR24 #Comali #JayamRavi #KajalAggarwal

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் கதையில் பிரபலங்கள் இணைந்திருக்கும் நிலையில் இந்த படத்தை தயாரிக்க ஜியோ ஸ்டூடியோசுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. #PonniyinSelvan #Maniratnam
    அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். நட்சத்திர அந்தஸ்துள்ள பெரிய நடிகர், நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர்.

    பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் இரண்டு பாகங்களாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். தற்போது பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ் தேர்வாகி உள்ளார். மோகன்பாபுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.



    சுமார் ரூ.800 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தை லைகா புரொக்ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், இந்த படத்தை தயாரிப்பது குறித்து மணிரத்னம் ஜியோ ஸ்டூடியோசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

    முதற்கட்ட பணிகள் வருகிற ஆகஸ்ட் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் படம் தயாராகிறது. #PonniyinSelvan #Maniratnam

    பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியாகி இருக்கும் `கே 13' படத்தின் விமர்சனம். #K13 #K13MovieReview #Arulnidhi
    திரையுலகில் நீண்ட நாட்களாக உதவி இயக்குனராக இருக்கும் அருள்நிதி எப்படியாவது இயக்குனராகிவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். கிடைத்த வாய்ப்பும் பறி போகிறது. சொன்ன கதை பிடிக்காமல், இரண்டு நாட்களில் வேறு கதை ரெடி பண்ண சொல்லி ஒருவர் கேட்கிறார்.

    இந்நிலையில், நண்பர்களுடன் கிளப்புக்கு செல்கிறார் அருள்நிதி. அங்கு நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை பார்த்து பழக ஆரம்பிக்கிறார். இந்த பழக்கம் வீடு வரைக்கும் செல்கிறது.

    மறுநாள் காலை வீட்டில் ஒரு நாற்காலியில் கட்டிப்போட்டு இருக்கும் அருள்நிதி, கண் விழித்து பார்க்கும் போது, நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் கை அறுபட்ட நிலையில், இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறார். என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் அருள்நிதி, அந்த வீட்டில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்.



    இறுதியில் அருள்நிதி எப்படி தப்பித்தார்? ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை யார் கொலை செய்தார்? இதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அருள்நிதி முழுக்கதையை தாங்கி பிடித்திருக்கிறார். தன்னுடைய நடிப்பு திறனை வெளிப்படுத்த சிறந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை உணர்ந்து சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகி ஷ்ரத்தா அழகாக வந்து கொடுத்த வேலையை செய்திருக்கிறார். நண்பர்களாக வரும் ரமேஷ் திலக், யோகி பாபு ஆகியோர் சில காட்சிகள் மட்டுமே வந்து சென்றிருக்கிறார்கள். காயத்ரி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார்கள்.



    அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் நடக்கும் கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் பரத் நீலகண்டன். அதை சைக்கோ திரில்லருடன் கொடுத்திருக்கிறார். வித்தியாசமான கிளைமாக்ஸ் காட்சியுடன் படத்தை முடித்திருப்பது அருமை. சிறிய கதையை மாறுபட்ட கோணத்தில் சொல்லியிருக்கிறார். 

    சாம்.சி.எஸ். இசையும், அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘கே-13’ விறுவிறுப்பு.
    ஐதராபாத்தில் உள்ள நடிகர் சிரஞ்சீவியின் பண்ணை வீட்டில் படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட அரங்கத்தில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. #Chiranjeevi #Chiranjeevifarmhouse
    ஐதராபாத்:

    தெலுங்கு திரையுலகின் கதாநாயகனும் மத்திய முன்னாள் மந்திரியுமான நடிகர் சிரஞ்சீவிக்கு ஐதராபாத்தில் உள்ள கோக்காபேட் பகுதியில் மிகப்பெரிய பண்ணை வீடு உள்ளது.

    தற்போது அவர் நடித்துவரும் ‘சியே ரா நரசிம்ம ரெட்டி’ என்ற திரைப்படத்துக்காக இந்த பண்ணை வீட்டில் பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. 

    இந்நிலையில், இந்த அரங்கத்தின் ஒரு பகுதியில் இன்று மாலை திடீரென்று தீ பிடித்தது. காற்றின் வேகத்தில் மளமளவென பரவிய தீ அரங்கத்தின் பெரும்பகுதியை நாசப்படுத்தியது.

    தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தீயை அணைத்து வருகின்றனர். இந்த விபத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிரிழப்பு தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #Chiranjeevi  #Chiranjeevifarmhouse 
    சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘100’ படத்தில் நான் வருவேன், கண் முன்னாடி வந்து நிற்பேன் என்று அதர்வா பேசும் வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. #100Movie
    ஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `100'. இந்த படத்தில் அதர்வா முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஹன்சிகாவும், முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, மைம் கோபி, ராகுல் தேவ், ராதாரவி, ஜாங்கிரி மதுமிதா, ஆகாஷ்தீப் சய்கல், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    இப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. பள்ளி சிறுமிகளுக்கு நிகழும் கொடூரம், சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இப்படத்தின் டிரைலரில் நான் வருவேன், கண் முன்னாடி வந்து நிற்பேன் என்ற வசனம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

    சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் ஆண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் மே 9ம் தேதி வெளியாக இருக்கிறது.

    100 படத்தின் டிரைலர்...


    ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன், மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்க நோ சொல்லியிருக்கிறார். #ManjimaMohan
    சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். அடுத்து அவர் நடிப்பில் வெளியான சத்ரியன், இப்படை வெல்லும் படங்கள் பெரிதாக போகவில்லை. தேவராட்டம் படத்தில் நடித்துள்ள மஞ்சிமா அளித்த பேட்டி: நான் நல்ல படங்களாக தான் தேர்வு செய்கிறேன்.

    அச்சம் என்பது மடமையடா படம் ரிலீசாவதற்கு முன்பே வந்த வாய்ப்பு தான் சத்ரியன். ஆனால் அந்த படத்தை பார்த்த போது இது சரியாக போகாது என்பதை உணர்ந்துகொண்டேன். அது எனக்கு ஒரு வருத்தத்தை தந்தது. பிறகு சுதாரித்து கொண்டு நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்கிறேன். ஜெயலலிதா பயோபிக்கில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால் அந்த படங்களுக்கு ஏற்கனவே நடிகைகளை முடிவு செய்துவிட்டனர்.



    எனவே அதைப்பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. ஜெயலலிதா பற்றிய வெப்சீரிஸில் நடிக்க கவுதம் கூப்பிட்டார். ஆனால் வெப்சீரிஸில் நடிக்க விருப்பம் இல்லாததால் நோ சொல்லி விட்டேன். ஒரு நடிகையாக எல்லா கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. அந்த வகையில் சசிகலா கதாபாத்திரத்திலும் நடிக்க நான் தயார். இந்த கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன். இதில் நடிக்க மாட்டேன் என எந்த வரையறையும் எனக்கு கிடையாது. சினிமாவில் நான் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்”.

    இவ்வாறு மஞ்சிமா மோகன் கூறினார்.
    என்னோட சம்மர் டிரிப்புக்கு எப்போதும் என்னோட தோழிகள் தான் பெஸ்ட் பார்ட்னர்ஸ் என்று நடிகை சஞ்சிதா ஷெட்டி கூறியிருக்கிறார். #Sanchita
    தமிழ்நாட்டில் வெயில் மக்களை வறுத்து எடுக்கிறது. நடிகைகள் கோடை வந்தாலே குளிர் பிரதேசங்களுக்கு பறந்து விடுவார்கள். சஞ்சிதா ஷெட்டி வட இந்தியாவுக்கு பயணம் சென்று இருக்கிறார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோடைகாலத்தில் படப்பிடிப்பு இருந்தாலும் இல்லை என்றாலும் ஒரு பயணம் கண்டிப்பாக இருக்கும். கோடை தொடங்கி விட்டால் கொஞ்சம் குளிரான பகுதியை பார்த்து செட்டில் ஆகிவிடுவேன்.



    இதற்காக ஆண்டு தொடக்கத்தில் இருந்தே சேமிப்பேன். சேர்ந்து இருக்கும் பணத்தை பொறுத்துதான் அந்த ஆண்டுக்கான இடத்தை தேர்வு செய்வேன். என்னோட சம்மர் டிரிப்புக்கு எப்போதும் என்னோட தோழிகள் தான் பெஸ்ட் பார்ட்னர்ஸ்.

    பிளைட் டிக்கெட் ஆறுமாசத்துக்கு முன்னாடியே புக் பண்ணினால் விலை குறைவு என்பதால் எந்த டிரிப்புக்கும் ஆறுமாதத்துக்கு முன்பே பிளான் பண்ணிருவேன். இந்த வருடம் வட இந்தியாவில் இருக்கும் மலைப்பிரதேசங்களுக்கு பள்ளி, கல்லூரி தோழிகள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து வந்து இருக்கிறோம்’ இவ்வாறு அவர் கூறினார்.
    பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் தேவதர்ஷினி, என் மகளுக்கு தளபதி 63 படத்தில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை தடுத்தேன் என்று கூறியிருக்கிறார். #Thalapathy63
    கடந்த ஆண்டு வெளியான 96, சமீபத்தில் வெளியான `காஞ்சனா 3’ என வரிசையாக வெற்றிப் படங்களில் கலக்கிக் கொண்டிருப்பவர் தேவதர்ஷினி. தளபதி 63 படத்தில் விஜய்க்கு அக்காவாக நடித்து முடித்து இருக்கிறார். அந்த செய்தி சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இது குறித்து கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

    அக்டோபர் மாதம் `96’ ரிலீஸ் ஆன நேரத்தில் என் மகளை தளபதி 63 படத்தில் நடிக்க முடியுமா என்று அட்லீ கேட்டார். `இப்போதான் 96 படம் நடிச்சி முடிச்சிருக்காங்க. மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு தேர்வு வருது. அதுக்கு அவங்க தயாராகணும்‘னு சொன்னேன். அதை புரிஞ்சுக்கிட்டார்.



    கண்டிப்பாக எந்த ஒரு ஆர்ட்டிஸ்டாக இருந்தாலும், தளபதிகூட நடிக்க ஆவலாகத்தான் இருப்பாங்க. என் மகளுக்கும் அப்படி ஒரு வாய்ப்பு வந்தது. படத்தை விடவும், இப்போது படிப்பு ரொம்ப முக்கியம். அதனால்தான் இப்போதைக்கு வேண்டாம்னு சொன்னேன். பிறகு கொஞ்ச நாள் கழித்து, `விஜய்க்கு அக்கா கேரக்டரில் நீங்க நடிக்க முடியுமான்னு கேட்டாங்க. ஓ.கே சொன்னேன். என்னுடைய ஷெட்யூல் பிப்ரவரி மாசமே முடிஞ்சிடுச்சு. ஐந்து நாட்கள் நடிச்சு முடிச்சிட்டேன். என்னுடையது முக்கியமான கேரக்டராக இருக்கும்’. இவ்வாறு அவர் கூறினார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஓவியாவை அவரது ரசிகர்கள் சிலர் சமூக வலைத்தளத்தில் கடுப்பேத்தி இருக்கிறார்கள். #Oviyaa
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஓவியா ஆரவ்வுடனான காதல் சர்ச்சையிலிருந்து மீளவில்லை. ஓவியா என்ன செய்தாலும் ஓவியா ஆர்மி ரசிகர்கள் பாராட்டி வந்த நிலையில் 90 எம்எல் படத்துக்கு பிறகு ஓவியா எது செய்தாலும் அதை விமர்சிப்பவர்கள் பெருகி விட்டார்கள்.

    சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு இணைய தளத்தில் ஓவியா பதில் அளித்தார். அப்போது ஒரு ரசிகர், ’என்னை திருமணம் செய்துகொள்ள தயாரா?’ என்றார். இதற்கு ஓவியா பதில் அளிக்கும் முன்னரே ஒருவர் ஓவியாவை பற்றி மோசமாக விமர்சித்து ஒரு பதிவிட்டார். இதனால் கோபமான ஓவியா அந்த ரசிகரை பதிலுக்கு திட்டி இருக்கிறார். 



    சிறிது நேரத்தில் அந்த ட்விட்களை ரசிகர்கள் தூக்கி விட்டார்கள். ஆனால், ஓவியா பதிவிட்டத்தற்கு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார். இது வைரல் ஆகி வருகிறது.
    ×