search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேக்னா நாயுடு"

    முத்துகுமரன் இயக்கத்தில் யோகிபாபு, திலீபன், ரமேஷ் திலக் நடிப்பில் உருவாகி இருக்கும் `தர்மபிரபு' படத்தின் தொலைக்காட்சி உரிமை மற்றும் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
    `கன்னிராசி' படத்தை இயக்கிய முத்துகுமரன் அடுத்ததாக யோகி பாபுவை வைத்து `தர்மபிரபு' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். யோகிபாபு எமனாகவும், ராதாரவி அவருடைய தந்தையாகவும், ரமேஷ் திலக் சித்திரகுப்தனாகவும் நடித்துள்ளனர்.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியிருப்பதாக அறிவித்துள்ள படக்குழு, படம் வருகிற ஜூன் 28-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



    இந்த படத்தில் `வத்திக்குச்சி' திலீபன், ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு உள்ளிட்டோரும் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளனர்.

    மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசையமைக்கிறார். லோகேஷ் படத்தொகுப்பையும், பாலசந்தர் கலை பணியையும் கவனிக்கின்றனர். ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் ரங்கநாதன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

    தமிழ், தெலுங்க படங்களில் நடித்து பிரபலமான நடிகை மேக்னா நாயுடு டென்னிஸ் வீரரை காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். #MeghnaNaidu
    தமிழில் சிம்புவுடன் சரவணா, சரத்குமாருடன் வைத்தீஸ்வரன் மற்றும் ஜாம்பவான், வீராசாமி, வாடா உள்பட பல படங்களில் நடித்தவர் மேக்னா நாயுடு. தனுசின் குட்டி, கார்த்தியின் சிறுத்தை படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சில வருடங்களாக அவர் சினிமாவில் நடிக்கவில்லை.

    இந்த நிலையில் மேக்னா நாயுடு, டென்னிஸ் வீரரை ரகசிய திருமணம் செய்துகொண்டதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    “எனது தந்தை டென்னிஸ் பயிற்சியாளர். அவர் மூலம் போர்ச்சுகீசிய டென்னிஸ் வீரர் லூயிஸ் அறிமுகமானார். என்னை விட அவர் பத்து வயது மூத்தவர். சமூக வலைத்தளம் மூலம் எங்கள் நட்பு தொடர்ந்தது. பின்னர் அது காதலாக மலர்ந்தது. கடந்த 2016 டிசம்பர் 25-ந் தேதி நாங்கள் இருவரும் மும்பையில் இந்து முறைப்படி ரகசிய திருமணம் செய்துகொண்டோம்.



    எளிமையாக இந்த திருமணம் நடந்தது. அடுத்த வருடம் கிறிஸ்தவ முறைப்படியும் எங்கள் திருமணம் நடக்கும். தேனிலவு இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. சமீபத்தில் எனது கணவரிடம் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போகிறேன் என்றேன். இதைத்தொடர்ந்து எங்கள் திருமணத்தை இப்போது எல்லோருக்கும் தெரியப்படுத்துகிறேன்.”

    இவ்வாறு மேக்னா நாயுடு கூறினார். #MeghnaNaidu

    முத்துகுமரன் இயக்கத்தில் யோகிபாபு, திலீபன், ரமேஷ் திலக் நடிப்பில் உருவாகும் `தர்மபிரபு' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவிருக்கிறது. #Dharmaprabhu #YogiBabu
    விமல், வரலட்சுமி நடித்துள்ள `கன்னிராசி' படத்தை இயக்கிய முத்துகுமரன் அடுத்ததாக இயக்கிவரும் படம் `தர்மபிரபு'. யோகி பாபு, `வத்திக்குச்சி' திலீபன், ரமேஷ் திலக் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள்.

    முழு நீள நகைச்சுவை படமாக உருவாகும் இதில், யோகிபாபு எமனாகவும், ராதாரவி அவருடைய தந்தையாகவும் நடிக்கிறார். ரமேஷ் திலக் சித்திரகுப்தனாக நடிக்கிறார். எமலோகத்திற்கான படப்பிடிப்பு தளத்தை ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக அமைத்திருக்கிறார்கள். அங்கு இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.



    மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசை அமைக்கிறார். லோகேஷ் படத்தொகுப்பையும், பாலசந்தர் கலை பணியையும் கவனிக்கின்றனர். ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் ரங்கநாதன் இந்த படத்தை தயாரிக்கிறார். #Dharmaprabhu #YogiBabu

    முத்துகுமரன் இயக்கத்தில் உருவாகி வரும் `தர்மபிரபு' படத்தின் மூலம் நடிகை மேக்னா 7 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். #DharmaPrabhu #YogiBabu #MeghnaNaidu
    விமல், வரலட்சுமி இணைந்து நடித்துள்ள `கன்னிராசி' படத்தை இயக்கிய முத்துகுமரன் அடுத்ததாக இயக்கிவரும் படம் `தர்மபிரபு'. யோகி பாபு, `வத்திக்குச்சி' திலீபன் ரமேஷ் திலக் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில், இந்த படத்தின் மூலும் நடிகை மேக்னா நாயுடு தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இவர் சிம்பு நடிப்பில் வெளியான சரவணா படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தவர். தொடர்ந்து, ஜாம்பவான், வீராசாமி, வைத்தீஸ்வரன், பந்தையம் உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தார். சிறுத்தை, குட்டி படங்களில் குத்து பாட்டுக்கு நடனமாடி இருக்கிறார். அதன்பின்னர் தமிழ் படங்களில் தோன்றாத இவர் `தர்மபிரபு' படத்தில் நடிக்க இருக்கிறார்.



    இதுகுறித்து மேக்னாவிடம் கேட்ட போது, அவரும் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் தான் இந்த படத்தில் நான் நடித்துள்ள கதாபாத்திரம் ரசிகர்களுக்கு வித்தியாசமானதாக இருக்கும். ஒரு பாடலுக்கும் நடனமாடுகிறேன் என்றார்.

    இதில் யோகி பாபு எமனாகவும், ரமேஷ் திலக் சித்ரகுப்தன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். ஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மகேஷ் முத்துச்சாமி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். #DharmaPrabhu #YogiBabu #MeghnaNaidu

    காமெடி நடிகர் யோகி பாபு நடிக்க இருக்கும் ‘தர்ம பிரபு’ படத்தில் பிரபல நடிகை ஒருவர் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட இருக்கிறார். #YogiBabu
    யோகிபாபு  நடிப்பில் இயக்குனர் முத்துகுமரன் இயக்கத்தில் பி.ரங்கநாதன் தயாரிக்கும் படம் 'தர்மபிரபு'. எமலோகத்தைப் பற்றிய நகைச்சுவை கலந்த படமாக உருவாக இருக்கிறது. தற்போது, இப்படத்திற்காக ஏவிஎம் ஸ்டூடியோவில் ரூ.2 கோடி செலவில் பிரம்மாண்டமாக படப்பிடிப்பு தளம் போடப்பட்டுள்ளது.

    எமலோகம் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சொர்க்கம் மற்றும் நரகம் என்று தனித்தனியாக படப்பிடிப்பு தளம் அமைக்கப்படவுள்ளது.

    இந்த தளம் அமைப்பதற்கு கலை இயக்குனர் பாலசந்தர் தலைமையில் ஏறக்குறைய 200 பேர் கொண்ட குழு கடந்த ஒரு மாதமாக இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார்கள்.

    வருகிற டிசம்பர் 14ம் தேதி இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில், மகன் எமனாக யோகிபாபு நடிக்க, அவருக்கு அப்பா எமனாக ராதாரவி நடிக்கிறார். சித்ரகுப்தனாக ரமேஷ் திலக் நடிக்கிறார். இவர்களுடன் அழகம் பெருமாள், 'போஸ்' வெங்கட், சோனியா போஸ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.



    இப்படத்தில் ஒரு பாடலுக்கு மேக்னா நாயுடு நடனமாடுகிறார். அதற்காக பிரம்மாண்ட தளம் அமைக்கப்படுகிறது. மேலும், அவருக்கென்று பிரத்யேகமான உடைகளும், ஆபரணங்களும் தயாராகி வருகிறது.

    ×