search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dharma Prabhu"

    யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் தர்மபிரபு படத்தில் அவருக்கு அம்மாவாக பிரபல நடிகை நடித்து வருகிறார். #YogiBabu #DharmaPrabhu
    பாரதிராஜாவின் கடலோர கவிதைகள் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ரேகா. இவர், 1990-களில் தமிழ், மலையாள முன்னணி கதாநாயகர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஜோடியாக நடித்து, பிரபல கதாநாயகிகள் பட்டியலில் இருந்தார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் இவர், தற்போது அம்மா, அக்காள் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

    யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் தர்மபிரபு படத்தில் அவருக்கு அம்மாவாக ரேகா நடித்து இருக்கிறார். எமன் மற்றும் எமலோக பின்னணி கொண்ட கதை இது. ஜனனி அய்யர், ராதாரவி, ரமேஷ் திலக், போஸ் வெங்கட், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், கும்கி அஸ்வின், மாஸ்டர் கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.



    ஒரு பாடலுக்கு மேக்னா நாயுடு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார். அழகம்பெருமாள் வில்லனாக நடித்துள்ளார். யுகபாரதி எழுதிய பாடல்களுக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்திருக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். கதை, திரைக்கதை எழுதி டைரக்டு செய்திருப்பவர் முத்து குமரன்.

    யோகிபாபுவுடன் ரேகா மற்றும் படத்தில் இடம் பெரும் நடிகர் நடிகைகள் நடித்த காட்சிகள், பிரம்மாண்டமாக அமைக்கபட்டிருந்த  எமலோகம் அரங்கில் படமாக்கப்பட்டது. ஏ.வி.எம். ஸ்டூடியோ மற்றும் சென்னை, பொள்ளாச்சி சுற்றுவட்டரங்களில் வளர்ந்துள்ள இப்படம் மே மாதம் திரைக்கு வருகிறது.
    யோகிபாபு தற்போது நடித்து வரும் ‘தர்மபிரபு’ படப்பிடிப்பு தளத்திற்கு பிரபல இயக்குனர் சென்று பார்வையிட்டு படக்குழுவினரை பாராட்டியுள்ளார். #YogiBabu #DharmaPrabhu
    சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகர்களை வைத்து கிட்டத்தட்ட 75 படங்களை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். ஏ.வி.எம். ஸ்டுடியோவில் இருக்கும் அவரது அலுவலகத்திற்கு தினமும் வருவது வழக்கம். இந்நிலையில்,  யோகிபாபு எமதர்மராஜாவாக நடிக்கும் 'தர்மபிரபு' படத்திற்காக எமலோக தளத்தை மிகப்பெரிய செலவில் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.

    அதைக் கேள்விப்பட்ட எஸ்.பி.முத்துராமன் அந்த தளத்தை பார்வையிட விரும்பி படக் குழுவினரிடம் கேட்டார். இதைக்கேட்ட படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்து படப்பிடிப்பு தளத்தைச் சுற்றிக் காட்டினர். அதைப் பார்த்த அவர் இந்த ஏ.வி.எம். ஸ்டுடியோவில் எத்தனையோ பெரிய பெரிய தளங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், அதெல்லாம் அந்த காலம். இக்காலத்தில் இப்படியொரு பிரம்மாண்ட தளத்தைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பாராட்டியுள்ளார். மேலும், அப்படத்தின் கதையையும் கேட்டறிந்து, கதை நன்றாக இருக்கிறது. நிச்சயம் வெற்றி பெரும் என்றும் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.



    மேலும், முன்பெல்லாம் சிவாஜி கணேசன், என்.டி.ஆர்., ராஜ்குமார் போன்ற நடிகர்களின் படங்களுக்கான படப்பிடிப்பு தளங்கள் ஏ.வி.எம். ஸ்டுடியோவில் அடுத்தடுத்த தளத்தில் ஒரே நேரத்தில் நடக்கும். ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டும், பேசிக்கொண்டும் இருப்பார்கள். இப்பொழுது வெறிச்சோடி கிடக்கிறது. அப்படியே ஒன்றிரண்டு நடந்தாலும், அவர்கள் ஒருவருவரைப் பார்த்து ஒரு சிறிய வணக்கத்துடன் முடித்துக் கொள்கின்றனர் என்று தன்னுடைய ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். #YogiBabu #DharmaPrabhu
    காமெடி நடிகர் யோகி பாபு நடிக்க இருக்கும் ‘தர்ம பிரபு’ படத்தில் பிரபல நடிகை ஒருவர் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட இருக்கிறார். #YogiBabu
    யோகிபாபு  நடிப்பில் இயக்குனர் முத்துகுமரன் இயக்கத்தில் பி.ரங்கநாதன் தயாரிக்கும் படம் 'தர்மபிரபு'. எமலோகத்தைப் பற்றிய நகைச்சுவை கலந்த படமாக உருவாக இருக்கிறது. தற்போது, இப்படத்திற்காக ஏவிஎம் ஸ்டூடியோவில் ரூ.2 கோடி செலவில் பிரம்மாண்டமாக படப்பிடிப்பு தளம் போடப்பட்டுள்ளது.

    எமலோகம் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சொர்க்கம் மற்றும் நரகம் என்று தனித்தனியாக படப்பிடிப்பு தளம் அமைக்கப்படவுள்ளது.

    இந்த தளம் அமைப்பதற்கு கலை இயக்குனர் பாலசந்தர் தலைமையில் ஏறக்குறைய 200 பேர் கொண்ட குழு கடந்த ஒரு மாதமாக இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார்கள்.

    வருகிற டிசம்பர் 14ம் தேதி இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில், மகன் எமனாக யோகிபாபு நடிக்க, அவருக்கு அப்பா எமனாக ராதாரவி நடிக்கிறார். சித்ரகுப்தனாக ரமேஷ் திலக் நடிக்கிறார். இவர்களுடன் அழகம் பெருமாள், 'போஸ்' வெங்கட், சோனியா போஸ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.



    இப்படத்தில் ஒரு பாடலுக்கு மேக்னா நாயுடு நடனமாடுகிறார். அதற்காக பிரம்மாண்ட தளம் அமைக்கப்படுகிறது. மேலும், அவருக்கென்று பிரத்யேகமான உடைகளும், ஆபரணங்களும் தயாராகி வருகிறது.

    பல படங்களில் காமெடி மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் யோகி பாபு, தற்போது எமனாக மாற இருக்கிறார். #YogiBabu #DharmaPrabhu
    ஸ்ரீவாரி பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிக்கும் புதிய படம் “தர்மபிரபு”. ஏற்கனவே நாணயம், கள்வனின் காதலி, இராமேஸ்வரம் மற்றும் பல படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்த இவர் பல படங்களை தமிழ்நாடு உரிமை பெற்று ரிலீஸ் செய்தும் உள்ளார். மேலும் 100-க்கும் அதிகமான படங்களின் வெளிநாட்டு மட்டும் சேட்டிலைட் உரிமையும் வாங்கி வியாபாரம் செய்வது என்று சுமார் 18 வருடம் அனுபவம் பெற்றவராக, முதன்முதலாக இப்படத்தைத் தயாரிக்கிறார்.

    இப்படத்தை முத்துகுமரன் இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். இவர் ஏற்கனவே விமல் நடித்து வரும் ‘கன்னிராசி’ படத்தை இயக்கியுள்ளார். அப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக இப்படத்தை 2-வது படமாக இயக்குகிறார்.

    எமலோகத்தில் எமன் பதவி முடிவடையும் நிலையில், புதிய எமனை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. அது வாரிசு அடிப்படையில் யோகிபாபுவும், சித்ரகுப்தனாக பதவி வகித்துவரும் கருணாகரன் பதவி அடிப்படையிலும் எமனுக்கு போட்டி போடுகிறார்கள். இதில் யார் எமன் பதவியை தட்டி செல்கிறார்கள். தன் தகுதியை எப்படி நிரூபித்து கொள்ளப் போகிறார்கள் என்பதே கதை.

    இந்த கதையை கேட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிரிக்கத்தான் தோன்றும். அதுவும், சமீபத்தில் தன் உடல் மொழியாலும், வசன உச்சரிப்பாலும், குரல் வளத்தாலும் பார்த்த உடன் அனைவரையும் தன் பக்கம் ரசிகர்களாக மாற்றி கொண்டிருப்பவர் யோகிபாபு. இவர் திரையில் வந்தாலே சிரிக்க தோன்றுகிறது. அப்படிப்பட்ட இவர் இந்த எமன் கேரக்டரில் நடிக்க ஒத்துக் கொண்டுள்ளது படத்திற்கு மிக பெரிய பலம். நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் கருணாகரனும் நடிப்பது மிக பலம் வாய்ந்த கூட்டணியாக அமைந்துள்ளது.

    இப்படத்திற்காக எமலோகம் செட் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. இதற்காக கலை இயக்குநர் பாலசந்தர் அரங்க அமைப்பிற்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

    டிசம்பர் மாதம் முதல் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. முழுக்க முழுக்க சென்னையில் படப்பிடிப்பு நடைபெறுகிறது சில பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ளது. இப்படத்தின் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
    ×