என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் எஸ்கே 16 படம் பக்கா மாஸ் குடும்ப படமாக உருவாகுவதாக பாண்டிராஜ் கூறியுள்ளார். #SK16 #Sivakarthikeyan
    சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மிஸ்டர்.லோக்கல்’ படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே.16 படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது.

    படம் பற்றி இயக்குநர் பாண்டிராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

    உங்கள் தாத்தா, பாட்டி, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சித்தப்பா, பெரியப்பா, சின்னம்மா, பெரியம்மா, அத்தை, மாமா, மச்சான், 
    அத்தை பையன், அத்தை பொண்ணு, மாமன் பையன், மாமன் பொண்ணு, இந்த சொந்தங்களை மொத்தமாக திரையில் காண 
    இன்று துவக்கம் என்று குறிப்பிட்டு, இந்த படம் பக்கா மாஸ் குடும்ப படமாக உருவாகுவதாக குறிப்பிட்டுள்ளார்.


    இந்த படத்தில் கதாநாயகிகளாக அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா 
    ராஜேஷ் நடிக்கின்றனர். யோகி பாபு, சூரி காமெடி வேடத்திலும், ஆர்.கே.சுரேஷ், நட்டி நட்ராஜ், இயக்குநர் பாரதிராஜா, சமுத்திரக்கனி, வேலராமமூர்த்தி, நாடோடிகள் கோபால், சுப்பு பஞ்சு, அர்ச்சனா, ரமா
    உள்ளிட்டோரும் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பையும், வீரசமர் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர். #SK16 #Sivakarthikeyan #AnuEmmanuel #AishwaryaRajesh #Bharathiraja #Samuthirakani 

    மாடல் அழகியும், நடிகையுமான சாக்‌ஷி அகர்வால், பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க விருப்பம் இருப்பதாக கூறியிருக்கிறார். #SakshiAgarwal
    மாடல் அழகியான சாக்‌ஷி அகர்வால், ‘யோகன்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து திருட்டி விசிடி, கககபோ, படங்களில் நடித்தார். மலையாளத்தில் ஓராயிரம் கினாக்கள் படத்தில் பிஜு மேனனுக்கு ஜோடியாக நடித்த இவர் அதன்பிறகு ரஜினி நடிப்பில் வெளியான ‘காலா’ படத்திலும், அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்திலும் நடித்திருந்தார்.

    இவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் கேள்வி பதிலில் ஈடுபட்டிருந்தார். இதில் ரசிகர்கள் பலரும் சாக்‌ஷி அகர்வாலுக்கு வாழ்த்துகளையும், காதலையும் வெளிபடுத்தி இருந்தார்கள்.



    இதில் ஒருவர் யாருடைய இயக்கத்தில் நடிக்க ஆசை என்று கேட்க, அதற்கு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க ஆசை என்று கூறியிருக்கிறார். 
    கவர்ச்சி உடை, வித்தியாசமான மேக்கப், சிகை அலங்காரத்தில் வெளியான பிரியங்கா சோப்ராவின் புகைப்படத்தை ரசிகர்கள் கலாய்த்து இருக்கிறார்கள். #PriyankaChopra
    தமிழில் விஜய் ஜோடியாக ‘தமிழன்’ படத்தில் அறிமுகமாகி இந்தியில் முன்னணி நடிகையாக உயர்ந்த பிரியங்கா சோப்ரா, ஆங்கில டி.வி. தொடர்களில் தலைகாட்டி ஹாலிவுட் பட வாய்ப்புகளை பிடித்தார். அதன்பிறகு அமெரிக்கா பாப் பாடகர் நிக் ஜோனாசை காதலித்து திருமணம் செய்துகொண்டு அந்த நாட்டிலேயே குடும்பம் நடத்தி வருகிறார்.



    கணவருடன் அடிக்கடி பொது நிகழ்ச்சிகளில் மேற்கத்திய பெண்களைப்போல் கவர்ச்சியான ஆடைகள் அணிந்து பிரியங்கா சோப்ரா கலந்துகொள்கிறார். இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த மெட்காலா என்ற ஆடை வடிவமைப்பு தொடர்பான நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக்ஜோனாசுடன் பங்கேற்றார்.



    அப்போது கவர்ச்சி உடை, வித்தியாசமான மேக்கப், சிகை அலங்காரம் போன்றவற்றால் அடையாளமே தெரியாமல் மாறிப்போய் இருந்தார் பிரியங்கா சோப்ரா. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள். இதெல்லாம் ஒரு ஆடையா, இப்படி அலங்கோலமாக மேக்கப் போடலாமா? தலைமுடியை மாற்றி அழகை அலங்கோலமாக்கி விட்டீர்களே என்றெல்லாம் சமூக வலைத்தளத்தில் கேலி செய்து மீம்ஸ் போடுகின்றனர். சந்தன கடத்தல் வீரப்பன் மீசை, நகைச்சுவை நடிகர் யோகிபாபுவின் தலைமுடி ஆகியவற்றுடன் அவரது சிகை அலங்காரத்தை ஒப்பிட்டும் கேலி செய்து வருகிறார்கள்.
    பிரபல இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவின் முதல் யு சான்றிதழ் பெற்ற ‘மான்ஸ்டர்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. #SJSuryah
    எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மான்ஸ்டர்’. நெல்சன் வெங்கடேசன் இயக்கி இருக்கும் இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

    இவ்விழாவில் எஸ்.ஜே.சூர்யா பேசும்போது, ‘ஒரு நாள் எஸ்.ஆர்.பிரபு, ஒரு கதை இருக்கிறது கேட்கிறீர்களா? என்றார். கதை சொல்லவந்த நெல்சன், நீங்கள் ஒரு எலி என்று ஆரம்பித்ததும் எப்படி இருக்குமோ? என்று நினைத்தேன். கதையைக் கேட்டதும் பிடித்திருந்தது. இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் காலை முதல் நள்ளிரவு வரை அயராமல் சுறுசுறுப்புடன் இருப்பார்.

    குழந்தைகளுக்கும்... செல்ல பிராணிகளுக்கும் எப்போதும் ஒரு நெருங்கிய உறவு இருக்கும். இப்படத்தில் எலியை வைத்து எடுத்திருக்கிறார்கள். குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள். ‘அந்தி மாலை’ பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பிரியா பவானி ஷங்கர் அழகான, திறமையான மற்றும் தனித்துவமான நடிகை. நிச்சயம் வித்யாபாலன் மாதிரி வருவார்.



    சில காட்சிகள் எலிக்குத் தகுந்தாற்போல் முகபாவனை வரவில்லை என்று மீண்டும் நடித்தது வித்தியாசமாக அனுபவமாக இருந்தது. இயக்குநர் ஒவ்வொரு காட்சி கண் இப்படி இருக்க வேண்டும், கன்னம் இப்படி இருக்க வேண்டும் என்று நுட்பமாக நடிக்க வைத்தார். அதிலும் காதும் நடிக்க வேண்டும் என்று கூறிவார். வாழ்க்கையில் மற்றவர்களுக்கு கதாநாயகனாக இருக்கிறேனா என்று தெரியவில்லை. ஆனால், எனக்குள் நான் கதாநாயகனாகத்தான் இருக்கிறேன். இப்படம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை’ என்றார்.

    எஸ்.ஜே.சூர்யா நடித்து முதல் முறையாக ‘யு’ சான்றிதழ் பெற்ற படம் ‘மான்ஸ்டர்’ என்பது குறிப்பிடத்தக்கது.
    ராயல்டி பிரச்சினையால் பேசாமல் இருந்து வந்த இளையராஜாவும், எஸ்.பி.பி-யும் ஒரே மேடையில் தோன்ற இருக்கிறார்கள். #Ilayaraja #SPB
    இளையராஜாவின் 75வது பிறந்தநாள் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதற்காக கல்லூரிகளில் அவரை வைத்துப் பாராட்டு விழாக்களையும், இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர்.

    தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கடந்த பிப்ரவரி மாதம் இளையராஜாவை வைத்து பிரமாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றை நிகழ்த்தியது. அந்த நிகழ்ச்சியை நேரிலும், தொலைக்காட்சியிலும் கண்டு ரசித்த இசை ரசிகர்களுக்கு அதில் கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி போன்ற இளையராஜாவின் முக்கியமான பாடகர்கள் பங்கேற்கவில்லை என்ற ஒரு குறை இருந்து வந்தது.

    பாடல்களின் காப்புரிமை யாருக்கு சொந்தம் என்ற விவகாரத்தில் இளையராஜாவுக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கும் சட்ட சிக்கல்கள் நிலவி வந்ததால் இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க வில்லை.



    தற்போது இளையராஜாவின் பிறந்தநாளான வரும் ஜூன் 2-ந்தேதி சென்னையில் நடக்க இருக்கும் இளையராஜாவின் கச்சேரியில் பாடுவதற்காக எஸ்.பி.பி பங்கேற்கிறார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. இதற்கான ஒத்திகை வரும் மே 22-ந்தேதி முதல் தொடங்க இருக்கிறது. எஸ்.பி.பி மட்டுமல்லாது யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதுப், மனோ உட்பட பல முன்னணி பாடகர்கள் பங்கேற்று பாட இருக்கின்றனர்.

    இந்த நிகழ்ச்சிக்கான முன்பதிவு இணையதளத்தில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. இளையராஜா, எஸ்பிபி தரப்பில் கேட்டதற்கு இது இன்னும் உறுதிபடுத்தப்பட வில்லை என்றனர்.

    ராயல்டி பிரச்சினையால் பேசாமல் இருந்து வந்த இந்த இரண்டு இசைக்கலைஞர்களும் ஒரு வழியாக இணைந்து ஒரே மேடையில் இசைக் கச்சேரியில் தோன்றுவது இசை ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.
    தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷாவின் சம்மதத்துக்காக நான் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று நடிகை சார்மி கூறியிருக்கிறார். #Trisha #Charmme
    நடிகை சார்மி தமிழில் காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு படங்களில் நடித்தவர். தற்போது தெலுங்கு படங்களில் நடிக்கிறார். சார்மியும், திரிஷாவும் இணைபிரியா தோழிகள். அன்பை வெளிப்படுத்த இருவரும் கன்னத்தில் அழுத்தமான முத்தம் பகிர்ந்துகொள்வார்கள்.

    சமீபத்தில் திரிஷா பிறந்த தினத்தன்று சார்மி பதிவிட்ட ஒரு செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ‘அன்பே திரிஷா, இன்று மட்டுமல்ல எப்போதும் உன் மீது எனக்கு காதல். உன்னுடைய சம்மதத்துக்காக நான் இன்னும் காத்துக்கொண்டிருக்கிறேன்.



    நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம். இப்போதுதான் சட்டப்படியும் அதற்கு ஒப்புதல் கிடைத்திருக்கிறது’ என சார்மி கூறி இருக்கிறார்.

    இதற்கு திரிஷா ‘நான் ஏற்கனவே சம்மதம் தெரிவித்திருக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார். 
    மான்ஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை பிரியா பவானி ஷங்கர், இந்த படத்தில் நடிக்க முதலில் தயங்கினேன் என்று கூறியிருக்கிறார். #Monster #PriyaBhavaniShankar
    ‘ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ‘மான்ஸ்டர்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இதில் பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடித்திருக்கிறார். 

    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.



    விழாவில் பிரியா பவானி சங்கர் பேசும்போது,

    இந்த படத்தில் கிடைத்த அனுபவம், எஸ்.ஜே.சூர்யா நாயகன் என்றதும் அவருடன் எனக்கு பொருத்தமாக இருக்குமா? என்று தயங்கினேன். ஆனால் இயக்குநர் முதலில் கதை கேட்டு முடிவு செய்யுங்கள் என்று கூறினார். சங்கர் கூறியதுபோல் என்னை பாதுகாப்பாக வைத்திருந்தார். படக்குழுவினருடன் ஜாலியாக பணியாற்றினேன். ஜஸ்டினின் இசையில் எனக்கு ஒரு பாடல் அமைந்ததில் மகிழ்ச்சி என்றார்.
    விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘சங்கத்தமிழன்’ திரைப்படம் ரஜினி பட பாணியில் உருவாக இருக்கிறது. #Sangatamizhan
    ‘வாலு’, `ஸ்கெட்ச்‘ ஆகிய படங்களை இயக்கியவர் விஜய் சந்தர். இதைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து `சங்கத்தமிழன்’ என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது.

    இதில் முறுக்கு மீசையுடன் வித்தியாசமான தோற்றத்தில் விஜய்சேதுபதி உள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக `சிந்துபாத்’, `மாமனிதன்’ என இரு படங்களும் ரிலீசுக்குத் தயாராக உள்ளது. இதற்கு நடுவே எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் `லாபம்‘ படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.



    அதன் படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் போன்ற இடங்களில் நடந்து வருகிறது. அதை முடித்துவிட்டு `சங்கத்தமிழன்’ படத்தின் படப்பிடிப்பிற்காக வரும் 20-ந்தேதி சென்னை வருகிறார். இந்த படத்தில் ரஜினியின் படங்களைப் போல் வசனங்கள் அனைத்தும் மாசாக இருக்கும் என விஜய்சந்தர் சொல்லியிருந்தார். படத்தின் காமெடி கதாபாத்திரத்தில் சூரி நடிக்கிறார். மேலும், விவேக் மெர்வின் இந்தப் படத்துக்கு இசையமைக்கின்றனர். நாசர், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
    மன்மர்ஜியான் படப்பிடிப்பு முடிந்தபோது நட்சத்திர ஓட்டலில் மதுகுடித்துவிட்டு வரமாட்டேன் என்று டாப்சி ரகளை செய்ததாக பாலிவுட் நடிகர் விக்கி கவுஷல் தெரிவித்துள்ளார். #Taapsee #VickyKaushal
    இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் டாப்சி. தமிழில் ஆடுகளம், வந்தான் வென்றான் உள்பட பல படங்களில் நடித்தவர்.

    இந்தியில் டாப்சி நடிப்பில் கடந்த ஆண்டு மன்மர்ஜியான் என்ற படம் வெளியானது. அபிஷேக் பச்சன், விக்கி கவு‌ஷல் இருவரும் கதாநாயகர்களாக நடித்த இந்த படம் முக்கோண காதல் கதையை கொண்டது. விக்கி கவு‌ஷல் சமீபத்தில் வெளியான உரி படம் மூலம் முன்னணி நடிகராகி இருக்கிறார்.

    அவர் அளித்த பேட்டி ஒன்றில் டாப்சி குடித்துவிட்டு ரகளை செய்ததை பற்றி கூறி இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:-



    மன்மர்ஜியான் படப்பிடிப்பு முடிந்தபோது நட்சத்திர ஓட்டலில் பார்ட்டி கொடுத்தார்கள். படப்பிடிப்பின்போது நாங்கள் தங்கி இருந்த ஓட்டலில் தான் பார்ட்டியும் நடந்தது.

    நன்றாக குடித்த டாப்சி குடிபோதையில் தோட்டத்தில் படுத்து கொண்டு எழுந்து வர மாட்டேன் என்று மல்லுக்கட்டினார். நீங்கள் வராவிட்டால் நான் கிளம்பி விடுவேன் என்று கூறினேன். அப்படியாவது எழுந்து வருவார் என கூறினேன். ஆனால் அங்கேயே தூங்குவேன் என்று அடம் பிடித்தார்.

    இவ்வாறு விக்கி கவு‌ஷல் தெரிவித்தார். #Taapsee #VickyKaushal

    கல்யாண் - ஜெயம் ரவி மூன்றாவது முறையாக இணையும் படத்தில் ரவிக்கு ஜோடியாக நடிக்க டாப்சி ஒப்பந்தமாகி இருக்கிறார். #JayamRavi #Taapsee
    இந்தி சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் டாப்சி ஜெயம் ரவியின் 25-வது படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். ஆடுகளம் படத்துக்கு பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாப்சிக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் அமையாததால் இந்தியில் நடிக்க சென்றார்.

    அங்கு தனக்கென்று முக்கியமான இடத்தை பிடித்திருக்கும் டாப்சி, தமிழில் ரீ என்ட்ரியாக ‘கேம் ஓவர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து ஜெயம் ரவியுடன் நடிக்கிறார்.



    ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை இயக்கிய லட்சுமணன் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் ஜெயம் ரவியை இயக்குகிறார். டி.இமான் இசையமைப்பாளராக இணைந்துள்ளார். 

    இந்த படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தனது ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிக்கிறார். சுஜாதா விஜயகுமார் இதற்கு முன்பாக ஜெயம் ரவியின் அடங்கமறு படத்தையும் தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு அடுத்து வரும் நாட்களில் வெளியாக உள்ளது. #JayamRavi #Taapsee #Kalyan

    விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ள அயோக்யா படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில், அஜித் தான் தனது முதல் காதலர் என்றும், அவர் சிரிப்பு அசத்தலாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். #RaashiKhanna
    நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ராஷி கண்ணா. ஜெயம் ரவியுடன் அடங்கமறு, விஷாலுடன் அயோக்யா படத்தில் நடித்துள்ளார். இளம் கதாநாயகர்கள் விரும்பும் நடிகையாக மாறி வருகிறார்.

    தமிழ் தவிர தெலுங்கு திரையுலகிலும் அவரின் மார்க்கெட் நன்றாக உள்ளது. எனவே இரு மொழிகளில் தயராகும் படங்கள் அவருக்கு குவிகின்றன. இவர் தன்னுடைய முதல் காதல் பற்றி கூறியுள்ளார். ‘எனக்கு சிறு வயதில் ஏற்பட்ட முதல் கிரஷ் என்றால் அது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தான்.



    கோலிவுட்டில் எனது முதல் கிரஷ் அஜித் சார். அவரின் சிரிப்பு அசத்தலாக இருக்கும். அவரின் படம் பார்க்கும்போது அவர் எப்படா சிரிப்பார் என்று காத்திருப்பேன். அஜித் சார் நடித்த விஸ்வாசம் படம் பார்த்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். #RaashiKhanna #AjithKumar

    பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் எஸ்கே 16 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. #SK16 #Sivakarthikeyan
    சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மிஸ்டர்.லோக்கல்’ படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர விக்னேஷ் சிவன் மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    இதில் பாண்டிராஜ் இயக்கும் எஸ்.கே.16 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது.

    சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகிகளாக அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர். ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிப்பதாக கூறப்படுகிறது. யோகி பாபு, சூரி காமெடி வேடத்திலும், ஆர்.கே.சுரேஷ், நட்டி நட்ராஜ், இயக்குநர் பாரதிராஜா, சமுத்திரக்கனி முக்கிய கதபாத்திரங்களிலும் நடிக்கின்றனர்.

    டி.இமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவை கவனிக்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பையும், வீரசமர் கலை பணிகளை மேற்கொள்கின்றனர். #SK16 #Sivakarthikeyan #AnuEmmanuel #AishwaryaRajesh #Bharathiraja #Samuthirakani 

    ×