என் மலர்
சினிமா

மது குடித்துவிட்டு நடிகை டாப்சி ஓட்டலில் ரகளை - இந்தி நடிகர் தகவல்
மன்மர்ஜியான் படப்பிடிப்பு முடிந்தபோது நட்சத்திர ஓட்டலில் மதுகுடித்துவிட்டு வரமாட்டேன் என்று டாப்சி ரகளை செய்ததாக பாலிவுட் நடிகர் விக்கி கவுஷல் தெரிவித்துள்ளார். #Taapsee #VickyKaushal
இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் டாப்சி. தமிழில் ஆடுகளம், வந்தான் வென்றான் உள்பட பல படங்களில் நடித்தவர்.
இந்தியில் டாப்சி நடிப்பில் கடந்த ஆண்டு மன்மர்ஜியான் என்ற படம் வெளியானது. அபிஷேக் பச்சன், விக்கி கவுஷல் இருவரும் கதாநாயகர்களாக நடித்த இந்த படம் முக்கோண காதல் கதையை கொண்டது. விக்கி கவுஷல் சமீபத்தில் வெளியான உரி படம் மூலம் முன்னணி நடிகராகி இருக்கிறார்.
அவர் அளித்த பேட்டி ஒன்றில் டாப்சி குடித்துவிட்டு ரகளை செய்ததை பற்றி கூறி இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:-

மன்மர்ஜியான் படப்பிடிப்பு முடிந்தபோது நட்சத்திர ஓட்டலில் பார்ட்டி கொடுத்தார்கள். படப்பிடிப்பின்போது நாங்கள் தங்கி இருந்த ஓட்டலில் தான் பார்ட்டியும் நடந்தது.
நன்றாக குடித்த டாப்சி குடிபோதையில் தோட்டத்தில் படுத்து கொண்டு எழுந்து வர மாட்டேன் என்று மல்லுக்கட்டினார். நீங்கள் வராவிட்டால் நான் கிளம்பி விடுவேன் என்று கூறினேன். அப்படியாவது எழுந்து வருவார் என கூறினேன். ஆனால் அங்கேயே தூங்குவேன் என்று அடம் பிடித்தார்.
இவ்வாறு விக்கி கவுஷல் தெரிவித்தார். #Taapsee #VickyKaushal
Next Story






