என் மலர்

  சினிமா

  ரஜினி பட பாணியில் உருவாகும் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன்
  X

  ரஜினி பட பாணியில் உருவாகும் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘சங்கத்தமிழன்’ திரைப்படம் ரஜினி பட பாணியில் உருவாக இருக்கிறது. #Sangatamizhan
  ‘வாலு’, `ஸ்கெட்ச்‘ ஆகிய படங்களை இயக்கியவர் விஜய் சந்தர். இதைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து `சங்கத்தமிழன்’ என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது.

  இதில் முறுக்கு மீசையுடன் வித்தியாசமான தோற்றத்தில் விஜய்சேதுபதி உள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக `சிந்துபாத்’, `மாமனிதன்’ என இரு படங்களும் ரிலீசுக்குத் தயாராக உள்ளது. இதற்கு நடுவே எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் `லாபம்‘ படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.  அதன் படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் போன்ற இடங்களில் நடந்து வருகிறது. அதை முடித்துவிட்டு `சங்கத்தமிழன்’ படத்தின் படப்பிடிப்பிற்காக வரும் 20-ந்தேதி சென்னை வருகிறார். இந்த படத்தில் ரஜினியின் படங்களைப் போல் வசனங்கள் அனைத்தும் மாசாக இருக்கும் என விஜய்சந்தர் சொல்லியிருந்தார். படத்தின் காமெடி கதாபாத்திரத்தில் சூரி நடிக்கிறார். மேலும், விவேக் மெர்வின் இந்தப் படத்துக்கு இசையமைக்கின்றனர். நாசர், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
  Next Story
  ×