என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
தடகள விளையாட்டு வீரராக ஆதி
Byமாலை மலர்8 May 2019 4:47 AM GMT (Updated: 8 May 2019 4:47 AM GMT)
`பார்ட்னர்' படத்தை தொடர்ந்து ஆதி அடுத்ததாக அறிமுக இயக்குனர் பிரித்வி ஆதித்யா இயக்கத்தில் தடகள விளையாட்டு வீரராக நடிக்கிறார். #Aadhi
நடிகர் ஆதி தற்போது மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் `பார்ட்னர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரித்வி ஆதித்யா இயக்குகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.
தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை பிக்பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐபி கார்த்திகேயன் மற்றும் குளோரி ஸ்டுடியோஸ் ஜி மனோஜ், ஜி ஸ்ரீஹர்ஷா இணைந்து தயாரிக்கின்றனர். பிரவீன்குமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, ராகுல் படத்தொகுப்பையும், வைரபாலன் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர்.
படம் பற்றி இயக்குநர் பேசும் போது,
தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக விளையாட்டு அடிப்படையிலான திரைப்படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன, ஆனால் இந்த படம் அதில் இருந்து விதிவிலக்கானது. இது தடகள விளையாட்டு உலகில் நடக்கும் கதை, தனது கனவுகளை நிறைவேற்ற கதாநாயகன் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி பேசும் படம் என்றார். #Aadhi
Next Story
×