என் மலர்
சினிமா செய்திகள்
சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் புதிய படத்தில் சூரி நடிக்க இருப்பது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
தர்பார் படத்தை அடுத்து சிவா இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். கிராமத்து பின்னணியில் கமர்சியலான குடும்ப கதையாக உருவாகும் இந்த படத்தில் முதன்முறையாக ரஜினியுடன் சூரி காமெடி வேடத்தில் நடிக்கிறார். ரஜினியுடன் நடிப்பது பற்றி சூரி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-
“காலையில் இயக்குநர் இரா.சரவணன் படம் நல்லபடியாக தொடங்கியிருக்கு. மாலையில் ரஜினி-சிவா இணையும் படத்தின் அறிவிப்பு. இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கேன்.
சூப்பர் ஸ்டார் படத்தில் லைட் பிடித்துவிட மாட்டோமா என்று லைட்மேன் நினைப்பார். இப்படி அனைவருடைய கனவு மாதிரிதான் என்னுடைய கனவும் இருந்தது. எப்படியாவது ரஜினி சாரோடு ஒரு படம் நடிச்சுடணும்னு நினைச்சுட்டே இருந்தேன். என்றைக்காவது ஒரு நாள் போன் வந்திடாதா என்று ஏங்கியிருக்கேன்.

அந்த அழைப்பு இயக்குநர் சிவா கிட்ட இருந்து வந்துச்சு. எனக்கோ இரட்டிப்பு சந்தோஷம். ஏன்னா ரஜினி படம் மட்டுமல்ல, எனக்குப் பிடிச்ச இயக்குநர் சிவா படமும் கூட அவ்வளவு சந்தோஷம்.
இப்படி அனைத்துமே ஒரே படத்துல அமையுறது கஷ்டம். எனக்கு அமைஞ்சுருக்கு என்றால் எவ்வளவு கொடுத்து வைச்சுருக்கேன்னு பாருங்க. ரஜினி சார் படத்துல நடிக்கப் போறேன்னு வீட்டுல ரொம்ப காட்டிக்கல. இப்போ தானே வந்துருக்கு. இனிமேல் தான் சொல்லணும். ஏன்னா 2 நாளுக்கு முன்னாடி தான் சைன் பண்ணினேன். ரொம்ப சந்தோஷம் அண்ணே” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகை நமீதா இன்று பாஜகவில் இணைந்தார். கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அவர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
திருவள்ளூர்:
பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா இன்று காலை சென்னை வந்தார். சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அப்போது, ஜே.பி.நட்டா முன்னிலையில் நடிகர் ராதாரவி பா.ஜ.க.வில் இன்று தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா இன்று மாலை திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது நடிகை நமீதா தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார்.
ஆண்ட்ரியா நடிப்பில் ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் ‘கா’ படத்தின் முன்னோட்டம்.
பொட்டு படத்தின் வெற்றிக்கு பிறகு ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘கா’. இதில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைஃப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப் படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. சலீம்கோஸ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஒளிப்பதிவு - அறிவழகன், இசை - அம்ரிஷ், தயாரிப்பு - ஜான்மேக்ஸ், ஜோன்ஸ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - நாஞ்சில். இப்படம் குறித்து நாஞ்சில் கூறும்போது, ‘முழுக்க முழுக்க காட்டை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி வருகிறோம். தற்பொழுது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு மூணாரில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் இரவு நேரத்தில் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது, அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அங்கு யானை ஒன்று வந்துவிட்டது. அங்கிருந்த நாங்கள் அனைவரும் பயந்து ஒழிந்துகொண்டோம் நல்ல வேலையாக எங்களுடன் இருந்த வனக்காப்பாளர் அந்த யானையை விரட்டி எங்களை காப்பாற்றினார்கள். அப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்து நிறைய காட்சிகளை படமாக்கியிருக்கிறோம்.
30 நாட்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் இதுவரை யாரும் செல்ல முடியாத இடங்களுக்கு வன அலுவலகத்தில் அனுமதி பெற்று படப்பிடிப்பை நடித்தியிருக்கிறோம். அந்த காட்களை திரையில் பார்க்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கும்’ என்றார்.
கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘தம்பி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவங்களோடு நடித்தது எனக்கு ரொம்ப ஸ்பெஷல் என்று பேசியிருக்கிறார்.
கைதி படத்திற்குப் பிறகு கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தம்பி’. இதில் ஜோதிகா, கார்த்திக்கு அக்காவாக நடித்திருக்கிறார். ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் கார்த்தி பேசும்போது, ‘இரண்டு வருட உழைப்பு இந்தப்படத்துக்கு பின்னாடி இருக்கிறது. ஒவ்வொன்றாக சேர்த்து இந்தப்படத்தை உருவாக்க இரண்டு வருடம் ஆகிவிட்டது. இயக்குநர் ஏற்கனவே மோகன்லால், கமல் சார் வைத்து படமெல்லாம் பண்ணிட்டு வந்திருக்கிறார். எனக்கு பயமா இருந்தது.

ஆனா எதிர்பார்த்தற்கு எதிரா அவ்வளவு இயல்பா, நட்பா இருந்தார். அவருக்கு என்ன வேணுங்கறதுல ரொம்பவும் தெளிவா இருந்தார். அப்புறம் அண்ணி கூட நடிச்சது எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இப்படி அண்ணி கூட ஒரு படம் நடிப்பேன்னு நான் நினைக்கவே இல்லை. நடிச்சது சந்தோஷம்.
சத்யாராஜ் மாமா இல்லாட்டி இந்தப்படமே வேண்டாம் என்று சொன்னேன். அவ்வளவு முக்கியமான கேரக்டர். சினிமாவில் ஒழுக்கம் என்பதை அவர்கிட்ட கத்துக்கிட்டேன். கைதிக்கு பிறகு இந்தப்படம் வருவது எனக்கு சந்தோஷம். குடும்பத்தோட எல்லாரும் ரசிக்கிற மாதிரியான படம். எல்லோருக்கும் நன்றி’ என்றார்.
தமிழ், தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் நித்யா மேனன், சந்தர்ப்ப சூழ்நிலையால் நடிக்க வந்தேன் என்று கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் சித்தார்த்துடன் இணைந்து 180 என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் நடிகை நித்யாமேனன். மணிரத்னம் இயக்கத்தில் உருவான ஓகே கண்மணி என்ற படத்தின் மூலம் பெரும் அளவில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து அவர் அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் விஜய்க்கு மனைவியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் தற்போது தீவிர உடற்பயிற்சிக்கு பிறகு தற்போது எடையை குறைத்துள்ளார்.

நித்யாமேனன் சமீபத்தில் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். அங்கு அவர் தனது திரையுலக அனுபவங்கள் குறித்து பேட்டி அளித்துள்ளார். அப்பொழுது அவர் ஆரம்பத்தில் எனக்கு சினிமாவில் நடிப்பதில் விருப்பமில்லை. நான் விலங்குகள் குறித்து ஆய்வு செய்து வந்தேன்.
ஆனால் எனது பெற்றோரின் ஆசையால், சந்தர்ப்ப சூழ்நிலையால் நடிக்க வந்தேன். இப்பொழுது எனக்கு சினிமாவை மிகவும் பிடித்துள்ளது. எனக்கும் சினிமாவுக்கும் இடையே உள்ள பந்தம் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் போன்றது. திருமணத்திற்கு பிறகு காதல் பிறப்பது போன்றது என நித்யாமேனன் கூறியுள்ளார்.
கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் தம்பி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கிளிசரின் போடாமல் என்னால் அழவே முடியாது என்று சூர்யா பேசியிருக்கிறார்.
கார்த்தி, ஜோதிகா அக்கா- தம்பியாக முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் தம்பி. பாபநாசம் பட இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கி இருக்கும் இப்படத்தில் சௌகார் ஜானகி, சத்யராஜ், நிகிலா விமல், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இதில் சூர்யா பேசும்போது, ‘ரொம்ப நெருக்கமான படைப்பு. சத்யராஜ் மாமா, ஜோ, கார்த்தி, சூரஜ் எல்லாரும் நடித்திருக்கும் படம். ஒரு சின்ன கரு இவ்வளவு பெரிய படமா மாறியிருக்கிறது. ஆச்சர்யமா இருக்கு. கார்த்தி இப்படி படங்கள் நம்பி பண்றது பெருமையா இருக்கு. கார்த்தி, ஜோ இரண்டு பேருமே சிறந்த நடிகர்கள். கிளிசரின் போடாமல் என்னால் அழவே முடியாது. ‘நந்தா’ படத்தில் மட்டும் தான் என்னால் அப்படி நடிக்க முடிஞ்சது.

ஆனா கார்த்தி கிளிசரின் போடாமல் அத சாதாரணமாக செய்து விடுவார். கைதி வரைக்குமே அத நான் பார்த்துட்டு இருக்கேன். ஜீத்து ஜோசப் பாகுபலி அளவு பிரமாண்ட படத்திற்கு இணையாக பாபநாசம் படத்தை இந்தியா முழுக்க கொண்டு போனவர். அவர் இந்தப்படம் இயக்கியது சந்தோஷம். கோவிந்த் வசந்தா நான் பார்த்தப்போ எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கார். படத்தில் பாடல்கள் எல்லாம் அருமையாக வந்திருக்கு. படமும் அழகாக இருக்கு. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்’ என்றார்.
மறைந்த நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பிறந்த நாளை நகைச்சுவை நடிகர்கள் தினமாக கலப்பை மக்கள் இயக்கம் கொண்டாடியது.
மறைந்த நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பிறந்த நாளை நகைச்சுவை நடிகர்கள் தினமாக கலப்பை மக்கள் இயக்கம் கொண்டாடியது. இந்த விழாவிற்கு பாரதிராஜா தலைமை தாங்கினார்.
இதில் மூத்த நடிகை சி.ஆர்.சரஸ்வதி பேசியதாவது:-
திரைத்துறையில் சாதனை படைத்தோர்க்கு விழா எடுக்க ஒரு மனசு வேண்டும். என்.எஸ்.கே தான் மருத்துவமனையில் இருக்கும் கடைசி காலத்தில் கூட உதவி என்று வந்தவருக்கு தனது வெள்ளி செம்பை கொடுத்தவர். அப்படிப்பட்ட மகத்தான கலைஞனை ஞாபகப்படுத்துவது ஒட்டுமொத்த சினிமாவிற்கு செய்யும் தொண்டாகும்.
‘நகைச்சுவை என்பது நமது உடலை மனதை வாழ்க்கையை உற்சாகமாக வைப்பதாகும். என்.எஸ்.கே அவர்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர். பொதுவாக நகைச்சுவை நடிகர்களின் வாழ்வில் பல சோகம் இருக்கும். அந்த சோகம் முகத்தில் தெரிந்தால் காமெடி டிராஜிடியாகி விடும். இவ்வளவு நகைச்சுவை நடிகர்கள் ஒரே இடத்தில் பார்ப்பது ஆச்சர்யமாக இருக்கிறது’
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் ரமேஷ் கண்ணா, பவர் ஸ்டார், பெஞ்சமின், ஆர்த்தி கணேஷ், சிசர் மனோகர் இசையமைப்பாளர்கள் சிற்பி, சுந்தர்.சி, சித்ரா லட்சுமணன், முத்துக்காளை, கிங்காங், லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன், போண்டாமணி, வெங்கல்ராவ் மற்றும் ஏராளமான நடிகர்கள் கலந்துகொண்டனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் தர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் யூடியூப்பில் புதிய சாதனை படைத்துள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தர்பார்'. இதில் நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 2020ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக இந்த படம் திரைக்கு வரவுள்ளது.
தர்பார் படத்தில் ‘சும்மா கிழி’ என்று எஸ்.பி.பி பாடிய முதல் பாடல் நேற்று முன் தினம் யூடியூப்பில் வெளியானது. சில காலங்களுக்கு முன்பு வந்த ரஜினி படங்களில் வரும் முதல் பாடலை போல ‘சும்மா கிழி’ பாடல் இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 1 மணிநேரத்தில் 10 லட்சம் பார்வைகளை கடந்தது. தற்போது தமிழ்த் திரையுலகில் 24 மணிநேரத்தில் அதிக பார்வைகளைக் கடந்த பாடலின் லிரிக்கல் வீடியோ என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 24 மணிநேரத்தில் 80 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.

இது தொடர்பாக இசையமைப்பாளர் அனிருத் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், “இது தலைவரின் அன்பு சாம்ராஜ்ஜியம். 24 மணிநேரத்தில் 8 மில்லியன் பார்வைகளைக் கடந்து, அதிகம் பேர் பார்த்த தமிழ்ப் பாடல் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார். இன்று காலை வரை ஒரு கோடியே 18 லட்சம் பார்வைகளை பெற்று சாதனை புரிந்துள்ளது.
இஷக், கும்பளங்கி நைட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான இளம் நடிகர் ஷேன் நிகமிற்கு தலைமுடியை வெட்டியதற்காக ரூ.7 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நடிகர் நடிகைகள் கதாபாத்திரங்களுக்காக தோற்றத்தை மாற்றுவது வழக்கம். இஷக், கும்பளங்கி நைட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான மலையாள இளம் கதாநாயகன் ஷேன் நிகமை, வெயில் என்ற பெயரில் தயாராகும் மலையாள படத்தில் ஒப்பந்தம் செய்து கதாபாத்திரத்துக்காக தலைமுடியை நீளமாக வளர்க்கும்படி இயக்குனர் அறிவுறுத்தினார்.
படப்பிடிப்பு முடியும் வரை முடியை வெட்டக்கூடாது என்றும் கூறி இருந்தார். தலைமுடி நீளமாக வளர்ந்த பிறகு படப்பிடிப்பை தொடங்கி நடத்தி வந்தனர். இடையில் குர்பானி என்ற படத்தில் நடிக்கவும் ஷேன் நிகமை ஒப்பந்தம் செய்தனர். வெயில் படப்பிடிப்பு முடியாத நிலையில் குர்பானி படத்தில் நடிக்க தலைமுடியை வெட்டி விட்டார். புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். ஷேன் நிகம் மீது படத்தின் இயக்குனர் சரத் மற்றும் தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ் ஆகியோர் மலையாள நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளித்தனர்.

இந்த பிரச்சினை குறித்து ஆலோசிக்க மலையாள தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த நிர்வாகிகள் ஷேன் நிகம் நடிக்கும் படங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம். அவர் நடித்துவரும் வெயில், குர்பானி படங்கள் கைவிடப்படுகின்றன. அந்த படங்களுக்கு செலவழித்த ரூ.7 கோடியை ஷேன் நிகம் திரும்ப தர வேண்டும் என்று கூறினர்.
கால்நடை பெண் மருத்துவரை எரித்து கொன்ற சம்பவத்தில் கொடூர சைக்கோக்கள் வேட்டையாடப்பட வேண்டும் என நடிகை கீர்த்தி சுரேஷ் ஆவேசமுடன் கூறியுள்ளார்.
தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தின் சாத்நகர் பகுதியில் சுங்கச்சாவடி அருகே பாலம் ஒன்றின் கீழ் பெண் ஒருவர் எரித்து கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், கொல்லப்பட்டவர் பிரியங்கா ரெட்டி (வயது 27) என்பதும் கால்நடை பெண் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது. சுங்க சாவடி அருகே தனியான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டு, கற்பழிக்கப்பட்டு பின்பு எரித்து கொல்லப்பட்டு இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள செய்தியில், பாதுகாப்பு மிக்க நகரம் என நான் நினைத்து கொண்டிருக்கும் ஐதராபாத் போன்ற நகரில் நடந்த இதுபோன்ற சம்பவத்தில் யாரை குறை சொல்வது என எனக்கு தெரியவில்லை. கூறுவதற்கு வார்த்தைகளில்லை.

நமது நாடு, பெண்கள் எந்த நேரத்திலும் செல்வதற்கு ஏற்ற பாதுகாப்பு நிறைந்த நாடாக என்றைக்கு உருவாகும். இதுபோன்ற அனைத்து கொடூர சைக்கோக்களும் வேட்டையாடப்பட வேண்டும். தண்டனை கிடைக்க செய்ய வேண்டும்.
கொல்லப்பட்ட பிரியங்காவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த இழப்பில் இருந்து மீண்டுவர கடவுள் அவர்களுக்கு வலிமை அளிக்கட்டும். குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் உதவட்டும். கர்மாவின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அது முடிவில்லாமல் தொடர்ந்து வேலை செய்யும்' என்று தெரிவித்து உள்ளார்.
சரண் இயக்கத்தில் ஆரவ், காவ்யா, ராதிகா, நிகிஷா பட்டேல் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தின் விமர்சனம்.
ஊரில் அடிதடி சண்டை என்று தாதாவாக இருக்கிறார் ஆரவ். இவருடைய தாய் ராதிகா, ஆரவ்வை வைத்து ஊரில் இருப்பவர்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வருகிறார். ஆனால், ஆரவ்வோ, தாய் ராதிகாவை மதிக்காமல் இருக்கிறார்.
குறிப்பிட்ட கட்சியில் இருக்கும் சாயாஜி ஷிண்டேவிற்கு ஆதரவாக ஆரவ் செயல்பட்டு வருகிறார். அதே கட்சியில் இருக்கும் ஹரிஷ் பெராடி ஆரவை கொலை செய்தால்தான் முன்னேற முடியும் என்று நினைக்கிறார்.
இப்படி இருக்கும் பட்சத்தில் ஒருநாள் ஒரு கல்லூரியில் ஒருவரை அடிக்கிறார். இவரின் துணிச்சலை பார்த்ததும் காதல் வயப்படுகிறார் நாயகி காவ்யா. ஆனால் ஆரவ், காவ்யா மீது ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார். அதே கல்லூரியில் படிக்கும் மிகவும் கோழையான மாணவர் ஒருவர் காவ்யாவை காதலிக்கிறார்.

இந்நிலையில், ஆரவ்வை போலீஸ் என்கவுண்டர் செய்ய திட்டமிடுகிறார்கள். என்கவுண்டரின் போது கோழையான மாணவர் சிக்கி இறக்கிறார். மேலும் அவரின் ஆவி, ஆரவ் உடம்பிற்குள் செல்கிறது.
மிகவும் வீரனாக தாதாவாக இருக்கும் ஆரவ் உடம்பினுள் கோழையான ஒருவரின் ஆவி சென்றவுடன் அவரது வாழ்க்கை எப்படி மாறுகிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.
பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் ஆரவ், இப்படத்தில் தாதா நடித்திருக்கிறார். உடற்கட்டு, ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். மற்ற காட்சிகளில் முடிந்த அளவு நடித்துக்கொடுத்துள்ளார். உடம்பிற்குள் ஆவி சென்றவுடன் காமெடி காட்சிகளில் ஓரளவிற்கு ஸ்கோர் செய்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் காவ்யா, அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். அரசியல்வாதிகளாக வரும் சாயாஜி ஷிண்டே, ஹரிஷ் பெராடி ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தாயாக வரும் ராதிகா, வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். புல்லட் ஓட்டுவது சுருட்டு பிடிப்பது என தன்னுடைய தனித்தன்மையை கொடுத்திருக்கிறார். ஆனால், அவருடைய கதாபாத்திரம் பெரியதாக எடுபடவில்லை. கவர்ச்சியால் ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார் நிகிஷா பட்டேல்.
பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் சரண் இப்படத்தை இயக்கி இருக்கிறார். நல்ல கதை ஆனால், திரைக்கதையில் தெளிவு இல்லாமல் இருக்கிறது. ஆவி வந்த பிறகுதான் படம் பார்ப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

கே.வி.குகனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். சைமன் கே.கிங்கின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
மொத்தத்தில் ‘மார்க்கெட் ராஜா’ சாதாரண ராஜா.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 64’ படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ‘தளபதி 64’ என்று அழைத்து வருகிறார்கள். இதில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். விஜய் சேதுபதி, சாந்தனு, அந்தோணி வர்கீஸ், ஆண்ட்ரியா, பிரகிதா, ரம்யா ஆகியோரும் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. ஓரிரு நாளில் முடித்து விட்டு படக்குழுவினர் சென்னை திரும்புகிறார்கள். அடுத்த கட்டமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறைச்சாலையில் விஜய், விஜய் சேதுபதி, அந்தோணி வர்கீஸ் ஆகியார் நடிக்கும் முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன்.டி.வி நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இதனை சன்.டி.வி. நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.






