என் மலர்
சினிமா செய்திகள்
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த பிரியாமணி, சம்பளத்தை கேட்டு வாங்கும் நிலைமை தற்போது இல்லை என்று கூறியிருக்கிறார்.
பருத்தி வீரன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருது பெற்றவர் பிரியாமணி. திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் இடைவெளியிட்டு மீண்டும் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்துள்ளார். ஆனால் எதிர்பார்த்த மாதிரி பட வாய்ப்புகள் அவருக்கு இல்லை. இதனால் வருத்தத்தில் இருக்கும் பிரியாமணி சொல்கிறார்:-
“தென்னிந்தியாவில் திறமைக்கு ஏற்ற மாதிரி நடிகைகளுக்கு சம்பளம் கிடைப்பது இல்லை. தென்னிந்திய மொழி படங்களில் நயன்தாரா, அனுஷ்கா, சமந்தா ஆகிய 3 பேர் மட்டுமே சம்பளம் இவ்வளவு தர வேண்டும் என்று நிர்ப்பந்தித்து கேட்டு வாங்குகிறார்கள். அவர்கள் கேட்டதை கொடுத்தால்தான் நடிப்போம் என்று கறாராக சொல்லும் நிலை இருக்கிறது.

மற்ற கதாநாயகிகள் பலர் நடிப்பு ரீதியாக முன்னிலையில் இருந்தாலும் கூட அவர்களுக்கு சம்பளத்தை கேட்டு வாங்கும் நிலைமை இல்லை. கதாநாயகனை விட குறைவான சம்பளம் என்பது ஒரு நிலையில் இருந்தாலும் இவ்வளவு பணம் கொடுத்தால்தான் நடிப்பேன் என்று கேட்கும் நிலையில் அந்த கதாநாயகிகள் இல்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம்”.
இவ்வாறு பிரியாமணி கூறினார்.
தமிழ் படங்களை நான் ஏணியாக பயன்படுத்த வில்லை என்று நடிகை டாப்சி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
ஆடுகளம் படத்தில் நடித்த டாப்சி அடுத்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 போன்ற படங்களில் நடித்தார். தமிழில் பெரிதாக பட வாய்ப்பு அமையாத நிலையில் இந்தி படங்களில் நடிக்க சென்றார். கோலிவுட்டை விட பாலிவுட் அவருக்கு கை கொடுத்தது.
இதுவரை 15 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இடையில் தமிழ் பக்கம் தலைகாட்டவில்லை. தமிழ் படத்துக்கு முழுக்கு போட்டு விட்டீர்களா என்று அவரிடம் கேட்டபோது பதில் அளித்தார்.
அப்போது டாப்சி கூறியதாவது, 'தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய படங்கள் மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. ஒரு கட்டத்தில் பாலிவுட்டில் இந்தி படங்களில் நடிக்க ஆசைப்பட்டேன். தமிழ் திரையுலகம்தான் கேமரா, நடிப்பு போன்ற எல்லா அடிப்படையையும் கற்றுத்தந்தது.

இப்போது தமிழ் பேசவும் கற்றுக் கொண்டிருக்கிறேன். மார்க்கெட் உள்ள ஒரு தென்னிந்திய திரையுலகுக்கு நான் முழுக்கு போட நினைத்தால் அது முட்டாள்தனம் ஆகிவிடும். பாலிவுட்டிற்கு வருவதற்காக தமிழ் படங்களை நான் ஒரு ஏணியாக பயன்படுத்த வில்லை.
பாலிவுட்டை பொறுத்தமட்டில் இதுவரை 15 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனாலும் இன்னும் ஒரு புதுநடிகையை போலத்தான் என்னை டிரீட் செய்கிறார்கள். என்னை பற்றி தென்னிந்திய திரையுலகில் அதிர்ஷ்டம் இல்லா தவர் என்று கூறுகிறார்கள். நான் நடித்த 4 படங்கள் சரியாக போகாததால் அப்படி கூற ஆரம்பித்தார்கள். மரத்தை சுற்றி நான்கு பாட்டு பாடுவதும் மேற்கொண்டு சில சீன்களில் மட்டுமே நடிப்பதுபோன்று எனது கதாபாத்திரங்கள் இருந்தது. திரும்ப திரும்ப ஒரே பாணியிலான படங்கள் உருவானதால் அவை தொடர் தோல்வியானது’ என்றார்.
களவாணி படம் மூலம் அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஓவியா, அரசியலற்ற நடிகை நான் என்று கூறியிருக்கிறார்.
சினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாது என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. சினிமாவில் இருக்கும் பலருக்கும் அரசியல் ஆசை இருக்கிறது. அதே சமயம் அரசியல் என்றாலே தூரமாக ஓடிப் போகும் நட்சத்திரங்களும் இருக்கிறார்கள். அப்படியான அரசியலற்ற
நடிகை தான் நான் என பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா கூறியுள்ளார்.

“அரசியல் எண்ணமற்ற நட்சத்திரங்களிடம் அரசியல் சார்ந்த கேள்விகளைக் கேட்காமல் இருக்க மீடியாக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொதுமக்களுக்காக கேள்விகளைக் கேட்கிறோம் என்பதை, உங்களை வேறு ஒரு விதத்தில் காட்டும் என நினைக்கிறேன்,” எனக் கூறியுள்ளார்’’.
சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகி வரும் டிக்கிலோனா படத்தில் பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஒருவர் இணைந்து நடித்து வருகிறார்.
சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் டிக்கிலோனா. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனகா மற்றும் ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், ஷாரா என காமெடி பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர்.
இந்த கூட்டணியில் தற்போது மதுமிதாவும் இணைந்திருக்கிறார். இவர் டிக்கிலோனா படத்தில் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மதுமிதா ஏற்கனவே சந்தானத்துடன் இணைந்து ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் மதுமிதாவிற்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் இப்படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி சார்பில் சினிஸும் தயாரிக்கின்றனர்.
பிகில் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 64’ படக்குழுவினர் கர்நாடகா சிறைக்கு செல்ல இருக்கிறார்கள்.
பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இது அவருக்கு 64-வது படம். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். விஜய் சேதுபதி, சாந்தனு, அந்தோணி வர்கீஸ், ஆண்ட்ரியா, பிரகிதா, ரம்யா ஆகியோரும் உள்ளனர்.
விஜய் கல்லூரி பேராசிரியராக நடிப்பதாக கூறப்பட்டது. பின்னர் அவரது இளமையான தோற்றம் கசிந்து மாணவராக நடிக்கிறார் என்று பேசினர். நீட் தேர்வுக்கு மாணவி அனிதா பலியான சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கின்றனர் என்றும் தகவல் பரவியது. கமல்ஹாசனின் நம்மவர் படத்தின் ரீமேக்காக உருவாகிறது என்றும் கூறுகிறார்கள். இந்த தகவல்கள் எதையும் படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.

இந்த நிலையில் டெல்லியில் நடந்து வந்த படப்பிடிப்பை ஓரிரு நாளில் முடித்து விட்டு படக்குழுவினர் சென்னை திரும்புகிறார்கள். அடுத்த கட்டமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறைச்சாலையில் விஜய், விஜய் சேதுபதி, அந்தோணி வர்கீஸ் ஆகியார் நடிக்கும் முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் விமர்சனம்.
தனுஷ் சென்னையில் தங்கி படித்து வருகிறார். அவர் படிக்கும் கல்லூரியில் திரைப்பட படப்பிடிப்பு நடக்கிறது. அந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகும் மேகா ஆகாஷை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் தனுஷ். பின்னர் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். அந்த கல்லூரியில் 2 மாதங்களுக்கு மேல் ஷூட்டிங் நடைபெறுகிறது.
இருவரும் ஜாலியாக காதலித்து வருகின்றனர். தனுஷிடம் தான் ஒரு அனாதை என கூறும் மேகா ஆகாஷ், இப்படத்தின் இயக்குனர் தான் தன்னை சிறுவயதில் இருந்து வளர்த்து வருவதாக கூறுகிறார். அவரின் வற்புறுத்தலின் பேரிலேயே இப்படத்தில் நடிப்பதாகவும் சொல்கிறார். உடனே தனுஷ் அவரை யாருக்கும் தெரியாமல் தனது சொந்த ஊருக்கு அழைத்து செல்கிறார்.

சில நாட்களுக்கு பின் மேகா ஆகாஷை தேடி அந்த படத்தின் இயக்குனர், தனுஷ் வீட்டுக்கு வருகிறார். அப்போது தனுஷிடம் 5 நாட்கள் கழித்து என்னை பார்க்க வா என சொல்லிவிட்டு இயக்குனருடன் சென்னை செல்கிறார் மேகா ஆகாஷ். அதேபோல் 5 நாட்களுக்கு பின் மேகா ஆகாஷை பார்க்க சென்னைக்கு செல்லும் தனுஷ், அவரை தேடி அலைகிறார். எங்கு தேடியும் கிடைக்காததால் விரக்தி அடையும் தனுஷ் மீண்டும் சொந்த ஊருக்கு செல்கிறார். அவரிடம் இருந்து அழைப்பு வரும் என காத்திருக்கும் தனுஷுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
இம்மாதிரியான சூழலில் 4 ஆண்டுகளுக்கு பின் திடீரென தனுஷுக்கு போன் செய்யும் மேகா ஆகாஷ், தான் மும்பையில் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டு இருப்பதாகவும், தன்னை வந்து காப்பாற்றுமாறும் கூறுகிறார். இதன் பின்னர் தனுஷ் மும்பை சென்று மேகா ஆகாஷை காப்பாற்றினாரா? இருவரும் இணைந்தார்களா? என்பதே மீதிக்கதை.

தனுஷ், வழக்கம் போல் தனது அசத்தலான நடிப்பால் கவர்கிறார். காதல், ஆக்ஷன், செண்டிமெண்ட் காட்சிகள் என ஒவ்வொரு காட்சியிலும் முத்திரை பதிக்கிறார். மேகா ஆகாஷ் தனது அழகால் கவர்கிறார். தனுஷ்-மேகா ஆகாஷ் இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருப்பது படத்திற்கு பிளஸ்.
சசிகுமார் சிறிது நேரமே வந்தாலும் படத்தின் திருப்புமுனையாக இவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது. இதுவரை கிராமத்து கதையில் நடித்து வந்த சசிகுமாரை, இந்த படத்தில் ஸ்டைலாக வருவது, ஆங்கிலத்தில் பேசுவது என வித்தியாசமாக காட்டியுள்ளார் கவுதம் மேனன்.
கவுதம் மேனன் இக்கதையை கையாண்ட விதம் சிறப்பு. காதல் கதையை சொல்வதில் கைதேர்ந்த கவுதம் மேனன், நாளுக்கு நாள் தன்னை மெருகேற்றிக் கொண்டே போகிறார். வசனங்களும் படத்திற்கு மிகப்பெரிய பலம். காதல் காட்சிகள் மெதுவாக நகர்வது சற்று சோர்வை தருகிறது.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளிக்கிறது. தர்புகா சிவாவின் பாடல்கள் ஏற்கனவே செம ஹிட் அடித்த நிலையில், விஷுவல் அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. தர்புகா சிவா பாடலை போல் பின்னணி இசையிலும் மிரட்டி இருக்கிறார்.
மொத்தத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ கவுதம் மேனன் இஸ் பேக்.
அறிமுக இயக்குநர் டி.சுரேஷ் குமார் இயக்கத்தில் ஆண்சன் பால், ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகி இருக்கும் மழையில் நனைகிறேன் படத்தின் முன்னோட்டம்.
ஆண்சன் பால், ரெபா மோனிகா ஜான் இணைந்து நடிக்கும் திரைப்படம் “மழையில் நனைகிறேன்”. மேலும் ஷங்கர் குரு ராஜா, மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், சுஜாதா பஞ்சு, வெற்றிவேல் ராஜா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் டி.சுரேஷ் குமார் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு விஷ்ணு பிரசாத் இசையமைத்துள்ளார். ராஜ்ஸ்ரீ வென்சர்ஸ் சார்பில் பி.ராஜேஷ் குமார் மற்றும் ஶ்ரீவித்யா ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
படம் குறித்து இயக்குனர் கூறியதாவது: இது மனதை இலகுவாக்கும் காதல் கதை. அதே நேரம் காதல் பற்றிய முதிர்வான கருத்துக்களை பேசும் படமாகவும் இது இருக்கும். படத்தில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் சூழ்நிலையை முதிர்ச்சியான மனநிலையில் அணுகுவார்கள். வரலாறு முழுதும் தோல்வியடைந்த காதல் கதைகள் தான் வெகு பிரபலம். காதலர்கள் பிரிவதும், இறந்து போவதுமான காதல் கதைகள் வரலாற்றில் தொடர் வெற்றிக்கதைகளாக உலா வருகிறது.

ஆனால் இப்படத்தில் ஒரு வித்தியாசமான முடிவை நீங்கள் பார்க்கலாம். இப்போது அதை வெளிப்படுத்த முடியாது. திரையில் அந்த உணர்வுகளோடு கண்டுகளியுங்கள். உண்மையான காதலை, காதலர்களை பிரதிபலிப்பவர்களாக ஆண்சன் பால், ரெபா மோனிகா ஜான் தங்கள் அற்புத நடிப்பை இப்படத்தில் வழங்கியுள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
சிவகார்த்திகேயனின் ஹீரோ, கார்த்தியின் தம்பி, மாதவன்-அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் உள்பட 30 தமிழ் படங்கள் டிசம்பர் மாதம் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.
ஆண்டு இறுதி என்பதால் பெரிய மற்றும் சிறுபட்ஜெட்டில் தயாரான 30-க்கும் மேற்பட்ட படங்களை அடுத்த மாதம் திரைக்கு கொண்டு வருகிறார்கள். பா.ரஞ்சித் தயாரித்து தினேஷ்-ஆனந்தி நடித்துள்ள இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, தனுசு ராசி நேயர்களே, சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள பேய் படமான இருட்டு, ஜடா ஆகிய படங்கள் டிசம்பர் 6-ந் தேதி வருகின்றன.
பரத் நடித்துள்ள காளிதாஸ் 13-ந் தேதியும், மாதவன்-அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் 16-ந் தேதியும் வருகிறது. சுசீந்திரன் இயக்கி உள்ள சாம்பியன் 17-ந் தேதி வருகிறது. ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ள ஆயிரம் ஜென்மங்கள், ஜீவாவின் சீறு, விமலின் கன்னிராசி, சிவகார்த்திகேயனின் ஹீரோ, கார்த்தியின் தம்பி ஆகிய படங்கள் 20-ந் தேதி வருகின்றன.
தம்பி படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை வாங்கி இருப்பதாக ‘எஸ்டிசி’ பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இதே நிறுவனம் திரிஷாவின் கர்ஜனை படத்தின் உரிமையையும் வாங்கி டிசம்பரில் திரைக்கு கொண்டு வர ஆலோசிக்கிறது.

அமலாபாலின் அதோ அந்த பறவைபோல டிசம்பர் 27-ந்தேதி வெளியாகிறது. சசிகுமாரின் நாடோடிகள்-2, எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கி உள்ள கேப்மாரி, பாரதிராஜா, வசந்த் ரவி நடித்துள்ள ராக்கி, அல்டி, வேழம், சைக்கோ, உன் காதல் இருந்தால், நான் அவளை சந்தித்தபோது, கருத்துக்களை பதிவு செய், பஞ்சாட்சரம், தேடு, இருளன், மதம், இ.பி.கோ 306, கொம்பு வச்ச சிங்கம்டா, அவனே ஸ்ரீமன் நாராயணா ஆகிய படங்களும் அடுத்த மாதம் திரைக்கு வருகின்றன.
அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரகனி, தம்பி ராமையா, அதுல்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் ’அடுத்த சாட்டை’ படத்தின் விமர்சனம்.
சமுத்திரகனி நடிப்பில் வெளியான சாட்டை படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘அடுத்த சாட்டை’ என்ற படம் வெளியாகி இருக்கிறது. சாட்டை படத்தில் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையேயான கதையை உருவாக்கி இருந்தார்கள். அடுத்த சாட்டை படத்தில் கல்லூரி மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் இடையேயான கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.
கல்லூரியில் முதல்வராக தம்பிராமையாவும், பேராசிரியராக சமுத்திரகனியும் இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கும் மட்டும் முன்னுரிமை தரப்பட்டு வரும் அந்த கல்லூரியின் தவறுகளை சமுத்திரகனி சுட்டி காட்டி வருகிறார். மாணவர்களுக்கிடையே ஜாதிகள் ஏதும் கிடையாது என்று கூறி மாணவர்களை ஒழுங்குப்படுத்தி வருகிறார் சமுத்திரகனி. மாணவர்களுக்கிடையே இருக்கும் பிளவுகளையும் நீக்குகிறார்.

சமுத்திரகனியின் செயலால் கோபமடையும் தம்பிராமையா, அவரை எப்படியாவது கல்லூரியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று முயற்சி செய்கிறார். இறுதியில் சமுத்திரகனி, தம்பிராமையாவின் சூழ்ச்சியில் இருந்து எப்படி தப்பித்தார்? ஜாதிகளை விட்டு நல்ல கல்லூரி முதல்வராக தம்பிராமையா மாறினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
மாணவர்களால் கல்லூரிகள் சீர்கெடுகிறதா? அல்லது கல்லூரிகளால் மாணவர்கள் சீர்கெடுகிறார்களா? என்பதை அடிப்படையாக வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். சிறந்த வழிக்காட்டி இருந்தால் மாணவர்கள் அனைத்திலும் சிறந்து விளங்குவார்கள் என்ற கருத்தை சொல்லியதற்கு பெரிய பாராட்டுகள்.

கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார் சமுத்திரகனி. வசனங்கள் பேசும் போது பார்ப்பவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்துகிறது. ஆக்ஷனிலும் கலக்கி இருக்கிறார். மாணவர்களாக நடித்திருக்கும் யுவன், ஸ்ரீராம், அதுல்யா, கனிகா ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தம்பிராமையா மிரட்டலான நடிப்பால் கவர்ந்திருக்கிறார். பியூனாக இருக்கும் ஜார்ஜ் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.
படம் ஆரம்பத்தில் இருந்து சமூகத்திற்கு தேவையான பல கருத்துகளை வசனங்கள் மூலம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நல்ல கருத்து என்றாலும், அதுவே ஒரு கட்டத்தில் சோர்வை ஏற்படுத்தி விடுகிறது. தற்போதுள்ள சூழ்நிலைக்கு இப்படம் தேவையானது என்றே சொல்லலாம்.

முத்தக்காட்சி, புகைப்பிடித்தல், மது அருந்துதல், கேலி செய்தல், ஆபாசம் போன்ற காட்சிகள் இல்லாமல் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அன்பழகன்.
ராசாமதியின் ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘அடுத்த சாட்டை’ சமூகத்திற்கு தேவையானது.
பிரகாஷ்ராஜ், அர்ச்சனா, ரேவதி, ஈஸ்வரி ராவ், நாசர், மோகன்ராம் நடிப்பில் எம்.ஆர்.பாரதி இயக்கத்தில் வெளியாகியுள்ள அழியாத கோலங்கள் 2 படத்தின் விமர்சனம்.
பிரகாஷ்ராஜ் ஒரு பிரபல எழுத்தாளர். அவர் சாகித்ய அகாடமி விருது வாங்கிய கையோடு தன்னுடைய முன்னாள் காதலி அர்ச்சனாவை சந்திக்க செல்கிறார். 25 ஆண்டுகள் கழித்து சந்திக்கும் காதலர்கள் பல்வேறு விஷயங்களை பேசிக்கொண்டு இரவை கழிக்கிறார்கள்.
அப்போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு பிரகாஷ்ராஜ் இறந்து போகிறார். சமூகம், சட்டம், குடும்பம் அனைத்தும் அர்ச்சனாவை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறது. அவரை சந்திக்க பிரகாஷ்ராஜின் மனைவியான ரேவதி வருகிறார். அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை.

குறைந்த செலவில் குறைவான கதாபாத்திரங்களையும் லொகேஷன்களையும் கொண்டு அழகான மரபுக்கவிதையை எம்.ஆர்.பாரதி கொடுத்து இருக்கிறார். பிரகாஷ்ராஜ், அர்ச்சனா, ரேவதி மூவருமே போட்டி போட்டு நடித்துள்ளனர். இவர்களின் நடிப்பில் ஒவ்வொரு அசைவிலும் அவர்களது அனுபவமும் பக்குவமும் தெரிகிறது. போலீஸ் அதிகாரியாக வரும் நாசரும் தனது பங்குக்கு சிறப்பாக நடித்து பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதிக்கிறார்.
படத்தின் இன்னொரு கதாநாயகனே இசை தான். கதையை எந்த விதத்திலும் சிதைக்காமல் தேவைப்படும் இடங்களில் மெலிதாக இசைத்து கதையுடன் ஒன்ற வைக்கிறார் அரவிந்த் சித்தார்த். ’இரு விழியில் ஈரமா இதயம் ஒரு பாரமா’ பாடலில் சித்ராவின் குரலில் உருகி போகிறோம். பல காட்சிகளில் மவுனமே உணர்வுகளை ரசிகர்களிடம் கடத்துகிறது. சிறப்பான பங்களிப்பு.

ராஜேஷ் நாயரின் ஒளிப்பதிவும் அழகான கவிதை. காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பு படத்தை சுவாரசியமாக எடுத்து செல்கிறது. எளிமையான கதை தான். அதை மென்மையாக சொல்லிய விதத்தில் எம்.ஆர்.பாரதி கவனிக்க வைக்கிறார். இந்த தலைமுறையினருக்கு சில லாஜிக் கேள்விகள் எழலாம்.
ஆனால் முந்தைய தலைமுறை நடுத்தர வயதினரின் ஆண் பெண் நட்பு, கண்ணியமான முந்தைய தலைமுறை காதல் என தமிழ் சினிமாவில் அவ்வளவாக பேசப்படாத விஷயங்களை மிக கவனமாக கையாண்டுள்ளார். இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது.
மொத்தத்தில் ‘அழியாத கோலங்கள் 2’ பொறுமையுடன் ரசிக்க வேண்டிய படைப்பு.
மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் பார்வதி, பெண்களுக்கு எதிரான வன்முறை காட்சிகளை பார்த்து ரசிகர்கள் கைதட்டி ரசிப்பது வேதனை அளிப்பதாக கூறியுள்ளார்.
தமிழில் பூ, மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் பார்வதி கூறியதாவது:- “சினிமாவில் பெண் வெறுப்புகளை காட்சிப்படுத்துகின்றனர். நான் நடிக்கும் படங்களில் அதுபோன்ற காட்சிகள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்கிறேன். பெண்ணை உயர்வாக சித்தரிப்பதற்கும் வெறுப்பு ஏற்படும்படி காட்டுவதற்கும் வித்தியாசம் உள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறை காட்சிகளை பார்த்து ரசிகர்கள் கைதட்டுகிறார்கள் என்பதற்காக அதற்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுக்கின்றனர். அதற்கு பதிலாக ரசிகர்களை யோசிக்க வைப்பதுபோல் காட்சிகள் வைக்கலாம். நான் 13-வது வயதில் இதுபோன்ற படங்களை பார்த்து நெளிந்து இருக்கிறேன். ஆனால் மற்றவர்கள் அந்த காட்சிகளை ரசித்தனர். பிறகு அதுபோன்ற சம்பவம் எனது சொந்த வாழ்க்கையிலும் நடந்தது. நானும் பாதிக்கப்பட்டேன்.

பெண்களுக்கு எதிரான திரைப்படங்கள் இளம் பெண்கள் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். வணிக படங்கள் எடுக்கலாம். ஆனால் அவை பெண்களை இழிவுபடுத்துவதுபோல் இருக்க கூடாது. சினிமாவில் வசனங்களுக்குத்தான் முக்கியத்துவம் இருக்க வேண்டும். தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் காதலர்கள் கன்னத்தில் அறைந்து கொள்வதுபோல் காட்சி வைத்து பாலியல் வன்முறையை தூண்டி உள்ளனர்.”
இவ்வாறு பார்வதி கூறினார்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா, தனக்கு 2 நடிகைகள் மீது ஈர்ப்பு ஈர்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.
தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. அந்த படத்தை தொடர்ந்து கீதா கோவிந்தம், டாக்சிவாலா, நோட்டா, டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து வெற்றி நாயகனாக வலம் வருகிறார். சமீபத்தில் பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்ட பார்ட்டி ஒன்றில் பங்கேற்ற விஜய், தனக்கு இரண்டு நடிகைகள் மீது அளவுக்கடந்த ஈர்ப்பு இருப்பதாக கூறினார்.

அது வேறு யாருமில்லை நடிகை தீபிகா படுகோனே மற்றும் ஆலியா பட் என கூறி இதில் தீபிகாவுக்கு கல்யாணம் ஆகிவிட்டது என வருத்தத்துடன் கூறினார். உடனே அதை கேட்ட தீபிகா படுகோனே, ஆலியாவிற்கும் விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறது என கூறி கிண்டல் அடித்தார்.






