என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழில் பல படங்களில் நடித்துள்ள நடிகர் சௌந்தரராஜா, தான் தூர் வாரிய கண்மாய் நிலையை கண்டு மிகவும் வேதனையடைந்திருக்கிறார்.
    சுந்தரபாண்டியன், தர்மதுரை, பூஜை, ஜிகர்தண்டா, தெறி, பிகில் போன்ற படங்களில் நடித்த நடிகர் சௌந்தரராஜா, ஆகஸ்ட் மாதம் பனை விதைகளை நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் எதிரில் உள்ள கண்மாய் கரையை தூர்வாரி தனது மண்ணை நேசிப்போம் மக்களை நேசிப்போம் அறக்கட்டளையின் 2ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடிகர் சௌந்தரராஜா பனை விதைகளை நட்டார்.

    சௌந்தரராஜா

    மூன்று மாதங்களுக்குப் பிறகு அங்கு சென்ற சௌந்தரராஜா, குப்பையால் சூழ்ந்திருப்பதை கண்டு மிகவும் வேதனை அடைந்திருக்கிறார். பனை விதைகள் நட்ட இடங்களே தெரியாதளவிற்கு இருப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும் பொதுமக்கள் பலரும் இதுபோன்ற கண்மாய்களை சுத்தமாக வைத்திருக்கவும், அப்படி வைத்திருந்தால்தான் மழைக்காலங்களில் நீரை சேமிக்க முடியும் என்றும் கூறியிருக்கிறார். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

    உதய் படத்தில் முத்த காட்சியில் நடிக்க தயங்கிய நாயகனுக்கு நடிகை லீமா திடீரென அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.
    மதராச பட்டிணம் படத்தில் ஆர்யாவின் தங்கையாக நடித்தவர் லீமா. உதய் என்ற படம் மூலம் கதாநாயகி ஆகிறார். உதய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்துக்கு உதய் என்றே பெயர் வைத்துள்ளனர்.

    கிடா விருந்து என்ற படத்தை இயக்கிய தமிழ் செல்வன் இயக்கியுள்ளார். படம் பற்றி இயக்குனர் கூறியதாவது:-

    லீமாபாபு

    தான் வரைந்த ஓவியம் போல மனைவி அமைய நாயகன் ஆசைப்படுகிறான். அப்படி ஒரு பெண்ணை அவன் பார்த்ததும் காதலை சொல்கிறான். அந்த காதல் நிறைவேறியதா? என்பதே படம். இந்த படத்தில் முத்த காட்சியில் நாயகன் நடிக்க தயங்கி நிற்க, நாயகி லீமா திடீரென அவரை கட்டி பிடித்து முத்தம் கொடுத்து விட்டார். அந்த காட்சி நன்றாக வந்து விட்டது’. இவ்வாறு அவர் கூறினார்.
    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் உருவாக இருக்கும் தலைவர் 168 படத்தில் முதல்முறையாக பிரபல நடிகர் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
    ரஜினி நடிப்பில் தற்போது ‘தர்பார்’ திரைப்படம் உருவாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. 

    இப்படத்தை அடுத்து சிவா இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர்.



    தற்போது பிரபல காமெடி நடிகர் சூரி இப்படத்தில் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இப்படத்தின் மூலம் ரஜினியுடன் முதல்முறையாக இணைந்திருக்கிறார் சூரி.
    தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் மிகவும் பிரபலமான இலியானா, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் பட வாய்ப்புகளை மறுத்திருக்கிறார்.
    பத்து வருடங்களுக்கு முன்பு தெலுங்கு சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தவர் நடிகை இலியானா. இளம் முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்து வந்த இவர் ஒருகட்டத்தில் பாலிவுட்டில் இருந்து வாய்ப்பு தேடி வந்ததால் தெலுங்கு சினிமா வாய்ப்புகளை ஒதுக்கிவிட்டு பாலிவுட்டில் செட்டிலானார்.

    கடந்த ஆறு வருடங்களில் கிட்டத்தட்ட இந்தியில் எட்டு படங்களில் மட்டுமே நடித்தார். இலியானாவால் அங்கே பெரிதாக சாதிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் கடந்த வருடம் அமர் அக்பர் அந்தோனி என்கிற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்தார். அந்த படத்தை தொடர்ந்து மீண்டும் தெலுங்கில் ஒரு பெரிய ரவுண்டு வரலாம் என எதிர்பார்த்தவருக்கு தற்போது மகேஷ்பாபு மற்றும் அல்லு அர்ஜுன் படங்களில் வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால் கதாநாயகியாக அல்ல, ஒரு பாடலுக்கு மட்டுமே ஆடுவதற்கு வாய்ப்பு வந்துள்ளது.

    இலியானா

    இதனால் அதிர்ச்சியான இலியானா, தனது நிலைமை இன்னும் அந்த அளவுக்கு கீழே போகவில்லை என்று கூறி, தேடி வந்தவர்களை திருப்பி அனுப்பிவிட்டாராம். மேலும் கதாநாயகியாக வரும் வாய்ப்புகளை மட்டுமே ஏற்றுக் கொள்வேன் என்பதில் உறுதியாகவும் இருக்கிறாராம்.
    இளையராஜா - பிரசாத் ஸ்டூடியோ இடையேயான பிரச்சனைக்கு சமரசம் பேச சென்ற பாரதிராஜா, சீமானுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    தமிழ் சினிமாவின் உச்ச இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. இவர் 40 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் அமைந்திருக்கும் ஒரு கட்டடத்தை பயன்படுத்தி வந்தார். இந்த இடத்தில்தான் பாடல் பதிவு, இயக்குனர்கள் சந்திப்பு என அனைத்து பணிகளையும் இளையராஜா செய்து வந்தார்.

    ஆனால், சில மாதங்களுக்கு முன்பு பிரசாத் ஸ்டூடியோவின் தற்போது இயக்குனராக இருக்கும் சாய் பிரசாத்துக்கும், இளையராஜாவிற்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்த கட்டடம் மூடப்பட்டது.. இதன் காரணமாக இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவிற்கு செல்லாமல் இருந்தார். இளையராஜாவின் பணிகளும் முடங்கின.

    பிரசாத் ஸ்டூடியோ

    இளையராஜாவுக்கு ஆதரவாக சமரச பேச்சுவார்த்தைக்கு இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், சீமான், ஆர்.கே.செல்வமணி, ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் சென்றிருக்கிறார்கள். ஆனால், இவர்களை பிரசாத் ஸ்டூடியோ நிர்வகத்தினர் உள்ளே அனுமதிக்காததால், லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    தற்போது பாரதிராஜா, பாக்யராஜ், சீமான், ஆர்.கே.செல்வமணி, ரமேஷ் கண்ணா இவர்கள் 5 பேரை சுமூக பேச்சுவார்த்தைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சூர்யா தயாரிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது.
    சசிகுமார் - ஜோதிகா நடிப்பில் புதிய படம் உருவாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்த புதிய படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது. 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்தில் சமுத்திரகனி, சூரி, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

    கிராமியப் பின்னணியில் உறவுகளின் வலிமையைச் உரக்கச்சொல்லும் விதமாக இந்தப் படம் உருவாகிறது. இயக்குநர் இரா.சரவணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்க, ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசை அமைக்க இருக்கிறார். இந்தப் படத்தின் முழுப் படப்பிடிப்பும் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டப் பகுதிகளில் திட்டமிடப்பட்டிருக்கிறது.

    படக்குழுவினர்

    இவ்விழாவில் நடிகர் சிவகுமார், 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனரும் தயாரிப்பாளருமான சூர்யா, கார்த்தி, சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், இமான், 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சிஇஓ ராஜசேகர், இயக்குனர்கள் இயக்குனர்கள் பாண்டிராஜ், கல்யாண், பிரெட்ரிக், கௌதமராஜ், ஞானவேல், குகன் சென்னியப்பன், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனின் நீண்ட நாள் கனவை ஏ.ஆர்.ரகுமான் நனவாக்கியுள்ளார்.
    சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அவர் தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் `ஹீரோ' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 20-ந் தேதி ரிலீசாக உள்ளது. அடுத்ததாக `இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். 

    இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா இந்த படத்தை தயாரிக்கிறார். படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

    சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.ரகுமான்

    இப்படம் தொடர்பாக சிவகார்த்திகேயன் கூறுகையில், நான் நடிக்க வரும்போது, ஷங்கர் சார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் பாடலுக்கு நடனமாட வேண்டும் என்ற கனவோடு வந்தேன். அதில் ஒன்று தற்போது நனவாகியுள்ளது. இப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் 3 பாடல்களை ரெகார்ட் செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, நடனம் ஆடினால் உலகத்தையே மறந்துவிடுவேன் என தெரிவித்துள்ளார்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா இந்தி படங்களிலும் நடிக்கிறார். ஒரு பாடலுக்கு நடனமும் ஆடுகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “நடனத்தில் எனக்கு விருப்பம் உண்டு. பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது, பரத நாட்டியமோ மேற்கத்திய நடனமோ கற்றுக்கொண்டது இல்லை. சினிமாவுக்கு வந்த கதாநாயகர்கள் சிறப்பாக நடனம் ஆடுகிறார்கள். 

    அவர்களை போல் நம்மால் ஆட முடியுமா என்று மிரண்டேன். நடனம் தெரியாமல் கதாநாயகர்கள் பக்கத்தில் நிற்க முடியுமா என்ற பயமும் பின் தொடர்ந்தது. ஆரம்பத்தில் நான் நடித்த படங்களில் நடனம் ஆடுவதற்கான வாய்ப்பு இல்லாமல்தான் இருந்தது. அதுகொஞ்சம் ஆறுதலாக இருந்தது. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சம் நடனம் மீது கவனம் செலுத்தினேன். தெலுங்கு படங்களில் நடனத்தை ஒரு வாழ்க்கை முறையாகவே பார்க்கின்றனர்.

    தமன்னா

    ஒவ்வொரு கதாநாயகனும் நடனம் கற்ற பிறகுதான் சினிமா பயணத்தை ஆரம்பிக்கின்றனர். ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். அல்லு அரவிந்த் எல்லோருக்கும் நடனம் தெரியும். அவர்களுடன் நடிக்க வேண்டுமானால் நடனம் தெரிந்து இருக்க வேண்டும் என்று உணர்ந்து விரைவாக கற்றுக்கொண்டேன். இப்போது நடனம் என்னோடு கலந்து விட்டது. நடனம் ஆடினால் உலகத்தையே மறந்து விடுகிறேன். எனது குடும்ப நிகழ்ச்சிகளிலும் நடனம் ஆடுகிறேன்.”

    இவ்வாறு தமன்னா கூறினார்.
    வைகறை பாலன் இயக்கத்தில் கரிகாலன், ரிஷா ஹரிதாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீயான்கள்’ படத்தின் முன்னோட்டம்.
    கே.எல். புரடெக்‌ஷன்ஸ் சார்பில் ஜி.கரிகாலன் தயாரித்துள்ள படம் “சீயான்கள்”.  இப்படத்தை இயக்குநர் வைகறை பாலன் இயக்கியுள்ளார். வயது முதிர்ந்த, கிராமத்து முதயவர்கள் 7 பேரின் வாழ்வில் நடக்கும் கதையை, மண்மனம் மாறமல் கூறும் படமாக உருவாகியுள்ளது. கரிகாலன், ரிஷா ஹரிதாஸ் நாயகன், நாயகியாக நடிக்க, நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயணசாமி, துரை சுந்தரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

    கரிகாலன், ரிஷா ஹரிதாஸ்

    படம் குறித்து இயக்குனர் கூறியதாவது: வயதான அப்பா, அம்மா எல்லோருக்கும் இருப்பார்கள் அவர்களை நாம் எப்படி பார்த்துகொள்ள வேண்டும் என்பதை கிராமத்து மண் சார்ந்து கூறும் படைப்பாக சீயான்கள் படம்  இருக்கும். இப்படத்தில்  உண்மையில் நடந்த பல சம்பவங்கள் தொகுத்து அதனை கதையில் சேர்த்திருக்கிறேன். இப்படம் ஏழு முதியவர்களின் பார்வையில் அவர்களது ஆசையை கூறும் படம். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை வயதனாவர்கள் நடத்தினால் எப்படி இருக்கும் அது தான் படம்” என கூறியுள்ளார். 
    கவுதம் மேனன் இயக்கத்தில் அனுஷ்கா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தில், பிக்பாஸ் பிரபலம் ஒருவர் வில்லியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    'பாகமதி' படத்தில் நடித்த பிறகு உடல் எடை காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த அனுஷ்கா, தற்போது 'சைலன்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் முடிந்து வெளியீட்டு பணிகள் நடக்கின்றன. நான்கு மொழியில் வெளியிட உள்ளனர். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் மஞ்சுவாரியர் வேடத்தில் அனுஷ்கா நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால் பின்னர் அந்த செய்தியை அவர் மறுத்தார். 

    அபிராமி, கவுதம் மேனன்

    தற்போது ஒரு இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் அனுஷ்கா நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கவுதம் மேனன் இயக்க இருக்கிறார். இது பெண்களை மையப்படுத்திய படம் என்பதால் அனுஷ்காவும் சம்மதம் சொல்லி இருக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தில் வில்லியாக பிக்பாஸ் பிரபலம் அபிராமி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. 

    அனுஷ்கா ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் நடித்திருந்தார். இதேபோல் அபிராமியும் விக்ரம்-கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தொலைகாட்சி நிகழ்ச்சியில் பேசிய தீபிகா படுகோனே, எனது முன்னாள் காதலனை அலியா பட் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறினார்.
    மும்பையில் நடந்த திரைப்பட நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க கணவர் ரன்வீர் சிங்குடன் தீபிகா படுகோனே சென்று இருந்தார். இதில் விஜய் தேவரகொண்டா, அலியாபட் உள்பட மேலும் சில நட்சத்திரங்கள் பங்கேற்றனர். தீபிகா படுகோனேவும், ரன்பீர் கபூரும் ஏற்கனவே காதலித்தனர். ஜோடியாகவும் சுற்றினார்கள். திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறி இருந்தனர். 

    காதல் நினைவாக ஆர்.கே என்ற இன்ஷியலையும் கழுத்துக்கு கீழே தீபிகா படுகோனே பச்சை குத்தி இருந்தார். அதன்பிறகு இந்த காதல் முறிந்தது. பின்னர் மன அழுத்தத்துக்கு ஆளாகி சிகிச்சை பெற்று பிறகு ரன்வீர் சிங்கை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இந்த நிலையில் டி.வி. நேர்காணலில் தீபிகா படுகோனே கூறும்போது, “ரன்பீர் கபூரை காதலித்தேன். ஆனால் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டேன். 

    தீபிகா படுகோனே, அலியா பட்

    அதேமாதிரி ரன்பீர் கபூர் என்னை காதலித்து இப்போது அலியா பட்டை மணக்க போகிறார் என்று கூறினார். இது அலியா பட்டுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதை ஏன் இப்போது இங்கே சொல்கிறீர்கள் என்று தீபிகா படுகோனேவை பார்த்து கோபமாக கேட்டார். ரன்வீர் சிங்குக்கும் தீபிகா படுகோனே பேசியது பிடிக்கவில்லை. இது மும்பை பட உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பட விழா ஒன்றில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த இயக்குனர் பாக்யராஜுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
    சமீபத்தில் நடைபெற்ற ‘கருத்துக்களை பதிவு செய்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாக்யராஜ், பொள்ளாச்சி விவகாரத்தில் தவறு நடக்க பசங்க மட்டும் காரணம் இல்லை. உங்கள் பலவீனத்தை அவன் சரியாக பயன்படுத்திக்கொண்டான். அவன் செய்தது பெரிய தவறு என்றால், அந்த வாய்ப்பை உருவாக்கி கொடுத்துவிட்டீர்கள், அதுதான் பெரிய தவறு.

    ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என கூறிய பாக்யராஜ், பெண்கள் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். அவர்களுக்கு சுய கட்டுப்பாடு வேண்டும். ஒரு பெண்ணுக்கு தந்தை பாதுகாப்பிற்குத்தான் போன் வாங்கி கொடுக்கிறார். ஆனால் பெண்கள் அதை தவறாக பயன்படுத்துகிறார்கள்’ என பேசினார். 

    ஆந்திர மகளிர் ஆணையத்தின் கடிதம்

    பாக்யராஜின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக மகளிர் ஆணையத்துக்கு ஆந்திர மகளிர் ஆணையத் தலைவி வசிரெட்டி பத்மா கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் ஒரு சில சம்பவங்களை வைத்து ஒட்டு மொத்த பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பாக்யராஜ் பேசியிருப்பதாகவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் இயக்குநர் பாக்யராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
    ×