என் மலர்
சினிமா

கவுதம் மேனன்
கவுதம் மேனன் படத்தில் வில்லியாக நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்
கவுதம் மேனன் இயக்கத்தில் அனுஷ்கா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தில், பிக்பாஸ் பிரபலம் ஒருவர் வில்லியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
'பாகமதி' படத்தில் நடித்த பிறகு உடல் எடை காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த அனுஷ்கா, தற்போது 'சைலன்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் முடிந்து வெளியீட்டு பணிகள் நடக்கின்றன. நான்கு மொழியில் வெளியிட உள்ளனர். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் மஞ்சுவாரியர் வேடத்தில் அனுஷ்கா நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால் பின்னர் அந்த செய்தியை அவர் மறுத்தார்.

தற்போது ஒரு இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் அனுஷ்கா நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கவுதம் மேனன் இயக்க இருக்கிறார். இது பெண்களை மையப்படுத்திய படம் என்பதால் அனுஷ்காவும் சம்மதம் சொல்லி இருக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தில் வில்லியாக பிக்பாஸ் பிரபலம் அபிராமி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
அனுஷ்கா ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் நடித்திருந்தார். இதேபோல் அபிராமியும் விக்ரம்-கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






