என் மலர்
சினிமா செய்திகள்
மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் நடித்து முடித்துள்ள ஆரவ், இனிவரும் படங்களில் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க முன்னுரிமை தருவதாக கூறியுள்ளார்.
சரண் இயக்கத்தில் ஆரவ் ஹீரோவாக அறிமுகமாகும் படம், மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். காவ்யா தாப்பர், நிகிஷா பட்டேல், ராதிகா நடித்துள்ளனர். வரும் 29 ந்தேதி வெளியாகும் இப்படம் குறித்து ஆரவ் கூறியதாவது: மார்க்கெட்டில் பலசாலியான தாதாவாக இருக்கும் எனக்குள் நோஞ்சான் ஆவி ஒன்று புகுந்துகொள்கிறது. பிறகு நான் என்ன ஆகிறேன் என்பது கதை.

நோஞ்சான் ஆவி யார் என்பது சஸ்பென்ஸ். சரண் கதை சொன்னபோது, ஆக்ஷனுக்கு அதிக முக்கியத்துவம் இருந்ததால், முன்கூட்டியே சண்டை பயிற்சி பெற்றேன். காவ்யா தாப்பர், நிகிஷா பட்டேல் ஆகியோருடன் காதல் காட்சிகளில் நடித்துள்ளேன். தற்போது பல படங்களில் ஹீரோவாக நடிக்கும் நான், ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க முன்னுரிமை தருகிறேன். என்றார்.
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் சைக்கோ படத்தின் ‘உன்ன நெனச்சு’ பாடல் வைரலாகி வரும் நிலையில், அதற்கு பிரபலங்கள் பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
வாட்ச்மேன் படத்துக்கு பிறகு டபுள் மீனிங் புரடக்ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிக்கும் படம் சைக்கோ. மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் அதிதிராவ், நித்யா மேனன், ராம், சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மிஷ்கினின் ‘நந்தலாலா’, ’ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஆகியப் படங்களுக்குப் பிறகு ‘சைக்கோ’ படத்துக்கு இசையமைக்கிறார் இசைஞானி இளையராஜா. மிஷ்கினுடன் முதன் முறையாக கைகோர்த்திருக்கும் உதயநிதி, இந்தப் படத்தில் பார்வையற்றவராக நடிக்கிறார். இந்நிலையில், இந்தப் படத்தில் முதல் சிங்கிள் ட்ராக்கான ‘உன்ன நெனச்சு’ என்ற பாடலை பாடகர் சித் ஸ்ரீராம் பாடியிருக்கிறார். இளையராஜாவின் இசையில் அவர் பாடியுள்ள முதல் பாடலும் இதுதான்.

பாடலாசிரியர் கபிலன் எழுதியிருக்கும் இந்தப் பாடலை தனது ட்விட்டரில் வெளியிட்டார் இயக்குநர் வெற்றிமாறன். இந்த பாடலுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. பாடலை கவுதம் மேனன், யுவன் சங்கர் ராஜா உள்பட பலர் பாராட்டியுள்ளனர். டிசம்பர் 27-ந் சைக்கோ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். டபுள் மீனிங் புரடக்ஷன்ஸ் அடுத்து சிபிராஜ் நடிப்பில் மாயோன் என்ற படத்தை தயாரிக்கிறது.
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, தனக்கு பிடித்த 4 சினிமா நட்சத்திரங்களின் பெயர்களை கூறியிருக்கிறார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பிசியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. சமீபத்தில் வெளியான அவரது சங்கத்தமிழன் படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்துள்ளது. மாமனிதன், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளிர், லாபம் என தமிழில் அடுத்தடுத்து ரிலீசுக்கு அவரது படங்கள் தயாராகி வருகின்றன.
இது தவிர தளபதி 64 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார். இந்தியிலும் அமீர்கானுக்கு வில்லனாக மிரட்ட இருக்கிறார். இந்நிலையில், தனக்கு பிடித்த நான்கு நடிகர்கள் பற்றி பேசியுள்ளார் விஜய் சேதுபதி.

அதில் முதல் இடத்தில் நடிகர் சிவாஜியின் பெயரை அவர் கூறியிருக்கிறார். எந்தவொரு கதாபாத்திரத்தையும் சர்வ சாதாரணமாக செய்ய முடியும் என்பதால் அவரை பிடிக்குமாம். இரண்டாவது இடத்தில் கமல் உள்ளார். திறமையான நடிகராக, கதைக்கு ஏற்ப, எந்த ஒரு கதாபாத்திரத்திலும் கமலால் நடிக்க முடியும் என விஜய் சேதுபதி அவரைப் பாராட்டியுள்ளார்.

3வது இடத்தில் மலையாள நடிகர் மோகன் லாலை கூறிய விஜய் சேதுபதி, அவர் எளிதாக நடிக்கக்கூடியவர் என்றார். மேலும், எம்ஜிஆரை தனக்கு மிகவும் பிடிக்கும் எனக் கூறியுள்ள விஜய் சேதுபதி, அவரின் புத்திசாலித்தனமான நடிப்பு மற்றும் கதை தேர்வு செய்யும் விதம் எல்லாமே தனக்கு பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை ஜெனிலியா, தனது மகனுக்கு உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
சந்தோஷ் சுப்ரமணியன், வேலாயுதம், சச்சின் உள்பட பல படங்களில் நடித்தவர் ஜெனிலியா. மும்பை நடிகையான இவர், இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், மூத்த மகன் ரியானுக்கு 5வது பிறந்த நாளை கொண்டாடிய ஜெனிலியா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், அன்பான ரியான், ஒவ்வொரு பெற்றோரும் அவன் வளர வேண்டாம். இப்படியே இருக்கட்டும் என்று கூறுவார்கள். நான் அப்படியல்ல, உன்னுடைய ஒவ்வொரு வளர்ச்சியையும் ரசிக்க விரும்புகிறேன். நான் உனக்கு பறக்க இறக்கைகள் கொடுத்து, அந்த இறக்கைகளுக்கு அடியில் காற்றாக இருக்க விரும்புகிறேன்.

நீ நல்ல இளைஞனாக வளர்வதை பார்க்க விரும்புகிறேன். நீ கடுமையானவன். எப்போது என்ன நடந்தாலும் உன்னை நம்ப வேண்டும். நான் எப்போதும் உன்னை நம்புகிறேன். வாழ்க்கை கடினமானது என்று நான் உனக்கு சொல்ல விரும்புகிறேன். அதோடு, நான் விரும்புவதை தவிர வேறு ஒன்றையும் உனக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். அது என்னவெனில் நான் உன்னை நேசிக்கிறேன். நீ எனக்கு கிடைத்த மிகப்பெரிய விசயம். என்னை அம்மாவாக்கிய சிறு பையனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்- என் முதல் பிறப்பு - என்றும் அந்த பதிவில் ஜெனிலியா தெரிவித்துள்ளார். இந்த கடிதம் சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது.
மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் முதல்முறையாக மம்மூட்டி நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
1995-ல் மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான மஞ்சுவாரியர் இதுவரை 50 படங்கள் நடித்துள்ளார். இதில் நடிகர் திலீப்புடன் திருமணமாகி சில வருடங்கள் நடிக்காமல் ஒதுங்கி இருந்தவர், அவர் உடனான விவாகரத்து பின் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்சில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
இத்தனை வருடங்களில் மலையாள சினிமாவில் உள்ள அனைத்து பிரபல ஹீரோக்களுடனும் இணைந்து நடித்து விட்டவர், மம்முட்டி படத்தில் மட்டும் நடித்ததே இல்லை. மஞ்சு வாரியர் தனது படத்தில் நடிப்பதை மம்மூட்டி விரும்பவில்லை என்றே மலையாள திரையுலகில் இதற்கு காரணமாக சொல்லப்பட்டு வந்தது.

காரணம் நடிகர் திலீப்பை செல்லப்பிள்ளையாக பாவித்து வந்த மம்முட்டி, ஏனோ அவரது மனைவியான மஞ்சுவாரியருடன் இணைந்து நடிப்பதில் தயக்கம் காட்டியே வந்தார் என்றார்கள். இந்த நிலையில் தற்போது அறிமுக இயக்குனர் ஜோபின் டி சாக்கோ என்பவர் இயக்கும் புதிய படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடிக்கிறார் மஞ்சு வாரியர். இந்த படத்தில் கூட மம்முட்டிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கவில்லை. முக்கிய கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறார்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி - ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் தம்பி படத்தை பிரபல நிறுவனம் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது.
கார்த்தி - ஜோதிகா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ’தம்பி’. ‘பாபநாசம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். ‘பாபநாசம்’ மாதிரி இதுவும் ஒரு பேமிலி டிராமா, திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது. இதில் ஜோதிகா-கார்த்தி அக்கா, தம்பியாக நடித்துள்ளனர். அப்பா அம்மாவாக சத்யராஜ், சீதா நடித்துள்ளார்கள்.
மேலும் இளவரசு, ஆன்சன் பால், பாலா, சௌகார் ஜானகி, அம்மு அபிராமி, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கார்த்தி ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார். 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தை SDC பிக்சர்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளது. இந்நிறுவனம் இதற்கு முன் தொரட்டி, திட்டம் போட்டு திருடுற கூட்டம், காவியன் ஆகிய படங்களை வெளியிட்டுள்ளனர். மேலும் சேரன் நடிப்பில் உருவாகியுள்ள “ராஜாவுக்கு செக்”, திரிஷாவின் “கர்ஜனை” படங்களை வெளியிட இருக்கிறார்கள்.
வரும் நவம்பர் விழா 30ம் தேதி தம்பி படத்தின் இசை வெளியீட்டையும், டிசம்பர் 20ம் தேதி திரைப்படத்தையும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
கதிர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் ‘ஜடா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ‘அதுவேற இதுவேற’ என்று அவர் பேசியிருக்கிறார்.
தி போயட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் கதிர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ஜடா’. இப்படத்தை அறிமுக இயக்குனர் குமரன் இயக்கியுள்ளார். கதாநாயகிகளாக ரோஷினி பிரகாஷ் மற்றும் சுவாஸ்திகா நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் கதிர் பேசும்போது, ‘குமரன் அற்புதமான கிரியேட்டர் என்பதை தாண்டி துளியும் ஈகோ இல்லாத இயக்குனர். எல்லோர் கொடுக்கும் இன்புட்டையும் வாங்கி சிறப்பாக செய்வார். இந்த மாதிரி ஒரு டீம் அமைவது முக்கியம். சாம்.சி.எஸ் இசை படத்திற்கு முக்கியமாக அமைந்துள்ளது.

ஜடா ஒரு வழக்கமான படம் கிடையாது. படத்தில் நிறைய ப்ளேவர்ஸ், எமோஷன் இருக்கும். அதுதான் எனக்கு மிகவும் பிடித்தது. இன்டர்நேஷனல் புட்பாலுக்கும் ஸ்ட்ரீட் புட்பாலுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் நிறைய இந்தப்படத்தில் இருக்கும். பிகில் படமும் புட்பால் இந்தப்படமும் புட்பால் என்று நிறையபேர் கேட்கிறார்கள். அந்தப்படம் வேற, இந்தப்படம் வேற. சாம்.சி.எஸ் இசையை பெரிய ஸ்கிரீனில் படத்தோடு கேட்கும் போது பிரம்மிப்பாக இருந்தது. இது ஒரு கிரேட் டீம் ஒர்க்’ என்றார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். தர்பார் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து, தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக்கை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இதன் இசை வெளியீட்டு விழா, டிசம்பர் 7-ந் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்நிலையில், தர்பார் படத்தின் ஓப்பனிங் பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. ’சும்மா கிழி’ என தொடங்கும் அந்த பாடலை பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். அனிருத்தின் அசத்தலான இசையில் விவேக்கின் வரிகளில் உருவாகியிருக்கும் இந்த பாடல் யூடியூபில் டிரெண்ட் ஆகி வருகிறது.
எம்.ஆர்.பாரதி இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், அர்ச்சனா, ரேவதி நடித்துள்ள ’அழியாத கோலங்கள் 2’ படத்தின் முன்னோட்டம்.
எம்.ஆர்.பாரதி இயக்கியுள்ள படம் ‘அழியாத கோலங்கள் 2’. இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், அர்ச்சனா, ரேவதி, ஈஸ்வரிராவ், நாசர் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் குறித்து இயக்குனர் எம்.ஆர். பாரதி கூறுகையில், ‘‘பிரபல இயக்குனர் பாலுமகேந்திராவின் நினைவாக இந்தப்படத்திற்கு ‘அழியாத கோலங்கள் 2’ என பெயர் வைத்துள்ளோம். மற்றபடி அவர் இயக்கிய அழியாத கோலங்கள் படத்தின் கதைக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்தப் படம் ஒரு வங்காளப் படத்தின் ரீமேக்காகும்.

சாகித்ய அகடாமி விருது பெற்ற ஒரு எழுத்தாளன் தன் மனைவியை அழைத்துக் கொண்டு, தன் முன்னாள் காதலியை பார்க்கச் செல்கிறார். அந்த ஒரு இரவில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. இந்தப் படம் வங்காளத்தில் பல விருதுகள் வாங்கி சாதனை படைத்தன. இந்தப் படத்தில் ஹீரோவாக பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். அவரது மனைவியாக ரேவதியும், காதலியாக அர்ச்சனாவும் நடித்துள்ளனர். நடிகை ஈஸ்வரிராவ் செய்தியாளராகவும், நடிகர் நாசர் காவல்துறை அதிகாரியாகவும் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை தமன்னா, வெப் தொடர் ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
திரைப்படங்களைக் காட்டிலும், அதிரடியான, திரில்லரான, சஸ்பென்ஸ் நிறைந்த வெப் தொடர்களில் நடிக்கவே பல நடிகர்களும், நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பாலிவுட்டில் ஏற்கனவே பல வெப் தொடர்கள் வெளிவந்திருக்கும் நிலையில், இந்த வெப் தொடர் காய்ச்சல் தென்னிந்திய திரைப்பட நடிகர், நடிகைகளிடையேயும் வேகமாக பரவி வருகிறது.
இதனால் முன்னணி நடிகர்-நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் பிரசன்னா, பாபி சின்ஹா, காஜல் அகர்வால், சமந்தா, பிரியாமணி, நித்யாமேனன், நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி ஆகியோர் வெப் தொடர்களில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை தமன்னா, அடுத்ததாக வெப் தொடர் ஒன்றில் நடிக்க உள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போலி இணையதளங்கள் மூலம் நடிகர் ராகவா லாரன்ஸ் பெயரில் பண மோசடி செய்யப்படுவதாக கூறி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ராகவாலாரன்ஸ் மக்கள் சேவை நற்பணி மன்றத்தின் பொதுச் செயலாளர் சங்கர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: ராகவா லாரன்ஸ் பெயருக்கும், புகழுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் இணையதளம் மூலமாக போலியான ஐ.டி.யை பதிவு செய்துள்ளனர். நான் தான் ராகவா லாரன்ஸ் என்று தவறான முறையில் பணம் வசூல் செய்துள்ளனர்.

வீடு கட்டி தருவதாக கூறி பெங்களூர், சேலம், ஊட்டி, ராமநாதபுரம், கொளத்தூர் (சென்னை), வடபழனி போன்ற இடத்தில் இதுபோன்ற தவறுகளை செய்து வருகின்றார்கள். அவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் மர்ம நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்களும், ரசிகர்களும் உதவி செய்ய வேண்டும் என்றால் உண்மையான ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையை அணுகவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
1980-களில் திரையுலகில் கோலோச்சிய நடிகர், நடிகைகளின் சந்திப்புக்கு அழைப்பு விடுக்காதது வருத்தமளிப்பதாக பிரதாப் போத்தன் தெரிவித்துள்ளார்.
1980-களில் திரையுலகில் ஒன்றாக சேர்ந்து நடித்தவர்கள் ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் சந்தித்து கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சில ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நட்சத்திர சந்திப்பு ஐதராபாத்தில் உள்ள நடிகர் சிரஞ்சீவியின் வீட்டில் நடந்தது.
நடிகர்கள் ரகுமான், நாகார்ஜுனா, மோகன்லால், வெங்கடேஷ், சரத்குமார், பாக்யராஜ், பிரபு, சிரஞ்சீவி, ஜெயராம், சுமன், சுரேஷ், ஜெகபதி பாபு, ரமேஷ் அரவிந்த், பானுசந்தர். நடிகைகள் குஷ்பு, மீனா, ராதிகா, சுகாசினி, ஜெயசுதா, ஷோபனா, சுமலதா, நதியா, ராதா, அமலா, சரிதா, லிசி, பூர்ணிமா, ஜெயபிரதா, ரேவதி, மேனகா, அம்பிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொள்ள 80-களில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது தொடர்பாக தனது வருத்தத்தை சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர், ‘80-களின் நடிகர்களில் நான் மோசமான நடிகராகவும், இயக்குனராகவும் இருந்திருக்கலாம். அதனால் அவர்கள் என்னை அழைக்கவில்லை என நினைக்கிறேன். இது எனக்கு வருத்தம் தான்’, என பிரதாப் போத்தன் குறிப்பிட்டுள்ளார்.






