என் மலர்
சினிமா

தம்பி படத்தில் கார்த்தி - ஜோதிகா
தம்பி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி - ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் தம்பி படத்தை பிரபல நிறுவனம் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது.
கார்த்தி - ஜோதிகா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ’தம்பி’. ‘பாபநாசம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். ‘பாபநாசம்’ மாதிரி இதுவும் ஒரு பேமிலி டிராமா, திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது. இதில் ஜோதிகா-கார்த்தி அக்கா, தம்பியாக நடித்துள்ளனர். அப்பா அம்மாவாக சத்யராஜ், சீதா நடித்துள்ளார்கள்.
மேலும் இளவரசு, ஆன்சன் பால், பாலா, சௌகார் ஜானகி, அம்மு அபிராமி, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கார்த்தி ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார். 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தை SDC பிக்சர்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளது. இந்நிறுவனம் இதற்கு முன் தொரட்டி, திட்டம் போட்டு திருடுற கூட்டம், காவியன் ஆகிய படங்களை வெளியிட்டுள்ளனர். மேலும் சேரன் நடிப்பில் உருவாகியுள்ள “ராஜாவுக்கு செக்”, திரிஷாவின் “கர்ஜனை” படங்களை வெளியிட இருக்கிறார்கள்.
வரும் நவம்பர் விழா 30ம் தேதி தம்பி படத்தின் இசை வெளியீட்டையும், டிசம்பர் 20ம் தேதி திரைப்படத்தையும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
Next Story






