என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகரிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய வழக்கில் மராட்டிய நடிகை சாரா ஸ்ரவான் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
    புனேவை சேர்ந்தவர் மராட்டிய நடிகை சாரா ஸ்ரவான். இவர் மராட்டிய நடிகர் சுபா‌‌ஷ் யாதவுடன் சேர்ந்து படம் ஒன்று நடித்தார். அந்த படம் வெளியான பிறகு சுபா‌‌ஷ் யாதவ் மீது சாரா ஸ்ரவான் பாலியல் புகார் அளித்தார். இதையடுத்து, சுபா‌‌ஷ் யாதவ் தனது செயலுக்காக சாரா ஸ்ரவானிடம் மன்னிப்பு கேட்டு அவரது செல்போனுக்கு வீடியோ ஒன்றை அனுப்பினார். 

    இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட சாரா ஸ்ரவான், ரூ.15 லட்சம் தராவிட்டால் அந்த வீடியோவை அம்பலமாக்கி விடுவேன் என சுபாஷ் யாதவை மிரட்டினார். இதற்கிடையில் சாரா ஸ்ரவானின் தோழியான மற்றொரு மராட்டிய நடிகை இந்த வீடியோவை இணையத்தில் கசியவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சுபா‌‌ஷ் யாதவ், பணம் கேட்டு மிரட்டியதாக நடிகை மீது போலீசில் புகார் அளித்தார். 

    சாரா ஸ்ரவான்

    இதையடுத்து, இந்த வழக்கில் கைது ஆகாமல் இருக்க சாரா ஸ்ரவான், புனே கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார். இந்த நிலையில் சாரா ஸ்ரவானின் முன்ஜாமீன் மனுவை புனே கோர்ட்டு ரத்து செய்தது. அதனை தொடர்ந்து, நேற்று மும்பையில் இருந்த சாரா ஸ்ரவானை புனே போலீசார் கைது செய்தனர்.
    தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிட்டதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
    மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற பெயரில் விஜய் இயக்கி வருகிறார். ஜெயலலிதாவாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதற்காக பரதநாட்டியம் கற்றுக் கொண்ட கங்கனா, தமிழ் பேசவும் பயிற்சி பெற்றார். 

    ஜெயலலிதா போன்ற உடல்வாகை பெற, அவர் வழக்கத்தைவிட அதிக அளவு சாப்பிட்டதாகவும், சில ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக்கொண்டதாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். “ஜெயலலிதா தனது வாழ்க்கையில் கடுமையான உடல் மாற்றத்தை எதிர்கொண்டார். பரத நாட்டிய நடன கலைஞராக வளர்ந்தவர் கண்ணாடி போன்ற பளபளப்பான உருவம் கொண்டிருந்தார்.

    கங்கனா ரனாவத்

    அரசியலுக்கு வந்தபின் ஏற்பட்ட விபத்தில் அதிக அளவில் ஸ்டெராய்டுகள் எடுக்க வேண்டியிருந்தது. அதையெல்லாம் சித்தரிக்க விரும்பியதால் நானும் ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார். இயக்குனர் விஜய், ஜெயலலிதா போன்ற தோற்றமே வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் இவற்றை செய்ததாக கூறி உள்ள கங்கனா, தலைவி படத்திற்காக மட்டும் 6 கிலோ எடை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
    விமான நிலையத்தில் செல்பி எடுக்கும்போது நடிகையிடம் ரசிகர் ஒருவர் அத்துமீறி நடந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கேதார்நாத் படம் மூலம் இந்தியில் கதாநாயகியாக அறிமுகமானவர் சாரா அலி கான். இந்தி நடிகர் சயீப் அலி கானின் மகளான இவர், முதல் படத்திலேயே பிலிம் பேர் விருதினை பெற்றவர். நிறைய படங்களில் நடித்து வருகிறார். விடுமுறைக் காக அமெரிக்கா சென்றிருந்த சாரா, சமீபத்தில் மும்பை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் அவருடன் ரசிகர்கள் சிலர் செல்பி எடுக்க முயற்சித்தனர். சாராவும் புன்னகையுடன் ரசிகர்களுக்கு பொறுமையாக நின்று போஸ் கொடுத்தார்.

    சாரா அலி கான்

    அப்போது ஒரு ரசிகர் அத்துமீறி சாராவின் மேல் கை போட்டு செல்பி எடுக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சாரா, உடனே விலகிவிட்டார். அந்த ரசிகரிடம் கடுமையாக நடந்து கொள்ளாமல் தள்ளி நின்று அவருக்கும் சிரித்த முகத்துடனேயே போஸ் கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகையிடம் அத்துமீறிய அந்த ரசிகரை கடுமையாக திட்டியுள்ளனர். அதே நேரம் அவரிடம் கோபத்தை வெளிக் காட்டாமல் பொறுமையாக நடந்து கொண்ட சாராவை பாராட்டியுள்ளனர். 
    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் சிரஞ்சீவியின் படத்தில் நடிகை அனுஷ்கா நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
    அனுஷ்கா பிரபல ஹீரோக்களுடன் பல படங்களில் ஜோடி போட்டு நடித்திருந்தாலும் பாகுபலி பெரிய அளவில் அவரை உயர்த்தி பிடித்தது. இது சரித்திர பின்னணியிலான படம். அதேபோல் ருத்ரமாதேவி படமும் சரித்திர கதையாக அமைந்தது. சிரஞ்சீவி நடித்த சை ரா நரசிம்ம ரெட்டி சரித்திர படத்திலும் ராணி கதாபாத்திரத்தில் நடித்தார். 

    இந்நிலையில் சரித்திர கதை அம்சம்முள்ள கதைகளில் நடிக்க அவரை தேடி நிறைய வாய்ப்புகள் வரத் தொடங்கின. இதில் குழப்பத்தில் ஆழ்ந்தார். தற்போதைக்கு சரித்திர படத்தை ஒதுக்கி வைப்பது என்று முடிவு செய்திருக்கிறாராம். வணிக ரீதியிலான படங்களில் நிறைய வாய்ப்புகள் வந்தாலும் கதைக்கும் தனக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டுகிறார் அனுஷ்கா. அந்த வகையில் காதுகேளாத மாற்றுத்திறனாளியாக நிசப்தம் படத்தில் நடித்து வருகிறார். 

    சிரஞ்சீவி, அனுஷ்கா

    இந்நிலையில் சிரஞ்சீவி நடிக்கும் கமர்ஷியல் படமொன்றில் நடிக்க அப்பட இயக்குனர் கெராட்டாலா சிவா அணுகியபோது ஏற்க மறுத்துவிட்டார் அனுஷ்கா. அதேசமயம் கவுதம் மேனன் அடுத்து இயக்க உள்ள தமிழ், தெலுங்கு படமொன்றில் நடிக்க கேட்டதும் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதையாக உருவாகிறது. 90களின் காலகட்டத்தில் நடப்பதுபோன்று இக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும் அதை தற்கால சூழலுக்கு ஏற்ப கவுதம் மேனன் மாற்றி படமாக்க உள்ளாராம்.
    நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி வரும் ‘கா’ படம் முழுக்க முழுக்க அடர்ந்த வனப்பகுதிக்குள் படமாக்கியுள்ளனர்.
    ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் "கா". கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைஃப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். 

    முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் சலீம்கோஸ் நடித்துள்ளார். "கா" என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும். 30 நாட்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் இதுவரை யாரும் செல்ல முடியாத இடங்களுக்கு வன அலுவலகத்தில் அனுமதி பெற்று படப்பிடிப்பை நடித்தியிருக்கின்றனர். 

    ஆண்ட்ரியா

    அந்த காடுகளை திரையில் பார்க்கும்போது மிகவும் பிரம்மிப்பாக இருக்கும் எழில் கொஞ்சும் காட்டின் அழகை வித்தியாசமான ஒரு கோணத்தில் இதில் கண்டு ரசிக்கலாம் என்கிறார் இயக்குனர் நாஞ்சில். மேலும் அமலாபால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அதோ அந்த பறவை போல’ படமும் முழுக்க முழுக்க வனப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படம் வருகிற டிசம்பர் 27-ந் தேதி திரைக்கும் வருகிறது.
    வினோநாகராஜன்-என்.கல்யாணசுந்தரம் இயக்கத்தில் செந்தில்குமார் தயாரிப்பில் உருவாகி வரும் "டம்மி ஜோக்கர்" படத்தின் முன்னோட்டம்.
    ரேடியண்ட் விஷ்வல்ஸ் என்ற நிறுவனம் சார்பில் செந்தில்குமார் தயாரித்து, நடித்துள்ள படம் "டம்மி ஜோக்கர்". இரட்டை இயக்குனர்களாக வினோநாகராஜன்-என்.கல்யாணசுந்தரம் இருவரும் இணைந்து இப்படத்தை இயக்கி உள்ளார்கள். மேலும் நம்மகுமார், ராஷ்மி, விஷ்வா, குட்டிப்புலி சரவண சக்தி, வைசாலி, தர்மா, தவசி , தஷ்மிகா, டி.எம்.சந்திரசேகர், சிவபாலன், தவமணி, குட்டி திரிஷா, திருப்பூர் சந்தானம், நந்துஸ்ரீ, தர்ஷன், மதுரை சாந்தி இன்னும் பலர் நடித்துள்ளனர்.
     
    படத்தை பற்றி இயக்குனர்கள் கூறியதாவது: " 22 வருடங்களுக்கு முன் காணாமல் போன தனது தந்தையை தேடி அந்த கிராமத்திற்கு வருகிறான். அவனுக்கு அந்த ஊரில் கதாநாயகனும் நண்பர்களும் உதவி புரிவதாக கூறுகிறார்கள். ஊர் முழுக்க விசாரிக்கையில் பேய் பங்களாவை காட்டுகின்றனர் ஊர் மக்கள். மேலும் அந்த பங்களாவினுள் தங்க புதையல் இருப்பதாகவும் அதனுள் தான் இவன் தந்தை சென்றதாகவும் சொல்கிறார்கள்.

    டம்மி ஜோக்கர் படக்குழு

    அவனுக்கு அப்பா, நமக்கு புதையல் என்று கணக்கு பண்ணி அவனுக்கு உதவுவது போல் பங்களாவுக்குள் எல்லோரும் நுழைகின்றனர். இவர்கள் உள்ளே வந்ததும் கதவு மூடிக்கொள்கிறது. எவ்வளவோ முயன்றும் அவர்களால் கதவை திறக்க முடியவில்லை. அனைவரும் திகிலடைகின்றனர். வன் தந்தையை கண்டுபிடித்தார்களா? புதையல் அவர்களுக்கு கிடைத்ததா? இப்படி செல்லும் கதை ஒரு கட்டத்தில் செம காமெடிக்கு மாறும். 

    முன்னனியில் இருக்கிற பிரபலமான 22 நடிகர்கள் போல் உருவ ஒற்றுமை உள்ளவர்களை இதில் நடிக்க வைத்துள்ளோம். அவர்கள் அடிக்கிற லூட்டி காமெடியின் உச்சகட்டமாக இருக்கும். காரைக்குடியிலும் அதனை சுற்றியுள்ள அழகிய இடங்களிலும் படமாக்கி உள்ளோம்" என்றார்கள்.
    ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீசாக உள்ள நிலையில், தற்போது சசிகுமார் நடித்துள்ள எம்.ஜி.ஆர்.மகன் படமும் அதே தினத்தில் ரிலீசாக உள்ளது.
    இந்த ஆண்டு பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாகவுள்ளது என படக்குழு முன்னரே அறிவிப்பை வெளியிட்டது. 

    சத்யராஜ், சசிகுமார்

    அதனை தொடர்ந்து, தனுஷின் பட்டாஸ், பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களும் பொங்கல் போட்டிக்கு தயாராகின. தற்போது புதுவரவாக எம்ஜிஆர் மகனும் களத்தில் இறங்கியுள்ளது. சீமராஜா படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பொன்ராம், கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்கியுள்ள படம் எம்.ஜி.ஆர் மகன். இந்த படத்தில் சசிகுமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, சிங்கம் புலி ஆகியோர் நடிக்கின்றனர். 
    கே.ஜி.எப் பாணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'அவனே ஸ்ரீமன் நாராயணா' திரைப்படம் கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என 5 மொழிகளில் வெளியாக உள்ளது.
    கன்னட திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பான கே.ஜி.எப் திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி, கன்னட சினிமா மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் வசூல் குவித்து சாதனை படைத்தது. கன்னடத்தில் ரூ.100 கோடி வசூலை தாண்டிய முதல் படம் என்ற பெருமை கே.ஜி.எப் படத்திற்கு கிடைத்தது. இந்த படம் கொடுத்த உத்வேகத்தில் தற்போது, ’அவனே ஸ்ரீமன் நாராயணா’ எனும் திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. 

    பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம் 3 வருடமாக படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் 80 சதவீத காட்சிகள் அதிக பொருட்செலவில் செட் போட்டு எடுக்கப்பட்டுள்ளது. முதலில் கன்னட மொழியில் மட்டும் வெளியிட திட்டமிட்ட படக்குழு, கே.ஜி.எப் படத்திற்கு, பிற மொழிகளில் கிடைத்த வரவேற்பை பார்த்து, தற்போது தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்து வெளியிட முடிவு செய்துள்ளது. 

    அவனே ஸ்ரீமன் நாராயணா படக்குழு

    ரக்‌ஷித் ஷெட்டி கதை எழுதி, நாயகனாக நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் சச்சின் ரவி இயக்கி, எடிட்டிங் செய்துள்ளார். மேலும் இப்படத்தில், சந்திரஜித் பெல்லியப்பா, அபிஜித் மகேஷ், நாகர்ஜுன் ஷர்மா, அபிலாஷ், அனிருத் காட்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். புஷ்கர் பிலிம்ஸ் சார்பில் எச்.கே.பிரகாஷ் மற்றும் புஷ்கரா மல்லிகார்ஜுனா இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு சரண் ராஜ் மற்றும் பி அஜனேஷ் லோகநாத் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

    சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. மேலும் இந்த டிரைலரை தமிழில் - தனுஷ், தெலுங்கில் - நானி, மலையாளத்தில் - நிவின் பாலி போன்ற உச்ச நடிகர்கள் வெளியிட்டதோடு படக்குழுவையும் பாராட்டியுள்ளனர். இப்படம் டிசம்பர் இறுதியில் திரைக்கு வருகிறது.
    16 வயதினிலே படத்தில் நடித்ததற்காக ரஜினிக்கு பேசப்பட்ட சம்பளத்தை அவரிடம் முழுமையாக கொடுக்கவில்லை என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
    வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் நடிகர் ரஜினிகாந்தின் 70- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, பட்டிமன்ற பேச்சாளர் ராஜா உள்பட பலர் பங்கேற்று 70 பயனாளிகளுக்கு 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். 

    இந்த விழாவில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, ”ரஜினி மிகவும் எளிமையானவர். 16 வயதினிலே படத்திற்காக முதலில் 5 ஆயிரம் சம்பளம் கேட்டார் ரஜினி. இது சின்ன பட்ஜெட் படம் தான், அவ்வளவு தொகை சாத்தியமில்லை என்றேன். இதையடுத்து படிப்படியாக குறைத்து 3 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டது.  

    பாரதிராஜா, ரஜினி

    அந்த சம்பளத்தில், இன்னும் அவருக்கு 500 ரூபாய் பாக்கி வைத்துள்ளேன். இன்றும் ரஜினி என்னிடம், அண்ணே அந்த 500 ரூபாய், என்று விளையாட்டாக கேட்பார். ரஜினியின் அரசியல் பயணம் குறித்து பேச விரும்பவில்லை. கடவுள்களுக்கு உள்ளது போல் அனைவரையும் ஈர்க்கும் சக்தி ரஜினியிடம் உள்ளது”. இவ்வாறு அவர் கூறினார்.
    பிரபல இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் பெண்கள் குறித்து தெரிவித்த கருத்துகள் சர்ச்சையான நிலையில் அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
    பிரபல இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் பெண்கள் குறித்த சர்ச்சை கருத்தை வெளியிட்டதாக எதிர்ப்புகள் கிளம்பின. போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. தமிழக மகளிர் ஆணையத்துக்கு ஆந்திர மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பி பாக்யராஜ் மீது நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தி உள்ளது. இந்த பிரச்சினை குறித்து பாக்யராஜ் விளக்கம் அளித்துள்ளார். 

    அவர் கூறியதாவது:- “பொள்ளாச்சி சம்பவத்தில் என்னை விட்டுவிடுங்கள் அண்ணா என்று பெண்கள் கதறுவதை வீடியோவில் பார்த்து ஒரு தந்தையாக நான் பதறினேன். இரவில் தூக்கம் வரவில்லை. பெண்கள் ஏன் இப்படி இடம் கொடுத்தார்கள். எச்சரிக்கையாக இருந்து இருக்கலாமே என்ற கவலையில் தான் சில கருத்துக்களை வெளியிட்டேன்.

    மற்றபடி பெண்களுக்கு நான் மதிப்பு கொடுப்பவன். எம்.ஜி.ஆர். போல் அனைத்து தாய்குலங்களையும் மதித்து வருகிறேன். நான் எடுத்த மவுன கீதங்கள், தூறல் நின்னுபோச்சு, முந்தானை முடிச்சு, தாவணிக்கனவுகள் உள்ளிட்ட அனைத்து படங்களிலுமே பெண்களை போற்றி இருந்தேன். அவர்களை தவறாக காட்டியதே இல்லை. பொள்ளாச்சி சம்பவத்தின் தாக்கத்தால் பெண்கள் ஜாக்கிரதையாக இருந்திருக்கலாமே என்றுதான் அப்படி பேசினேன். 

    பாக்யராஜ்

    வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. என் பேச்சுக்கு சில விமர்சனங்கள் இருந்தாலும் நிறைய பேர் சரியான கருத்தை சொன்னதாகவே எண்ணியுள்ளனர். முன்பு பெண்கள் தங்களுக்கென்று சில கட்டுப்பாடுகளை வைத்திருந்தார்கள். தற்போது செல்போன்கள் தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கி விட்டன. படிப்பு, வேலையில் ஆண்களுடன் பெண்கள் போட்டி போடலாம். கல்பனா சாவ்லா போல் விண்வெளியில் பறக்க முடியும். ஆனால் ஆண்கள் மது அருந்துகிறார்கள் என்று அவர்களும் செய்தால் மரியாதையை இழக்க நேரும்.

    பெண்களை அடிமையாக யாரும் நடத்தவில்லை. அவர்களுக்கு தேவையான சுதந்திரம் வழங்கப்பட்டு உள்ளது. மனைவியை தவிர அனைத்து பெண்களையும் தாயாகவும் சகோதரியாகவும் நினைக்கும்படித்தான் நமது கலாசாரம் கற்றுக்கொடுத்து இருக்கிறது. பெண்கள் நெருப்பு போல் இருந்து சுற்றி உள்ளவர்களிடம் இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.”

    இவ்வாறு பாக்யராஜ் கூறினார்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 64’ படத்தில் புதியதாக வில்லன் நடிகர் ஒருவர் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
    பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ‘தளபதி 64’ என்று அழைத்து வருகிறார்கள். இதில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். விஜய் சேதுபதி, சாந்தனு, அந்தோணி வர்கீஸ், ஆண்ட்ரியா, பிரகிதா, ரம்யா ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

    இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. ஓரிரு நாளில் முடித்து விட்டு படக்குழுவினர் சென்னை திரும்புகிறார்கள். அடுத்த கட்டமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறைச்சாலையில் விஜய், விஜய் சேதுபதி, அந்தோணி வர்கீஸ் ஆகியார் நடிக்கும் முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனர். 

    அர்ஜுன் தாஸ்

    நேற்று இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன்.டி.வி நிறுவனம் கைப்பற்றியது. இந்நிலையில், கைதி படத்தில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ் இப்படத்தில் இணைந்திருக்கிறார். இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். 
    சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் புதிய படத்தில் சூரி நடிக்க இருப்பது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
    தர்பார் படத்தை அடுத்து சிவா இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். கிராமத்து பின்னணியில் கமர்சியலான குடும்ப கதையாக உருவாகும் இந்த படத்தில் முதன்முறையாக ரஜினியுடன் சூரி காமெடி வேடத்தில் நடிக்கிறார். ரஜினியுடன் நடிப்பது பற்றி சூரி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-

    “காலையில் இயக்குநர் இரா.சரவணன் படம் நல்லபடியாக தொடங்கியிருக்கு. மாலையில் ரஜினி-சிவா இணையும் படத்தின் அறிவிப்பு. இரட்டிப்பு சந்தோ‌ஷத்தில் இருக்கேன்.

    சூப்பர் ஸ்டார் படத்தில் லைட் பிடித்துவிட மாட்டோமா என்று லைட்மேன் நினைப்பார். இப்படி அனைவருடைய கனவு மாதிரிதான் என்னுடைய கனவும் இருந்தது. எப்படியாவது ரஜினி சாரோடு ஒரு படம் நடிச்சுடணும்னு நினைச்சுட்டே இருந்தேன். என்றைக்காவது ஒரு நாள் போன் வந்திடாதா என்று ஏங்கியிருக்கேன்.

    ரஜினி - சூரி

    அந்த அழைப்பு இயக்குநர் சிவா கிட்ட இருந்து வந்துச்சு. எனக்கோ இரட்டிப்பு சந்தோ‌ஷம். ஏன்னா ரஜினி படம் மட்டுமல்ல, எனக்குப் பிடிச்ச இயக்குநர் சிவா படமும் கூட அவ்வளவு சந்தோ‌ஷம்.

    இப்படி அனைத்துமே ஒரே படத்துல அமையுறது கஷ்டம். எனக்கு அமைஞ்சுருக்கு என்றால் எவ்வளவு கொடுத்து வைச்சுருக்கேன்னு பாருங்க. ரஜினி சார் படத்துல நடிக்கப் போறேன்னு வீட்டுல ரொம்ப காட்டிக்கல. இப்போ தானே வந்துருக்கு. இனிமேல் தான் சொல்லணும். ஏன்னா 2 நாளுக்கு முன்னாடி தான் சைன் பண்ணினேன். ரொம்ப சந்தோ‌ஷம் அண்ணே” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
    ×