என் மலர்
சினிமா செய்திகள்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்துடன் சந்தானத்தின் டகால்டி திரைப்படம் ஒரு கனெக்ஷன் கொண்டுள்ளது.
சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘டகால்டி’. இப்படத்தை பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி திரைப்பட வினியோகஸ்தருமான, எஸ்.பி.செளத்ரி தனது 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் மிகுந்த பொருட் செலவில் தயாரித்து வருகிறார்.
சென்னை, திருக்கழுகுன்றம், திருச்செந்தூர், கடப்பா, மும்பை, புனோ, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. மேலும் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் அரண்மனையில் ரஜினியின் "தர்பார்" படப்பிடிப்பு நடைபெற்ற இடத்திலும் டகால்டி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

சந்தானத்திற்கு ஜோடியாக பெங்காலி திரை உலகின் முன்னணி நட்சத்திரமான ரித்திகா சென் ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் பிரம்மானந்தம், யோகி பாபு, ராதாரவி, ரேகா, ஹேமந்த் பாண்டே, மனோபாலா, நமோ நாராயணா, ஸ்டண்ட் சில்வா, சந்தானபாரதி ஆகியோர் நடித்துள்ளார்கள்.
ஷங்கரிடம் பல படங்களில் அசோசியேட்டாக பணிபுரிந்த விஜய் ஆனந்த் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குனராக இப்படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இம்மாதம் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான ஜீவா, அடுத்த வருடம் குடியரசு தினத்தை குறிவைத்து அவரது படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்.
குக்கூ, ஜோக்கர் படங்களை எடுத்து பிரபலமான ராஜூ முருகன் தற்போது இயக்கி இருக்கும் படம் ‘ஜிப்ஸி’. இப்படத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்துள்ளார். நாடோடிகள் வாழ்க்கை மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது.
தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்ற இப்படம் அடுத்த வருடம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 24ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீவாவுடன் சன்னி வைய்யன், லால் ஜோஸ், பாடகி சுசீலா ராமன், விக்ரம் சிங், கருணா பிரசாத் ஆகியோரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் லாவண்யா திரிபாதி, நான் நடிக்க மறுத்த படங்கள் ஹிட்டாகி விடுகிறது என்று கூறியிருக்கிறார்.
தமிழில் பிரம்மன் படத்தில் நடித்த லாவண்யா திரிபாதி நீண்ட இடை வெளிக்கு பிறகு மாயவன் படத்தில் நடித்தார். தெலுங்கிலும் வரும் வாய்ப்புகளை ஏற்று நடித்து வருகிறார். ஆனால் அவரது படங்கள் எதுவும் பெரிய வெற்றி அடையவில்லை. தேடி வந்த படத்தை ஏற்க மறுத்த நிலையில் அப்படம் வேறு ஒரு நடிகையின் நடிப்பில் உருவாகி சூப்பர் ஹிட்டாகி விடுகிறதாம்.
இதுபற்றி லாவண்யா விடம் கேட்டபோது, ’நான் ஏற்க மறுத்து வேண்டாம் என்ற படம் ஹிட்டாகி விட்டால் அதைக் கண்டு வருந்துவதில்லை. என்ன வேண்டும் என்று நான் நினைக்கிறேனோ அதுபோன்ற படங்கள் எனக்கு வருவதில்லை. எது பிடிக்கிறதோ அந்த படத்தில் மட்டும்தான் நடிக்கிறேன்.

வேறு நடிகை முன்னணிக்கு வந்துவிட்டாரே நாமும் அப்படி வரவேண்டும் என்ற எலி ஓட்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான கீதா கோவிந்தம் படத்தில் நடிக்க எனக்குதான் வாய்ப்பு வந்தது. அது எனக்கு பிடித்திருந்தது. ஆனால் வேறு சில காரணங்களால் அப்படத்தை என்னால் ஏற்க முடியவில்லை’ என்றார்.
இயக்குனர் கே.பாலச்சந்தர் பயன்படுத்திய பேனா தனக்கு பரிசாக கிடைத்தது குறித்து விவேக் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 1987-ம் ஆண்டு இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கிய ’மனதில் உறுதி வேண்டும்’ படத்தின் மூலம் நடிகர் விவேக் திரையுலகில் அறிமுகமானார். இதைதொடர்ந்து பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்த விவேக், தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். தொடர்ந்து திரைப்படங்களில் பிசியாக நடித்துவரும் விவேக், மரம் நடுதல் போன்ற சமூக பணிகளிலும் ஆர்வம்காட்டி வருகிறார்.

இதேபோல் சமூக வலைதளங்களிலும் விவேக், ஆக்டிவாக இருக்கிறார். விவேக்கிற்கு இயக்குனர் பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி விலைமதிப்பில்லா பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். இதுகுறித்து விவேக் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ”யாருடைய எழுத்துக்களைப் படித்தும் படமாகப் பார்த்தும் பரவசம் அடைந்து திரைத்துறைக்கு வந்தேனோ, அவர் எழுத உபயோகித்த பேனாவே எனக்கு கிடைத்தது... பரிசு அல்ல... வரம்! அன்போடு அளித்த புஷ்பா கந்தசாமி அவர்களுக்கு என் இதய நன்றிகள்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
யாருடைய எழுத்துக்களைப் படித்தும் படமாகப் பார்த்தும் பரவசம் அடைந்து திரைத்துறைக்கு வந்தேனோ, அவர் எழுத உபயோகித்த பேனாவே எனக்கு கிடைத்தது ... பரிசு அல்ல... வரம்! அன்போடு அளித்த புஷ்பா கந்தசாமி அவர்களுக்கு என் இதய நன்றிகள் pic.twitter.com/GRHcTAg8m9
— Vivekh actor (@Actor_Vivek) December 2, 2019
எம்.எல்.ஏ.வின் மகன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஒருவர் போலீசில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு படங்களில் நடித்துள்ளவர் சஞ்சனா. இவர் ஐதராபாத் மாதாபூரில் உள்ள ஒரு இரவு கேளிக்கை விடுதிக்கு சென்று இருந்தார். அந்த விடுதிக்கு தெலுங்கானா எம்.எல்.ஏ. நந்தீஸ்வர் கவுடு மகன் ஆஷிஷ் கவுடுவும் வந்திருந்தார். அங்கு பலரும் மது அருந்தி விட்டு நடனம் ஆடிக்கொண்டிருந்தனர்.
அப்போது சஞ்சனா கையைப்பிடித்து இழுத்து ஆஷிஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியான சஞ்சனா அவர் பிடியில் இருந்து தப்பி வெளியே ஓடினார். பின்னர் மாதாபூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று ஆஷிஷ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனால் கைதாகலாம் என்று பயந்து ஆஷிஷ் தலைமறைவாகி விட்டார். தொலைக்காட்சி ஒன்றுக்கு ஆஷிஷ் அளித்துள்ள போட்டியில், “எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிகள் நடக்கின்றன. இதற்காக எனது விரோதிகள் சஞ்சனாவை பகடை காயாக பயன்படுத்தி என்மீது போலீசில் பொய்யான புகார் அளிக்க வைத்துள்ளனர். போலீஸ் நிலையத்தில் விரைவில் நேரில் ஆஜராகி உண்மையை தெரிவிப்பேன்” என்றார்.
துரை செந்தில்குமார் இயக்கியுள்ள பட்டாஸ் படத்தில் தனுஷ் பாடியுள்ள “சில் புரோ” பாடல் யூடியூபில் டிரெண்டாகி வருகிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நாயகனாக நடித்து வரும் படம் 'பட்டாஸ்'. இப்படத்தை எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கி வரும் இப்படத்தில், தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சோடா நடித்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள, இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர்.

இப்படம் அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் சிங்கிள் டிராக் “சில் புரோ” எனும் பாடலை படக்குழு நேற்று வெளியிட்டது. தனுஷ் பாடியுள்ள இந்த பாடல் யூடியூபில் வைரலாகி வருகிறது. தற்போது டிரெண்டிங்கில் உள்ள இந்த பாடலை இதுவரை 1 மில்லியனுக்கு அதிகமானோர் பார்த்துள்ளனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தில் பிரபல நடிகர் நடிக்க மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். மூன்றுமுகம், பாண்டியன் படங்களை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிப்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படம் அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையில் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், தர்பார் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தது குறித்து பிரபல தெலுங்கு நடிகர் ரக்ஷித் ஷெட்டி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அவனே ஸ்ரீமன் நாராயணா படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் தர்பார் படத்தில் நடிக்க மறுத்ததாக அவர் கூறியுள்ளார்.

கன்னட படமான அவனே ஸ்ரீமன் நாராயணா அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ளது. வருகிற டிசம்பர் 27-ந் தேதி இப்படம் ரிலீசாக உள்ளது.
பாலிவுட்டில் சல்மான் கான்-பிரபுதேவா கூட்டணியில் உருவாகி இருக்கும் தபாங் 3 படத்தில் இடம்பெற்றுள்ள நடன காட்சி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கதாநாயகனாக நடித்து விட்டு டைரக்டரான பிரபுதேவா தற்போது இந்தியில் படங்கள் இயக்கி வருகிறார். ஏற்கனவே அக்ஷய்குமாரின் ரவுடி ரத்தோர், ஆக்ஷன் ஜாக்ஷன், சல்மான்கான் நடித்த வான்டட் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். மீண்டும் சல்மான்கானை வைத்து தபாங்-3 படத்தை தற்போது டைரக்டு செய்துள்ளார்.
இதன் முதல் பாகம் 2010-ல் வெளியாகி வசூல் குவித்தது. இந்த படம் தமிழில் சிம்பு நடிக்க ஒஸ்தி என்ற பெயரில் ரீமேக் ஆனது. தபாங் 2-ம் பாகம் 2012-ல் வெளியானது. தபாங் 3-ம் பாகம் வருகிற 20-ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவித்துள்ளனர். படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
அதில் சாதுக்கள் என்ற சாமியார்கள் மேற்கத்திய நடனம் ஆடுவது போன்ற காட்சிகள் உள்ளன. இந்து தெய்வங்களையும் காட்சிப்படுத்தி உள்ளனர். இதற்கு மராட்டியத்தை சேர்ந்த இந்து ஜன்ஜக்ருதி சமிதி என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து தணிக்கை குழுவுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

அதில், “தபாங்-3 படத்தின் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள பாடலில் சாமியார்களையும் இந்து கடவுள்களையும் அவதூறாக சித்தரித்து உள்ளனர். சாமியார்கள் மேற்கத்திய நடனம் ஆடுவதுபோன்ற காட்சிகளை வைத்துள்ளனர். இது மத உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது. அந்த காட்சியை நீக்க வேண்டும். படத்துக்கு வழங்கப்பட்டுள்ள தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து நடிகர் சல்மான் கான் கூறுகையில், விளம்பரம் தேடுவதற்காக இத்தகைய நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் எனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என கூறியுள்ளார்.
காதலனுடன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நயன்தாரா, தோழிகளுடன் கறிவிருந்து சாப்பிட்டதை ரசிகர்கள் சாடி வருகின்றனர்.
நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செல்வதையும் அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுதையும் வழக்கமாக வைத்துள்ளார். விக்னேஷ் சிவனும் டுவிட்டரில் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து காதல் மொழிகளை பதிவிட்டு வருகிறார். 4 வருடங்களாக இந்த காதல் நீடித்து வருகிறது.
இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்றும், திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்கிறார்கள் என்றும் வலைத்தளத்தில் ரசிகர்கள் பேசி வருகின்றனர். எதையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. மூக்குத்தி அம்மன் பக்தி படத்தில் நயன்தாரா அசைவ உணவுகளை சாப்பிடாமல் விரதம் இருந்து நடிக்க போவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவனுடன் அமெரிக்கா சென்றுள்ள நயன்தாரா அங்கு பெரிய மேசையில் கோழி கறி, மீன் வகைகளை பரப்பி வைத்து தோழிகளுடன் விருந்து சாப்பிடும் புகைப்படமும் சிக்கனை கையில் வைத்துக்கொண்டு குறும்புத்தனம் செய்யும் வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்கள் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
ஐதராபாத்தில் பெண் மருத்துவர் பிரியங்காவை பலாத்காரம் செய்து எரித்துக்கொன்ற சம்பவம் உங்களுக்கு தெரியுமா? அம்மன் வேடத்தில் நடிக்க நீங்கள் விரதம் இருப்பதாக சொன்னார்களே? என்றெல்லாம் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி அவரை சாடி வருகிறார்கள்.
Happy Thanksgiving 🦃 💃🏼With Some magical 🧙♀️ powers #ThanksgivingSpecialpic.twitter.com/aVtvUcNab0
— Nayanthara✨ (@NayantharaU) November 29, 2019
சென்னை திருவான்மியூரில் மனைவியை தாக்கியதாக பிரபல சீரியல் நடிகர் ஈஸ்வர் ரகுநாதனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை திருவான்மியூர் எல்.பி.சாலையை சேர்ந்தவர் ஈஸ்வர் ரகுநாதன் (வயது 34). இவர் ஏராளமான சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். இவரது மனைவி ஜெயஸ்ரீ (31) சின்னத்திரையில் நடன இயக்குனராக உள்ளார். மனைவி ஜெயஸ்ரீயின் சில சொத்து ஆவணங்களை வைத்து ஈஸ்வர் ரூ.30 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கடனை திருப்பி செலுத்த முடியாமல், ஈஸ்வர் அவதிப்பட்டு வந்துள்ளார். இதுபற்றி ஜெயஸ்ரீ, கணவர் ஈஸ்வரிடம் அடிக்கடி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. ஒருகட்டத்தில் மோதல் சண்டையாக மாறி ஜெயஸ்ரீயை ஈஸ்வர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஜெயஸ்ரீ தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜெயஸ்ரீ அடையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரை கைது செய்தனர். அவரது தாயார் சந்திராவும் (54) கைது செய்யப்பட்டார். ஈஸ்வர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். சந்திரா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகரிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய வழக்கில் மராட்டிய நடிகை சாரா ஸ்ரவான் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புனேவை சேர்ந்தவர் மராட்டிய நடிகை சாரா ஸ்ரவான். இவர் மராட்டிய நடிகர் சுபாஷ் யாதவுடன் சேர்ந்து படம் ஒன்று நடித்தார். அந்த படம் வெளியான பிறகு சுபாஷ் யாதவ் மீது சாரா ஸ்ரவான் பாலியல் புகார் அளித்தார். இதையடுத்து, சுபாஷ் யாதவ் தனது செயலுக்காக சாரா ஸ்ரவானிடம் மன்னிப்பு கேட்டு அவரது செல்போனுக்கு வீடியோ ஒன்றை அனுப்பினார்.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட சாரா ஸ்ரவான், ரூ.15 லட்சம் தராவிட்டால் அந்த வீடியோவை அம்பலமாக்கி விடுவேன் என சுபாஷ் யாதவை மிரட்டினார். இதற்கிடையில் சாரா ஸ்ரவானின் தோழியான மற்றொரு மராட்டிய நடிகை இந்த வீடியோவை இணையத்தில் கசியவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சுபாஷ் யாதவ், பணம் கேட்டு மிரட்டியதாக நடிகை மீது போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கில் கைது ஆகாமல் இருக்க சாரா ஸ்ரவான், புனே கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார். இந்த நிலையில் சாரா ஸ்ரவானின் முன்ஜாமீன் மனுவை புனே கோர்ட்டு ரத்து செய்தது. அதனை தொடர்ந்து, நேற்று மும்பையில் இருந்த சாரா ஸ்ரவானை புனே போலீசார் கைது செய்தனர்.
தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிட்டதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற பெயரில் விஜய் இயக்கி வருகிறார். ஜெயலலிதாவாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதற்காக பரதநாட்டியம் கற்றுக் கொண்ட கங்கனா, தமிழ் பேசவும் பயிற்சி பெற்றார்.
ஜெயலலிதா போன்ற உடல்வாகை பெற, அவர் வழக்கத்தைவிட அதிக அளவு சாப்பிட்டதாகவும், சில ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக்கொண்டதாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். “ஜெயலலிதா தனது வாழ்க்கையில் கடுமையான உடல் மாற்றத்தை எதிர்கொண்டார். பரத நாட்டிய நடன கலைஞராக வளர்ந்தவர் கண்ணாடி போன்ற பளபளப்பான உருவம் கொண்டிருந்தார்.

அரசியலுக்கு வந்தபின் ஏற்பட்ட விபத்தில் அதிக அளவில் ஸ்டெராய்டுகள் எடுக்க வேண்டியிருந்தது. அதையெல்லாம் சித்தரிக்க விரும்பியதால் நானும் ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார். இயக்குனர் விஜய், ஜெயலலிதா போன்ற தோற்றமே வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் இவற்றை செய்ததாக கூறி உள்ள கங்கனா, தலைவி படத்திற்காக மட்டும் 6 கிலோ எடை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.






