என் மலர்

  நீங்கள் தேடியது "Rakshit Shetty"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  `கீதா கோவிந்தம்' படத்தின் மூலம் பிரபலமான ராஷ்மிகா மந்தானாவுக்கு படவாய்ப்புகள் குவிந்து வருவதால் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், திருமணத்தை நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #RashmikaMandanna
  ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் பிரபலமான கன்னட நடிகை ராஷ்மிகா மந்தானா, விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்த கீதா கோவிந்தம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் வசூலும் ரூ.100 கோடியை தாண்டியுள்ளது.

  இதையடுத்து ராஷ்மிகாவின் மார்கெட்டும் எகிறத் தொடங்கியது. தற்போது அவருக்கு தெலுங்கு, கன்னடம் என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்த வண்ணமாக உள்ளது. இந்த நிலையில், நிச்சயதார்த்தம் முடிந்த ராஷ்மிகா தனது திருமணத்தை நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

  ராஷ்மிகாவும், கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியும் ‘கிரிக் பார்ட்டி’ படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து கடந்த ஆண்டு இவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்தது. பல மாதங்கள் ஆகியும் திருமணம் நடக்கவில்லை. திருமணத்தில் ராஷ்மிகா ஆர்வம் இல்லாமல் இருந்தார். இருவரும் பிரிந்து விட்டதாக கிசுகிசுக்கள் வந்தன. அதனை அவர்கள் மறுத்து வந்தார்கள்.  இந்த நிலையில் திருமணத்தை ராஷ்மிகா நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது நெருங்கிய உறவினர்கள் இதனை உறுதிப்படுத்தி உள்ளனர். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு ராஷ்மிகாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. நடிப்பில் அவர் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இதனால் ராஷ்மிகா - ரக்‌ஷித் ஷெட்டி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

  இதுவே திருமணத்தை ரத்து செய்ய காரணம் என்று கூறுகிறார்கள். இவர்களை சேர்த்து வைக்க இருவீட்டு உறவினர்களும் முயற்சி செய்தும் தோல்வியில் முடிந்து விட்டது என்கின்றனர். பெற்றோர்களுடன் கலந்து பேசி அவர்கள் சம்மதத்துடன் ராஷ்மிகா திருமணத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது. #RashmikaMandanna #GeethaGovindam

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் தேவரகொண்டா ஜோடியாக `கீதா கோவிந்தம்' படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தானாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், திருமணத்தை நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #RashmikaMandanna
  பிரபல கன்னட நடிகை ராஷ்மிகா மந்தானா. தற்போது தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ராஷ்மிகாவும், கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியும் ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து சமீபத்தில் இவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்தது. 

  ராஷ்மிகா தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக `கீதா கோவிந்தம்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. குறிப்பாக `இன்கெம் இன்கெம்' என்ற பாடல் அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. யூடியூப்பிலும் டிரெண்டிங்கில் உள்ளது.

  இந்த படத்தின் பாடல் வீடியோவில், காதல் காட்சியில் ராஷ்மிகா நெருக்கமாக நடித்து இருந்தார். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு இப்படியெல்லாம் நடிக்கலாமா? என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவரை விமர்சனம் செய்தனர்.  இந்த நிலையில் ராஷ்மிகா தனது திருமணத்தை நிறுத்தி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை. எனினும் ராஷ்மிகாவின் மானேஜர் ‘‘திருமணம் நின்று போனதாக சொல்வது வதந்திதான்’’ என்று மறுத்து இருக்கிறார். #RashmikaMandanna #GeethaGovindam

  ×