என் மலர்
நீங்கள் தேடியது "Filmfare Award"
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான திரைப்படம் "அமரன்." வசூலிலும், விமர்சன ரீதியிலும் பெரும் வரவேற்பை பெற்ற "அமரன்" திரைப்படம் சமீபத்தில் நடைபெற்ற 70வது ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் விழாவில் 8 பிரிவுகளின் கீழ் விருதுகளை குவித்துள்ளது.
ஃபிலம்ஃபேர் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசை ஆல்பம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி பாடகர், சிறந்த பின்னணி பாடகி உள்பட எட்டு பிரிவுகளின் கீழ் அமரன் திரைப்படம் விருது வழங்கப்பட்டுள்ளது.
70வது ஃபிலிம்ஃபேர் விழாவில் 8 விருதுகளை குவித்ததை ஒட்டி அமரன் படக்குழு சார்பில் சர்ப்ரைஸ் வீடியோ வெளயிடப்பட்டுள்ளது. இதில், "சினிமா மற்றும் போட்டிகளை கடந்த அமரன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
70வது ஃபிலிம்ஃபேர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (பிப். 21) கேரளா மாநிலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தென்னிந்திய திரையுலகின் சிறந்த திரைப்படங்கள், இயக்குநர், நடிகர் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ஃபிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது. இதில் அமரன் திரைப்படத்திற்காக முதன்மை கதாபாத்திரத்தில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் சிவகார்த்திகேயன் வென்றார்.
விருது வாங்கிய பிறகு பேசிய சிவகார்த்திகேயன், "13 ஆண்டுகளுக்கு முன் ஃபிலிம்ஃபேர் நிகழ்ச்சிக்கு தனுஷ் சாருடன் வந்திருந்தேன். ஜாலியாக சென்று வருவோம் என்று தனுஷ் என்னை அழைத்து வந்திருந்தார். அப்போது இரண்டாவது வரிசையில் இருக்கை வழங்கப்பட்டது. அங்கிருந்து முதல் வரிசையில் இடம் கிடைக்க எனக்கு 13 ஆண்டுகள் ஆனது.
அமரன் படத்திற்காக ஒப்பந்தம் செய்யும் போது, கமல் ஹாசன் சார் அலுவலகத்தில் நிறைய விருதுகள் இருந்தன. அப்ோது அவர், எனக்கு இது போதும் இனி இளம் திறமைசாலிகள் விருது பெற வேண்டும் என்று கூறினா்.
அப்போது எனக்கு அமரன் திரைப்படத்திற்காக இந்த விருது கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். அது தற்போது நடந்திருக்கிறது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் கதை தான் இந்த விருது கிடைக்க முக்கிய காரணம். என்னை எவ்வளவு அடித்து, தூக்கி வீசினாலும், தொடர்ந்து என்னை தூக்கி பிடிப்பது என் ரசிகர்கள் தான். உங்களுக்கு பிடித்த சிவா அண்ணா இன்று ஃபிலிம்ஃபேர் விருதுடன் நிற்கிறேன்," என்றார்.
- நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் சித்தா.
- 69 ஆம் ஆண்டு தென் சோபா பிலிம் ஃபேர் விருது வழங்கும் விழா ஐதராபாத்தில் நடைப்பெற்றது.
நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் சித்தா. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய அருண்குமார் இந்த படத்தை இயக்கி இருந்தார்.
இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்து இருந்தார். சித்தார்த்துடன் இணைந்து நிமிஷா சஜயன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படம் விமர்சனம் ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் உச்சத்தை தொட்டது. படத்தில் இடம் பெற்ற கண்கள் ஏதோ மற்றும் சந்தோஷ் நாரயணன் பாடிய உனக்கு தான் போன்ற பாடல் மிகப் பெரிய அளவில் மக்களால் ரசிக்கப்பட்டது.
நேற்று 69 ஆம் ஆண்டு தென் சோபா பிலிம் ஃபேர் விருது வழங்கும் விழா ஐதராபாத்தில் நடைப்பெற்றது. அதில் தென்னிந்திய நட்சத்திர நடிகர்கள் பங்கேற்றனர்.
சித்தா திரைப்படம் மொத்தம் 7 பில்ம் ஃபேர் விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர்- சித்தார்த் , சிறந்த நடிகை- நிமிஷா சஜயன், சிறந்த குணச்சித்திர நடிகை - அஞ்சலி நாயர், சிறந்த பின்னணி பாடகி - கார்த்திகா வைத்தியநாதன் , சிறந்த இசை - திபு நினன் தாமஸ் மற்றும் சந்தோஷ் நாரயணன், சிறந்த இயக்குனர் - எஸ்.யூ அருண் குமார்
இதனால் படக்குழுழுவினர் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். பிலிம் ஃபேர் விருதுடன் சித்தார்த் இருக்கும் அவரது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனால் படக்குழுவினருக்கு பலரும் பாராட்டி தெரிவித்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஹேமந்த் ராவ் இயக்கத்தில் ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் கன்னட திரைப்படமான சப்த சாகரதாச்சே எல்லோ.
- பிலிம் ஃபேர் சவுத் விருதுகளில் இப்படம் 6 விருதுகளை வென்றது குறிப்பிடதக்கது.
ஹேமந்த் ராவ் இயக்கத்தில் ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் கன்னட திரைப்படமான சப்த சாகரதாச்சே எல்லோ - சைட் ஏ மற்றும் பி கடந்த ஆண்டு வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
படத்தில் ரக்ஷித் ஷெட்டியுடன் ருக்மணி வசந்த மற்றும் சைத்ரா நடித்து இருந்தனர். கன்னடத்தில் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றதால் படத்தின் இரண்டாம் பாகத்தை தமிழ், தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட்டனர், தமிழில் ஏழு கடல் தாண்டி என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.
காதலுக்காக ஒருவன் எந்தளவு தியாகம் செய்ய முடியும், காதலிக்காக தன் வாழ்க்கையை அற்பணிக்கும் நாயகனின் கதையாக இது அமைந்தது. திரைப்படம் தற்பொழுது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் உள்ளது.
சமீபத்தில் நடந்த பிலில் ஃபேர் சவுத் விருதுகளில் இப்படம் 6 விருதுகளை வென்றது குறிப்பிடதக்கது.
சப்த சாகரதாச்சே எல்லோ படம் வென்ற விருதுகள்
சிறந்த நடிகர் - ரக்ஷித் ஷெட்டி, சிறந்த இயக்குனர் - ஹேமந்த் ராவ், சிறந்த நடிகர் - ருக்மணி வசந்த், சிறந்த பின்னணி பாடகர் - கபில் கபிலன், சிறந்த பின்னணி பாடகி - ஸ்ரீலட்சுமி பெல்மன்னு , சிறந்த இசையமைப்பாளர் - சரண் ராஜ் .
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






