என் மலர்
சினிமா

ரஜினி - சந்தானம்
தர்பார் படத்துடன் கனெக்ஷன் கொண்ட சந்தானத்தின் டகால்டி
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்துடன் சந்தானத்தின் டகால்டி திரைப்படம் ஒரு கனெக்ஷன் கொண்டுள்ளது.
சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘டகால்டி’. இப்படத்தை பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி திரைப்பட வினியோகஸ்தருமான, எஸ்.பி.செளத்ரி தனது 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் மிகுந்த பொருட் செலவில் தயாரித்து வருகிறார்.
சென்னை, திருக்கழுகுன்றம், திருச்செந்தூர், கடப்பா, மும்பை, புனோ, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. மேலும் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் அரண்மனையில் ரஜினியின் "தர்பார்" படப்பிடிப்பு நடைபெற்ற இடத்திலும் டகால்டி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

சந்தானத்திற்கு ஜோடியாக பெங்காலி திரை உலகின் முன்னணி நட்சத்திரமான ரித்திகா சென் ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் பிரம்மானந்தம், யோகி பாபு, ராதாரவி, ரேகா, ஹேமந்த் பாண்டே, மனோபாலா, நமோ நாராயணா, ஸ்டண்ட் சில்வா, சந்தானபாரதி ஆகியோர் நடித்துள்ளார்கள்.
ஷங்கரிடம் பல படங்களில் அசோசியேட்டாக பணிபுரிந்த விஜய் ஆனந்த் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குனராக இப்படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இம்மாதம் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
Next Story






