என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் புதிய படத்தில் சர்ச்சை நடிகர் ஒருவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    இஷக், கும்பளங்கி நைட்ஸ் உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் இளம் கதாநாயகன் ஷேன் நிகம். இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டானதால், அடுத்ததாக நடிக்க இருந்த வெயில், குர்பானி படங்களுக்கு அதிக சம்பளம் கேட்டுள்ளார். அதற்கு தயாரிப்பாளர் மறுப்பு தெரிவித்ததால், அப்படத்திற்காக நீண்ட வளர்த்த தனது தலைமுடியை வெட்டி அதிர்ச்சி அளித்தார். இதனால் அவர் நடித்துவரும் வெயில், குர்பானி படங்கள் கைவிடப்பட்டன. இந்த விவகாரம் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்நிலையில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படத்தில் ஷேன் நிகம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் நடிக்க உள்ள காட்சிகள் ரஷ்யாவில் படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார்.

    ஷேன் நிகம்

    ஆக்‌ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக இருக்கிறது. 2020-ம் ஆண்டு ஏப்ரல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு அமர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
    பாலிவுட்டில் உச்ச நடிகராக திகழும் அமிதாப் பச்சன், நடிப்பில் இருந்து ஓய்வு எடுத்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
    இந்தி நடிகர் அமிதாப்பச்சன் 1969-ல் ‘சாட்ஹிந்துஸ்தானி’ படத்தில் அறிமுகமாகி சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். 50 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் 190 படங்களுக்கு மேல் நடித்து உலக ரசிகர்களை தன்பால் இழுத்து வைத்துள்ளார். இந்தி நடிகை ஜெயபாரதியை திருமணம் செய்து கொண்டார். பல தேசிய விருதுகளை பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார்.

    அமிதாப்பச்சனுக்கு இப்போது 77 வயது ஆகிறது. அவருக்கு சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்படுவதும் பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் படப்பிடிப்புக்கு சென்று நடிப்பதுமாக இருக்கிறார். இப்போது 2 இந்தி படங்களில் நடித்து வருகிறார். பிரம்மஸ்திரா இந்தி படத்தின் படப்பிடிப்புக்காக நீண்ட பயணம் மேற்கொண்ட அவரை காண வழிநெடுக ரசிகர்கள் திரண்டு நின்றனர். அதை பார்த்து சந்தோஷப்பட்டார். 

    அமிதாப்பச்சன்

    இந்த நிலையில் நடித்தது போதும் இனிமேல் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன் என்று அமிதாப்பச்சன் அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “எனது உடல் ஓய்வு கேட்கிறது. மனது ஒன்றை யோசிக்கிறது. ஆனால் உடல் இன்னொன்றை செய்கிறது. அதனால் இனிமேல் நடிப்பில் இருந்து ஓய்வு எடுத்துக்கொள்ள முடிவு செய்து இருக்கிறேன்” என்றார்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் தலைப்பு குறித்த வதந்திக்கு நடிகர் சிவகார்த்திகேயன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
    பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, பிரகிதா, ரம்யா ஆகியோரும் உள்ளனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், அடுத்த கட்ட படப்பிடிப்பு டெல்லியிலும் நடந்தது. தற்போது விஜய்-விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் கர்நாடகாவில் உள்ள சிறையில் படமாக்கப்பட உள்ளன. 

    படத்தின் கதை, தலைப்பு, விஜய் கதாபாத்திரம் போன்ற பல்வேறு தகவல்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகின்றன. விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. அவரது இளமையான தோற்றம் கசிந்த பிறகு மாணவராக நடிக்கிறார் என்று பேசப்பட்டது. கமல்ஹாசனின் நம்மவர் படத்தின் ரீமேக்காக உருவாகிறது என்றும் பேசப்பட்டது. இந்த தகவல்கள் எதையும் படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. 

    விஜய், சிவகார்த்திகேயன்

    நீட் தேர்வுக்கு மாணவி அனிதா பலியான சம்பவத்தை மையமாக வைத்து படம் தயாராகிறது என்று இன்னொரு தகவல் வெளியானது. அதனால் இப்படத்துக்கு டாக்டர் என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கும் படத்துக்கு ‘டாக்டர்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தளபதி 64 படத்தின் தலைப்பு இது இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
    சந்தானம், யோகிபாபு, ரித்திகா சென் நடிப்பில் விஜய் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டகால்டி’ படத்தின் முன்னோட்டம்.
    சந்தானம் கதாதாயகனாக நடிக்க அவருடன் முதன் முதலில் யோகிபாபு இணைய, பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி திரைப்பட வினியோகஸ்தருமான, எஸ்.பி.செளத்ரி தமது 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கும் படம் 'டகால்டி'.

    சென்னை, திருக்கழுகுன்றம், திருச்செந்தூர், கடப்பா, மும்பை, புனே, ஜெய்ப்பூர் என பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. 

    சந்தானத்திற்கு ஜோடியாக பெங்காலி திரை உலகின் முன்னணி நட்சத்திரமான ரித்திகா சென் ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கு பட உலகின் பிரம்மானந்தம், ராதாரவி, ரேகா, ஹேமந்த் பாண்டே, மனோபாலா, நமோ நாராயணா, ஸ்டண்ட் சில்வா, சந்தானபாரதி இந்திப் பட உலகின் பிரபலமான நடிகர் தருண் அரோரா ஆகியோருடன் வெளிநாடுகளிலிருந்து வந்த மாடல் அழகிகளும் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

    விஜயநாராயணன் இசையையும், கார்கி பாடல்களையும், தீபக்குமார் பாரதி ஒளிப்பதிவையும், டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பையும், ஜாக்கி கலையையும், ஸ்டண்ட் சில்வா சண்டை பயிற்சியையும், ஷோபி நடன பயிற்சியையும், சுவாமிநாதன் தயாரிப்பு மேற்பார்வையையும், ரமேஷ்குமார் இணைத்தயாரிப்பையும் கவனித்துள்ளனர்.

    ஷங்கரிடம் பல படங்களில் அசோசியேட்டாக பணிபுரிந்த விஜய் ஆனந்த் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்.
    மௌனம் பேசியதே, ராம், பருத்தி வீரன் ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அமீர், அடுத்ததாக அரசியல்வாதியாக களமிறங்கி இருக்கிறார்.
    மௌனம் பேசியதே, ராம், பருத்தி வீரன் ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர் அமீர். இவர் யோகி படம் மூலம் நடிகராக பெயர் பெற்றார். பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வட சென்னை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமீர் நடித்திருந்தார்.

    நாற்காலி படத்தில் அமீர்

    தற்போது இவர் நாற்காலி என்னும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். வி.இசட்.துரை இயக்கும் இப்படத்தை மூன் பிக்சர்ஸ் ஆதம் பாவா தயாரிக்கிறார். அரசியல்வாதியாக அமீர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. மேலும் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
    எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார், மடோனா நடிப்பில் உருவாகியிருக்கும் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
    ‘சுந்தரபாண்டியன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். சசிகுமார் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, இனிகோ பிரபாகரன், சௌந்தரராஜா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். லட்சுமி மேனன் கதாநாயகியாக நடித்திருந்தார். 2012ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. 

    இப்படத்தை தொடர்ந்து, இது கதிர்வேலன் காதல், சத்ரியன் ஆகிய படங்களை இயக்கி இருந்தார். தற்போது ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தை இயக்கி வருகிறார். சசிகுமார் - மடோனா செபஸ்டியன் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    கொம்பு வச்ச சிங்கம்டா

    சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன்.டி.வி. நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
    இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, ஜாம்பி ஆகிய படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த், தற்போது தீவிர சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
    இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, ஜாம்பி ஆகிய படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமானார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இருக்கும் இவர், அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 



    இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு வரவேற்பும், எதிர்ப்பும் இருக்கும். ஆனால், இவர் தற்போது சண்டைப் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் வரவேற்கப்பட்டு வருகிறது.
    கேரள மாநிலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஓவியர் பிரணவ், சென்னையில் ரஜினியை சந்தித்து அவரை நெகிழ வைத்திருக்கிறார்.
    கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரணவ். பிறவியிலேயே கைகளை இழந்த பிரணவ், தன்னம்பிக்கையால் தனது வாழ்க்கையில் வீறு நடைபோட்டு வருகிறார். பட்டப்படிப்பை முடித்த இவர், ஓவியம் வரைவதிலும் சிறந்து விளங்கி வருகிறார் பிரணவ்.

    சமீபத்தில் கேரளப் பேரிடர் நிவாரண நிதிக்காக, தனது பங்கை முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்துக் கொடுத்தார் பிரணவ். அப்போது, பினராயி விஜயனுடன், பிரணவ் எடுத்த செல்பி நாடு முழுவதும் வைரலானது. 

    ரஜினி - பிரணவ்

    தற்போது போயஸ் கார்டன் இல்லத்தில் மாலை 5.30 மணியளவில் தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் ரஜினியை நேரில் சந்தித்திருக்கிறார் பிரணவ். அவரிடம் எதிர்கால லட்சியம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ரஜினி கேட்டறிந்திந்திருக்கிறார். இதையெல்லாம் கேட்டுக்கொண்ட ரஜினி, `எல்லாமே நல்லபடியா நடக்கும் என்று கூறியிருக்கிறார். அப்போது ரஜினிக்காக தான் வரைந்து வைத்திருந்த ஓவியத்தை பிரணவ் வழங்கினார். சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. பின்னர் ரஜினியுடன் செல்பி ஒன்றையும் பிரணவ் எடுத்துக் கொண்டார்.

    ரஜினி - பிரணவ்
    சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘தனுசு ராசி நேயர்களே’. இந்த படத்தை இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார். 

    ஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இந்த படம் ரொமாண்டிக் காமெடி கதையாக உருவாகி இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. டிசம்பர் 6ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யூ/ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள்.

    தனுசு ராசி நேயர்களே

    இதில் ரெபா மோனிகா ஜான், ரியா சக்கரவர்த்தி ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 
    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹீரோ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், டாக்டராக இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
    சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது ஹீரோ திரைப்படம் உருவாகியுள்ளது. பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    இந்நிலையில், கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து படம் தயாரிக்க இருக்கிறார்கள். இந்த புதிய படத்தை கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் இயக்க இருக்கிறார். அனிருத் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 6ம் தேதி தொடங்க இருக்கிறது.



    கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரடொக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்துடன் சந்தானத்தின் டகால்டி திரைப்படம் ஒரு கனெக்‌ஷன் கொண்டுள்ளது.
    சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘டகால்டி’. இப்படத்தை பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி திரைப்பட வினியோகஸ்தருமான, எஸ்.பி.செளத்ரி தனது 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் மிகுந்த பொருட் செலவில் தயாரித்து வருகிறார்.

    சென்னை, திருக்கழுகுன்றம், திருச்செந்தூர், கடப்பா, மும்பை, புனோ, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. மேலும் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் அரண்மனையில் ரஜினியின் "தர்பார்" படப்பிடிப்பு நடைபெற்ற இடத்திலும் டகால்டி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

    டகால்டி படத்தில் சந்தானம்

    சந்தானத்திற்கு ஜோடியாக பெங்காலி திரை உலகின் முன்னணி நட்சத்திரமான ரித்திகா சென் ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் பிரம்மானந்தம், யோகி பாபு, ராதாரவி, ரேகா, ஹேமந்த் பாண்டே, மனோபாலா, நமோ நாராயணா, ஸ்டண்ட் சில்வா, சந்தானபாரதி ஆகியோர் நடித்துள்ளார்கள். 

    ஷங்கரிடம் பல படங்களில் அசோசியேட்டாக பணிபுரிந்த விஜய் ஆனந்த் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குனராக இப்படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இம்மாதம் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

    தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான ஜீவா, அடுத்த வருடம் குடியரசு தினத்தை குறிவைத்து அவரது படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்.
    குக்கூ, ஜோக்கர் படங்களை எடுத்து பிரபலமான ராஜூ முருகன் தற்போது இயக்கி இருக்கும் படம் ‘ஜிப்ஸி’. இப்படத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்துள்ளார். நாடோடிகள் வாழ்க்கை மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது. 

    தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்ற இப்படம் அடுத்த வருடம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 24ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    ஜிப்ஸி

    சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீவாவுடன் சன்னி வைய்யன், லால் ஜோஸ், பாடகி சுசீலா ராமன், விக்ரம் சிங், கருணா பிரசாத் ஆகியோரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
    ×