என் மலர்
சினிமா செய்திகள்
- நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
- தற்போது ராஷ்மிகா புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தெலுங்கில் வெளியான புஷ்பா படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்த நடிகை ராஷ்மிகா, தமிழில் கார்த்தியின் சுல்தான் மற்றும் விஜய்யின் வாரிசு படத்தில் நடித்துள்ளார். மேலும் கன்னடம், இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும், இந்தியில் அனிமல் படத்திலும் நடித்து வருகிறார்.

ராஷ்மிகா மந்தனா
இந்நிலையில் ராஷ்மிகா நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அறிமுக இயக்குனர் சாந்தரூபன் இயக்கவிருக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு 'ரெயின்போ' என்று பெயரிடப்பட்டுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெயின்போ
இப்படத்தின் கதாநாயகனாக சமந்தாவின் சாகுந்தலம் படத்தில் நடித்துள்ள நடிகர் தேவ் மோகன் நடிக்கவுள்ளார். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் 7ம் தேதி தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Today marks the start of a colourful journey. Join us as we bring the world of #Rainbow to life! ? @iamRashmika @ActorDevMohan @bhaskaran_dop @justin_tunes @thamizh_editor #Banglan @sivadigitalart @Shantharuban87 @prabhu_sr#RainbowFilm #RainbowPooja pic.twitter.com/puANA99qWM
— DreamWarriorPictures (@DreamWarriorpic) April 3, 2023
- நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
- நயன்தாரா வாடகை தாய் மூலம் அக்டோபர் மாதம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் நயன்தாரா வாடகை தாய் மூலம் அக்டோபர் மாதம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டார். இதில் சட்ட ரீதியாக விதிகள் மீறப்பட்டுள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து சட்டத்திற்கு உட்பட்டுத்தான் இருவரும் செயல்பட்டுள்ளனர் என அரசு தரப்பில் அறிக்கை வெளியானது.

இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை குழந்தைகளின் பெயரை சமூக வலைத்தளத்தின் வாயிலாக விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார். அதன்படி உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, N என்பது நயன்தாராவை குறிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இருவரும் குழந்தைகளுடன் இருக்கும் சில புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.
Dear friends ❤️
— VigneshShivN (@VigneshShivN) April 3, 2023
We have named our blessings , our babies like this ❤️
#Uyir RudroNeel N Shivan
உயிர் ருத்ரோநீல் N சிவன்#Ulag Daiwik N Shivan
உலக் தெய்விக் N சிவன்
N stands for their best mother in the world #Nayanthara ❤️
Happiest & proudest moments of life #Blessed pic.twitter.com/r4RHp0wC8f
- தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ரேயா.
- இவர் திருப்பதியில் கோவிலுக்கு தனது குடும்பத்தினருடன் சென்றார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ஸ்ரேயா, திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு தனது குடும்பத்தினருடன் திருமலைக்கு சென்றார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். அதன்பின்னர் திருமலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் நடிகை ஸ்ரேயா தங்கினார்.
வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் தனது குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசனம் செய்த, பின்னர் கோவிலில் உள்ள ரங்கநாயக்கர் மண்டபத்தில் அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதங்கள் வழங்கினர். கோவிலில் இருந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது, குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த மாதம் 12-ந் தேதி நான் நடித்த திரைப்படம் வெளியாகிறது. அந்தப் படம் நன்றாக ஓடி வசூலை குவிக்க வேண்டும் என ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டதாக தெரிவித்தார்.
- அருள்நிதி தற்போது திருவின் குரல் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
- இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகவுள்ளது.
வம்சம், மௌனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13 உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் அருள்நிதி. இவர் தற்போது தமிழில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், வடசென்னை, எந்திரன் 2.0, டான் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'திருவின் குரல்' படத்தில் நடித்து வருகிறார்.

திருவின் குரல்
இப்படத்தை ஹரிஷ் பிரபு இயக்கவுள்ளார். மேலும் ஆத்மிகா கதாநாயகியாக நடிக்க பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். விக்ரம் வேதா படத்தின் மூலம் பிரபலமடைந்த சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

திருவின் குரல்
இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகும் எனவும் இப்படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அருள்நிதி தற்போது 'டிமான்ட்டி காலனி - 2' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
The Awaited Trailer of #ThiruvinKural ? ⚕️is Releasing TODAY at 3PM!
— Lyca Productions (@LycaProductions) April 3, 2023
In cinemas from 14th April.
? @arulnithitamil @offBharathiraja & @im_aathmika
? @harishprabhu_ns
? @SamCSmusic
? @sintopoduthas
✂? @thecutsmaker
? @thinkmusicindia
? @gkmtamilkumaran pic.twitter.com/fPYtLjpLqv
- நீடா அம்பானியின் கலாசார மைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆலியா பட் மற்றும் ராஷ்மிகா மந்தனா நாட்டு நாட்டு பாடலுக்கு கலக்கல் உடையில் நடனம் ஆடினர்.
- இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
மும்பையில் நீடா அம்பானியின் கலாசார மைய நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில், ஹாலிவுட், பாலிவுட் திரைப்பட நடிகர், நடிகைகளுக்கும் அழைப்பு விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஹாலிவுட்டை சேர்ந்த டாம் ஹாலண்ட், ஜெண்டயா, கீகி ஹதீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பாலிவுட் நடிகர், நடிகைகளான ஷாருக்கான், வருண் தவான், ரன்வீர் சிங், அலியா பட், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

ஆலியா பட்-ராஷ்மிகா மந்தனா
இந்நிகழ்ச்சியில், நடிகர்கள் ஷாருக்கான் உலகம் முழுவதும் வசூலில் ஆயிரம் கோடிக்கும் கூடுதலாக சாதனை படைத்த பதான் படத்தில் இடம் பெற்ற ஜூமி ஜோ பதான் பாடலுக்கு மேடையில் நடனம் ஆடினார். அவருடன் நடிகர்கள் வருண் தவான் மற்றும் ரன்வீர் சிங்கும் கலந்து கொண்டனர். இவர்கள் நடனமாடும் இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

ஆலியா பட்-ராஷ்மிகா மந்தனா
இதேபோன்று, ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம்சரண் நடிப்பில் வெளிவந்து, ஆஸ்கார் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கு நடிகைகள் ஆலியா பட் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடனம் ஆடும் வீடியோ பலரையும் கவந்து வருகிறது. ஆலியா பட்-ராஷ்மிகா இருவரும் குழுவினருடன் சேர்ந்து நாட்டு நாட்டு பாடலுக்கு அதிரடியான ஸ்டெப்புகளை போட்டு நடனம் ஆடிய வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது.
- சூரி-விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 31ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் விடுதலை.
- இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இயக்குனர் வெற்றிமாறன் தங்க காசு வழங்கி உள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இப்பட்ம் வெளியான 2 நாட்களில் ரூ.8 கோடிக்கு மேல் வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ள இயக்குனர் வெற்றிமாறன், பட குழுவினர் அனைவருக்கும் தங்க காசு வழங்கியுள்ளார். இதனால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் லியோ.
- இப்படத்தின் புதிய அப்டேட்டை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கொடுத்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

லியோ
இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், 'லியோ' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. காஷ்மீர் படப்பிடிப்பு குறித்து தொழில்நுட்ப பணியாளர்கள் தங்களது கருத்துகளை பகிரும் அந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலானது.

லியோ
இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படம் குறித்த அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷிடம் 'லியோ' படம் குறித்த அப்டேட் வழங்குமாறு கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், 'லியோ' படத்தின் படப்பிடிப்பு அடுத்த 60 நாட்களில் முடிவடைந்து விடும் என்றும், இந்த படம் மிகச்சிறப்பான ஆக்ஷன் படமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
- விஜய் ஆண்டனி நடித்துள்ள தமிழரசன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
- இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான நான், சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக 2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் இவர் நடித்த பிச்சைக்காரன் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

தமிழரசன்
தற்போது பிசியான நடிகராக வலம்வரும் விஜய் ஆண்டனி அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், பிச்சைக்காரன் 2, கொலை, மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். விஜய் ஆண்டனியின் தமிழரசன் திரைப்படத்தை இயக்குனர் பாபு யோகிஸ்வரன் இயக்கி உள்ளார். இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ராமயா நம்பீசன் நடித்துள்ளார்.
மேலும் மலையாள நடிகர் சுரேஷ் கோபி, பாலிவுட் நடிகர் சோனு சூட், யோகி பாபு, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழரசன்
இந்நிலையில் விஜய் ஆண்டனியின் 'தமிழரசன்' நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய்.
- இவரின் ரசிகர்கள் தற்போது விஜய் குறித்து சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் விஜய். அதன்பின்னர் ரசிகன், தேவா, ராஜாவின் பார்வையிலே, பூவே உனக்காக, லவ் டுடே, ஒன்ஸ் மோர், காதலுக்கு மரியாதை, குஷி, ஃப்ரண்ட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய்
இந்நிலையில் நடிகர் விஜய், சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் தளபதிவிஜய் என்ற ஹாஷ்டாக்குடன் பகிர்ந்து வருகின்றனர். இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான படம் விடுதலை.
- விடுதலை படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சூரி, விடுதலை படம் குறித்தும் இளையராஜாவுடன் பணிபுரிந்தது குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, இளையராஜா சாரை நான் சினிமாவுக்கு வந்ததிலிருந்து நேரில் பார்த்ததே கிடையாது. அந்த வாய்ப்பே எனக்கு கிடைக்கவில்லை. விடுதலை படத்தின் மூலம் தான் அவரை அருகில் அமர்ந்து பார்க்க வாய்ப்பு கிடைத்தது. விடுதலை படத்தின் காட்டு மல்லி பாடல் தான் முதன் முதலில் இளையராஜா சார் புதிய ஸ்டியோவில் பதிவு செய்யப்பட்டது.

அந்த பாடல் பதிவு செய்யும் பொழுது இளையராஜா சார் என்னை பார்த்து உறைந்துவிட்டார். எனக்கு ஒரு மாதிரி பதட்டமாகிவிட்டது. எனது 45 ஆண்டு கால அனுபவத்தில் என்னுடைய கதாநாயகனை எதிரே அமரவைத்து டியூன் போட்டு காட்டியதே இல்லை. அப்படி ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை நீங்க முதல் படத்திலே அமர்ந்திருக்கிறீர்கள் என்று என்னிடம் சொன்னவுடன் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இது எல்லாம் என்னுடைய தாய் தந்தை செய்த பாக்கியம் என்று நினைக்கிறேன். இவ்வாறு நடிகர் சூரி பேசினார்.
- ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி இணையத்தி வைரலாகி வருகிறது.
நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் தற்போது நடித்திருக்கும் படம் ருத்ரன். இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. மேலும் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் 'ருத்ரன்' படத்தின் மூன்றாவது பாடலான உன்னோடு வாழனும் பாடல் ஏப்ரல் 01ம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அறிவித்தபடி இப்படத்தின் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடகர் சித்ஸ்ரீராம் குரலில் கபிலன் வரிகளில் வெளியான இப்பாடல் இணையத்தில் பலராலும் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.
ருத்ரன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘டாடா’.
- இப்படம் வெற்றிகரமாக 50 நாட்களை கடந்து சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்த திரைப்படம் 'டாடா'. இதில் பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

டாடா திரைப்படம் இப்போதும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படம் 50 நாட்களை கடந்துள்ளதை நடிகை அபர்ணா தாஸ் விமான நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.






