என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'தசரா'.
    • இப்படத்தில் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தசரா'. இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூலை குவித்து வருகிறது.


    கீர்த்தி பதிவு

    இந்நிலையில், 'தசரா' படத்தில் இடம்பெற்ற சில்க் பாரில் நடிகை சில்க் ஸ்மிதா உருவம் வரையப்பட்டு இருக்கும் புகைப்படத்திற்கு கீழே நின்று அவரை போல போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள கீர்த்தி சுரேஷ், " செட் அகற்றப்படுவதற்கு முன்பாக ஓடிச் சென்று இந்த ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொண்டேன். உங்கள் அனைவருக்கும் தெரியும் எனக்கும் சில்க் பாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.


    • ராஜஸ்தான் அணி தனது முதல் போட்டியில் ஐதராபாத் அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
    • அடுத்த போட்டியில் பஞ்சாப் அணியை வரும் 5-ம் தேதி எதிர்கொள்கிறது.

    ஐதராபாத்:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 4-வது லீக்கில் ஐதராபாத் சன்ரைசர்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து ராஜஸ்தான் அணி வரும் 5-ம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிராக மோதுகிறது.

    இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் விமானத்தில் உட்கார்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை படத்தை பார்த்துக் கொண்டிருந்தார். இதனை ராஜஸ்தான் அணி தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் யாரு தலைவர் ரசிகர் என்று தலைப்பிட்டுள்ளது.

    வீடியோ பின்னணியில் ரஜினி படையப்பா பட தீம் மியூசிக் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கி வரும் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’.
    • இந்த படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார்.

    'டிக்கிலோனா' படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், மேகா ஆகாஷ், ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வடக்குப்பட்டி ராமசாமி போஸ்டர்

    பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 63 நாட்கள் ஓய்வின்றி நடைபெற்று வந்த 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதனை இயக்குனர் கார்த்திக் யோகி தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    • மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘மார்கழி திங்கள்’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கப்படவுள்ளது.

    பாராதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'மார்கழி திங்கள்'. இப்படத்தில் இளையராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.


    பாரதிராஜா -மனோஜ் பாரதிராஜா

    இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் தொடங்க உள்ளது. மேலும் படப்பிடிப்பை தேனி மற்றும் மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், 'மார்க்கழி திங்கள்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.


    மார்கழி திங்கள் முதல் தோற்ற போஸ்டர்

    அதன்படி, இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். பாரதிராஜா வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் -2 படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
    • தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட்டை இயக்குனர் ஷங்கர் கொடுத்துள்ளார்.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


    தைவானில் ஷங்கர்

    இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது இந்தியன் -2 படப்பிடிப்பு தைவான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதனை இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.


    • நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘தசரா’.
    • இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தசரா'. இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.


    தசரா

    மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூலை குவித்து வருகிறது.


    தசரா போஸ்டர்

    இந்நிலையில், 'தசரா' திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் உலக அளவில் ரூ.87 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    • இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'திருவின் குரல்'.
    • இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    வம்சம், மௌனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13 உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் அருள்நிதி. இவர் தற்போது தமிழில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், வடசென்னை, எந்திரன் 2.0, டான் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'திருவின் குரல்' படத்தில் நடித்து வருகிறார்.


    இப்படத்தை ஹரிஷ் பிரபு இயக்கவுள்ளார். மேலும் ஆத்மிகா கதாநாயகியாக நடிக்க பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். விக்ரம் வேதா படத்தின் மூலம் பிரபலமடைந்த சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.


    இதையடுத்து இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது அதன்படி, இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 'திருவின் குரல்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • சூரி-விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 31ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் விடுதலை.
    • இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை-1'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.


    விடுதலை

    விடுதலை

    இப்படம் வெளியான 2 நாட்களில் ரூ.8 கோடிக்கு மேல் வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விடுதலை படத்தின் மேக்கிங் வீடியோ காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கிள் டேக் ரயில் காட்சியின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    • இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஆதிபுருஷ்’.
    • இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.


    ஆதிபுருஷ்

    தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், 'ஆதிபுருஷ்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.


    ஆதிபுருஷ் போஸ்டர்

    இதில் ஸ்ரீ ராமராக பிரபாஸும் சீதா தேவியாக கிருத்தி சனோனும் லக்ஷ்மணனாக சன்னி சிங்கும் அனுமனாக தேவதத்தா நாகேவும் தோன்றியுள்ள இந்த போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

    • விஜய், சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் நேற்று அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
    • விஜய் இன்ஸ்டாகிராமில் அதிவேகமாக 1 மில்லியன் ஃபாலோவர்களை ஈர்த்த பிரபலங்களில் விஜய் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் விஜய். அதன்பின்னர் ரசிகன், தேவா, ராஜாவின் பார்வையிலே, பூவே உனக்காக, லவ் டுடே, ஒன்ஸ் மோர், காதலுக்கு மரியாதை, குஷி, ஃப்ரண்ட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.


    விஜய்

    விஜய்

    இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று விஜய், சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடினர்.


    விஜய்

    விஜய்

    இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அதிவேகமாக 1 மில்லியன் ஃபாலோவர்களை ஈர்த்த பிரபலங்களில் விஜய் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முதலிடத்தில் பிடிஎஸ் இசைக்குழுவை சேர்ந்த வி 53 நிமிடத்திலும், இரண்டாவது இடத்தில் நடிகை ஏஞ்சலினா ஜோலி 59 நிமிடத்திலும், மூன்றாவது இடத்தில் நடிகர் விஜய் 99 நிமிடத்திலும் ரசிகர்கள் பின்தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    • இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் 'ஜெய் பீம்' மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‘குட் நைட்’.
    • இப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    'ஜெய் பீம்' மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் 'குட் நைட்'. இப்படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் நாயகியாக மீதா ரகுநாத் நடித்துள்ளார். இதில் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    குட் நைட்
    குட் நைட்

    ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரித்துள்ளனர்.


    குட் நைட் பட பாடல் அறிவிப்பு
    குட் நைட் பட பாடல் அறிவிப்பு

    இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் பாடலை இசையமைப்பாளர் யுவன் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘பையா’.
    • இந்த படத்தில் கார்த்தி மற்றும் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பையா'. லிங்குசாமி இயக்கத்தில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் தற்போது வரை ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளது. கார்த்தியின் சினிமா பயணத்தில் இப்படம் ஒரு மைல்கல்லாக அமைந்தது.


    பையா

    'பையா' திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாகத்தை விரைவில் இயக்குனர் லிங்குசாமி இயக்கவுள்ளதாகவும் இதில் கார்த்திக்கு பதில் ஆர்யா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், 'பையா 2' படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.


    பையா

    அதன்படி, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லிங்குசாமி 'பையா2' திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கப்படவுள்ளதாக கூறினார். இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    ×