என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் '1947- ஆகஸ்ட் 16'.
    • இந்த படத்தில் கவுதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இயக்குனர் என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் '1947- ஆகஸ்ட் 16'. இப்படத்தில் கவுதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக அறிமுக நாயகி ரோவதி நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தை ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி இவர்களுடன் இணைந்து ஏ.ஆர் முருகதாஸ் தயாரித்துள்ளார்.

    1947- ஆகஸ்ட் 16 போஸ்டர்

    இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், '1947- ஆகஸ்ட் 16' படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்தில் கலையரசன், கடைக்காரன் என்ற கதாபாத்திரத்திலும் நீலிமா ராணி சின்ன வயது ஹீரோவின் அம்மாவாகவும் டேவிட், கரிகாலன் என்ற கதாபாத்திரத்திலும் போஸ் வெங்கட், பசுபதி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இதனை படக்குழு போஸ்டர்களை வெளியிட்டு அறிவித்துள்ளது.

    1947- ஆகஸ்ட் 16 போஸ்டர்

    இப்படம் உலக அளவில் ஏப்ரல் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


    • இயக்குனர் சுகன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பிதா’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 7-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

    இயக்குனர் சுகன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'பிதா'. இப்படத்தின் மூலம் சுகன் இயக்குனராக அறிமுகமாகிறார். அனு, ஆதேஷ் பாலா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் அருள்மணி, நகைச்சுவை நடிகர் சாம்ஸ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    விச்சூர் எஸ் சங்கர் தயாரிக்கும் இப்படத்திற்கு நரேஷ் இசையமைக்கிறார். இளையராஜா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கவுள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பு முடிந்த தினமே, டப்பிங், எடிட்டிங், ரீ-ரெக்கார்டிங், பின்னணி இசை போன்ற அனைத்து வேலைகளையும் அன்றே முடித்து விட்டு மறுநாள் 8-ம் தேதி படத்தை திரையிட்டு சாதனை படைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.


    இப்படத்தின் படப்பிடிப்பு ஐந்து இடங்களில் நடைபெறவுள்ளதாகவும் முதல் நாள் காலை துவங்கும் படப்பிடிப்பு நள்ளிரவு வரை தொடரும் எனவும் படத்தில் 80 சதவிகிதம் நைட் எஃபெக்ட் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் குறித்து இயக்குனர் சுகன் கூறியதாவது, "இயக்குனராக வருகிறோம் , ஏதாவது புதுமையாக இருக்க வேண்டும், ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்க வேண்டும், யார் இந்த சுகன் என்று படவுலகம் திரும்பி பார்க்க வேண்டும்… என்ற ஒரே ஒரு சின்ன ஆசை தான்" என்று கூறினார்.

    இதுவரை எட்டு குறும்படங்களை இயக்கியுள்ள இயக்குனர் சுகன். பிரபல நடன இயக்குனர் கலாவிடம் ஆறு ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றியுள்ளார். மேலும், உளவுத்துறை, ஜனனம், கலவரம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ரமேஷ் செல்வனிடம் உதவி- துணை இணை- இயக்குனராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் நானி நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் 'தசரா'.
    • இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தசரா'. இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    தசரா போஸ்டர்

    பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூலை குவித்து வருகிறது. அதன்படி, 'தசரா' திரைப்படம் வெளியான ஐந்து நாட்களில் ரூ.92 கோடியை வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாடகி ரமணியம்மாள் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
    • இவர் வயது மூப்பு காரணமாக திடீரென காலமானார்.

    பிரபல பின்னணி பாடகியான ரமணியம்மாள் பரத் நடிப்பில் 2004-ஆம் ஆண்டு வெளியான காதல் படத்தில் 'தண்டட்டி கருப்பாயி' பாடலை பாடியதன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். தொடர்ந்து காத்தவராயன், ஹரிதாஸ், சண்டக்கோழி -2, காப்பான் போன்ற பல படங்களில் பாடியுள்ளார்.

    இவர் தனியார் தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். இவரை ராக் ஸ்டார் ரமணியம்மாள் என அனைவரும் அன்போடு அழைத்து வந்தனர்.மேலும், இந்த நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்நிலையில், ரமணியம்மாள் (69) வயது மூப்பு காரணமாக திடீரென காலமானார். இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

    • தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ் பல படங்களை இயக்கியுள்ளார்.
    • இவர் தயாரிப்பில் உருவாகியுள்ள '1947- ஆகஸ்ட் 16' படம் வருகிற ஏப்ரல் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின்னர் விஜயகாந்த்தின் ரமணா, சூர்யாவின் கஜினி, 7ஆம் அறிவு, விஜய்யின் துப்பாக்கி, கத்தி, சர்கார், ரஜினியின் தர்பார் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

    ஏ.ஆர்.முருகதாஸ்

    இதற்கிடையில் 'ஏ.ஆர் முருகதாஸ் ப்ரொடைக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் முருகதாஸ் நடத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி', 'மான் கராத்தே', 'ரங்கூன்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

    தற்போது ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் '1947- ஆகஸ்ட் 16'. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குனராக பணியாற்றிய என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார். அறிமுக நாயகி ரேவதி நடிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.

    ஏ.ஆர்.முருகதாஸ் -கௌதம் கார்த்திக்

    இதையடுத்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் கமலை வைத்து படம் எடுக்க வேண்டும் என்றால் உங்களிடம் சப்ஜெக்ட் இருக்கிறதா..? என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர் கூறியதாவது, "பொதுவாகவே கமல் என்றால் எனக்கு அப்போது இருந்தே சிறிய பயம் இருக்கும். ஆனால், எல்லா இயக்குனருக்கும் கமலை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

    ஏனென்றால் கமல் சாரை வைத்து படம் இயக்கும் இயக்குனர்களுக்கு அந்த படம் தான் அவர்களது கேரியரில் மிகச்சிறந்த படமாக இருக்கும். திரைத்துறையில் சிறந்த இருபது இயக்குனர்களை எடுத்துக் கொண்டால் அவர்களது கேரியர் பெஸ்ட் பிலிம் கமல் சாரோட படமாகதான் இருக்கனும். இதில் நான் சாதாரண படத்தை எடுத்திவிடக் கூடாது என்ற பயத்தில் தான் இதை செய்யவில்லை" என்று கூறினார்.

    • ஐபிஎல் தொடரின் 6-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியும் மோதின.
    • டோனி தலைமையிலான சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

    சென்னை:

    ஐபிஎல் தொடரின் 6-வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

    இந்நிலையில் இந்த போட்டியை நடிகர் சிவகா்த்திகேயன், ஹரிஷ் கல்யாண், நகைச்சுவை நடிகர் சதிஷ், நடிகை கீர்த்தி சுரேஷ், நதியா, இவானா உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் நேரில் கண்டு ரசித்தனர். இந்த போட்டியை ஆர்வமாக கண்டு ரசித்த சிவகார்த்திகயனின் வீடியோ இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

    அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான கனா படத்தில் சிவகா்த்திகேயன் கிரிக்கெட் வீரராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அச்சம் என்பது இல்லையே’.
    • இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் வெளியிடவுள்ளது.மாற்றியுள்ளது.

    இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தற்போது அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே -  மிஷன்  சாப்டர் 1 '. இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.



    இந்நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன்'அச்சம் என்பது இல்லையே' - மிஷன்  சாப்டர் 1 படத்தின் உரிமத்தை பெற்று, உலகம் முழுவதும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் படத்தை வெளியிட உள்ளார். எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி தயாரித்துள்ள இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    • 'டோனி என்டர்டெயின்மெண்ட்' சார்பில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி 'எல். ஜி. எம்' படத்தை தயாரிக்கிறார்.
    • இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

    இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து 'டோனி என்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படம் தயாரிக்கின்றனர். காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகவுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர்.


    எல்.ஜி.எம்

    எல்.ஜி.எம்

    இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய போட்டியை நேரடியாகக் காண டோனி என்டர்டெய்ன்மென்ட் குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. விறுவிறுப்பான படப்பிடிப்பு பணிகளுக்கிடையே டோனியின் தயாரிப்பில் உருவாகும் 'எல். ஜி. எம்' பட குழுவினர் இந்த போட்டியை காண வருகை தந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா தற்போது சாகுந்தலம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    • இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சமந்தா, அவருடைய கடினமான நாட்களை பற்றி பேசியுள்ளார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகை சமந்தா இப்போது அடிக்கடி நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து கொண்ட நாட்களை நினைவுப்படுத்தி பேசி வருகிறார். தற்போது சாகுந்தலம் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம் விவாகரத்து செய்து கொண்டபோது உங்களுக்கு எதிராக வந்த விமர்சனங்கள் பற்றி சொல்லுங்கள் என்று கேட்கப்பட்டது.


    சமந்தா

    சமந்தா

    இதற்கு பதில் அளித்து சமந்தா கூறும்போது, "அந்த வேதனையிலிருந்து நான் இன்னும் மீளவில்லை. நீங்கள் அனைவரும் என்னை சுதந்திரமான எண்ணங்கள் கொண்ட வலுவான ஒரு பெண்ணாக நினைத்துக் கொள்ளலாம். ஆனால் நான் என்னை அப்படி நினைக்கவில்லை. நானும் எத்தனையோ கஷ்டங்கள், கண்ணீர், வேதனைகளை பார்த்தேன்.


    சமந்தா

    சமந்தா

    இக்கட்டான நிலைமைகளுடன் எத்தனையோ இருட்டு நாட்களை எதிர்கொண்டேன். பைத்தியக்காரத்தனமான எண்ணங்கள் வரும். அந்த எண்ணங்கள் என்னை நாசம் செய்து விடக்கூடாது என முடிவு செய்து கொண்டேன். முன்னுக்கு அடியெடுத்து வைத்தேன். குடும்ப உறுப்பினர்கள், சினேகிதர்கள் என்னோடு இருந்தார்கள். அவர்களால்தான் நான் இப்போது இங்கு இருக்கிறேன். ஆனால் அந்த வேதனையில் இருந்து நான் இன்னும் முழுமையாக மீளவில்லை. அப்போதைய நிலை மையை ஒப்பிடும்போது இப்போது வேதனை கொஞ்சம் குறைந்து இருக்கிறது'' என்றார்.

    • சூரி-விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 31ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் விடுதலை.
    • இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை-1'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் மேக்கிங் வீடியோவை நேற்று வெளியிட்டு படக்குழு ரசிகர்களை கவர்ந்தது.


    விடுதலை

    விடுதலை

    இந்நிலையில் இப்படத்திற்கு வெற்றிக்காக நன்றி தெரிவித்து சூரி பதிவிட்டுள்ளார். அதில், அனைவருக்கும் வணக்கம், மூன்று நாட்களாக உங்கள் அன்பான வாழ்த்து வெள்ளத்தில் நனைந்து மிதந்து மகிழ்ந்து வருகிறேன். இறைவனுக்கு நன்றி. விடுதலை முதல் பாகத்தை இப்படி ஒரு பிரம்மாண்ட வெற்றிப் படமாக்கிய ரசிகர்கள், பொது மக்கள், சமூக வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.


    சூரி வெளியிட்ட அறிக்கை
    சூரி வெளியிட்ட அறிக்கை

    பெரும் ஒத்துழைப்பு தந்து மக்களிடம் எங்களின் இந்த படைப்பை எடுத்துச் சென்ற பத்திரிகை தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக நண்பர்கள் அனைவருக்கு எங்கள் விடுதலை குடும்பம் சார்பாக சிரம் தாழ்ந்த நன்றிகள். அடுத்த பாகத்துடன் விரைவில் உங்களை சந்திக்கிறோம் என்று அறிக்கை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

    • தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா.
    • இவருக்கு சமீபத்தில் மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கப்பட்டது.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார். இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுகளுக்கு இசையமைத்துள்ளார்.


    இளையராஜா

    இதையடுத்து சமீபத்தில் விளையாட்டு, சமூகசேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களை பாராளுமன்ற மாநிலங்களவை நியமன எம்.பி.யாக நியமிக்கும் நடைமுறைப்படி, இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார். மேலும், சில தினங்களுக்கு முன்பு இளையராஜாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார். இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு சாதி அடிப்படையில் எம்.பி.பதவி வழங்கப்பட்டுள்ளதாக சீமான் விமர்சித்துள்ளார்.


    சீமான்

    இது குறித்து சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, "இளையராஜாவை விட ஈடு இணையற்ற இசைமேதை இந்த நாட்டில் உண்டா..? உலக அளவில் எண்ணிக்கை எடுத்தோம் என்றால் பத்து பேரில் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தில் எங்கள் மேதை இருப்பார். ஆனால், மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கும் போது ஈடு இணையற்ற இசை கலைஞனுக்கு கொடுத்தோம் என்று குறிப்பிடப்படவில்லை. அதற்கு பதிலாக தலித்திற்கு கொடுத்தோம் என்று கூறுகிறீர்கள். இவ்வளவு உயரத்திற்கு வந்தும் அந்த சாதி இழிவு ஒழியவில்லை" என்று மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

    • இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘அச்சம் என்பது இல்லையே’.
    • இப்படத்தின் டைட்டிலை தற்போது படக்குழு மாற்றியுள்ளது.

    இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தற்போது அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே'. இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.


    மிஷன் சாப்டர் 1 படக்குழு

    இந்நிலையில், 'அச்சம் என்பது இல்லையே' படத்தின் டைட்டிலை படக்குழு மாற்றியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'மிஷன் சாப்டர் 1 : ஃபியர்லஸ் ஜார்னி' (mission chapter 1 : fearless journey) என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.



    ×