டோனி தலைமையிலான சிஎஸ்கே அணியின் வெற்றியை கொண்டாடிய 'எல். ஜி. எம்' படக்குழு

'டோனி என்டர்டெயின்மெண்ட்' சார்பில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி 'எல். ஜி. எம்' படத்தை தயாரிக்கிறார்.இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
எல்.ஜி.எம் படக்குழு
எல்.ஜி.எம் படக்குழு
Published on

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து 'டோனி என்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படம் தயாரிக்கின்றனர். காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகவுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர்.

எல்.ஜி.எம்
எல்.ஜி.எம்

எல்.ஜி.எம்

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய போட்டியை நேரடியாகக் காண டோனி என்டர்டெய்ன்மென்ட் குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. விறுவிறுப்பான படப்பிடிப்பு பணிகளுக்கிடையே டோனியின் தயாரிப்பில் உருவாகும் 'எல். ஜி. எம்' பட குழுவினர் இந்த போட்டியை காண வருகை தந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com