அருண் விஜய் படத்தின் டைட்டிலை மாற்றிய இயக்குனர்.. குழப்பத்தில் ரசிகர்கள்

இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘அச்சம் என்பது இல்லையே’.இப்படத்தின் டைட்டிலை தற்போது படக்குழு மாற்றியுள்ளது.
அருண் விஜய்
அருண் விஜய்
Published on

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தற்போது அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே'. இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

மிஷன் சாப்டர் 1 படக்குழு

இந்நிலையில், 'அச்சம் என்பது இல்லையே' படத்தின் டைட்டிலை படக்குழு மாற்றியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'மிஷன் சாப்டர் 1 : ஃபியர்லஸ் ஜார்னி' (mission chapter 1 : fearless journey) என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com