உங்கள் வாழ்த்து வெள்ளத்தில் நனைந்து மிதந்து மகிழ்ந்து வருகிறேன் - நடிகர் சூரி

சூரி-விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 31ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் விடுதலை.இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சூரி
சூரி
Published on

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை-1'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் மேக்கிங் வீடியோவை நேற்று வெளியிட்டு படக்குழு ரசிகர்களை கவர்ந்தது.

விடுதலை
விடுதலை

விடுதலை

இந்நிலையில் இப்படத்திற்கு வெற்றிக்காக நன்றி தெரிவித்து சூரி பதிவிட்டுள்ளார். அதில், அனைவருக்கும் வணக்கம், மூன்று நாட்களாக உங்கள் அன்பான வாழ்த்து வெள்ளத்தில் நனைந்து மிதந்து மகிழ்ந்து வருகிறேன். இறைவனுக்கு நன்றி. விடுதலை முதல் பாகத்தை இப்படி ஒரு பிரம்மாண்ட வெற்றிப் படமாக்கிய ரசிகர்கள், பொது மக்கள், சமூக வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

சூரி வெளியிட்ட அறிக்கை
சூரி வெளியிட்ட அறிக்கை

பெரும் ஒத்துழைப்பு தந்து மக்களிடம் எங்களின் இந்த படைப்பை எடுத்துச் சென்ற பத்திரிகை தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக நண்பர்கள் அனைவருக்கு எங்கள் விடுதலை குடும்பம் சார்பாக சிரம் தாழ்ந்த நன்றிகள். அடுத்த பாகத்துடன் விரைவில் உங்களை சந்திக்கிறோம் என்று அறிக்கை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com