என் மலர்
சினிமா செய்திகள்
- நடிகர் கிச்சா சுதீப் பாஜக கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பானது.
- இவர் பாஜக கட்சிக்காக பரப்புரை செய்வேன் என்று கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப், 1997 ஆண்டு வெளியான தயாவ்வா என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நான் ஈ படத்தின் மூலம் மிகவும் பிரலமடைந்த சுதீப், விஜய்யின் புலி படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் வெளியான விக்ராந்த் ரோனா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

கிச்சா சுதீப்
கடந்த மாதம் தனக்கு அரசியல் அழைப்புகள் வருவதாக நடிகர் சுதீப் தெரிவித்திருந்த நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபலங்கள் அவரை சந்தித்து பேசியிருந்தது பெரிதளவில் பேசப்பட்டது. கிச்சா சுதீப், இன்று பாஜக கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி சினிமா வட்டாரங்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரங்கள் மத்தியிலும் பரப்பானது.
இந்நிலையில் பாஜக கட்சிக்காக பரப்புரை மட்டும் செய்வேன். தேர்தலில் போட்டியிடவில்லை என்று கிச்சா சுதீப் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தார்.
- நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
- நயன்தாரா வாடகை தாய் மூலம் அக்டோபர் மாதம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலான தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே மேலவளத்தூரில் உள்ள ஆற்றங்கரை ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் திருகோவிலுக்கு வழிபாடு செய்வதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு சென்றடைந்தார்.பின்னர் அங்கிருந்து கார் மூலம் அவர்களின் குலதெய்வ கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.

நயன்தாரா-விக்னேஷ் சிவன்
இந்நிலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு குலதெய்வம் கோயிலில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா வழிபட்டனர் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- சில தினங்களுக்கு முன்பு கீழடி அருங்காட்சியகத்தை சிவக்குமார், சூர்யா-ஜோதிகா பார்வையிட்டனர்.
- அப்பொழுது மாணவ-மாணவிகளை நீண்ட நேரம் வெளியே காத்திருக்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தில் தமிழர்கள் நாகரீகத்தை விளக்கும் பல்வேறு பொருட்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளது. இதனை தினமும் ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர். கீழடி அருங்காட்சியகத்தை ஏராளமான திரைபிரபலங்களும், சமூக ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும், வெளிநாட்டு தூதுவர்களும் பார்த்து செல்கின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா தனது மனைவி ஜோதிகா, தந்தை சிவக்குமார் மற்றும் உறவினர்களுடன் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அப்போது சூர்யாவின் குடும்பத்தினர் அருங்காட்சியத்தின் உள்ளே இருந்ததால் அங்கு வரக்கூடிய மொதுமக்களையும், மாணவர்களையும் வெளியே நீண்ட நேரம் காத்திருக்க வைத்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோக்களும் வைரலானது.

இந்நிலையில் பாடலாசிரியர் சினேகன் கீழடி அருங்காட்சியத்தை பார்வையிட்ட பின்னர் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது, கீழடி அருங்காட்சியத்தை பார்ப்பதற்காக வந்தேன். நம் பெருமைகளையும் தரவுகளையும் மிகவும் அழகாக பராமரித்துள்ளனர். இந்த இடத்தை விட்டு வெளியே செல்வதற்கு எனக்கு மனமில்லை. வரலாற்று புகைப்படங்கள், அதன் வழிமுறைகள் கேட்கும்பொழுது இன்னும் சற்று தமிழ் திமிரு தலைக்கேறி நிற்கிறது, பெருமையாக இருக்கிறது.
இந்த மண்ணுக்கு துரோகமான செயலை இந்த மண்ணுக்குறியவர்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். இந்த மண்ணுக்கு எந்த கெடுதல் நடந்தாலும் அதற்கு எதிராகதான் நாங்கள் நிற்போம். அதை எதிர்க்க வேண்டிய பொறுப்பு மக்கள் நீதிமையத்திற்கு இருக்கிறது. மக்கள் நீதி மைய்யத்தின் உறுப்பினராகவும் ஒரு கவிஞனாகவும் எனக்கு அதிகமான பொறுப்பு இருக்கிறது என்றார்.

மேலும் கீழடியில் சூர்யா குடும்பத்தினர் வந்திருந்த பொழுது மாணவர்களை வெளியே நிற்க வைத்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அங்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. வெறும் தகவல்களின் அடிப்படையில் வைத்து பேசுவது சரியாக இருக்காது. அவர் வேண்டும் என்று செய்திருக்கமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எதோ தெரியாமல் இது நடந்திருக்கும் என்று நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். அவர் அப்படி செய்கிறார் ஆள் இல்லை, அப்படி கண்டிப்பாக அவர் செய்திருக்க மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
எனவே இதனை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அன்றைக்கு எனக்கும் அந்த காணொலியை பார்க்கும் பொழுது சின்ன குழந்தைகள் வெளியே நிற்கிறார்களே என்று நானும் வருத்தப்பட்டேன். ஆனால் காட்சியில் பார்த்ததற்கும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்பதற்கும் வேறு மாதிரியாக இருக்கிறது. எனவே நான் தெரியாமல் தீர்ப்பு சொல்லிவிடகூடாது. இது எல்லோருக்கும் பொதுவானது எனவே அனைவரும் பார்த்து நம் பெருமைகளை தெரிந்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழில் நான் ஈ மற்றும் விஜய்யின் புலி படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கிச்சா சுதீப்.
- இவர் தற்போது பாஜக கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப், 1997 ஆண்டு வெளியான தயாவ்வா என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நான் ஈ படத்தின் மூலம் மிகவும் பிரலமடைந்த சுதீப், விஜய்யின் புலி படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் வெளியான விக்ராந்த் ரோனா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

கிச்சா சுதீப்
இந்நிலையில் கிச்சா சுதீப், இன்று இன்று பாஜக கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் தனக்கு அரசியல் அழைப்புகள் வருவதாக நடிகர் சுதீப் தெரிவித்திருந்த நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபலங்கள் அவரை சந்தித்து பேசியிருந்தது பெரிதளவில் பேசப்பட்டது.

கிச்சா சுதீப்
தற்போது பாஜகவில் இணைய நடிகர் சுதீப் திட்டமிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுதீப் மட்டுமின்றி இன்னும் பல பிரபலங்களை தங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பாஜக சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது.
- நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
- நயன்தாரா வாடகை தாய் மூலம் அக்டோபர் மாதம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் நயன்தாரா வாடகை தாய் மூலம் அக்டோபர் மாதம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டார். சில தினங்களுக்கு முன்பு குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, N என்பது நயன்தாராவை குறிப்பதாகவும் சமூக வலைத்தளத்தின் வாயிலாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலான தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே மேலவளத்தூரில் உள்ள ஆற்றங்கரை ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் திருகோவிலுக்கு வழிபாடு செய்வதற்காக நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு சென்றடைந்தனர். அங்கு ரசிகர்கள் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். அதனை தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் அவர்களின் குலதெய்வ கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். இவர்களின் வருகையால் திருச்சி விமான நிலையத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
- மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வெளியான படம் 'பொன்னியின் செல்வன் -1'.
- இப்படம் தற்போது விருதுகளை வென்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் பல விருதுகளை குவித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி 2023 ஆண்டுக்கான ஜேஎஃப்டபல்யூ விருதுகளில் பொன்னியின் செல்வன் திரைப்படம் சிறந்த நடிகையாக திரிஷாவும், சிறந்த ஆடை வடிவமைப்பாளராக ஏகா லகானி, சிறந்த பாடலாசிரியருக்காக கிருத்திகா நெல்சன், சிறந்த டப்பிங் கலைஞராக தீபாவெங்கட் (ஐஸ்வர்யா ராய் பச்சன்-நந்தினி), சிறந்த நடிகைக்கான விமர்சகர்கள் தேர்வில் ஐஸ்வர்யா லட்சுமியும் விருதுகளை வென்றுள்ளனர்.
- எய்ட்ஸ் விழிப்புணர்வு மேடையில் நடிகை ஷில்பா ஷெட்டியை ஹாலிவுட் நடிகர் ரிச்சர்டு ஹிரி முத்தமிட்டார்.
- இந்த வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, கடந்த 2007-ம் ஆண்டு ராஜஸ்தானில் நடந்த ஏய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்டு ஹிரியும் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சி மேடையில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு நடிகர் ரிச்சர்டு கன்னத்திலும், கையிலும் முத்தம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஷில்பா ஷெட்டிக்கு முத்தம் கொடுத்த ரிச்சர்டு ஹிரி
நிகழ்ச்சி மேடையில் நடிகை ஷில்பா நடிகர் ரிச்சர்டின் இந்த செயல் அருவருப்பாகவும், ஆபாசமாகவும் இருந்ததாக கூறி இந்திய கலாசாரத்தை அவமதித்து விட்டதாகவும் கூறி வலதுசாரி அமைப்புகள் ஷில்பா ஷெட்டிக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். மேலும், ஷில்பா ஷெட்டி மற்றும் ரிச்சர்டு மீது ராஜஸ்தானில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், அந்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி 2017-ம் ஆண்டு மும்பைக்கு மாற்றப்பட்டது.

ஷில்பா ஷெட்டி
பொதுஇடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்டதாக ரிச்சர்டு மற்றும் ஷில்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற வந்த நிலையில் வழக்கில் இருந்து ரிச்சர்டு விடுவிக்கப்பட்டார். ஆனால், ஷில்பா ஷெட்டி மீது வழக்கு நடந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வழக்கில் இருந்து ஷில்பாவை விடுதலை செய்து மாஜிஸ்திரேட் கோர்ட்டு உத்தரவிட்டது. ஷில்பா ரிச்சர்டு ஹிரியின் செயலால் பாதிக்கப்பட்டவர் அவர் எந்த குற்றசெயலையும் செய்யவில்லை என்று கூறி ஷில்பா ஷெட்டியை வழக்கில் இருந்து கோர்ட்டு விடுவித்து வழக்கையும் முடித்து வைத்தது.
இந்நிலையில், வழக்கில் இருந்து ஷில்பா ஷெட்டி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மும்பை கீழமை கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி, ஷில்பா ஷெட்டி வழக்கை தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
- தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி.
- இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அவரின் மார்கெட் உயர்ந்துள்ளது. 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் ரிலீஸுக்கு முன்பே ரூ. 70 கோடி வரை ஜெயம் ரவி படத்திற்கு பிஸினஸ் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

ஜெயம் ரவி
இதையடுத்து தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளாராம் ஜெயம் ரவி. 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகத்திலேயே ரூ. 25 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனிவரும் படங்களிலும் இன்னும் சம்பளம் உயரும் என கூறப்படுகிறது. இதைதொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் இறைவன், சைரன் ஆகிய படங்கள் இந்த வருடமே திரைக்கு வரவுள்ளது. தற்போது இயக்குனர் எம். ராஜேஷ் படத்திலும் நடித்து வருகிறார்.

ஜெயம் ரவி
மேலும், ஜெயம் ரவி விரைவில் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் இந்த படம் ரூ. 100 கோடி பொருட்செலவில் உருவாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவர் அண்ணன் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்திலும் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
- இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'புஷ்பா-தி ரூல்'.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

புஷ்பா
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இப்படத்தின் டீசரை அல்லு அர்ஜுனின் பிறந்தாளான ஏப்ரல் 8-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

புஷ்பா-தி ரூல் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு நாளை காலை 11.07 மணிக்கு வெளியாகும் என இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
- நடிகை சமந்தா தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
- இவர் தனது முன்னாள் கணவர் நாகசைதன்யா காதல் குறித்து விமர்சித்துள்ளாதக செய்தி வெளியாகியுள்ளது.
நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். கணவருடன் சமந்தா ஐதராபாத்தில் குடியேறி தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். கடந்த 2021-ஆம் ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். திருமண முறிவுக்கான காரணத்தை இதுவரை இருவரும் வெளியிடவில்லை.

நாகசைதன்யா -சமந்தா
சமந்தா -நாகசைதன்யா இருவரும் பல படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். சமீபகாலமாகவே நடிகர் நாகசைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் அண்மையில் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள நாகசைதன்யாவின் புதிய வீட்டில் ஒன்றாகக் காணப்படட்டதாகவும் அங்கு அவர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

சோபிதா துலிபாலா -நாகசைதன்யா
இந்நிலையில், நடிகை சமந்தா, "யார் யாருடன் உறவில் இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. காதலின் மதிப்பை அறியாதவர்கள் எத்தனை பேருடன் பழகினாலும், டேட்டிங் செய்தாலும் கடைசியில் கண்ணீரில் தான் முடியும். குறைந்த பட்சம் அந்த பெண் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர் தன் நடத்தையை மாற்றிக்கொண்டு, பெண்ணைக் காயப்படுத்தாமல் பார்த்துக் கொண்டால், அது அனைவருக்கும் நல்லது" என நாகசைதன்யா -சோபிதா துலிபாலா உறவு குறித்து கூறியதாக தனியார் பத்திரிகை நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமந்தா 'தான் இவ்வாறு கூறவில்லை' என்று மறுத்துள்ளார். சமந்தாவின் இந்த பதிவிற்கு ஆதரவு தெரிவித்து ரசிகர்கள் இந்த பதிவை வைரலாக்கி வருகின்றனர்.
I never said this!! https://t.co/z3k2sTDqu7
— Samantha (@Samanthaprabhu2) April 4, 2023
- சாந்தனு நாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘இராவண கோட்டம்’.
- இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது.
இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் `இராவண கோட்டம்'. சாந்தனு நாயகனாக நடிக்கும் இந்த படத்தை கண்ணன் ரவி தயாரிக்கிறார். இப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். லாரன்ஸ் கிஷோர் இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

இராவண கோட்டம் போஸ்டர்
`இராவண கோட்டம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'இராவண கோட்டம்' படத்தின் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாகவும் இதனை நடிகர் சிம்பு வெளியிடவுள்ளதாகவும் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
#இராவணகோட்டம்
— Shanthnu இராவண கோட்டம் (@imKBRshanthnu) April 4, 2023
Official trailer will be revealed by #Atman @SilambarasanTR_
Tomorrow 5th April at 5pm ?️ @VikramSugumara3 @justin_tunes #KannanRaviGroup #RaavanaKottamTrailerfromApril5th@DoneChannel1 @teamaimpr pic.twitter.com/cR7na8zlBu
- அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1'.
- இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தற்போது அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1'. இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

மிஷன் சாப்டர் 1 போஸ்டர்
எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி தயாரித்துள்ள இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் லைகா நிறுவனம் வெளியிடவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.
The #MISSION is officially ON ?
— Lyca Productions (@LycaProductions) April 4, 2023
Releasing the TEASER Tomorrow at 5PM. Stay Tuned❗️
? #Vijay ? @arunvijayno1 @iamAmyJackson @NimishaSajayan @AbiHassan_ @gvprakash @silvastunt @sssmoffl #Rajashekar & #Swathi @shiyamjack @DoneChannel1 @gkmtamilkumaran #Subaskaran pic.twitter.com/KdfZNPAX43






