என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விருதுகளை குவித்த பொன்னியின் செல்வன் திரைப்படம்
    X

    பொன்னியின் செல்வன்

    விருதுகளை குவித்த பொன்னியின் செல்வன் திரைப்படம்

    • மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வெளியான படம் 'பொன்னியின் செல்வன் -1'.
    • இப்படம் தற்போது விருதுகளை வென்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    விருது வென்ற திரிஷா

    இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் பல விருதுகளை குவித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி 2023 ஆண்டுக்கான ஜேஎஃப்டபல்யூ விருதுகளில் பொன்னியின் செல்வன் திரைப்படம் சிறந்த நடிகையாக திரிஷாவும், சிறந்த ஆடை வடிவமைப்பாளராக ஏகா லகானி, சிறந்த பாடலாசிரியருக்காக கிருத்திகா நெல்சன், சிறந்த டப்பிங் கலைஞராக தீபாவெங்கட் (ஐஸ்வர்யா ராய் பச்சன்-நந்தினி), சிறந்த நடிகைக்கான விமர்சகர்கள் தேர்வில் ஐஸ்வர்யா லட்சுமியும் விருதுகளை வென்றுள்ளனர்.

    Next Story
    ×