என் மலர்
சினிமா செய்திகள்
- நடிகர் கிச்சா சுதீப் பாஜக சார்பாக பிரசாரம் செய்யவுள்ளதாக இன்று காலை தெரிவித்தார்.
- கிச்சா சுதீப்பின் இந்த அறிவிப்பால் தான் அதிர்ச்சியடைந்துள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப் சமீபத்தில் தனக்கு அரசியல் அழைப்புகள் வருவதாக தெரிவித்திருந்தார். பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரபலங்கள் அவரை சந்தித்து பேசியிருந்தது பெரிதளவில் பேசப்பட்டது. இதையடுத்து இன்று பாஜக கட்சியில் கிச்சா சுதீப் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி சினிமா வட்டாரங்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரங்கள் மத்தியிலும் பரப்பானது.

பசவராஜ் பொம்மை -கிச்சா சுதீப்
இதைத்தொடர்ந்து, பெங்களூரில் கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மையுடன் செய்தியாளர்களை சந்தித்த கிச்சா சுதீப் வருகின்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பாக பிரசாரம் செய்யவுள்ளதாகவும் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கிச்சா சுதீப்பின் இந்த அறிவிப்பால் தான் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ்
இன்று காலை கிச்சா சுதீப் பா.ஜ.க. பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக செய்தி அறிந்ததும் பிரகாஷ் ராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "கர்நாடகாவில் தோல்வி முகம் காண கூடிய மற்றும் நம்பிக்கையற்ற பா.ஜ.க.வால் பரப்பப்படும் போலியான செய்தியாக இது இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்" என பதிவிட்டிருந்தார். தற்போது இது உறுதியான நிலையில், பா.ஜ.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை சுதீப் எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.
- 2023-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை குடியரசு தலைவர் வழங்கினார்.
- இதில் மறைந்த பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றாக பத்ம விருது கருதப்படுகிறது. இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் பல்துறை சார்ந்த ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ஆம் ஆண்டிற்கான பத்ம விருது குடியரசு தினத்தையொட்டி 106 பேருக்கு அறிவிக்கப்பட்டது. பத்ம விருது வென்றவர்களுக்கு விருது வழங்கும் விழா டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்நிலையில், மறைந்த பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இதனை அவரது உறவினர் பெற்றுக் கொண்டார். மேலும், இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணிக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இன்போசிஸ் நாராயண மூர்த்தி மனைவி சுதா மூர்த்திக்கு சமூக பணிக்காக பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுகளை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.
- விஜய் தற்போது ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

லியோ
இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், 'லியோ' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. காஷ்மீர் படப்பிடிப்பு குறித்து தொழில்நுட்ப பணியாளர்கள் தங்களது கருத்துகளை பகிரும் அந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலானது.

லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி -விஜய்
இந்நிலையில், லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தில் பின்னணி குரல் கொடுப்பதற்காக லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்து மூன்று நாட்கள் கால்ஷீட் கேட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் தீயாய் செய்தி பரவி வருகிறது. இது உறுதியாகும் பட்சத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் -விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
- அருண் விஜய் தற்போது நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1'.
- இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் லைகா நிறுவனம் வெளியிடவுள்ளது.
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தற்போது அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1'. இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி தயாரித்துள்ள இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் லைகா நிறுவனம் வெளியிடவுள்ளது.

மிஷன் சாப்டர் -1
இதையடுத்து இப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியாவிலிருந்து சிகிச்சைக்காக வெளிநாடு வந்துள்ள அருண் விஜய் தெரியாமல் பிரச்சினையில் மாட்டிக் கொள்வது போன்று உருவாகியுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
- ’1947 ஆகஸ்ட் 16’ படத்தை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தயாரித்துள்ளார்.
- இப்படம் வருகிற ஏப்ரல் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் '1947- ஆகஸ்ட் 16'. இப்படத்தில் கவுதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக அறிமுக நாயகி ரோவதி நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தை ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி இவர்களுடன் இணைந்து ஏ.ஆர் முருகதாஸ் தயாரித்துள்ளார்.

1947 ஆகஸ்ட் 16
இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இந்த படத்தில் கலையரசன், கடைக்காரன் என்ற கதாபாத்திரத்திலும் நீலிமா ராணி சின்ன வயது ஹீரோவின் அம்மாவாகவும் டேவிட், கரிகாலன் என்ற கதாபாத்திரத்திலும் போஸ் வெங்கட், பசுபதி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தனர்.

1947 ஆகஸ்ட் 16 போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, '1947- ஆகஸ்ட் 16' படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.
Certified U/A. ?
— A.R.Murugadoss (@ARMurugadoss) April 5, 2023
Ready to hit theatres this Friday! ✨
Breathtaking period story #1947AUGUST16 from 7th April!
Grab your tickets now! pic.twitter.com/ivoAXfAGBQ
- நடிகர் கிச்சா சுதீப் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
- இவர் முழு மனதுடன் பிரசாரம் செய்ய வந்துள்ளதாக கூறினார்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப், 1997 ஆண்டு வெளியான தயாவ்வா என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நான் ஈ படத்தின் மூலம் மிகவும் பிரலமடைந்த சுதீப், விஜய்யின் புலி படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விக்ராந்த் ரோனா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

கிச்சா சுதீப்
கடந்த மாதம் தனக்கு அரசியல் அழைப்புகள் வருவதாக நடிகர் சுதீப் தெரிவித்திருந்த நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபலங்கள் அவரை சந்தித்து பேசியிருந்தது பெரிதளவில் பேசப்பட்டது. கிச்சா சுதீப், இன்று பாஜக கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி சினிமா வட்டாரங்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரங்கள் மத்தியிலும் பரப்பானது.

பசவராஜ் பொம்மை - கிச்சா சுதீப்
இந்நிலையில், நடிகர் கிச்சா சுதீப் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதாவது, வருகின்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பாக இவர் பிரசாரம் செய்யவுள்ளார். மேலும், வருமான வரித்துறை, அமலாக்கதுறை என யாரும் என்னை மிரட்டவில்லை என்றும் முழு மனதுடன் பிரசாரம் செய்ய வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
- நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் இன்று காலை ஆற்றங்கரை ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் திருகோவிலில் வழிபாடு செய்தனர்.
- தற்போது ஐராவதேஸ்வரர் கோயிலில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா சாமி தரிசனம் செய்தனர்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலான தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே மேலவளத்தூரில் உள்ள ஆற்றங்கரை ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் திருகோவிலில் வழிபாடு செய்தனர். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு குலதெய்வம் கோயிலில் இருவரும் வழிபட்டனர்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்
இந்நிலையில் குலதெய்வம் கோயிலை தொடர்ந்து, கும்பகோணம் அடுத்த தாராசுரம் பகுதியில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா சாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு சென்ற இவருடனும் கல்லூரி மாணவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
- மணிரத்னம் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'பொன்னியின் செல்வன் -2'.
- இப்படத்தில் இடம்பெற்ற ஐஷ்வர்யா லட்சுமியின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பூங்குழலி - ஐஷ்வர்யா லட்சுமி
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாப்பாத்திரத்தில் நடித்த ஐஷ்வர்யா லட்சுமியின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
A ray of sunshine in a sea of darkness!
— Madras Talkies (@MadrasTalkies_) April 5, 2023
Here is the most-awaited BTS of #Poonguzhali #AishwaryaLekshmi
In theatres from 28th April in Tamil, Hindi, Telugu, Malayalam, and Kannada!
ICYMI, watch #PS2Trailer
▶ https://t.co/vtlkJV9skk#CholasAreBack #PS2 #PonniyinSelvan2… pic.twitter.com/k88QrSL2WJ
- இயக்குனர் கவுதம் வாசுதேவ்மேனனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் கண்ணன் பொன்னையா.
- இவர் வேட்டையாடு விளையாடு, நெடுஞ்சாலை, வேதாளம் ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி தேரியூரை சேர்ந்தவர் கண்ணன் பொன்னையா (வயது 46). இவர் கடந்த 1999-ம் ஆண்டு சென்னைக்கு சென்று சினிமா வாய்ப்பு தேடி உள்ளார். இயக்குனர் கவுதம் வாசுதேவ்மேனனிடம் உதவி இயக்குனராக சேர்ந்து மின்னலே படத்தில் பணியாற்றி உள்ளார். அவர் இயக்கிய காக்க காக்க படத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.
பின்னர் சில்லுனுஒரு காதல், நடிகர் கமல் நடித்த வேட்டையாடு விளையாடு, நெடுஞ்சாலை, நடிகர் அஜித் நடித்த வேதாளம் ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த 'பத்துதல' திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கண்ணன் பொன்னையா சி.பி.சி.ஐ.டியாக நடித்துள்ளார். இந்த வேடம் அனைவரது கவனத்தையும் ஈர்ந்துள்ளது.
அனைவரது பாராட்டை பெற்றுள்ள கண்ணன் பொன்னையா தனது சொந்த ஊரான உடன்குடி தேரியூருக்கு பங்குனி உத்திரத்தையொட்டி குலதெய்வ சாமி தரிசனம் செய்வதற்கு வருகை தந்தார். அவர் கூறியதாவது, சிறு வயதில் எங்கள் ஊரில் திருவிழா நாட்களில் நாடகம் நடத்துவார்கள். இதில் சிறு வேடங்களில் நடித்துள்ளேன். எனவே சினிமாவில் சேர வேண்டும் என்ற கனவில் சென்னை சென்றேன்.அங்கு பல போராட்டங்களுக்கு பின்பு உதவி இயக்குனராக வாய்ப்பு கிடைத்தது. பின்னர் சிறு வேடங்களில் நடிக்க தொடங்கினேன்.
தற்போது வெளிவந்து வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கும் 'பத்துதல' சினிமா படத்தில் எனக்கு நல்ல வேடம் கிடைத்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் என் பெயர் தெரிய தொடங்கி உள்ளது. தற்போது நடிகர் சசிகுமாருடன் நா.நா என்ற படத்தில் நடித்து வருகிறேன். வேறு சில படங்களிலும் நடிக்க அழைப்பு வந்துள்ளது. பெரிய நடிகராக வர வேண்டும் என்பதே எனது லட்சியம்.
மேலும் படம் இயக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. நடிகர் விஜய், அஜித், சூர்யா ஆகியோருக்கு ஏற்ற கதை தயார் செய்து வைத்துள்ளேன். வாய்ப்பு கிடைத்தால் இயக்குவேன். இவ்வாறு அவர் கூறினார். இதைத் தொடர்ந்து 'பத்துதல' சினிமாவை பார்த்த உடன்குடி பகுதி இளைஞர்கள் தேரி யூருக்கு நடிகர் கண்ணன் பொன்னையா வந்ததை கேள்விப்பட்டு அவரை நேரில் பார்த்து செல்பி எடுத்துச் சென்றனர்.
- நடிகர் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- ரஜினியின் 170-வது படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் நடிக்கின்றனர். ரஜினியின் 169-வது படமான ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரஜினி
இதனை தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை 'ஜெய் பீம்' பட இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கவுள்ளார். லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் ரஜினியின் 171வது படம் குறித்த தகவல் இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.

அதன்படி இப்படத்தை மாநகரம், கைதி, விக்ரம் படத்தை இயக்கி பிரபலமடைந்த லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ படத்தை முடித்த பிறகு இப்படத்தின் பணிகள் தொடங்கும் என்றும் இப்படத்திற்காக முதற்கட்ட கலந்துரையாடல் சமீபத்தில் நடைபெற்றதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் மாயமானதாக அவரது மனைவி போலீசில் புகாரளித்தார்.
- இந்த விவகாரம் தொடர்பாக பணியாட்கள் ஒன்பது பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் வீடு சென்னை அபிராமிபுரத்தில் உள்ளது. இந்த வீட்டில் இருந்து கிட்டத்தட்ட 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் போனதாக அவரது மனைவி தர்ஷணா பாலா அபிராமிபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் மார்ச் 30-ஆம் தேதி புகாரளித்தார்.
அந்த புகாரில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி இந்த தங்க நகைகளை பார்த்ததாகவும் அதன்பின்னர் பிப்ரவரி மாதம் வீட்டில் நகைகளை பார்த்தபோது காணவில்லை எனவும் வீட்டில் வேலை செய்யும் மேனகா மற்றும் பெருமாள் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அபிராமிபுரம் போலீசார் வீட்டில் அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் மற்றும் வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் ஆகியோரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனர். அதுமட்டுமல்லாமல் பணியாட்கள் ஒன்பது பேரிடம் இதுவரை விசாரணையும் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் சந்தேகிக்கப்படும் இரண்டு பணியாளர்கள் நகை காணாமல் போன மாதத்தில் அவர்களது சொந்த ஊரான நேபால் மற்றும் பீகாருக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அவர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
- 'புஷ்பா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கிறார்.
- 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

புஷ்பா தி ரூல்
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'புஷ்பா-தி ரூல்' படத்தின் புதிய அறிவிப்பு வருகிற 7-ஆம் தேதி மாலை 4.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு கிளிம்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.






