கவனம் ஈர்க்கும் 'மிஷன் சாப்டர் 1' டீசர்

அருண் விஜய் தற்போது நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1'.இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் லைகா நிறுவனம் வெளியிடவுள்ளது.
மிஷன் சாப்டர் -1
மிஷன் சாப்டர் -1
Published on

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தற்போது அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1'. இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி தயாரித்துள்ள இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் லைகா நிறுவனம் வெளியிடவுள்ளது.

மிஷன் சாப்டர் -1

இதையடுத்து இப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியாவிலிருந்து சிகிச்சைக்காக வெளிநாடு வந்துள்ள அருண் விஜய் தெரியாமல் பிரச்சினையில் மாட்டிக் கொள்வது போன்று உருவாகியுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com