என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் நேற்று மேலவழுத்தூர் கிராமத்தில் உள்ள ஆற்றங்கரை காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றனர்.
    • கோவிலுக்கு வந்த நயன்தாராவிடம் பொன்னாடையை கொடுத்த போது அவர் அதை ஏற்க மறுத்து விட்டார்.

    நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். வாடகை தாய் மூலம் அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. தஞ்சை மாவட்டம் மேல வழுத்தூரில் உள்ள ஆற்றங்கரை காமாட்சி அம்மன் கோவில், இயக்குனர் விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதியினரின் குலதெய்வம் கோவில் ஆகும். குல தெய்வம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் முடிவு செய்தனர்.

    அதன்படி நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் நேற்று மேலவழுத்தூர் கிராமத்தில் உள்ள ஆற்றங்கரை காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றனர். நயன்தாரா வருவதை அறிந்த உள்ளூர் பிரமுகர்கள் அவருக்கு அணிவிப்பதற்காக பொன்னாடை வாங்கி வைத்து காத்து இருந்தனர். கோவிலுக்கு வந்த நயன்தாராவிடம் பொன்னாடையை கொடுத்த போது அவர் அதை ஏற்க மறுத்து விட்டார்.

    மேலும் குலதெய்வம் கோவில் சிறியதாக இருந்ததால் கோவிலுக்குள் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் போலீசார் மட்டுமே நின்று கொண்டிருந்தனர். நயன்தாரா கோவிலில் சாமி கும்பிட்ட போது வெளியில் நின்ற புகைப்பட கலைஞர்கள் உள்ளே வந்து அவரை புகைப்படம் எடுக்க முயன்றனர். போட்டோவுக்கு போஸ் கொடுக்குமாறு கூறினார்கள். அப்போது நயன்தாரா கோபம் அடைந் தார். இதைப் பார்த்த விக்னேஷ் சிவன் புகைப்பட கலைஞர்களிடம் சற்று வெளியே காத்திருக்குமாறு கூறினார். நயன்தாராவும் புகைப்பட கலைஞர்களிடம், "சாமி கும்பிடத்தான் கோவிலுக்கு வந்திருக்கிறோம்" என்று கூறினார்.

    இதையடுத்து புகைப்பட கலைஞர்கள் வெளியே காத்திருந்தனர். இதற்கிடையே அங்கு வழிபாட்டை முடித்துக் கொண்டு நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் அதே பகுதியில் உள்ள ஐராதீஸ்வரர் கோவிலுக்கு சென்றனர். ஏற்கனவே கிராம மக்கள் திரண்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் கோவிலுக்குள் சென்றதும் கோவிலின் முன்பக்க கதவு பூட்டப்பட்டது.

    நயன்தாராவை காண கோவிலுக்கு வெளியே கிராம மக்கள், ரசிகர்கள், கல்லூரி மாணவிகள் காத்திருந்தனர். கோவிலில் தரிசனம் முடிந்து வெளியே வந்த நயன்தாரா கிராம மக்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பார்த்து சிரித்தபடி கையசைத்தார். அப்போது கிராம மக்கள், மாணவிகள், ரசிகர்கள் அனைவரும் நயன்தாராவை தங்களின் செல்போனில் படம் பிடித்தனர்.

    பின்னர் நயன்தாராவுடன் கல்லூரி மாணவிகள் ஒன்றாக நின்று செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது ஒரு மாணவி, நயன்தாராவின் தோளில் கை போட்டு செல்பி எடுக்க முயன்றார். அவரை நயன்தாரா சத்தம் போட்டார். பின்னர் நயன்தாரா காரில் ஏறி புறப்பட்டார்.

    அப்போது அங்கிருந்த மக்கள் நயன்தாராவிடம் செல்பி எடுத்துக் கொண்டனர். 'உங்களது படங்கள் ஒன்று விடாமல் எல்லாவற்றையும் பார்த்து விடுவோம்' என்று நயன்தாராவிடம் கூறினார்கள். அதைக் கேட்டு அவர் மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் அவரை சிரித்தபடியே வழியனுப்பி வைத்தனர். அதன்பிறகு நயன்தாரா அங்கிருந்து திருச்சி ரெயில் நிலையம் வந்தார். நயன்தாரா வருவதை கேள்விப்பட்டதும் அவரை பார்க்க ரெயில் நிலையத்தில் ரசிகர்கள் திரண்டனர். நயன்தாரா ரெயிலில் ஏற வந்தபோது ரசிகர்கள் அவரை நோக்கி முண்டியடித்தனர். அனைவரும் செல்போனில் அவரை படம் பிடித்தனர். சிலர் செல்பி எடுக்கவும் முயன்றனர்.

    இதனால் நயன்தாரா கோபத்துடன் காணப்பட்டார். ஒரு வழியாக நயன்தாரா கூட்டத்தை மீறி ரெயிலுக்குள் ஏறினார். அங்கும் ஒரு ரசிகர் தனது செல்போனில் நயன்தாராவிடம் செல்பி எடுக்க முயன்றார். இதனால் அவரை முறைத்து பார்த்த நயன்தாரா தன்னை படம் பிடிக்க கூடாது என்றார். ஆனாலும் அவர் தொடர்ந்து நயன்தாராவிடம் செல்பி எடுக்க முயன்றார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த நயன்தாரா, அவரிடம் செல்பி எடுத்தால் செல்போனை உடைத்து விடுவேன் என்று எச்சரித்தார். அதன்பிறகு அந்த ரசிகர் அங்கிருந்து சென்றார். பின்னர் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ரெயிலில் சென்னை திரும்பினார்கள்.

    • போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன்.
    • இவர் இயக்கவுள்ள படத்தில் லவ் டுடே படத்தின் மூலம் பிரபலமடைந்த பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    2012ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தை இயக்கி தனக்கான ரசிகர்களை பிடித்தார். இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.


    விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன்

    விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன்

    விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள புதிய படத்தில் லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இப்படம் சயின்ஸ் ஃபிக்சன் ரொமாண்டிக் காமெடியாக உருவாகவுள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு வருகிற ஜூலை மாதம் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்க அனிருத் இசையில் உருவாகும் எனவும் தன்னுடைய காதலுக்காக மொபைல் ஃபோன் மூலம் டைம் டிராவல் செய்யும் இளைஞனை மைய்யப்படுத்தி இப்படம் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • நடிகை காயத்ரி ரகுராம் சமீபத்தில் பாஜக கட்சியில் இருந்து விலகினார்.
    • இவர் மீது தற்போது சைபர் கிரைம் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

    2022-ம் ஆண்டு வெளியான சார்லி சாப்லின் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் காயத்ரி ரகுராம். அதன்பின்னர் பரசுராம், விசில், வை ராஜா வை, அருவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். காயத்ரி ரகுராம், நடன இயக்குனராகவும் பல படங்களுக்கு பணியாற்றியுள்ளார்.

    இதனிடையே காயத்ரி ரகுராம் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வந்தார். இவர் தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்து வந்தார். சமீபத்தில் இவர் பாஜக கட்சியில் இருந்து விலகினார்.

    இந்நிலையில், நடிகை காயத்ரி ரகுராமுக்கு எதிராக சென்னை சைபர் கிரைம் போலீசில் ஆன்லைன் வாயிலாக புகாரளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தொடர்ந்து சமூக வலைதளத்தில் காயத்திரி ரகுராம் அவதூறான கருத்துகளையும் தவறான செய்திகளையும் பரப்பி வருகிறார். இதனால் காயத்ரி ரகுராம் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜகவின் மாநில வழக்கறிஞர் பிரிவின் துணைத் தலைவரான ஜி.எஸ்.மணி புகாரளித்துள்ளார்.

    • ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் தற்போது நடித்திருக்கும் படம் ருத்ரன். இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.


    ருத்ரன்

    ருத்ரன்

    தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 'ருத்ரன்' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதில் சரக்கு, கஞ்சாவ விட பெரிய போதை பணம் போன்ற வசனங்கள் இடம்பெற்று வரவேற்பை பெறுகிறது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படத்தின் டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ருத்ரன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலுக்கு சென்று நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் சாமி தரிசனம் செய்தனர்.
    • நயன்தாராவை பின்தொடர்ந்து சென்ற கல்லூரி மாணவிகளில் சிலர் அவர் தோல் மீது கை போட்டு செல்பி எடுக்க முயன்றனர்.

    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்டம், வழுத்தூரில் ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் நடிகை நயன்தாராவின் கணவரும், திரைப்பட இயக்குனருமான விக்னேஷ் சிவனின் குலதெய்வம். திருமணத்திற்கு முன் இருவரும் இந்த கோவிலுக்கு வந்தனர். பின்னர் இருவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் பிறந்த நிலையில் நேற்று மீண்டும் இந்த கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இதையடுத்து கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். கோவிலை இருவரும் சுற்றி பார்த்து கொண்டிருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஏராளமான ரசிகர், ரசிகைகள், மாணவிகள் அங்கு திரண்டனர். நயன்தாராவை பார்க்க முண்டியடித்தனர்.

    அந்த நேரத்தில் நயன்தாராவை பின்தொடர்ந்து சென்ற கல்லூரி மாணவிகளில் சிலர் அவர் தோல் மீது கை போட்டு செல்பி எடுக்க முயன்றனர். இதனால் அந்த மாணவிகள் மீது கோபப்பட்டு முறைத்து கொண்டு திரும்பி சென்றார். தொடர்ந்து அவர் கோவில் முழுவதும் சுற்றி பார்த்தார்.

    பின்னர் நயன்தாரா, விக்னேஷ்சிவன் அங்கிருந்து புறப்பட்டு திருச்சி வழியாக சென்னைக்கு சென்றனர்.

    • சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘இராவண கோட்டம்’.
    • இப்படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் `இராவண கோட்டம்'. சாந்தனு நாயகனாக நடித்து வரும் இப்படத்தை கண்ணன் ரவி தயாரிக்கிறார். இதில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். லாரன்ஸ் கிஷோர் இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.


    இராவண கோட்டம்

    இராவண கோட்டம்

    `இராவண கோட்டம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், இப்படத்தின் டீசரை நடிகர் சிம்பு சமூக வலைத்தளத்தின் வாயிலாக வெளியிட்டார். கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் டீசரில் எந்த கொம்பனாலும் ரெண்டா பிரிக்க முடியாது போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த டீசர் தற்போது வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த மார்ச் 10ம் தேதி வெளியான படம் ‘அகிலன்’.
    • இப்படத்தை விளம்பரப்படுத்த வித்யாசமான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

    இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த மார்ச் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'அகிலன்'. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். மேலும் சிராக் ஜானி, ஹரீஷ் பெராடி, தருண் அரோரா, மதுசூதன் ராவ் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    அகிலன் படத்தின் விளம்பர நிகழ்ச்சி

    அகிலன் படத்தின் விளம்பர நிகழ்ச்சி

    இந்நிலையில் ஜீ5 ஓடிடி தளத்தின் சமீபத்திய வெளியீடான 'அகிலன்' படத்தின் 30 மில்லியன் பார்வை நிமிடங்களை கொண்டாடும் விதமாக, ஒரு வித்தியாசமான விளம்பர நிகழ்வை சென்னை மெரினா மாலில் நடத்தியது. அந்நிகழ்வில் 'அகிலன்' படத்தின் கதைக்கருவில் வரும் கப்பல் நங்கூரம் செயற்கையாக உருவாக்கப்பட்டு, இந்த நங்கூரத்தை குறிப்பிட்ட நேரம் தூக்கி வைத்திருப்பவர்களுக்கு ஒரு வருடத்திற்கான ஜீ5 தளத்தின் சந்தா இலவசமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் 5000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டு ஜீ5 தளத்தின் ஒரு வருட வாடிக்கையாளர் சந்தாவை வென்றுள்ளனர்.

    • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி.
    • இவர் மழலைக்குழந்தையுடன் உரையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

    நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரவுடி தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த விஜய் சேதுபதி, சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றார். இவர் தற்போது தமிழ் மட்டுமல்லாது மலையாளம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.


    மழலைக் குழந்தையுடன் விஜய் சேதுபதி
    மழலைக் குழந்தையுடன் விஜய் சேதுபதி

    அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள விஜய் சேதுபதி, தற்போது மழலைக்குழந்தையுடன் உரையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. உங்களை பார்க்கணும்னு தோணுச்சு அப்படியே வந்துட்டேன் என்று அந்த மழலை பேசுவதை விஜய் சேதுபதி ரசித்து அவருக்கு சாக்லேட்டை கொடுத்து அவரிடமிருந்து முத்தத்தை பெற்றுக் கொண்டு அனுப்பிவைத்தார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

    • பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
    • இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


    பார்த்திபன்-மணிரத்னம்

    பார்த்திபன்-மணிரத்னம்

    இந்நிலையில் இயக்குனர் மணிரத்னத்திடம் பொன்னியின் செல்வன் படம் தொடர்பாக பார்த்திபன் புதிய ஐடியா கொடுத்துள்ளதாக சமூக வலைத்தளத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார். அதில், மணிசாரிடம் ஒரு விருப்பம் தெரிவித்தேன். PS2-வுடன் PS1-ஐயும் ஒரு சில இடங்களில் வெளியிட்டால் தொடர்ச்சியாகப் பார்க்க வசதியாக இருக்குமென… அவர் பதில்… என்று குறிப்பிட்டு மணிரத்னம் கொடுத்த பதிலையும் இணைத்துள்ளார். அதன்படி பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தை சில இடங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக மணிரத்னம் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • நானி-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தசரா'.
    • இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தசரா'. இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியிருந்த இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    ரூ.௧௦௦ கோடி வசூல் செய்த தசரா படம்
    ரூ.௧௦௦ கோடி வசூல் செய்த தசரா படம்

    பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூலை குவித்து வருகிறது. இந்நிலையில் 'தசரா' திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக நடிகர் நானி சமூக வலைத்தளத்தின் வாயிலாக போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளார். மேலும் எங்களுடைய உழைப்பு.. உங்களுடைய பரிசு.. சினிமாவின் வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார். இப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தசரா திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • சாகுந்தலம் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டுள்ளது.

    இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள திரைப்படம் 'சாகுந்தலம்'. இப்படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.


    இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் சமந்தா மற்றும் சாகுந்தலம் படக்குழுவினர் ஐதராபாத்திலுள்ள ஸ்ரீ பேடம்மா தள்ளி கோவிலுக்கு சென்று படம் வெற்றி பெறுவதற்காக சிறப்பு பூஜை செய்தனர்.


    மேலும், இப்படத்தின் புரொமோஷன் பணிகளிலும் படக்குழுவினர் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். இதையடுத்து இப்படத்தின் புதிய டிரைலர் இன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. பார்ப்பதற்கு வண்ணமயமாக உள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.




    • தங்களிடம் பெற்ற கடனை செலுத்தாமல் வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிட விஷாலுக்கு தடை விதிக்க கோரி லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
    • ரூ.15 கோடியை உயர்நீதிமன்றம் தலைமைப் பதிவாளர் பெயரில் 3 வாரங்களில் வங்கியொன்றில் நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்ய வேண்டும் என விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, பைனான்சியர் அன்புச் செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். இந்த கடனை அடைத்த லைகா சினிமா நிறுவனம், பணத்தை திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று விஷாலுடன் ஒப்பந்தம் செய்திருந்தது. கடனை செலுத்தாமல் வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிட விஷாலுக்கு தடை விதிக்க கோரி லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.



    இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 15 கோடி ரூபாயை உயர்நீதிமன்றம் தலைமைப் பதிவாளர் பெயரில் 3 வாரங்களில் வங்கியொன்றில் நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்ய வேண்டும் என விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நேரில் ஆஜரான விஷால், இந்த உத்தரவை எதிர்த்து லைகா நிறுவனம் மேல்முறையீடு சென்றதால் தான் பணத்தை செலுத்தவில்லை என்றும், தனக்கு ஒரே நாளில் 18 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அதை அடைக்கவே படங்களில் நடித்துவருவதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து விஷாலின் விளக்கத்தையும், அவரது சொத்து விவரங்களையும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.



    இந்த வழக்கை எதிர்த்து விஷால் தரப்பு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை பொறுப்பு நீதிபதி ராஜா மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. இதில், ரூ.15 கோடியை நீதிமன்றத்தில் விஷால் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர். மேலும், இந்த தொகையை செலுத்தாவிட்டால் தனிநீதிபதியிடம் உள்ள உரிமையியல் வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படங்களை திரையரங்கு மற்றும் ஓடிடி தளங்களில் வெளியிட கூடாது என்று தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ×