சுயமாக எடுத்த முடிவுதான் இன்று இந்த நிலமைக்கு.. ட்ரெண்டாகும் சாகுந்தலம் டிரைலர்

சாகுந்தலம் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டுள்ளது.
சாகுந்தலம்
சாகுந்தலம்
Published on

இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள திரைப்படம் 'சாகுந்தலம்'. இப்படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் சமந்தா மற்றும் சாகுந்தலம் படக்குழுவினர் ஐதராபாத்திலுள்ள ஸ்ரீ பேடம்மா தள்ளி கோவிலுக்கு சென்று படம் வெற்றி பெறுவதற்காக சிறப்பு பூஜை செய்தனர்.

மேலும், இப்படத்தின் புரொமோஷன் பணிகளிலும் படக்குழுவினர் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். இதையடுத்து இப்படத்தின் புதிய டிரைலர் இன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. பார்ப்பதற்கு வண்ணமயமாக உள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com