என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது ‘ருத்ரன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

    நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் தற்போது நடித்திருக்கும் படம் ருத்ரன். இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

    ருத்ரன் இசை வெளியீட்டு விழா

    இப்படம் வருகிற 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், 'ருத்ரன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்றது. இதில் 3000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொண்டனர். இந்த படத்தின் இசை வெளியீட்டில் சிறப்பு விருந்தினராக இயக்குனர்கள் வெற்றி மாறன், லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டனர்.


    ருத்ரன் இசை வெளியீட்டு விழா

    இந்த நிகழ்ச்சியில் பல ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வரும் விஜய் டிவி பாலாவிற்கு ராகவா லாரன்ஸ் மேடையில் அவரது தாயார் கையில் ரூ. 10 லட்சம் நன்கொடையாக வழங்கினார். ராகவா லாரன்ஸ் ஏற்கனவே அவரது தாயார் பெயரில் அறக்கட்டளை ஒன்று நடத்தி ஊனமுற்றோர்களுக்கு உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ’பொன்னியின் செல்வன் -2’ திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் தொடர் அப்டேட்களால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது.


    இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. அதுமட்டுமல்லாமல், தொடர் அப்டேட்களால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


    ஏ.ஆர்.ரகுமான் ஸ்டுடியோவில் மணிரத்னம்

    இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் ஸ்டுடியோவில் 'பொன்னியின் செல்வன் -2' படத்திற்காக கம்போஸ் செய்யும் இசையை இயக்குனர் மணிரத்னம் ரசித்து கேட்கும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், இந்த வீடியோவில் இப்படத்தின் அடுத்த பாடலான 'வீர ராஜ வீர' பாடலின் லிரிக் வீடியோ விரைவில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


    • நடிகை ராஷ்மிகா தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    • இவர் விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக கிசுகிசு பரவி வருகிறது.

    தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடித்தார். தெலுங்கு, கன்னட மொழிகளில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடித்த புஷ்பா படம் ராஷ்மிகாவின் சினிமா பயணித்தில் திருப்புமுனையாக அமைந்தது. இந்தி மொழி படங்களிலும் நடிக்கிறார்.


    விஜய் தேவரகொண்டா -ராஷ்மிகா

    ஏற்கனவே கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியை ராஷ்மிகா காதலித்தார். 2017-ல் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் அடுத்த வருடமே கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணத்தை ரத்து செய்து பிரிந்தனர். பின்னர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைத்து பேசப்பட்டார். இருவரும் மாலத்தீவுக்கு ஜோடியாக சென்று வந்ததாகவும் கிசுகிசுக்கள் வந்தன.


    ராஷ்மிகா -விஜய் தேவரகொண்டா

    இதையடுத்து நடிகை ராஷ்மிகா தனது பிறந்த நாளின் போது வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவர் கையில் அணிந்திருந்த மோதிரம் விஜய் தேவரகொண்டாவின் விருப்பமான மோதிரம் என்றும் இருவரும் ஒரே வீட்டில் தங்கியுள்ளதாகவும் விரைவில் மகிழ்ச்சியான செய்தியை ராஷ்மிகா கூறுவார் என்றும் ஊடகம் ஒன்று செய்தியை வெளியிட்டிருந்தது.

    இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகை ராஷ்மிகா அந்த ஊடகம் வெளியிட்டிருந்த பதிவை பகிர்ந்து 'ரொம்ப யோசிக்காதீங்க' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

    • நடிகை பூர்ணா துபாய் தொழில் அதிபர் ஷனித் அசிப் அலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • சில தினங்களுக்கு முன்பு பூர்ணா வளைகாப்பு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

    தமிழில் பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, அருள் நிதியுடன் தகராறு, சசிகுமாரின் கொடி வீரன் மற்றும் கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி, காப்பான், சவரக்கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பூர்ணா, துபாய் தொழில் அதிபர் ஷனித் அசிப் அலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில தினங்களுக்கு முன்பு பூர்ணா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்ததையடுத்து வளைகாப்பு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

    குழந்தையுடன் பூர்ணா

    இந்நிலையில் நடிகை பூர்ணாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர் மருத்துவமனையில் கையில் குழந்தையை ஏந்தியபடி மருத்துவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பூர்ணா - ஷனித் அசிப் அலி தம்பதியினருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    • இயக்குனர் சிறுத்தை சிவா தற்போது இயக்கி வரும் திரைப்படம் ‘சூர்யா 42’.
    • இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.


    இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    சூர்யா 42போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, சூர்யா 42 படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி வருகிற 16-ஆம் தேதி காலை 9.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • விஜய் ஆண்டனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'பிச்சைக்காரன் -2'.
    • இப்படம் வருகிற 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' திரைப்படம் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார்.

    'பிச்சைக்காரன் -2' திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மாங்காடு மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜகணபதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அந்த புகார் மனுவில், "மாங்காடு மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான 'ஆய்வுக் கூடம்' திரைப்படத்தின் கருவையும், வசனத்தையும் விஜய் ஆண்டனி 'பிச்சைக்காரன் -2' திரைப்படத்திற்கு பயன்படுத்தியுள்ளதால் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தனக்கு நஷ்டஈடாக ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும்  கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சவுந்தர் இந்த மனுவுக்கு ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும் படி விஜய் ஆண்டனிக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்துள்ளார்.

    • நமக்காக யாரும் வந்து குரல் கொடுக்க மாட்டார்கள். காப்பாற்றவும் மாட்டார்கள்.
    • ஒரு இடத்திற்குத் தனியாகப் போக வேண்டும் என்றால் அதற்குத் தகுந்த பாதுகாப்போடும், துணிவோடும் தயாராக வேண்டும்.

    சமீபகாலமாக பெண்களுக்கு பெரிய திரையில் மட்டுமல்ல , சின்னத்திரையிலும் பாலியல் தொல்லை அதிகரித்திருக்கிறது. இதனை வாணி போஜன், பாண்டியன் ஸ்டோர் தீபிகா போன்றோர் வெளிப்படையாக பேசியிருக்கிறார்கள்.

    இந்த நிலையில் சரவணன் மீனாட்சி தொடர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி இது பற்றி கூறியதாவது, உலகம் தோன்றிய நாள் முதலாகவே இது இருந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தநிலை மாறும் என்பதெல்லாம் பொய். இது மாறவே மாறாது. மாறுமென்று ஆறுதலுக்காக வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். அதனால் நம்மை நாம்தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

    நமக்காக யாரும் வந்து குரல் கொடுக்க மாட்டார்கள். காப்பாற்றவும் மாட்டார்கள். ஒரு இடத்திற்குத் தனியாகப் போக வேண்டும் என்றால் அதற்குத் தகுந்த பாதுகாப்போடும், துணிவோடும் தயாராக வேண்டும். இல்லையென்றால் முன்னேற முடியாது. இக்கட்டான சூழல் வந்தால் நோ என்று சொல்லுங்கள். உங்களை மீறி எந்த தவறும் நடக்காது என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். இங்கே யாரும் யாருக்கும் உதவ மாட்டார்கள்.

    பெண் பிள்ளைகளை வெளியே அனுப்பி விட்டுப் பெற்றோர்கள் பயந்து நடுங்குகிறார்கள். மீண்டும் பழைய நிலை வந்து பெண்களை வீட்டிற்குள் பூட்டி விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. இதனை மாற்ற ஆண்கள் பெண்களுக்கு ஆதரவாக போர்க்குரல் கொடுக்க வேண்டும். அப்படி நடந்தால் பெண்களுக்கு நம்பிக்கை பிறந்து விடும். சரிநிகர் சமமான நிலை என்பது இதுதான என்றார் ரச்சிதா.

    • கலாஷேத்ரா கல்லூரியின் பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • ஹரிபத்மன் மிகவும் சிறந்த ஆசிரியர் என்று நடிகை அபிராமி கூறியுள்ளார்.

    சென்னை, கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்ததையடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், இந்த விவகாரத்தில் கலாஷேத்ரா மாணவிகள் பலி ஆடுகளாக ஆக்கப்படுகின்றனர் என்று நடிகை அபிராமி தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, "நானும் கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் மாணவி தான். பொதுவாக எந்தவொரு வன்கொடுமைகள் நடந்தாலும் யாரும் சொல்லாமலேயே குரல் கொடுப்பேன். கலாஷேத்ரா பற்றி சமூக வலைதளத்தில் பரவும் தகவல்களால் வேதனையடைந்தேன்.

    கலாஷேத்ரா ஆசிரியர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு ஹரிபத்மனுக்கு எதிராக பேசுமாறு கூறினார். பேராசிரியர் ஹரி பதமன் எங்களுக்கு வகுப்பெடுத்த வரை எந்தவித தொல்லையும் அளிக்கவில்லை. இந்த விவகாரத்தில் கலாஷேத்ரா மாணவிகள் பலி ஆடுகளாக ஆக்கப்படுகின்றனர். ஹரிபத்மன் மிகவும் சிறந்த ஆசிரியர்" என்று கூறினார்.

    • பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சலார்'.
    • இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

    கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் சலார் படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார்.


    சலார்

    சலார்

    இந்நிலையில் சலார் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற செப்டம்பர் 28ம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘சூர்யா 42’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.


    இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இதைத்தொடர்ந்து, சூர்யா 42 படத்தின் டைட்டில் மற்றும் டீசர் விரைவில் வெளியகாவுள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சூர்யா 42 படத்தின் டைட்டில் இணையத்தில் லீக்காகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு 'அக்னீஸ்வரன்' என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பான புகைப்படமும் வைரலாகி வருகிறது.


    சமூக வலைதளத்தில் வைரலாகும் டைட்டில்

    வழக்கமாக 'வி' செண்டிமெண்டை கடைப்பிடிக்கும் இயக்குனர் சிவா எப்படி இந்த படத்திற்கு 'அக்னீஸ்வரன்' என்று தலைப்பு வைத்தார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    • அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் ஜெய்-நயன்தாரா இணைந்து நடித்திருந்தனர்.
    • தற்போது ஜெய்-நயன்தாரா மீண்டும் இணைந்துள்ளனர்.

    2013ம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளியான படம் ராஜா ராணி. இப்படத்தில் நயன்தாரா, ஜெய், ஆர்யா, நஸ்ரியா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.


    புதிய அறிவிப்பு

    புதிய அறிவிப்பு

    ஜெய்-நயன்தாரா இணைந்து நடித்திருந்த இப்படத்திற்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்துள்ளனர். அதன்படி நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் தயாராகவுள்ள நயன்தாராவின் 75வது படத்தில் ஜெய் இணைந்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் ஜெய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்காக சிறப்பு போஸ்டர் வெளியிட்டு படக்குழு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

    • நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் நேற்று மேலவழுத்தூர் கிராமத்தில் உள்ள ஆற்றங்கரை காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றனர்.
    • கோவிலுக்கு வந்த நயன்தாராவிடம் பொன்னாடையை கொடுத்த போது அவர் அதை ஏற்க மறுத்து விட்டார்.

    நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். வாடகை தாய் மூலம் அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. தஞ்சை மாவட்டம் மேல வழுத்தூரில் உள்ள ஆற்றங்கரை காமாட்சி அம்மன் கோவில், இயக்குனர் விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதியினரின் குலதெய்வம் கோவில் ஆகும். குல தெய்வம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் முடிவு செய்தனர்.

    அதன்படி நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் நேற்று மேலவழுத்தூர் கிராமத்தில் உள்ள ஆற்றங்கரை காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றனர். நயன்தாரா வருவதை அறிந்த உள்ளூர் பிரமுகர்கள் அவருக்கு அணிவிப்பதற்காக பொன்னாடை வாங்கி வைத்து காத்து இருந்தனர். கோவிலுக்கு வந்த நயன்தாராவிடம் பொன்னாடையை கொடுத்த போது அவர் அதை ஏற்க மறுத்து விட்டார்.

    மேலும் குலதெய்வம் கோவில் சிறியதாக இருந்ததால் கோவிலுக்குள் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் போலீசார் மட்டுமே நின்று கொண்டிருந்தனர். நயன்தாரா கோவிலில் சாமி கும்பிட்ட போது வெளியில் நின்ற புகைப்பட கலைஞர்கள் உள்ளே வந்து அவரை புகைப்படம் எடுக்க முயன்றனர். போட்டோவுக்கு போஸ் கொடுக்குமாறு கூறினார்கள். அப்போது நயன்தாரா கோபம் அடைந் தார். இதைப் பார்த்த விக்னேஷ் சிவன் புகைப்பட கலைஞர்களிடம் சற்று வெளியே காத்திருக்குமாறு கூறினார். நயன்தாராவும் புகைப்பட கலைஞர்களிடம், "சாமி கும்பிடத்தான் கோவிலுக்கு வந்திருக்கிறோம்" என்று கூறினார்.

    இதையடுத்து புகைப்பட கலைஞர்கள் வெளியே காத்திருந்தனர். இதற்கிடையே அங்கு வழிபாட்டை முடித்துக் கொண்டு நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் அதே பகுதியில் உள்ள ஐராதீஸ்வரர் கோவிலுக்கு சென்றனர். ஏற்கனவே கிராம மக்கள் திரண்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் கோவிலுக்குள் சென்றதும் கோவிலின் முன்பக்க கதவு பூட்டப்பட்டது.

    நயன்தாராவை காண கோவிலுக்கு வெளியே கிராம மக்கள், ரசிகர்கள், கல்லூரி மாணவிகள் காத்திருந்தனர். கோவிலில் தரிசனம் முடிந்து வெளியே வந்த நயன்தாரா கிராம மக்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பார்த்து சிரித்தபடி கையசைத்தார். அப்போது கிராம மக்கள், மாணவிகள், ரசிகர்கள் அனைவரும் நயன்தாராவை தங்களின் செல்போனில் படம் பிடித்தனர்.

    பின்னர் நயன்தாராவுடன் கல்லூரி மாணவிகள் ஒன்றாக நின்று செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது ஒரு மாணவி, நயன்தாராவின் தோளில் கை போட்டு செல்பி எடுக்க முயன்றார். அவரை நயன்தாரா சத்தம் போட்டார். பின்னர் நயன்தாரா காரில் ஏறி புறப்பட்டார்.

    அப்போது அங்கிருந்த மக்கள் நயன்தாராவிடம் செல்பி எடுத்துக் கொண்டனர். 'உங்களது படங்கள் ஒன்று விடாமல் எல்லாவற்றையும் பார்த்து விடுவோம்' என்று நயன்தாராவிடம் கூறினார்கள். அதைக் கேட்டு அவர் மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் அவரை சிரித்தபடியே வழியனுப்பி வைத்தனர். அதன்பிறகு நயன்தாரா அங்கிருந்து திருச்சி ரெயில் நிலையம் வந்தார். நயன்தாரா வருவதை கேள்விப்பட்டதும் அவரை பார்க்க ரெயில் நிலையத்தில் ரசிகர்கள் திரண்டனர். நயன்தாரா ரெயிலில் ஏற வந்தபோது ரசிகர்கள் அவரை நோக்கி முண்டியடித்தனர். அனைவரும் செல்போனில் அவரை படம் பிடித்தனர். சிலர் செல்பி எடுக்கவும் முயன்றனர்.

    இதனால் நயன்தாரா கோபத்துடன் காணப்பட்டார். ஒரு வழியாக நயன்தாரா கூட்டத்தை மீறி ரெயிலுக்குள் ஏறினார். அங்கும் ஒரு ரசிகர் தனது செல்போனில் நயன்தாராவிடம் செல்பி எடுக்க முயன்றார். இதனால் அவரை முறைத்து பார்த்த நயன்தாரா தன்னை படம் பிடிக்க கூடாது என்றார். ஆனாலும் அவர் தொடர்ந்து நயன்தாராவிடம் செல்பி எடுக்க முயன்றார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த நயன்தாரா, அவரிடம் செல்பி எடுத்தால் செல்போனை உடைத்து விடுவேன் என்று எச்சரித்தார். அதன்பிறகு அந்த ரசிகர் அங்கிருந்து சென்றார். பின்னர் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ரெயிலில் சென்னை திரும்பினார்கள்.

    ×