'வி' செண்டிமெண்டை கைவிட்ட இயக்குனர் சிவா.. இணையத்தில் லீக்கான 'சூர்யா 42' டைட்டில்

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘சூர்யா 42’.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சிறுத்தை சிவா
சிறுத்தை சிவா
Published on

'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து, சூர்யா 42 படத்தின் டைட்டில் மற்றும் டீசர் விரைவில் வெளியகாவுள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சூர்யா 42 படத்தின் டைட்டில் இணையத்தில் லீக்காகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு 'அக்னீஸ்வரன்' என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பான புகைப்படமும் வைரலாகி வருகிறது.

சமூக வலைதளத்தில் வைரலாகும் டைட்டில்

வழக்கமாக 'வி' செண்டிமெண்டை கடைப்பிடிக்கும் இயக்குனர் சிவா எப்படி இந்த படத்திற்கு 'அக்னீஸ்வரன்' என்று தலைப்பு வைத்தார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com