மீண்டும் நயன்தாராவுடன் இணைந்த ஜெய்

அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் ஜெய்-நயன்தாரா இணைந்து நடித்திருந்தனர்.தற்போது ஜெய்-நயன்தாரா மீண்டும் இணைந்துள்ளனர்.
ஜெய் - நயன்தாரா
ஜெய் - நயன்தாரா
Published on

2013ம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளியான படம் ராஜா ராணி. இப்படத்தில் நயன்தாரா, ஜெய், ஆர்யா, நஸ்ரியா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

புதிய அறிவிப்பு
புதிய அறிவிப்பு

புதிய அறிவிப்பு

ஜெய்-நயன்தாரா இணைந்து நடித்திருந்த இப்படத்திற்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்துள்ளனர். அதன்படி நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் தயாராகவுள்ள நயன்தாராவின் 75வது படத்தில் ஜெய் இணைந்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் ஜெய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்காக சிறப்பு போஸ்டர் வெளியிட்டு படக்குழு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com