என் மலர்
நீங்கள் தேடியது "கல்யான் கிருஷ்ணன்"
- இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த மார்ச் 10ம் தேதி வெளியான படம் ‘அகிலன்’.
- இப்படத்தை விளம்பரப்படுத்த வித்யாசமான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த மார்ச் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'அகிலன்'. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். மேலும் சிராக் ஜானி, ஹரீஷ் பெராடி, தருண் அரோரா, மதுசூதன் ராவ் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அகிலன் படத்தின் விளம்பர நிகழ்ச்சி
இந்நிலையில் ஜீ5 ஓடிடி தளத்தின் சமீபத்திய வெளியீடான 'அகிலன்' படத்தின் 30 மில்லியன் பார்வை நிமிடங்களை கொண்டாடும் விதமாக, ஒரு வித்தியாசமான விளம்பர நிகழ்வை சென்னை மெரினா மாலில் நடத்தியது. அந்நிகழ்வில் 'அகிலன்' படத்தின் கதைக்கருவில் வரும் கப்பல் நங்கூரம் செயற்கையாக உருவாக்கப்பட்டு, இந்த நங்கூரத்தை குறிப்பிட்ட நேரம் தூக்கி வைத்திருப்பவர்களுக்கு ஒரு வருடத்திற்கான ஜீ5 தளத்தின் சந்தா இலவசமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் 5000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டு ஜீ5 தளத்தின் ஒரு வருட வாடிக்கையாளர் சந்தாவை வென்றுள்ளனர்.






