தேர்தலில் போட்டியிடவில்லை.. பாஜகவிற்காக செயல்படுவேன்.. நடிகர் கிச்சா சுதீப்

நடிகர் கிச்சா சுதீப் பாஜக கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பானது.இவர் பாஜக கட்சிக்காக பரப்புரை செய்வேன் என்று கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார்.
கிச்சா சுதீப்
கிச்சா சுதீப்
Published on

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப், 1997 ஆண்டு வெளியான தயாவ்வா என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நான் ஈ படத்தின் மூலம் மிகவும் பிரலமடைந்த சுதீப், விஜய்யின் புலி படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் வெளியான விக்ராந்த் ரோனா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

கிச்சா சுதீப்
கிச்சா சுதீப்

கிச்சா சுதீப்

கடந்த மாதம் தனக்கு அரசியல் அழைப்புகள் வருவதாக நடிகர் சுதீப் தெரிவித்திருந்த நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபலங்கள் அவரை சந்தித்து பேசியிருந்தது பெரிதளவில் பேசப்பட்டது. கிச்சா சுதீப், இன்று பாஜக கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி சினிமா வட்டாரங்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரங்கள் மத்தியிலும் பரப்பானது.

இந்நிலையில் பாஜக கட்சிக்காக பரப்புரை மட்டும் செய்வேன். தேர்தலில் போட்டியிடவில்லை என்று கிச்சா சுதீப் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com