சாதனை படைக்க தயாராகும் 'பிதா' படக்குழு

இயக்குனர் சுகன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பிதா’.இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 7-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.
பிதா படக்குழு
பிதா படக்குழு
Published on

இயக்குனர் சுகன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'பிதா'. இப்படத்தின் மூலம் சுகன் இயக்குனராக அறிமுகமாகிறார். அனு, ஆதேஷ் பாலா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் அருள்மணி, நகைச்சுவை நடிகர் சாம்ஸ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

விச்சூர் எஸ் சங்கர் தயாரிக்கும் இப்படத்திற்கு நரேஷ் இசையமைக்கிறார். இளையராஜா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கவுள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பு முடிந்த தினமே, டப்பிங், எடிட்டிங், ரீ-ரெக்கார்டிங், பின்னணி இசை போன்ற அனைத்து வேலைகளையும் அன்றே முடித்து விட்டு மறுநாள் 8-ம் தேதி படத்தை திரையிட்டு சாதனை படைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஐந்து இடங்களில் நடைபெறவுள்ளதாகவும் முதல் நாள் காலை துவங்கும் படப்பிடிப்பு நள்ளிரவு வரை தொடரும் எனவும் படத்தில் 80 சதவிகிதம் நைட் எஃபெக்ட் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் குறித்து இயக்குனர் சுகன் கூறியதாவது, "இயக்குனராக வருகிறோம் , ஏதாவது புதுமையாக இருக்க வேண்டும், ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்க வேண்டும், யார் இந்த சுகன் என்று படவுலகம் திரும்பி பார்க்க வேண்டும்… என்ற ஒரே ஒரு சின்ன ஆசை தான்" என்று கூறினார்.

இதுவரை எட்டு குறும்படங்களை இயக்கியுள்ள இயக்குனர் சுகன். பிரபல நடன இயக்குனர் கலாவிடம் ஆறு ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றியுள்ளார். மேலும், உளவுத்துறை, ஜனனம், கலவரம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ரமேஷ் செல்வனிடம் உதவி- துணை இணை- இயக்குனராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com