என் மலர்
சினிமா செய்திகள்

திருவின் குரல்
போர்களும் இங்கே தீராதோ.. போர்க்கள ரத்தம்.. வைரலாகும் திருவின் குரல் டிரைலர்
- இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'திருவின் குரல்'.
- இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
வம்சம், மௌனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13 உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் அருள்நிதி. இவர் தற்போது தமிழில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், வடசென்னை, எந்திரன் 2.0, டான் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'திருவின் குரல்' படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை ஹரிஷ் பிரபு இயக்கவுள்ளார். மேலும் ஆத்மிகா கதாநாயகியாக நடிக்க பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். விக்ரம் வேதா படத்தின் மூலம் பிரபலமடைந்த சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இதையடுத்து இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது அதன்படி, இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 'திருவின் குரல்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.






