படப்பிடிப்பை நிறைவு செய்த சந்தானம் படக்குழு

இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கி வரும் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’.இந்த படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார்.
சந்தானம்
சந்தானம்
Published on

'டிக்கிலோனா' படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், மேகா ஆகாஷ், ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வடக்குப்பட்டி ராமசாமி போஸ்டர்

பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 63 நாட்கள் ஓய்வின்றி நடைபெற்று வந்த 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதனை இயக்குனர் கார்த்திக் யோகி தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com