திருப்பதியில் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம்

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ரேயா.இவர் திருப்பதியில் கோவிலுக்கு தனது குடும்பத்தினருடன் சென்றார்.
ஸ்ரேயா
ஸ்ரேயா
Published on

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ஸ்ரேயா, திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு தனது குடும்பத்தினருடன் திருமலைக்கு சென்றார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். அதன்பின்னர் திருமலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் நடிகை ஸ்ரேயா தங்கினார்.

வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் தனது குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசனம் செய்த, பின்னர் கோவிலில் உள்ள ரங்கநாயக்கர் மண்டபத்தில் அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதங்கள் வழங்கினர். கோவிலில் இருந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது, குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த மாதம் 12-ந் தேதி நான் நடித்த திரைப்படம் வெளியாகிறது. அந்தப் படம் நன்றாக ஓடி வசூலை குவிக்க வேண்டும் என ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டதாக தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com