புதிய படத்தில் ஒப்பந்தமான ராஷ்மிகா மந்தனா.. வைரலாகும் போஸ்டர்

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.தற்போது ராஷ்மிகா புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ராஷ்மிகா மந்தனா 
ராஷ்மிகா மந்தனா 
Published on

தெலுங்கில் வெளியான புஷ்பா படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்த நடிகை ராஷ்மிகா, தமிழில் கார்த்தியின் சுல்தான் மற்றும் விஜய்யின் வாரிசு படத்தில் நடித்துள்ளார். மேலும் கன்னடம், இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும், இந்தியில் அனிமல் படத்திலும் நடித்து வருகிறார்.

ராஷ்மிகா மந்தனா 
ராஷ்மிகா மந்தனா 

ராஷ்மிகா மந்தனா 

இந்நிலையில் ராஷ்மிகா நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அறிமுக இயக்குனர் சாந்தரூபன் இயக்கவிருக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு 'ரெயின்போ' என்று பெயரிடப்பட்டுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெயின்போ
ரெயின்போ

ரெயின்போ

இப்படத்தின் கதாநாயகனாக சமந்தாவின் சாகுந்தலம் படத்தில் நடித்துள்ள நடிகர் தேவ் மோகன் நடிக்கவுள்ளார். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் 7ம் தேதி தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com