இணையத்தில் வைரலாகும் ருத்ரன் பட உன்னோடு வாழனும் பாடல்

ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி இணையத்தி வைரலாகி வருகிறது.
உன்னோடு வாழனும் பாடல்
உன்னோடு வாழனும் பாடல்
Published on

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் தற்போது நடித்திருக்கும் படம் ருத்ரன். இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

ருத்ரன்
ருத்ரன்

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. மேலும் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

உன்னோடு வாழனும் பாடல்
உன்னோடு வாழனும் பாடல்

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் 'ருத்ரன்' படத்தின் மூன்றாவது பாடலான உன்னோடு வாழனும் பாடல் ஏப்ரல் 01ம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அறிவித்தபடி இப்படத்தின் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடகர் சித்ஸ்ரீராம் குரலில் கபிலன் வரிகளில் வெளியான இப்பாடல் இணையத்தில் பலராலும் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.

ருத்ரன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com