என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • வெற்றிமாறன் இயக்கத்தில் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியான படம் விடுதலை.
    • இப்படம் ஓடிக் கொண்டிருந்த திரையரங்கில் பாதியில் படம் நிறுத்தப்பட்டது.

    இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி-விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியான படம் விடுதலை. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் 'ஏ' சான்றிதழ் பெற்றிருந்தது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐநாக்ஸ் திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்த இப்படத்தை போலீசார் பாதியில் நிறுத்தி 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் என்பதால் சிறுவர்களை அனுமதிக்க முடியாது என்று கூறி படம் பார்க்க வந்த சிறுவர்களை வெளியே செல்ல கேட்டுக்கொண்டனர்.

     

    விடுதலை

    விடுதலை

    இதனால் கோபமடைந்த பெற்றோர்கள் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர். அப்போது வளர்மதி என்ற பெண் தங்கள் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான படத்தை காண்பிக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு தெரியும் என்றும், இப்படம் ஆபாச காட்சிகளுக்காக 'ஏ' சான்றிதழ் வழங்கவில்லை மாறாக வன்முறை காட்சிகள் இடம்பெற்றிருப்பதாலே 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.


    வாக்குவாத்தில் ஈடுப்பட்ட வளர்மதி
    வாக்குவாத்தில் ஈடுப்பட்ட வளர்மதி

    இந்நிலையில் திரையரங்கில் 'ஏ' சான்று வழங்கப்பட்ட 'விடுதலை'படத்தை, தனது குழந்தைகளுடன் பார்க்க அனுமதிக்குமாறு வாக்குவாதம் செய்த வளர்மதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொது இடத்தில் இடையூறு ஏற்படுத்துதல், அத்துமீறி உள்ளே நுழைதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    • நரிக்குறவர்களை டிக்கெட் இருந்தும் திரையரங்கத்தில் அனுமதிக்காத விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • இது தொடர்பாக இயக்குனர் பார்த்திபன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை சென்னை ரோகிணி திரையரங்கில் ஊழியர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர். டிக்கெட் இருந்தும் அவர்களை அனுமதிக்காததை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி பேசுப்பொருளாகியுள்ளது.


    அனுமதிக்கப்படாத நரிக்குறவர்கள்
    அனுமதிக்கப்படாத நரிக்குறவர்கள்

    இதையடுத்து யு/ஏ சான்றிதழ் அனுமதி பெற்ற படம் என்பதால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை, வந்தவர்கள் 2,6,8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், பின்னர் உரிய நேரத்தில் அவர்கள் படம் பார்த்ததாக ரோகிணி திரையரங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.


    பார்த்திபன்

    பார்த்திபன்

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், குறவர் என யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். சமமாய் மதித்து இருக்கை தர வேண்டுமென 2000-ல் தேசிய விருது பெற்ற 'house full' என்ற என் படத்தில் காட்சி படுத்தியிருக்கிறேன் என்று பார்த்திபன் பதிவிட்டு ஹவுஸ் ஃபுல் படத்தின் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

    • இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
    • இப்படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் வாயிலாக பாராதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் தமிழில் தாஜ்மகால் படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், ஈர நிலம், மகா நடிகன், வாய்மை, மாநாடு உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.


    மனோஜ் - மணிரத்னம் - சுசீந்திரன்
    மனோஜ் - மணிரத்னம் - சுசீந்திரன்

    மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்தில் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். இவர் இயக்கவிருக்கும் படத்தில் புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கவுள்ளனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜா நடிக்க உள்ளார். ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கவுள்ளது.


    மார்கழி திங்கள்
    மார்கழி திங்கள்

    இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு 'மார்கழி திங்கள்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் தொடங்க உள்ளது. மேலும் படப்பிடிப்பை தேனி மற்றும் மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படம் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    • உர்பி ஜாவேத் வித்தியாசமான கவர்ச்சி ஆடைகள் அணிந்து தன்னை தனித்துவமாக காட்டி வருகிறார்.
    • தற்போது தான் அணியும் ஆடைகள் பலரது உணர்வுகளை புண்படுத்துவதாக பதிவிட்டுள்ளார்.

    இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமடைந்தவர் நடிகை உர்பி ஜாவேத். உர்பி ஜாவேத் வித்தியாசமான கவர்ச்சி ஆடைகள் அணிந்து தன்னை தனித்துவமாக காட்டி வருகிறார். குறிப்பாக கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள், நூல் போன்றவற்றை ஆடைபோல் மாற்றி உடலை மறைத்து எடுத்து வெளியிட்ட புகைப்படங்கள் பெரிய அளவில் வைரல் ஆகின.

    உர்பி ஜாவேத் அணியும் கவர்ச்சி உடைகள் மாணவர்களை பாதிக்க செய்வதாக கண்டனங்களும் எழுந்துள்ளது. ஆனாலும் அவற்றை பொருட்படுத்தாமல் தொடர்ந்து இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது கவர்ச்சி உடைகள் அணிந்ததற்காக மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.


    உர்பி ஜாவேத்

    உர்பி ஜாவேத்

    இதுகுறித்து வலைத்தளத்தில் உர்பி ஜாவேத் வெளியிட்டுள்ள பதிவில், "நான் அணிந்த உடைகள் மூலம் பலரது உணர்வுகளை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் என்னை வேறு மாதிரியான உடையில் பார்ப்பீர்கள்'' என்று கூறியுள்ளார். அவரது முடிவை பலர் பாராட்டி உள்ளனர்.

    இன்னும் சிலர் உர்பி ஜாவேத் சொன்னதை நம்பாமல் ஏப்ரல் 1-ந் தேதி என்பதால் முட்டாளாக்க பொய் சொல்கிறார் என்று பதிவுகள் வெளியிட்டுனர். அதேபோன்று மற்றொரு பதிவில், ஏப்ரல் ஃபூல் நான் ரொம்ப சிறுபிள்ளைத்தனமா இருக்கிறேன் என்று எனக்கு தெரியும் என்று பதிவிட்டுள்ளார்.

    • ஒரு தலைமுறை இறந்துவிட்டது; ஒரு தலைமுறை மறந்துவிட்டது; கொஞ்சம் கொஞ்சம் ஞாபகத்தில்...
    • அறம் செய்து வாழ்வோம்; அன்பு செய்து போவோம் என்று கூறியுள்ளார்

    பிரபல திரைப்பாடலாசிரியர் வைரமுத்து இன்று தனது டுவிட்டர் பக்கத்தில்,


    பி.எஸ்.வீரப்பா

    எஸ்.ஏ.அசோகன்

    மேஜர் சுந்தரராஜன்

    ஜெய்சங்கர், நாகேஷ்

    கலை உலகில்

    என் நெருக்கமான நண்பர்கள்


    யார் நினைக்கிறார்கள்?

    ஒரு தலைமுறை இறந்துவிட்டது;

    ஒரு தலைமுறை மறந்துவிட்டது;

    கொஞ்சம் கொஞ்சம் ஞாபகத்தில்

    எல்லார்க்கும் இது நேரும்

    அறம் செய்து வாழ்வோம்;

    அன்பு செய்து போவோம் என்று கூறியுள்ளார்.

    • நடிகர் ரஜினி தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    • இவர் நிதா அம்பானியின் கலாச்சார மைய கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். திரைப்பிரபலங்கள் பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து லைகா தயாரிப்பில் மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் 'லால் சலாம்' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.


    திரையரங்கம்

    இவ்வாறு பல படங்களில் பிசியாக நடித்து வரும் ரஜினி சமீபத்தில் மும்பையில் அம்பானியின் மனைவி நிதா அம்பானியின் கலாச்சார மைய கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில், ரஜினி தன் நண்பர் அம்பானிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    ரஜினி பதிவு

    அதில், மும்பையில் உலக தரம் வாய்ந்த பிரம்மாண்ட திரையரங்கம் உருவாக்கியதற்கு என் நண்பர் முகேஷ் அம்பானிக்கு நன்றிகளும் வாழ்த்துகளும். நிதா அம்பானி ஜி இது போன்ற தேசபற்று மிகுந்த மனதை மயக்கும் நிகழ்ச்சியை வழங்கியதற்காக உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் நன்றி சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை. இந்த திரையரங்கில் ஒரு நாடகத்தில் நடிக்க வேண்டும் என்று எனக்கு கனவு உள்ளது. அது விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


    • தசரா திரைப்படம் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
    • இதில் நடிகை பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    நடிகை பூர்ணா, ஷனித் அசிப் அலி என்ற துபாய் தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டு திரையுலகிற்குத் தற்காலிக ஓய்வு கொடுத்துள்ளார். தற்போது கர்ப்பமாக இருக்கும் பூர்ணா, இந்த ரமலான் மாதத்தில் தன் குழந்தையின் வரவை எதிர்பார்த்து காத்திருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இவர் சமீபத்தில் வெளியான தசரா திரைப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷிற்காக தான் நடித்ததாக அவர் கூறியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், இதுபோன்ற சிறந்த திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமிதமாகவும் உணர்கிறேன். தசரா படக்குழுவினர் உடனான அனைத்து ஜாலியான தருணங்களையும் மிஸ் செய்கிறேன். ஆனாலும் நான் கீர்த்திக்காக இந்தப்படத்தில் நடிக்க விரும்பினேன் என்று கூறியிருக்கிறார்.


    • இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடுதலை’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது.

    வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'விடுதலை' திரைப்படம் நேற்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. 'விடுதலை' திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு மதுரை மக்கள் மேள தாளத்துடன் பால் குடம் எடுத்து சூரி பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.


    இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், 'விடுதலை' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் எல்ரெட்குமார் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சென்று சந்தித்து பூங்கொத்து கொடுத்துள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை படக்குழு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

    • இயக்குனர் மணிகண்டன் தற்போது புதிய வெப்தொடர் ஒன்றை இயக்குகிறார்.
    • இதில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    'காக்கா முட்டை', 'ஆண்டவன் கட்டளை', 'கடைசி விவசாயி' போன்ற படங்கள் மூலம் ரசிகர் மத்தியில் இடம் பிடித்தவர் இயக்குனர் எம். மணிகண்டன். இவர் தற்போது புதிய வெப் தொடர் ஒன்றை இயக்குகிறார். இதில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.



    7c's என்டர்டெயின்மென்ட் சார்பாக பி. ஆறுமுக குமார் தயாரிக்கும் இந்த வெப் தொடருக்கு இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசையமைக்க, சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு நேற்று மதுரை அருகே உள்ள உசிலம்பட்டியில் எளிமையான பூஜையுடன் துவங்கியது.

    கடைசி விவசாயி படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி -மணிகண்டன் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் இந்த வெப்தொடர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும், இந்த வெப்தொடர் நேரடியாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’விடுதலை’.
    • இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

    வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விடுதலை'. இப்படத்தின் சூரி, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருந்தார். விடுதலை' திரைப்படம் நேற்று ரசிகர்களின் கொண்டாட்டத்தோடு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    விடுதலை

    இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் தனது உதவி இயக்குனர்களுக்கு வித்தியாசமான பரிசு கொடுத்துள்ளார். அதாவது, உதவி இயக்குனர்கள் 25 பேருக்கு செங்கல்பட்டு மாவட்டத்தை அடுத்து உள்ள உத்திரமேரூர் என்ற பகுதியில் ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கி கொடுத்திருப்பதாகவும் இந்த நிலத்தை எந்த காரணத்தை கொண்டும் விற்பனை செய்யக்கூடாது என்றும் வீடு கட்டி அல்லது விவசாயம் செய்ய பயன்படுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    பைக், கார் போன்ற ஆடம்பர பரிசுகள் கொடுக்கும் திரையுலகினர் மத்தியில் வெற்றிமாறன் வித்தியாசமாக நிலம் வாங்கி கொடுத்திருப்பதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் ரஜினி பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    • இவர் சமீபத்தில் மும்பைக்கு தனது மகள் சவுந்தர்யாவோடு சென்றார்.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். திரைப்பிரபலங்கள் பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து லைகா தயாரிப்பில் மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் 'லால் சலாம்' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.


    ரஜினி -சவுந்தர்யா

    இவ்வாறு பல படங்களில் பிசியாக நடித்து வரும் ரஜினி சமீபத்தில் மும்பைக்கு விமானத்தில் பறந்தார். அதாவது, அம்பானியின் மனைவி நிதா அம்பானி மும்பையில் கலாச்சார மைய கட்டிடம் ஒன்றை கட்டியுள்ளார். இதனை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது மகள் சவுந்தர்யாவும் உடன் இருந்தார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


    • வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விடுதலை'.
    • இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

    வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'விடுதலை' திரைப்படம் நேற்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. 'விடுதலை' திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு மதுரை மக்கள் மேள தாளத்துடன் பால் குடம் எடுத்து சூரி பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.


    விடுதலை

    இந்நிலையில், இப்படத்தை பார்த்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தோழர் வெற்றிமாறன் அவர்களின் விடுதலை திரைப்படம் பார்த்தேன். அரசு -அதிகாரம் -ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்களை விவரிக்கிறது. அரசு என்றால் அதிகாரம்; அதிகாரம் என்றால் ஆயுதம்; ஆயுதம் என்றால் ஆணவம்; ஆணவம் என்றால் எளிய மக்களின் குருதியைச் சுவைக்கும் குரூரமான ஒடுக்குமுறை என்பதை அங்குலம் அங்குலமாக அம்பலப்படுத்துகிறது.


    தொல். திருமாவளவன் -வெற்றிமாறன்

    மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயுதம் தாங்கிய குழு எவ்வாறு ஆளும் வர்க்கத்துடன் எதிர்வினையாற்றுகிறது என்பதையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஆழமான உரையாடலுக்கு உட்படுத்துகிறது. தோழர் வெற்றி மாறன் அவர்கள் ஒரு படைப்பாளராக மட்டுமின்றி வர்க்க முரண்களை விவரிக்கும் பேராசிரியராகவும் வெளிப்படுகிறார். மக்களை அமைப்பாக்குவதும் அரசியல்படுத்துவதும் இன்றியமையாத ஒரு தேவை என்பதை உணர்த்துகிறார். வழக்கம் போல இது 'வெற்றிமாறன் படைப்பு' என முத்திரை பதித்துள்ளார். வெல்க_விடுதலை" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


    ×