என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் ரஜினி பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    • இவர் சமீபத்தில் மும்பைக்கு தனது மகள் சவுந்தர்யாவோடு சென்றார்.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். திரைப்பிரபலங்கள் பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து லைகா தயாரிப்பில் மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் 'லால் சலாம்' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.


    ரஜினி -சவுந்தர்யா

    இவ்வாறு பல படங்களில் பிசியாக நடித்து வரும் ரஜினி சமீபத்தில் மும்பைக்கு விமானத்தில் பறந்தார். அதாவது, அம்பானியின் மனைவி நிதா அம்பானி மும்பையில் கலாச்சார மைய கட்டிடம் ஒன்றை கட்டியுள்ளார். இதனை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது மகள் சவுந்தர்யாவும் உடன் இருந்தார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


    • வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விடுதலை'.
    • இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

    வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'விடுதலை' திரைப்படம் நேற்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. 'விடுதலை' திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு மதுரை மக்கள் மேள தாளத்துடன் பால் குடம் எடுத்து சூரி பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.


    விடுதலை

    இந்நிலையில், இப்படத்தை பார்த்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தோழர் வெற்றிமாறன் அவர்களின் விடுதலை திரைப்படம் பார்த்தேன். அரசு -அதிகாரம் -ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்களை விவரிக்கிறது. அரசு என்றால் அதிகாரம்; அதிகாரம் என்றால் ஆயுதம்; ஆயுதம் என்றால் ஆணவம்; ஆணவம் என்றால் எளிய மக்களின் குருதியைச் சுவைக்கும் குரூரமான ஒடுக்குமுறை என்பதை அங்குலம் அங்குலமாக அம்பலப்படுத்துகிறது.


    தொல். திருமாவளவன் -வெற்றிமாறன்

    மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயுதம் தாங்கிய குழு எவ்வாறு ஆளும் வர்க்கத்துடன் எதிர்வினையாற்றுகிறது என்பதையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஆழமான உரையாடலுக்கு உட்படுத்துகிறது. தோழர் வெற்றி மாறன் அவர்கள் ஒரு படைப்பாளராக மட்டுமின்றி வர்க்க முரண்களை விவரிக்கும் பேராசிரியராகவும் வெளிப்படுகிறார். மக்களை அமைப்பாக்குவதும் அரசியல்படுத்துவதும் இன்றியமையாத ஒரு தேவை என்பதை உணர்த்துகிறார். வழக்கம் போல இது 'வெற்றிமாறன் படைப்பு' என முத்திரை பதித்துள்ளார். வெல்க_விடுதலை" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


    • முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'.
    • இந்த படத்தில் ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. இதில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்கிறார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.


    காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்

    இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த டீசரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.



    • சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தில் தமிழர்கள் நாகரிகத்தை விளக்கும் பல்வேறு பொருட்கள் காட்சிபடுத்தப் பட்டுள்ளது.
    • இதனை தினமும் ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தில் தமிழர்கள் நாகரிகத்தை விளக்கும் பல்வேறு பொருட்கள் காட்சிபடுத்தப் பட்டுள்ளது. இதனை தினமும் ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர். கீழடி அருங்காட்சியகத்தை ஏராளமான திரைப்பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும், வெளிநாட்டு தூதுவர்களும் பார்த்து செல்கின்றனர்.

    இந்நிலையில் இன்று தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான சூர்யா தனது மனைவி ஜோதிகா, தந்தை சிவக்குமார் மற்றும் உறவினர்களுடன் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அப்போது மதுரை எம்.பி. சு.வெங்க டேசன் உடன் இருந்தார். அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை தொல்லியல் துறை அதிகாரிகள் சிவக்குமார், சூர்யா, ஜோதிகா ஆகியோருக்கு விளக்கி கூறினர். அதனை அவர்கள் ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டனர்.

    • ரோகிணி திரையரங்கம் விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்தின் அதிகாரி எஸ்.பி. மகேஸ்வரன் தலைமையில் விசாரணை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியது.
    • இதற்காக சென்னை, ரோகிணி திரையரங்கத்தின் வளாகத்திற்கு பாதிக்கப்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த 4 பேர் அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

    சென்னை ரோகிணி திரையரங்கில் பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை ஊழியர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர். டிக்கெட் இருந்தும் அவர்களை அனுமதிக்காததை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி பேசுப்பொருளாகியுள்ளது.

    இதையடுத்து நரிக்குறவர்களை அனுமதிக்காததற்கான காரணம் குறித்து ரோகிணி திரையரங்கம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், யு/ஏ சான்றிதழ் அனுமதி பெற்ற படம் என்பதால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வந்தவர்கள் 2,6,8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் உரிய நேரத்தில் அவர்கள் படம் பார்த்ததாக திரையரங்க நிர்வாகம் வீடியோ ஒன்றை வெளியிட்டது.

    இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபர்களிடம் மாநில மனித உரிமை ஆணையத்தின் அதிகாரி எஸ்.பி. மகேஸ்வரன் தலைமையில் விசாரணை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியது. இதற்காக சென்னை, ரோகிணி திரையரங்கத்தின் வளாகத்திற்கு பாதிக்கப்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த 4 பேர் அழைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவம் தொடர்பாக ரோகிணி திரையரங்க உரிமையாளரிடமும் விசாரணை நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இச்சம்பவம் கண்டிக்கத்தக்கது என்றும் அந்த மக்களிடம் நிச்சயம் இது குறித்து பேசுவேன் என்றும் கூறினார்.

    • நானி நடித்துள்ள ’தசரா’ திரைப்படம் கடந்த 30-ஆம் தேதி வெளியானது.
    • இப்படத்திற்கு தொடர்ந்து மக்கள் ஆதரவை கொடுத்து வருகின்றனர்.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடித்துள்ள 'தசரா' திரைப்படம் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    தசரா போஸ்டர்

    பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'தசரா' திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் உலக அளவில் ரூ. 53 கோடியை வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து உற்சாகத்துடன் தெரிவித்துள்ளது.


    • இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வணங்கான்’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது 'வணங்கான்' என்ற படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    ரோஷினி பிரகாஷ் - அருண் விஜய்

    ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, சில்வா இந்த படத்திற்கு ஆக்ஷன் காட்சிகளைக் கையாண்டுள்ளார். இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்து விட்டதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த முதல் ஷெட்யூலில் படக்குழு முக்கிய காட்சிகளை படமாக்கியுள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் ஏப்ரல் 17-ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் 'ஆருத்ரா கோல்டு' நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
    • ஆர்.கே.சுரேஷ் 2 மாதமாக வெளிநாட்டில் தங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை அமைந்தகரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த 'ஆருத்ரா கோல்டு' நிறுவனம் தமிழகம் முழுவதும் கிளைகளை தொடங்கி தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக கவர்ச்சிகரமாக அறிவித்தனர்.

    இதனை நம்பி தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் 'ஆருத்ரா கோல்டு' நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இதன் மூலம் பொதுமக்களிடம் முதலீடாக பெற்ற ரூ.2,438 கோடி மோசடி செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் ஏற்கனவே அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டனர். ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் வங்கி கணக்குகள், சொத்துக்கள் முடக்கப்பட்டன. இதுதொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே 8 பேர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் ஆருத்ரா நிறுவனத்தின் பண மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷிற்கு தொடர்பு இருப்பதாக பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    விசாரணையில் இருந்து தப்பிக்க ஆர்.கே.சுரேஷ் 2 மாதமாக வெளிநாட்டில் தங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    ஏற்கனவே இந்த வழக்கில் கைதான நடிகர் ரூசோ அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    • போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்.
    • சமீபத்தில் இவரது சமூக வலைதள கணக்கு ஹேக் செய்யப்பட்டது.

    2012 -ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தை இயக்கி தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.


    விக்னேஷ் சிவன்

    இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இதைத்தொடர்ந்து இவர் 'லவ் டுடே' படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


    விக்னேஷ் சிவன் பதிவு

    இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் விக்னேஷ் சிவனின் சமூக வலைதள கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்த கணக்கை விக்னேஷ் சிவன் மீட்டெடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "என் சமூக வலைதள கணக்கு மீட்டெடுக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக நான் மிகவும் அமைதியாக இருந்தேன். என் கணக்கை ஹேக் செய்தவர்களுக்கு மிக்க நன்றி. அப்ப.. அப்ப.. பண்ணுங்க " என்று தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார்.


    • நானி-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'தசரா' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிமரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
    • வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை படம் இன்று வெளியானது.

    இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான படம் 'தசரா'. இதில் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியாகி ரூ.38 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது.


    தசரா

    தசரா

    இப்படத்திற்காக கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சூரி சமூக வலைத்தில் பதிவிட்டிருந்தார். அதில், என் அன்பு தங்கச்சி கீர்த்தி சுரேஷ், நானி, ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.


    விடுதலை

    விடுதலை

    இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. விடுதலை படத்திற்கு வாழ்த்து தெரிவித்தும், தசரா படத்திற்கு வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்தும் கீர்த்தி சுரேஷ் பதிவிட்டுள்ளார். அதில், மிக்க நன்றி அண்ணா! என் அன்பு அண்ணனின் விடுதலை திரைப்படம் பெறும் வெற்றிபெற உங்கள் அன்பு தங்கையின் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மாறி மாறி தங்களின் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட சூரி-கீர்த்தி சுரேஷின் பதிவுகளுக்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    • ரோகிணி திரையரங்கிற்கு பத்து தல படம் பார்க்க வந்த நரிக்குறவர்களை, ஊழியர்கள் அனுமதிக்க மறுத்த சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது.
    • இந்த சம்பவத்திற்கு பலர் சமூக வலைத்தளத்தின் வாயிலாக கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

    சென்னை ரோகிணி திரையரங்கில் நேற்று பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை ஊழியர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர். டிக்கெட் இருந்தும் அவர்களை அனுமதிக்காததை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி பேசுப்பொருளாகியுள்ளது.

    இதையடுத்து நரிக்குறவர்களை அனுமதிக்காததற்கான காரணம் குறித்து ரோகிணி திரையரங்கம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், யு/ஏ சான்றிதழ் அனுமதி பெற்ற படம் என்பதால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வந்தவர்கள் 2,6,8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் உரிய நேரத்தில் அவர்கள் படம் பார்த்ததாக திரையரங்க நிர்வாகம் வீடியோ ஒன்றை வெளியிட்டது.

    எனினும் இந்த சம்பவம் தொடர்பாக திரைப்பிரபலங்கள் பலர் தொடர்ந்து கண்டன குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர்களை அழைத்து விசாரணை நடத்த மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்துள்ளது. குறிப்பாக மாநில மனித உரிமை ஆணையத்தின் அதிகாரி எஸ்.பி. மகேஸ்வரன் தலைமையில் விசாரணை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்காக சென்னை, ரோகிணி திரையரங்கத்தின் வளாகத்திற்கு பாதிக்கப்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த 4 பேர் அழைகப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ரோகிணி திரையரங்க உரிமையாளரிடமும் விசாரணை நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்த ’விடுதலை’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
    • மதுரை மக்கள் சூரி பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

    வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'விடுதலை' திரைப்படம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. 'விடுதலை' திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு மதுரை மக்கள் மேள தாளத்துடன் பால் குடம் எடுத்து சூரி பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.


    விடுதலை

    இதையடுத்து மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் சூரியிடம் நேற்று ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர்களை அனுமதிக்காதது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இது குறித்து சூரி கூறியதாவது, "இந்த விஷயம் எனக்கு காலையில் தான் தெரியவந்தது. எல்லாரும் சமம் என்பதை உறுதிப்படுத்துவதற்காக தான் திரையரங்கமே வந்தது. திரையரங்கத்திற்கு நீ, நான் என்ற பாகுபாடு கிடையாது. இந்த சம்பவத்திற்காக நான் வருத்தப்படுகிறேன்" என்று கூறினார்.


    பத்திரிகையாளர்களை சந்தித்த சூரி

    மேலும், "தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் 'விடுதலை' படத்தில் நடித்தே எனக்கு பெருமை. இந்த படத்தில் யார் தேசிய விருது பெற்றாலும் அது நான் பெற்றதற்கு சமம் என்று கூறினார்.

    ×