என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்த ’விடுதலை’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
    • மதுரை மக்கள் சூரி பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

    வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'விடுதலை' திரைப்படம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. 'விடுதலை' திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு மதுரை மக்கள் மேள தாளத்துடன் பால் குடம் எடுத்து சூரி பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.


    விடுதலை

    இதையடுத்து மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் சூரியிடம் நேற்று ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர்களை அனுமதிக்காதது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இது குறித்து சூரி கூறியதாவது, "இந்த விஷயம் எனக்கு காலையில் தான் தெரியவந்தது. எல்லாரும் சமம் என்பதை உறுதிப்படுத்துவதற்காக தான் திரையரங்கமே வந்தது. திரையரங்கத்திற்கு நீ, நான் என்ற பாகுபாடு கிடையாது. இந்த சம்பவத்திற்காக நான் வருத்தப்படுகிறேன்" என்று கூறினார்.


    பத்திரிகையாளர்களை சந்தித்த சூரி

    மேலும், "தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் 'விடுதலை' படத்தில் நடித்தே எனக்கு பெருமை. இந்த படத்தில் யார் தேசிய விருது பெற்றாலும் அது நான் பெற்றதற்கு சமம் என்று கூறினார்.

    • ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் மூன்றாவது பாடல் நாளை வெளியாகவுள்ளது.

    நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் தற்போது நடித்திருக்கும் படம் ருத்ரன். இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.


    ருத்ரன்

    ருத்ரன்

    தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. மேலும் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.


    ருத்ரன் பாடல்

    ருத்ரன் பாடல்

    சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் 'ருத்ரன்' படத்தின் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் மூன்றாவது பாடலான உன்னோடு வாழனும் பாடல் நாளை (01.04.2023) வெளியாகவுள்ளது. இந்த பாடலை பாடகர் சித்ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்த பாடல் மூலம் ஜிவி பிரகாஷுடன் சித் ஸ்ரீராம் முதல் முறையாக இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    ருத்ரன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ரோகிணி திரையரங்கிற்கு பத்து தல படம் பார்க்க வந்த நரிக்குறவர்களை, ஊழியர்கள் அனுமதிக்க மறுத்த சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது.
    • இந்த சம்பவத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் சமூக வலைத்தளத்தின் வாயிலாக கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

    சென்னை ரோகிணி திரையரங்கில் நேற்று பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை ஊழியர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர். டிக்கெட் இருந்தும் அவர்களை அனுமதிக்காததை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது பெரும் சலசலப்பை உண்டாக்கியது. இந்த சம்பவத்திற்கு பலரும் அவர்களின் கண்டன குரல்களை பதிவு செய்து வந்தனர்.


    அனுமதி மறுத்த திரையரங்க ஊழியர்
    அனுமதி மறுத்த திரையரங்க ஊழியர்

    இதையடுத்து நரிக்குறவர்களை அனுமதிக்காததற்கான காரணம் குறித்து ரோகிணி திரையரங்கம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், யு/ஏ சான்றிதழ் அனுமதி பெற்ற படம் என்பதால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வந்தவர்கள் 2,6,8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் உரிய நேரத்தில் அவர்கள் படம் பார்த்ததாக திரையரங்க நிர்வாகம் வீடியோ ஒன்றை வெளியிட்டது. 


    வெற்றிமாறன்
    வெற்றிமாறன்

    இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் இந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளத்தின் வாயிலாக கண்டன குரல்களை பதிவு செய்துள்ளார். அதில், நூறு ஆண்டுகளுக்கு முன்பாக தீண்டாமையை உடைத்தெறிந்தது திரையரங்கம். ஆனால் இன்று உழைக்கும் எளிய மக்களை உள்ளே அனுமதிக்காமல் தீண்டாமையை கடைபிடித்தது ஆபத்தான போக்கு. எதிர்ப்பின் காரணமாக பின்னர் அனுமதி தந்திருந்த போதிலும், இப்படி ஒரு நிகழ்வு நடந்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    பாதிக்கப்பட்ட பெண் காவிரி அளித்த புகாரின் பேரில் ரோகிணி திரையரங்க ஊழியர் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தசரா'.
    • இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடித்துள்ள 'தசரா' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    தசரா போஸ்டர்

    பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், 'தசரா' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாளில் ரூ.38 கோடியை வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


    • நகைகள் காணவில்லை என்று விஜய்யேசுதாஸ் மனைவி தர்ஷணா பாலா போலீசில் புகாரளித்துள்ளார்.
    • இது தொடர்பாக போலீசார் வீட்டு பணியாளர்களை விசாரித்து வருகின்றனர்.

    பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன்  விஜய் யேசுதாஸ் வீடு சென்னை அபிராமிபுரத்தில் உள்ளது. இந்த வீட்டில் இருந்து கிட்டத்தட்ட 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் போனதாக அவரது மனைவி தர்ஷணா பாலா அபிராமிபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி இந்த தங்க நகைகளை பார்த்ததாகவும் அதன்பின்னர் பிப்ரவரி மாதம் வீட்டில் நகைகளை பார்த்தபோது காணவில்லை எனவும் வீட்டில் வேலை செய்யும் மேனகா மற்றும் பெருமாள் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக புகாரளித்துள்ளார்.

    இது தொடர்பாக அபிராமிபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.  வீட்டில் அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் மற்றும் வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் ஆகியோரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதே போன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் மாயமானது குறிப்பிடத்தக்கது.

    • டிக்கெட் இருந்தும் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்காத சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
    • இன்று காவல்துறை தரப்பில் நேற்று சிறப்பு காட்சிக்கான அனுமதியை திரையரங்கம் பெற்றுள்ளதா என்ற நோக்கில் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

    சென்னை ரோகிணி திரையரங்கில் நேற்று பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை டிக்கெட் இருந்தும் ஊழியர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த சம்பவத்திற்கு பலரும் அவர்களின் கண்டன குரல்களை இணையத்தில் பதிவு செய்து வந்தனர்.

    இதையடுத்து நரிக்குறவர்களை ஏன் திரையரங்கில் அனுமதிக்கவில்லை என்று ரோகிணி திரையரங்கம் சார்ப்பில் அறிக்கை ஒன்று வெளியானது. அதில், யுஏ சான்றிதழ் அனுமதி பெற்ற படம் என்பதால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வந்தவர்கள் 2,6,8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    பின்னர் உரிய நேரத்தில் அவர்கள் படம் பார்த்ததாக திரையரங்க நிர்வாகம் வீடியோ ஒன்றை வெளியிட்டது. மேலும், இந்த பிரச்சினை தொடர்பாக கோயம்பேடு போலீசார் மற்றும் தாசில்தார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து இன்று காவல்துறை தரப்பில் நேற்று சிறப்பு காட்சிக்கான அனுமதியை திரையரங்கம் பெற்றுள்ளதா என்ற நோக்கில் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நரிக்குறவர்களை திரையரங்கில் அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "டிக்கெட் இருந்தும் நாடோடிப் பழங்குடியினருக்குத் திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பிய பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது." என்று குறிப்பிட்டுள்ளது. இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


    • நேற்று பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை ஊழியர்கள் அனுமதிக்க மறுத்தனர்.
    • இந்த பிரச்சினை தொடர்பாக கோயம்பேடு போலீசார் மற்றும் தாசில்தார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    சென்னை ரோகிணி திரையரங்கில் நேற்று பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை ஊழியர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர். டிக்கெட் இருந்தும் அவர்களை அனுமதிக்காததை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த சம்பவத்திற்கு பலரும் அவர்களின் கண்டன குரல்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வந்தனர்.

    இதையடுத்து நரிக்குறவர்களை ஏன் திரையரங்கில் அனுமதிக்கவில்லை என்று ரோகிணி திரையரங்கம் சார்ப்பில் அறிக்கை ஒன்று வெளியானது. அதில், யுஏ சான்றிதழ் அனுமதி பெற்ற படம் என்பதால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வந்தவர்கள் 2,6,8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    பின்னர் உரிய நேரத்தில் அவர்கள் படம் பார்த்ததாக திரையரங்க நிர்வாகம் வீடியோ ஒன்றை வெளியிட்டது. மேலும், இந்த பிரச்சினை தொடர்பாக கோயம்பேடு போலீசார் மற்றும் தாசில்தார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில், இன்று காவல்துறை தரப்பில் நேற்று சிறப்பு காட்சிக்கான அனுமதியை திரையரங்கம் பெற்றுள்ளதா என்ற நோக்கில் காவல்துறை தரப்பில் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. சிறப்பு காட்சிக்கு அனுமதி பெறப்படவில்லை என்பது உறுதியானால் ரோகிணி திரையரங்கிற்கு முறையான அபராதம் அல்லது ஒரு வாரகாலத்திற்கு திரையரங்கை மூட வேண்டிய நிலைமை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

    பாதிக்கப்பட்ட பெண் காவிரி அளித்த புகாரின் பேரில் ரோகிணி திரையரங்க ஊழியர் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • சென்னை, கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது.
    • பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என மாணவிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.

    சென்னை, கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


    மேலும், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் மாணவிகள் குரல் கொடுத்து வருகின்றனர். மாணவர்களின் உள்ளிருப்பு போராட்டத்தை அடுத்து கலாஷேத்ரா கல்லூரியை வரும் ஏப்ரல் 6-ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவித்துள்ளனர். மேலும், கல்லூரி விடுதியில் உள்ள அனைத்து மாணவர்களும் 2 நாட்களுக்குள் காலி செய்யவும் உத்தரவிட்டுள்ளது. திடீரென விடுதிகளை காலி செய்யுமாறு கூறினால் எங்கு செல்வது என்று மாணவிகள் ஆதங்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    இதையடுத்து, கல்லூரி முதல்வர் உள்ளிட்டோரை வெளியேறவிடாமல் முற்றுகையிட்டு மாணவர்கள் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். மாணவிகள் முன்னிலையில் கல்லூரி முதல்வரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தை நடத்தியும் மாணவிகள் கலைந்து செல்ல மறுப்பதால் கலாஷேத்ராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


    இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விக்ரமன் கலாஷேத்ரா கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், "போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எனது ஒற்றுமையை தெரிவிக்க கலாஷேத்ராவுக்கு சென்றேன். அவர்களுக்கு உரிய நேரத்தில் நீதி கிடக்க முடிந்தவரை ஆதரவளிப்பதாக உறுதியளித்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.


    • நடிகர் விக்ரம் தற்போது ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறது.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் திரைப்படம் 'தங்கலான்'.இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


    விக்ரம்

    இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விக்ரம் இப்படப்பிடிப்பில் மீண்டும் இணைந்துள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் -2 திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா கடந்த 29-ம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


    • பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை ஊழியர்கள் அனுமதிக்க மறுத்தனர்.
    • இந்த சம்பவத்திற்கு பலரும் அவர்களின் கண்டன குரல்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

    சென்னை ரோகிணி திரையரங்கில் நேற்று பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை ஊழியர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர். டிக்கெட் இருந்தும் அவர்களை அனுமதிக்காததை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த சம்பவத்திற்கு பலரும் அவர்களின் கண்டன குரல்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வந்தனர்.

    இதையடுத்து நரிக்குறவர்களை ஏன் திரையரங்கில் அனுமதிக்கவில்லை என்று ரோகிணி திரையரங்கம் சார்ப்பில் அறிக்கை ஒன்று வெளியானது. அதில், யுஏ சான்றிதழ் அனுமதி பெற்ற படம் என்பதால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வந்தவர்கள் 2,6,8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    பின்னர் உரிய நேரத்தில் அவர்கள் படம் பார்த்ததாக திரையரங்க நிர்வாகம் வீடியோ ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில், நடிகை பிரியா பவானி சங்கர் பாதிக்கப்பட்ட நரிக்குறவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளத்தில் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். அதில், "எல்லாரும் அவங்க வேலைய பார்த்துட்டுப் போறப்போ, ticket இருக்குல்ல, ஏன் உள்ள விட மாட்டேங்கிறீங்கன்னு கேட்ட அந்த குரல் தான் இது போன்ற செயலுக்கு எதிரான முதல் குரல். அவங்க உடை தான் திரையரங்க நிர்வாகிகளுக்கு பிரச்சனைனா, அவர்கள் அறிய, அடைய வேண்டிய நாகரிகம் ரொம்ப தூரத்துல இருக்கு" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

    பாதிக்கப்பட்ட பெண் காவிரி அளித்த புகாரின் பேரில் ரோகிணி திரையரங்க ஊழியர் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் -2’.
    • இப்படம் ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றதால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


    பொன்னியின் செல்வன் -2

    பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா கடந்த 29-ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் டிரைலரை வெளியிட்டார். இந்த டிரைலர் ரசிகர்களை பெருமளவு கவர்ந்து வருகிறது.


    பொன்னியின் செல்வன் -2

    இந்நிலையில், டிரைலர் குறித்த புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'பொன்னியின் செல்வன் -2' டிரைலர் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை ஊழியர்கள் அனுமதிக்க மறுத்தனர்.
    • இந்த விவகாரம் தொடர்பாக அமைந்தகரை தாசில்தார் மாதவன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    சென்னையில் உள்ள பிரபல ரோகிணி திரையரங்கத்தில் ஒவ்வொரு படங்கள் வெளியாகும் பொழுதும் ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வந்து படம் பார்த்து செல்வார்கள். குறிப்பாக திரைத்துறையை சார்ந்த பல பிரபலங்கள் ரசிகர்களுடன் படம் பார்ப்பதற்காக ரோகிணி திரையரங்கிற்கு வருவார்கள்.

    இன்று ரோகிணி திரையரங்கிற்கு பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை ஊழியர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர். டிக்கெட் இருந்தும் அவர்களை அனுமதிக்காததை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த சம்பவத்திற்கு பலரும் அவர்களின் கண்டன குரல்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வந்தனர்.

    தொடர்ந்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் தனது சமூக வலைதளத்தில், "அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது, எனினும் முதலில் அனுமதிக்க மறுத்ததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது என்று பதிவிட்டிருந்தார்.

    இதையடுத்து நரிக்குறவர்களை ஏன் திரையரங்கில் அனுமதிக்கவிள்ளை என்று ரோகிணி திரையரங்கம் சார்ப்பில் அறிக்கை ஒன்று வெளியானது. அதில், யுஏ சான்றிதழ் அனுமதி பெற்ற படம் என்பதால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வந்தவர்கள் 2,6,8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் உரிய நேரத்தில் அவர்கள் படம் பார்த்ததாக திரையரங்க நிர்வாகம் வீடியோ ஒன்றை வெளியிட்டது.

    இந்த விவகாரம் தொடர்பாக கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் விஜய பாஸ்கர் திரையரங்கிற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து திரையரங்கிற்கு அமைந்தகரை தாசில்தார் மாதவன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும், நரிக்குறவ பெண்ணிடம் நடந்த சம்பவம் குறித்தும் திரையரங்க நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டும் விசாரணை நடத்தினார்.

    இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் காவிரி அளித்த புகாரின் பேரில் ரோகிணி திரையரங்க ஊழியர் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ×