search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கலாஷேத்ரா மாணவிகளுக்கு நேரில் சென்று ஆதரவளித்த பிக்பாஸ் விக்ரமன்
    X

    கலாஷேத்ரா மாணவிகளுடன் விக்ரமன்

    கலாஷேத்ரா மாணவிகளுக்கு நேரில் சென்று ஆதரவளித்த பிக்பாஸ் விக்ரமன்

    • சென்னை, கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது.
    • பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என மாணவிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.

    சென்னை, கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


    மேலும், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் மாணவிகள் குரல் கொடுத்து வருகின்றனர். மாணவர்களின் உள்ளிருப்பு போராட்டத்தை அடுத்து கலாஷேத்ரா கல்லூரியை வரும் ஏப்ரல் 6-ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவித்துள்ளனர். மேலும், கல்லூரி விடுதியில் உள்ள அனைத்து மாணவர்களும் 2 நாட்களுக்குள் காலி செய்யவும் உத்தரவிட்டுள்ளது. திடீரென விடுதிகளை காலி செய்யுமாறு கூறினால் எங்கு செல்வது என்று மாணவிகள் ஆதங்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    இதையடுத்து, கல்லூரி முதல்வர் உள்ளிட்டோரை வெளியேறவிடாமல் முற்றுகையிட்டு மாணவர்கள் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். மாணவிகள் முன்னிலையில் கல்லூரி முதல்வரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தை நடத்தியும் மாணவிகள் கலைந்து செல்ல மறுப்பதால் கலாஷேத்ராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


    இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விக்ரமன் கலாஷேத்ரா கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், "போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எனது ஒற்றுமையை தெரிவிக்க கலாஷேத்ராவுக்கு சென்றேன். அவர்களுக்கு உரிய நேரத்தில் நீதி கிடக்க முடிந்தவரை ஆதரவளிப்பதாக உறுதியளித்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.


    Next Story
    ×