என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் -2’.
    • இப்படம் ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றதால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


    பொன்னியின் செல்வன் -2

    பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா கடந்த 29-ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் டிரைலரை வெளியிட்டார். இந்த டிரைலர் ரசிகர்களை பெருமளவு கவர்ந்து வருகிறது.


    பொன்னியின் செல்வன் -2

    இந்நிலையில், டிரைலர் குறித்த புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'பொன்னியின் செல்வன் -2' டிரைலர் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை ஊழியர்கள் அனுமதிக்க மறுத்தனர்.
    • இந்த விவகாரம் தொடர்பாக அமைந்தகரை தாசில்தார் மாதவன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    சென்னையில் உள்ள பிரபல ரோகிணி திரையரங்கத்தில் ஒவ்வொரு படங்கள் வெளியாகும் பொழுதும் ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வந்து படம் பார்த்து செல்வார்கள். குறிப்பாக திரைத்துறையை சார்ந்த பல பிரபலங்கள் ரசிகர்களுடன் படம் பார்ப்பதற்காக ரோகிணி திரையரங்கிற்கு வருவார்கள்.

    இன்று ரோகிணி திரையரங்கிற்கு பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை ஊழியர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர். டிக்கெட் இருந்தும் அவர்களை அனுமதிக்காததை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த சம்பவத்திற்கு பலரும் அவர்களின் கண்டன குரல்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வந்தனர்.

    தொடர்ந்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் தனது சமூக வலைதளத்தில், "அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது, எனினும் முதலில் அனுமதிக்க மறுத்ததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது என்று பதிவிட்டிருந்தார்.

    இதையடுத்து நரிக்குறவர்களை ஏன் திரையரங்கில் அனுமதிக்கவிள்ளை என்று ரோகிணி திரையரங்கம் சார்ப்பில் அறிக்கை ஒன்று வெளியானது. அதில், யுஏ சான்றிதழ் அனுமதி பெற்ற படம் என்பதால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வந்தவர்கள் 2,6,8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் உரிய நேரத்தில் அவர்கள் படம் பார்த்ததாக திரையரங்க நிர்வாகம் வீடியோ ஒன்றை வெளியிட்டது.

    இந்த விவகாரம் தொடர்பாக கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் விஜய பாஸ்கர் திரையரங்கிற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து திரையரங்கிற்கு அமைந்தகரை தாசில்தார் மாதவன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும், நரிக்குறவ பெண்ணிடம் நடந்த சம்பவம் குறித்தும் திரையரங்க நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டும் விசாரணை நடத்தினார்.

    இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் காவிரி அளித்த புகாரின் பேரில் ரோகிணி திரையரங்க ஊழியர் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'.
    • வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியுள்ளதாக இயக்குனர் மணிரத்னம் மீது மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக இயக்கினார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வசூல் சாதனை படைத்தது.


    பொன்னியின் செல்வன்

    இதைத்தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியுள்ளதாக கூறி இயக்குனர் மணிரத்னம் மீது சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி அதே பெயரில் இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள படத்தில், வரலாற்றை திரித்து இயக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    வரலாற்றின் அடிப்படையில் படம் எடுக்கும் முன்பு உரிய ஆராய்ச்சி மேற்கொண்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். போர் தந்திரங்களில் சிறந்து விளங்கிய சோழர்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் இயக்குனர் மணிரத்னம் வரலாற்றை திரித்து உள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் ஆய்வு துறை ஆகியவற்றிடம் அளித்த புகார்களில் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.


    மணிரத்னம்

    இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், பொன்னியின் செல்வன் நாவலை படித்திருக்கிறீர்களா என்று மனுதாரரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் இல்லை என்று தெரிவித்ததையடுத்து நாவலை படிக்காமல் வரலாற்றை திரித்துள்ளதாக எப்படி கூற முடியும் என்றும் பொன்னியின் செல்வன் படமே நாவலை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறதே தவிர வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது அல்ல என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

    • நடிகர் பாலா தமிழ் ரசிகர்களிடம் பரவலான அறிமுகத்தைப் பெற்றவர்.
    • இவர் கல்லீரல் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    அஜித்தின் தம்பியாக 'வீரம்' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பரவலான அறிமுகத்தைப் பெற்றவர் நடிகர் பாலா. தமிழில் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் மலையாளத்தில் கலாபம் தொடங்கி பிக் பி, ஹிட் லிஸ்ட், புலி முருகன், லூசிபர் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.


    இதையடுத்து நடிகர் பாலாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் கல்லீரல் பிரச்சினை ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இவரை இயக்குனர் சிறுத்தை சிவா நேரில் சென்று பார்த்தார். இந்நிலையில், நடிகர் பாலா தனது திருமண நாளை கேக் வெட்டிக் கொண்டாடினார்.

    இதையடுத்து அவர் கூறியதாவது, "எல்லாருடைய பிரார்த்தினையால் மீண்டு வருகிறேன். எனக்கு 2 அல்லது 3 நாட்களில் மிக முக்கிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவிருக்கிறது. மரணம் கூட நேரலாம். ஆனால் உங்கள் அனைவரது பிரார்த்தனையால் பிழைத்துக்கொள்ளவும் அதிக வாய்ப்பு இருக்கிறது" என்று கூறினார்.

    • தமிழில் 'பட்டின பிரவேசம்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் சரத்பாபு.
    • இவர் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் கவனம் செலுத்தி வந்தார்.

    1973-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. இவர் 1977-ஆம் ஆண்டு இயக்குனர் கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளியான 'பட்டின பிரவேசம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கவனம் செலுத்தினார்.


    இவர் ரஜினிகாந்துடன் முத்து, அண்ணாமலை, போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார். இந்த படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. மேலும் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'.
    • இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், சிம்பு, விக்ரம்பிரபு, ரகுமான், துருவ் விக்ரம், நடிகைகள் ஐஸ்வர்யாராய், திரிஷா, குஷ்பு, சுகாசினி, ஜெயசித்ரா, சோபிதா துலிபாலா, ஐஸ்வர்ய லட்சுமி, இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர்கள் லைகா புரொடக்சன்ஸ் சுபாஷ்கரன், இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், அம்ரேஷ், தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி, அமைச்சர் துரைமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


    இதில், அமைச்சர் துரைமுருகன் பேசியபோது, " ஒரு வரலாற்று கதையை வரலாற்றில் நிற்கும் அளவில் படமாக்கிய அனைவருக்கும் நன்றி. நான் படிக்கின்ற காலத்தில் 5 முறை படித்திருக்கிறேன். இக்கதையை படமாக்குவதாக சுபாஷ்கரன் என்னிடம் கூறினார். நான் கதையை படித்தீர்களா என்று கேட்டதற்கு அவர் இல்லை என்றார். அப்போது, இப்படத்தை நீங்கள் எடுக்க வேண்டாம் என்றேன். அவர் எடுத்தே தீருவேன் என்றார். கதைகளை படமாக்குவது எளிது, காவியங்களை படமாக்குவது கடினம் என்று கூறினேன். 

    யார் நடிக்கிறார்கள் என்று கேட்டேன். அரைமனதாக ஒப்புக்கொண்டேன். இயக்குனர் யார் என்று கேட்டேன். மணிரத்னம் என்றார். அவர் இருட்டிலேயே படம் எடுப்பவர் இக்கதைக்கு ஒத்துவரமாட்டார் வேண்டாம் என்றேன். ஆனால், படத்தை பார்த்துவிட்டு அந்த எண்ணத்தை மாற்றிவிட்டேன். வீட்டில் இருந்தே சல்யூட் வைத்தேன். வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி சிறப்பாக நடித்துள்ளார். எனது தொகுதிக்குட்பட்ட ஊர்தான் வந்தியத்தேவனின் ஊர். அதனால் எனக்கு ஒரு மகிழ்ச்சி.


    கமல்ஹாசனுக்கு கருணாநிதி கலைஞானி என பெயரிட்டார். அவருக்கு இணையானவர் திரையுலகில் இன்றைக்கு இல்லை. என்றைக்கும் இல்லை. எனது பேச்சைக் கேட்காமல் இப்படத்தை எடுத்து வெற்றி கண்ட சுபாஷ்கரனுக்கு வாழ்த்துகள். ஒரு படத்தின் மூலம் ஒரு தமிழ் மன்னனை அறிமுகப்படுத்திய பெருமை சுபாஷ்கரனை சேரும். முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் இரண்டு மடங்கு ஓடும். வாழ்த்துக்கள்" என்றார்.

    மேலும், இயக்குனர் பாரதிராஜா பேசியபோது, "9-ஆம் வகுப்பு படிக்கும்போது பொன்னியின் செல்வன் படித்தேன். எந்த படம் வேண்டுமானலும் எடுக்கலாம். ஆனால், சரித்திர கதையை பிசகாமல் எடுக்கணும். மணிரத்னம் ஜீனியஸ். இப்படத்தை எம்.ஜி.ஆர் எடுக்க ஆசைப்பட்டார். கமல், ஸ்ரீ தேவி, என்னை வைத்து எம்.ஜி.ஆர் பேசினார். வந்தியத்தேவனாக கமலை வைத்து எடுக்க நினைத்தார். ஆனால், அதன் பிறகு எம்.ஜி.ஆருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நான் சொதப்பிவிடுவேன் என்று கடவுள் மணிரத்னத்தை எடுக்க வைத்துவிட்டார்.

    நாம் கொடுத்துவைத்தவர்கள். நம்மிடம் நிறைய கலைஞர்கள் உள்ளனர். காதல் இல்லாமல் நாம் கலைஞர்கள் கிடையாது. காதல் ஒன்றுதான் கலைஞனை வளர்க்கிறது. மணிரத்னம் ரொமான்டிக் என்று வெளியே சொல்வது இல்லை. கமல் சொல்லி விடுவார். இப்படத்தில் கதாநாயகிகளை லட்டு லட்டாக தேர்வு செய்துள்ளார். எல்லோரையும் காதலிக்கலாம் போல. நந்தினியை, குந்தவையை, பூங்குழலியை காதலிக்கலாம். உலகம் முழுவதும் இன்று பொன்னியின் செல்வன் பற்றி விவாதிக்கின்றனர். இந்தியாவை தமிழ்நாடு பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர் மணிரத்னம். நான் கடைசிவரை கடவுளிடம் போராடி மணிரத்னம் செய்வதை பார்த்துவிட்டுதான் போவேன்" என்றார்.

    • 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை (31.03.2023 வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
    • இந்த நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடனமாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 15 சீசன்கள் முடிவடைந்த நிலையில் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை (31.03.2023 வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. மே மாதம் 28-ந் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஐ.பி.எல். போட்டி 10 அணிகளுடன் மொத்தம் 74 ஆட்டங்கள் நடைபெறவுள்ளது.


    ராஷ்மிகா மந்தனா

    ராஷ்மிகா மந்தனா

    நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இதன் தொடக்க நிகழ்ச்சி நாளை மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள நிலையில் இதில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா நடனமாடவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • நடிகர் நாக சைதன்யா தற்போது ‘கஸ்டடி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • சமீபகாலமாகவே இவர் நடிகை சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக கிசுகிசு பரவி வருகிறது.

    தென்இந்திய சினிமாவின் பிரபல நடிகரான நாகசைதன்யா, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'கஸ்டடி' திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபகாலமாகவே நடிகர் நாகசைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது.


    நாகசைதன்யா - சோபிதா துலிபாலா

    இவர்கள் இருவரும் அண்மையில் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள நாகசைதன்யாவின் புதிய வீட்டில் ஒன்றாகக் காணப்படட்டதாகவும் அங்கு அவர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு லண்டனில் ஒரு இடத்தில் இருவரும் நின்றிருந்த புகைப்படம் இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வந்தது. ஆனால் அதில் உண்மையில்லை என்று ரசிகர்கள் சிலர் சொல்லி வந்தனர்.

    இந்நிலையில், தற்போது சமூக வலைதளத்தில் சுரேந்தர் மோகன் என்பவர் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். சுரேந்தர் மோகன் என்பவர் லண்டனில் பிரபலமான ஓட்டல் ஒன்றில் சமையல் கலைஞராக இருக்கிறார். அவருடைய ஓட்டலுக்கு நாகசைதன்யாவும் சோபிதா துலிபாலாவும் உணவு சாப்பிட வந்திருக்கிறார்கள். அவர்களைக் கண்டதும் சுரேந்தர் மோகன், நாக சைதன்யாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.


    நீக்கப்பட்ட புகைப்படம்

    அப்படி எடுத்தபோது பின்னால் சோபிதா துலிபாலா அமர்ந்து இருப்பது பதிவிவாகியிருக்கிறது. அவர் முகத்தை மறைக்க முயன்றாலும் முடியவில்லை. இந்த புகைப்படத்தை சுரேந்தர் மோகன் பெருமிதத்துடன் தனது இணையப் பக்கத்தில் பதிவிட்டார். இதன் பிறகு நடந்ததுதான் சுவாரஸ்யம். நாகசைதன்யா தரப்பில் இருந்து இந்த புகைப்படத்தை நீக்கச்சொல்லியதன் பேரில், சுரேந்தர் மோகன் அதை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • ஈஸ்வரியின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி நகை கொள்ளை போனது தொடர்பாக பல்வேறு தகவல்களை திரட்டினர். இதில் 100 பவுன் நகைகள் முதலில் சிக்கின.
    • ஐஸ்வர்யா அளித்த 2-வது புகாரில் தனது வீட்டில் மொத்தமாக 200 பவுன் நகை கொள்ளை போனதாக குறிப்பிட்டு இருந்தார்.

    நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் வேலைக்கார பெண்ணும் டிரைவரும் சேர்ந்து நகைகளை கொள்ளையடித்த விவகாரத்தில் புதிது புதிதாக தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன.

    போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீடு, தேனாம்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு உள்பட 3 வீடுகளில் தான் வசித்து வந்ததாகவும் அப்போது லாக்கரில் வைத்திருந்த 60 பவுன் நகைகள் காணாமல் போயுள்ளன என்றும் ஐஸ்வர்யா முதலில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக தேனாம்பேட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் வேலைக்கார பெண் ஈஸ்வரி, டிரைவர் வெங்கடேசன் ஆகியோர் ஐஸ்வர்யாவின் வீட்டில் நகைகளை திருடியது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். ஈஸ்வரியின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி நகை கொள்ளை போனது தொடர்பாக பல்வேறு தகவல்களை திரட்டினர். இதில் 100 பவுன் நகைகள் முதலில் சிக்கின. ஐஸ்வர்யா புகாரில் தெரிவித்து இருந்ததைவிட கூடுதலாக நகைகள் கிடைத்ததால் போலீசாருக்கு முதலில் லேசாக தலை சுற்றியது. புகாரில் கூறியிருப்பதைவிட கூடுதல் நகைகள் சிக்கியதால் அதுதொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    இதையடுத்து வேலைக்காரப் பெண்ணான ஈஸ்வரி ரஜினி, தனுஷ் வீடுகளிலும் நகைகளை திருடி இருக்கலாமோ? என்கிற சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் ஐஸ்வர்யாவை தொடர்பு கொண்டு வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எவ்வளவு? என்பது பற்றிய விவரங்களை முழுமையாக கணக்கு பார்த்து தெரிவிக்குமாறு கேட்டனர். இதை தொடர்ந்து ஐஸ்வர்யா, தனது வீட்டில் இருந்த நகைகள் பற்றிய விவரங்கள் அனைத்தையும் முழுமையாக ஆராய்ந்து அதன் பின்னர் 2-வதாக புதிய புகார் ஒன்றையும் அளித்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

    ஐஸ்வர்யா அளித்த 2-வது புகாரில் தனது வீட்டில் மொத்தமாக 200 பவுன் நகை கொள்ளை போனதாக குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக புதிய வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர். ஐஸ்வர்யா 2-வது அளித்த புகாருக்கு பிறகே போலீசார் ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரையும் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் 45 முதல் 50 பவுன் நகை வரையில் ஈஸ்வரியிடம் இருந்து கைப்பற்றப்பட்டு உள்ளது. டிரைவர் வெங்கடேசனிடமிருந்து ரூ.45 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ஐஸ்வர்யா வீட்டில் நடந்த கொள்ளை தொடர்பாக பல்வேறு தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அவரது வீட்டில் திருடிய வேலைக்கார பெண்ணிடம் கூடுதல் நகைகள் இருந்ததால் அது ரஜினிகாந்த் அல்லது தனுஷ் வீட்டில் திருடப்பட்டவையாக இருக்கலாம் என்று விசாரித்தோம். ஆனால் அதுபோன்று எதுவும் நடக்கவில்லை. ஐஸ்வர்யாவின் வீட்டில் மட்டுமே 200 பவுன் நகைகளை வேலைக்கார பெண் ஈஸ்வரி, வெங்கடேசனுடன் கூட்டு சேர்ந்து திருடியுள்ளார்.

    இதில் முதலில் 100 பவுன், பின்னர் 50 பவுன் என மொத்தம் 150 பவுன் தங்க நகைகளை கைப்பற்றியுள்ளோம். இன்னும் 50 பவுன் நகைகளை கைப்பற்ற வேண்டியிருக்கிறது என்று தெரிவித்தார். போலீஸ் காவலில் ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. 2 நாள் காவலுக்கு பிறகு இருவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஈஸ்வரி, போலீசில் அளித்துள்ள வாக்கு மூலத்தில் வசதியாக வாழ்வதற்கு ஆசைப்பட்டு இதுபோன்று செய்துவிட்டதாக கூறி இருக்கிறார். ஐஸ்வர்யாவின் வீட்டு லாக்கர் இருக்கும் இடமும் அதற்கான சாவி இருக்கும் இடமும் தெரிந்த பின்னரே அதில் இருக்கும் நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக திருட திட்டமிட்டோம் என்றும் அப்படி திருடினால் கண்டுபிடிக்க முடியாது என்றும் நினைத்தோம் எனவும் ஈஸ்வரி வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’பொன்னியின் செல்வன் -2’.
    • இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.


    பொன்னியின் செல்வன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

    இதில் நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், சிம்பு, விக்ரம்பிரபு, ரகுமான், துருவ் விக்ரம், நடிகைகள் ஐஸ்வர்யாராய், திரிஷா, குஷ்பு, சுகாசினி, ஜெயசித்ரா, சோபிதா துலிபாலா, ஐஸ்வர்ய லட்சுமி, இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர்கள் லைகா புரொடக்சன்ஸ் சுபாஷ்கரன், இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், அம்ரேஷ், தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி, அமைச்சர் துரைமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


    பார்த்திபன் பதிவு

    இந்த நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராய்யுடன் பார்த்திபன் செல்பி எடுக்கும் போது இவர்களுக்கு பின்னால் இயக்குனர் மணிரத்னம் நின்றுள்ளார். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பார்த்திபன் "நந்தினியும் நானும் நடுவில் அவரும்!" என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.


    • சிம்பு நடித்துள்ள ‘பத்து தல’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
    • ரசிகர்கள் அதிகாலை முதலே கூடி மேள தாளத்துடன், பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'பத்து தல' திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் வெளியானது. 'பத்து தல' படத்திற்காக ரசிகர்கள் அதிகாலை முதலே திரையரங்குகளில் கூடி மேள தாளத்துடன், பட்டாசு வெடித்து கொண்டாடினர்.


    பத்து தல

    இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி 'பத்து தல' திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சிம்புவிற்கு நன்றியும் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், "நேற்று பொன்னியின் செல்வன் -2 விழாவிற்கு வருகைதந்ததற்கு நன்றி சிம்பு.. பத்து தல திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

    நேற்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற 'பொன்னியின் செல்வன் -2' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • ரோகினி திரையரங்கில் டிக்கெட் இருந்தும் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்க மறுத்துள்ளனர்.
    • இது தொடர்பாக இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் பதிவிட்டுள்ளார்.

    சென்னையில் உள்ள பிரபல ரோகிணி திரையரங்கத்தில் ஒவ்வொரு படங்கள் வெளியாகும் பொழுதும் ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வந்து படம் பார்த்து செல்வார்கள். குறிப்பாக திரைத்துறையை சார்ந்த பல பிரபலங்கள் ரசிகர்களுடன் படம் பார்ப்பதற்காக ரோகினி திரையரங்கிற்கு வருவார்கள்.

    இன்று ரோகிணி திரையரங்கிற்கு பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை ஊழியர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர். டிக்கெட் இருந்தும் அவர்களை அனுமதிக்காததை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.

    இந்த சம்பவத்திற்கு பலரும் அவர்களின் கண்டன குரல்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர். 


    படம் பார்க்க மறுத்த ஊழியர்கள்
    படம் பார்க்க மறுத்த ஊழியர்கள்

    இந்நிலையில் இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி வருவதை தொடர்ந்து இதுகுறித்து இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் காட்டமாக பதிவிட்டுள்ளார். அதில், அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது, எனினும் முதலில் அனுமதிக்க மறுத்ததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது என்று பதிவிட்டுள்ளார்.



    ×