என் மலர்
சினிமா செய்திகள்

நந்தினியும் நானும்.. நடுவில் அவரும் - பார்த்திபன் என்ன சொல்ல வராரு?
- மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’பொன்னியின் செல்வன் -2’.
- இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
பொன்னியின் செல்வன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா
இதில் நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், சிம்பு, விக்ரம்பிரபு, ரகுமான், துருவ் விக்ரம், நடிகைகள் ஐஸ்வர்யாராய், திரிஷா, குஷ்பு, சுகாசினி, ஜெயசித்ரா, சோபிதா துலிபாலா, ஐஸ்வர்ய லட்சுமி, இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர்கள் லைகா புரொடக்சன்ஸ் சுபாஷ்கரன், இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், அம்ரேஷ், தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி, அமைச்சர் துரைமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பார்த்திபன் பதிவு
இந்த நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராய்யுடன் பார்த்திபன் செல்பி எடுக்கும் போது இவர்களுக்கு பின்னால் இயக்குனர் மணிரத்னம் நின்றுள்ளார். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பார்த்திபன் "நந்தினியும் நானும் நடுவில் அவரும்!" என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
நந்தினியும் நானும்
— Radhakrishnan Parthiban (@rparthiepan) March 29, 2023
நடுவில் அவரும்! pic.twitter.com/drPZdho83p






