என் மலர்
சினிமா செய்திகள்
- ரோகினி திரையரங்கில் டிக்கெட் இருந்தும் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்க மறுத்துள்ளனர்.
- இது தொடர்பாக இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள பிரபல ரோகிணி திரையரங்கத்தில் ஒவ்வொரு படங்கள் வெளியாகும் பொழுதும் ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வந்து படம் பார்த்து செல்வார்கள். குறிப்பாக திரைத்துறையை சார்ந்த பல பிரபலங்கள் ரசிகர்களுடன் படம் பார்ப்பதற்காக ரோகினி திரையரங்கிற்கு வருவார்கள்.
இன்று ரோகிணி திரையரங்கிற்கு பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை ஊழியர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர். டிக்கெட் இருந்தும் அவர்களை அனுமதிக்காததை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
இந்த சம்பவத்திற்கு பலரும் அவர்களின் கண்டன குரல்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி வருவதை தொடர்ந்து இதுகுறித்து இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் காட்டமாக பதிவிட்டுள்ளார். அதில், அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது, எனினும் முதலில் அனுமதிக்க மறுத்ததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது என்று பதிவிட்டுள்ளார்.
அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது , எனினும் முதலில் அனுமதிக்க மறுத்தததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது. https://t.co/IjGBzxLkJT
— G.V.Prakash Kumar (@gvprakash) March 30, 2023
- நானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தசரா’.
- இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடித்துள்ள 'தசரா' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியான நிலையில், நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட தசரா படக்குழு தியேட்டரில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன்-2 படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
- இதில் சிறப்பு விருந்தினர்களாக கமல், சிம்பு, அமைச்சர் துரை முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், சிம்பு, விக்ரம்பிரபு, ரகுமான், துருவ் விக்ரம், நடிகைகள் ஐஸ்வர்யாராய், திரிஷா, குஷ்பு, சுகாசினி, ஜெயசித்ரா, சோபிதா துலிபாலா, ஐஸ்வர்ய லட்சுமி, இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர்கள் லைகா புரொடக்சன்ஸ் சுபாஷ்கரன், இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், அம்ரேஷ், தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி, அமைச்சர் துரைமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பொன்னியின் செல்வன் பட விழா
இவ்விழாவில் படத்தின் டிரைலரை கமல்ஹாசன் வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து அவர் பேசியதாவது, நல்ல படங்களை கொடுப்பது எங்களின் கடமை ஆகிவிட்டது. இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு நழுவி போய்விட்டது. கல்கியை பார்த்து எழுத்தாளர்கள் பொறாமைப்பட்டது போல, மணிரத்னத்தை பார்த்து எழுத்தாளர்களும், இயக்குனர்களும் பொறாமைப்பட்டு வருகிறார்கள். அதில் நானும் ஒருவன்.

கலைஞர்கள் அனைவரும் ஒன்றாக இருந்து செயல்பட வேண்டும். பொறாமை தேவையில்லை. பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க தைரியம் வேண்டும். அது மணிரத்னத்துக்கு இருந்தது. பணத்தை செலவு செய்யும் தைரியம் தயாரிப்பாளர் சுபாஷ்கரனுக்கு இருந்தது. அதனால்தான் இந்த படம் பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது. நடிகர்-நடிகைகள் அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சோழர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் திரையுலகுக்கும் இது பொற்காலம். அதனை போற்றி பாதுகாக்க வேண்டும். பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படம் இரட்டிப்பு வெற்றிபெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
- எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- இந்த உரையாடல் தொலைப்பேசியின் வாயிலாக நடந்துள்ளது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடலநலக்குறைவால் கடந்த 24-ந் தேதி காலமானார். அஜித் தந்தையின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் மற்றும் ஆறுதல் கூறினர்.
இந்த நிலையில், தந்தை மறைவுக்கு நடிகர் அஜித்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எடப்பாடி பழனிசாமி இன்று ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித்குமார் வாழ்த்து கூறியுள்ளார்.
- மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி திரையுரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்தில் நடித்த நடிகர்கள் சோழர் அரியணையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வீடியோவை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி திரையுரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஷ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரம் பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், சிலம்பரசன், அமைச்சர் துரை முருகன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்நிலையில் இப்படத்தில் நடித்த நடிகர்கள் சோழர் அரியணையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வீடியோவை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
இப்படத்தின் டிரைலர் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
With his gracious smile and charm, our #PonniyinSelvan @actor_jayamravi is at the #PS2AudioLaunch#CholasAreBack#PS2 #PonniyinSelvan2 #PS2Trailer #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial pic.twitter.com/SzYDP3DmMt
— Lyca Productions (@LycaProductions) March 29, 2023
- ஜடா படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் குமரன்.
- இவர் இயக்கிய பறை மியூசிக் ஆல்பம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது.
கதிர் நடிப்பில் வெளியான ஜடா படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் குமரன். 2019ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில் இவர் இயக்கிய பறை மியூசில் ஆல்பம் பலரின் பாராட்டுக்களை பெற்றது. சமூக அக்கறையுடன் உருவாக்கப்பட்ட இந்த ஆல்பம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ஷான் ரோல்டன் மற்றும் குமரனின் வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ரசிகர் ஒருவர் பறை ஆல்பம் பாடலுக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணிக்காக காத்திருக்கிறோம். அப்டேட் கொடுங்க என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், நாங்கள் இருவரும் இணைந்து வேலை பார்த்து கொண்டிருக்கிறோம். விரைவில் அறிவிக்கிறோம் என்று பதிலளித்துள்ளார். இவரின் இந்த பதிவால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- நடிகர் சிம்பு நடித்துள்ள 'பத்து தல' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
- இப்படத்திற்காக நடிகர் கூல் சுரேஷ் ஹெலிக்காப்படருடன் வந்தார்.
ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'பத்து தல' திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் வெளியானது. 'பத்து தல' படத்திற்காக ரசிகர்கள் அதிகாலை முதலே திரையரங்குகளில் கூடி மேள தாளத்துடன், பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

பத்து தல
சிம்புவின் தீவிர ரசிகரான நடிகர் கூல் சுரேஷ், சிம்புவின் படங்கள் வெளியாகும் பொழுது வித்யாசமான முறையில் திரையரங்குக்கு வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். அந்த வகையில் சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பத்து தல படத்திற்காக பக்கத்து வீட்டை விற்றாவது ஹெலிக்காடரில் வருவேன் என்று கூறியிருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் கூல் சுரேஷ் தியேட்டருக்கு எப்படி வருவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் பத்து தல படத்தின் 8 மணி காட்சியை காண கூல் சுரேஷ் குழந்தைகள் விளையாடும் பொம்மை ஹெலிக்காப்டரை கொண்டு வந்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாக நெட்ட்சன்கள் கூல் சுரேஷை வறுத்தெடுத்து வருகின்றனர்.
- இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விடுதலை’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படம் குறித்து நடிகை பவானி ஸ்ரீ பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் கதாநாயகியாக பவானி ஸ்ரீ நடித்துள்ளார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இப்படம் நாளை (31.03.2023) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் விடுதலை படம் குறித்து நடிகை பவானி ஸ்ரீ கூறியதாவது, "பணிக்காக கிராமத்திற்கு வரும் போலீஸ் கான்ஸ்டபிளுடன் அழகான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு பழங்குடியினப் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். வெற்றிமாறன் சாருடன் பணிபுரிவது என்பது எந்த நடிகருக்கும் நீண்ட நாள் கனவு, நானும் இதற்கு விதிவிலக்கல்ல. என்னுடைய இரண்டாவது படத்திலேயே அது நடந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் படத்தில் நான் கமிட் ஆன போது நான் அனுபவித்த அதே உற்சாகம் இப்போதும் இருக்கிறது. வெற்றிமாறன் சார் சிறந்த இயக்குநர். தனித்துவமான கதைகளை உருவாக்குபவர்.

மேலும் அவர் கதையில் வரும் கதாபாத்திரங்களை உருவாக்கும் விதமும் தனித்துவமானது. ஒரு சிறந்த இயக்குநர் என்பதையும் தாண்டி, அவர் ஒரு நல்ல மனிதர். அடர்ந்த காடுகளுக்குள் படப்பிடிப்பு நடந்தபோது அங்கிருக்கும் ஒரு செடி, பூச்சி கூட தொந்தரவு செய்யாதபடி பார்த்துக் கொள்ள விரும்பினார். இது எனக்கு ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தில் சூரி சார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நகைச்சுவை நடிகராக இருந்து இந்தப் படத்தில் தீவிரமான கதையின் நாயகனாக அவர் மாறியிருப்பது அவருக்கு பாராட்டுகளை குவிக்கும்".

இசை மேதைகளின் குடும்பத்தைச் சேர்ந்த பவானிக்கு 'விடுதலை'யில் ஒரு பாடலைப் பாட வேண்டும் என்ற ஆசை இருந்ததா? என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, அவர் புன்னகையுடன் மறுத்தார். "இல்லை! என் குடும்பத்தில் நான்தான் 'ODD ONE'. எனது குடும்பத்தினர் என்னிடம் வற்புறுத்திய போதிலும், நான் இசைப் பயிற்சியை சரியாக மேற்கொள்ளவில்லை.
மேலும் "நான் இன்னும் படத்தை முழுதாக பார்க்கவில்லை. ஆனாலும், படக்குழுவில் படம் பார்த்த அனைவரும் 'விடுதலை' நன்றாக வந்திருப்பதாகத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். பார்வையாளர்களுடன் படத்தைத் திரையில் பார்க்க ஆர்வமாக உள்ளேன். நல்ல கதைகளை நிச்சயம் பார்வையாளர்கள் மதிப்பார்கள். எண்டர்டெயின்மெண்ட் என்பதையும் தாண்டி, நல்ல படங்கள் வரும்போது அதை வரவேற்றுக் கொண்டாடுவார்கள். நிச்சயம் அது 'விடுதலை' படத்திற்கும் நடக்கும்" இவ்வாறு அவர் கூறினார்.
- இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'.
- இந்த படம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றதால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பொன்னியின் செல்வன் -2
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று (29.03.2023) நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
- இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடுதலை’.
- இப்படம் வருகிற 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விடுதலை
இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படம் வருகிற மார்ச் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், 'விடுதலை' படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழகியுள்ளது. மேலும் இப்படத்தில் 11 இடங்களில் கெட்ட வார்த்தைகள் வரும் காட்சிகள் வசனங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளன.
- இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’.
- இந்த படம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றதால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று (29.03.2023) நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில், பத்திரிகையாளர்களிடம் நடிகர் பார்த்திபன் பேசியதாவது, "என்னை மாதிரியானவர்களுக்கு பொன்னியின் செல்வன் படத்தின் வாய்ப்பு கிடைப்பது கடினம். அந்த சந்தோஷத்தோடு நெஞ்சில் வாள் சுமந்து வந்திருக்கிறேன்.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தையே நான் இன்னும் பார்க்கவில்லை. முதல் நாள் படம் பார்க்க வேண்டும் என்று தஞ்சாவூர் சென்று ரசிகர்களிடம் மாட்டிக்கொண்டேன். நான் முதல் பாகத்தை பார்க்காதது பெரிய ஆச்சர்யமான செய்தி. முதல் பாகத்தில் என்ன இருந்தது என்று தெரியாது இரண்டாவது பாகத்தில் என்ன இருக்க போகிறது என்று தெரியாது , இந்த படத்தில் நான் இருப்பது தான் என்னுடைய சந்தோஷன் பெருமை என்று நினைத்திருந்தேன்.

முதல் பாகத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. சின்ன கதாபாத்திரம் என்றாலும் நிறைவாக நடித்திருந்தேன் என்று கூறினார்கள். எல்லா படத்திற்கும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும். வரலாற்று படத்திற்கு மட்டுமல்லாமல் சராசரி படத்திற்கு கூட வரலாறு படைக்கும் அளவிற்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும்" என்று பேசினார்.
- தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் செந்தில்.
- இவர் 1984 -ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
80-களில் தமிழ் திரையுலகில் நகைச்சுவைகளில் அசத்தி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் செந்தில். இவரும் கவுண்டமணியும் இணைந்து நடித்துள்ள திரைப்படங்களின் காமெடிகள் பட்டி தொட்டியெல்லாம் பேசப்பட்டது. இவர்கள் இருவரின் காமெடிக்கென சினிமாவில் தனி இடம் உண்டு.

300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள செந்தில், ரஜினி போன்ற முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். இவர் 1984 -ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நகைச்சுவை நடிகர் செந்திலின் 70-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இவர் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, செந்தில் -கலைச்செல்வி தம்பதியினருக்கு இன்று பீமரத சாந்தி திருமண விழா நடைபெற்றது. கோயில் மண்டபத்தில் 64 கலசங்கள் வைக்கப்பட்டு பீமரத சாந்தி சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜை நடைபெற்றது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் நடிகர் செந்திலுடன் செல்பி எழுத்து மகிழ்ந்தனர்.






